சனநாயகத்தின் முதன்மைக்கூறு என போற்றப்பட்டே, தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறே, தமிழ்நாடு சட்டப் பேரவைக்கானத் தேர்தலும் நடைபெற்றது.

சனநாயக அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதென்றால், அவர் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது தற்போது நடைபெறும் தேர்தலின் அடிப்படை விதி! ஆனால், உண்மையில் இங்கு இதுதான் நடக்கிறதா என்பது மிகப்பெரும் கேள்விக்குறி!

jayalalitha after electionஇந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் மொத்தம் 5.77 கோடி பேர் (5,77,33,574). அதில், தேர்தலில் பங்கேற்றவர்கள் 4.28 கோடி பேர் (4,28,73,674). அதாவது, மொத்தமுள்ள வாக்காளர்களில் 74.26 விழுக்காட்டினர் மட்டுமே தேர்தலில் பங்கேற்றனர். இவையெல்லாம் நாம் அறிந்த செய்தி தான். அறிந்து கொள்ளாத இன்னொரு செய்தியும் இருக்கிறது!

தேர்தலில் வாக்களித்த 4.28 கோடி பேரில், முதலமைச்சர் செயலலிதா மீதுள்ள வெறுப்பால் - செயலலிதா ஆட்சியில் தொடர வேண்டாம் என்ற முடிவின் பேரில், தாங்கள் விரும்பிய வேறு கட்சிகளுக்கும், எந்தக் கட்சிக்கும் வாக்கில்லை என நோட்டாவுக்கும் வாக்களித்த மக்களின் எண்ணிக்கை சற்றொப்ப 2.56 கோடி (2,55,90,775). அதாவது 59.2 விழுக்காட்டினர்!

ஆனால், “செயலலிதாவே ஆட்சியில் தொடர வேண்டும்” என வாக்கு அளித்தவர்களோ, 1.76 கோடி பேர் தான் (1,76,17,060). அதாவது, 40.8 விழுக்காட்டினர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 44.34 விழுக்காடு (1,79,83,168) வாக்குகள் பெற்ற அ.தி.மு.க., தற்போது அதிலிருந்து 4 விழுக்காடு சரிந்து, 40.8 விழுக்காடு வாக்குகளே பெற்றுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

இப்படி, “பெரும்பான்மையினரின் தேர்வு” என்ற பெயரில், சிறுபான்மை வாக்குகள் வாங்கிய ஒருவரால், தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் பதவியில் அமர முடியும் என்பது மீண்டும் ஒருமுறை நம் கண்முன்னேயே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வழியிலேயே, இந்தத் தேர்தலில் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படாத செயலலிதா, ஓட்டை உடைசல்கள் வழியே தற்போது மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். போகட்டும்!

தமிழ்நாட்டு உரிமைகளை இந்திய அரசின் காலடியில் வைக்கப் பயன்படும் அடிமைப் பதவிக்கு, பெரும்பான்மை வாக்கு வாங்கினால் என்ன - சிறுபான்மை வாக்கு வாங்கினால் என்ன? இரண்டும் ஒன்றுதான்!

ஆனால், போலி சனநாயகத்துடன் நடத்தப்படும் - அதிகாரமற்ற இந்த சட்டப் பேரவைக்கானத் தேர்தலில், பணபலமிக்க திராவிட அரசியல் கட்சிகளை வீழ்த்திவிட முடியும் என்றும், “மாற்று அரசியல்” என்ற பெயரிலும், தேர்தல் அரசியல் களத்தில் கடுமையாக உழைத்த நம் நண்பர்கள் பலர் தோற்றுள்ளது வருத்தத்தையேத் தருகிறது.

அணு உலைக்கு எதிரானப் போராட்டத்தில் முதன்மைப் பங்காற்றிய முனைவர் சுப. உதயக்குமார், பொதுநல வழக்குகளில் அறியப்பட்ட டிராபிக் இராமசாமி, மணல் கொள்ளைக்கு எதிரான போராளித் தோழர் பிரபாகரன் என, தேர்தலுக்கு வெளியே உழவர் போராட்டம் - மணல் கொள்ளை எதிர்ப்பு - மதுக்கடை எதிர்ப்பு - சூழலியல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சிக்கல்களில் போராடிய பலரும், தேர்தல் அரசியலின் இன்றைய யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல், நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். எனப் பல்வேறு கட்சிகளின் சார்பில் பல தொகுதிகளில் போட்டியிட்டுத் தோற்றுள்ளனர்.  

உண்மையான சமூக மாற்றத்திற்குப் போராடுபவர்கள், தேர்தல் அரசியலில் சிக்கிச் சீரழியக் கூடாது என்பதே எங்கள் விருப்பம் – எம் கோரிக்கை! ஏனெனில், உண்மையான மாற்று, இதற்கு வெளியில்தான் இருக்கிறது.

கொள்கைகள் பேசி – தேர்தல் களத்தில் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்கிட முடியாது. ஏனெனில், இன்றையத் தேர்தல் களம் என்பதே, ஆதிக்க சக்திகள் நம்மை நாமே வீழ்த்திக் கொள்ள உருவாக்கப்பட்ட ஏற்பாடுதான்! ஆங்கிலேயர்கள் இதை அறிமுகப்படுத்தினர். அவர்களுக்குப் பின் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆதிக்க இந்தியத் தேசியவாதிகள் இதை கடைபிடிக்கின்றனர்.

அன்னா அசாரே போன்ற ஊழல் எதிர்ப்புத் தன்னார்வளர்களை, முனைவர் உதயக்குமார் போன்ற சூழலியல் செயல்பாட்டாளர்களை, மாவோயிஸ்ட்டுகளை எனப் பலரையும் – அவர்களது போர்க்குணமிக்கப் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் விதமாக, எம்மோடு “சனநாயகப் பாதையில்” - தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் என இந்திய அரசு சவால் விடுவது, தற்செயலானதல்ல!

சீரழிந்த நிலையிலுள்ள தேர்தல் அரசியலின் எதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல், தேர்தல் அரசியல் சகதிக்குள் சிக்குபவர்கள், தமது (முழு) ஆற்றல் அனைத்தையும் தேர்தலில் செலவிட்டு, பணபலமிக்க எதிரிகளிடம் தோற்றுப்போய், அந்த விரக்தியின் காரணமாக சோர்வுற்று - பொது வாழ்விலிருந்தே விலகிக் கொள்ளும் அபாயத்தை நோக்கித் தள்ளப்படுவர். இதுவே, இன்றைய வருந்தத்தக்க மெய்நடப்பு!

மக்களுக்கான உண்மையான களம், தேர்தல் அரசியலுக்கு வெளியே இருக்கிறது! அதை வளர்த்தெடுப்பதே, இன்றையத் தலையாயக் கடமை – தலையாயத் தேவை!

“மாற்று அரசியல்” என்பது தேர்தல் அரசியலில் பதவி வெல்வதில் கிடையாது. “மாற்று அரசியல்” என்பது வெறும் ஆளை மாற்றும் – ஆட்சியாளர்களை மாற்றும் அரசியல் கிடையாது அது, மக்களிடையே உருவாக்கப்பட வேண்டிய புதிய எழுச்சி - புதிய மறுமலர்ச்சி - புதிய போக்கு! அதை தேர்தல்களின் மூலம் வென்றெடுக்க முடியவே முடியாது.

அடுத்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா – பணம் கிடைக்குமா – பதவி கிடைக்குமா என எதிர்ப்பார்ப்பவர்களை சேர்த்து வைத்துக் கொண்டு, “மாற்று அரசியல்” – “இலட்சிய அரசியல்” என்றெல்லாம் பேசினால், அது தோல்வியில்தான் முடியும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்தியத்திடம் உரிமைகளை இழந்துவரும் தமிழ்நாட்டுக்கு, தற்போதையத் தேவை, புதிய முதல்வரோ – புதிய மாநில அரசோ அல்ல! பதவி – பணம் – விளம்பரம் – இவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு இலட்சியத்திற்காக களத்தில் நிற்கத் துணியும் இலட்சக்கணக்கான இளைஞர்களே, இன்றைய தேவை!

அவர்களை உருவாக்குவது – வழிநடத்துவது ஒன்றே எதிர்காலத் தமிழ்ச் சமூகத்திற்குப் பயனளிக்கும் செயல். அதுவே மாற்று அரசியல்! அந்தப் பாதையில் உருவாகும் இலட்சிய மனிதர்களே மாற்று அரசியலின் அடிப்படை அலகு! அவர்களே நம் இலக்கு!

இது நீண்ட நெடிய காலமெடுக்கும் கடினமான செயல்தான்! இருப்பினும் வேறு வழியில்லை! தனிநபர் தொடங்கி பெரும் அரசியல் கட்சிகள் – ஆட்சியாளர்கள் வரை, புரையோடிப் போயிருக்கும் பிழைப்புவாத மனநிலையை விரட்ட, இலட்சியத்தை நோக்கி சமூகத்தை உந்தித்தள்ளும் மாற்று அரசியல் சக்திகளே இன்றைக்குத் தேவை!

இத்தேர்தலில் வாக்களிக்க மறுத்தோர் இடையேயும் “யாருக்கும் இல்லை” என நோட்டாவில் பதிவு செய்தோரிடையேயும் இதற்கான மாற்று முயற்சிகள் தொடங்கினாலே போதும்! அதுவே எதிர்காலத்தில் மாற்று ஆற்றலாக வளர வாய்ப்புள்ளது.

இவற்றையெல்லாம் உணர்ந்து, தமிழ் மக்களை போராட்டக் களங்களுக்கு அணிதிரட்டும் அடிப்படைப் பணிகளில் நாம் ஈடுபடுவோம்! அதுவே இச்சமூகத்தை மாற்றும்! 

.அருணபாரதி

Comments

19 comments

19
Sivaram
அருமையான கட்டுரை. அதற்கு உங்கள் செயற்பாடு என்ன? கல்வியாளர்களை, சமூகசெயற்பாட்டாலர்களை, தன்நலம் கருதாத அரசியல் தலைவர்களை வாக்குவங்கி அரசியலுக்கு வெளியே ஒன்றுதிரட்டும் கட்டமைப்பு எங்கே?
Manikandan
ஒரு வெங்காயமும் தேவையில்லை, இப்படி தான் தமிழ் தேசியம் உரிமை போர் அது இது என்று உசுப்பேத்தி இலங்கை தமிழனை சுடுகாட்டில் புதைத்திர்கள் இப்போது இந்திய தமிழனையும் அழிக்க இப்படி தமிழ் தேசியம் பேசிக்கொண்டு சில கூட்டம் கிளம்பி இருக்கிறது. உங்க சகவாசமே வேண்டாம் சாமி
Sivaram
வெங்காயம் தேவையிலா மணிகண்டரே!. இலவசக் கல்விக்கும், இலவச மருதுவத்திற்கும், இலவச குடிநீருக்கும் தேவையான போராட்டம் வெங்காயமில்லை. லஞ்சம் இல்லா காசுகொடுக்காத வாகுரிமைக்கான போராட்டம் வெங்காயமில்லை. ஈழத்மிழர் போராட்டத்தை முறையற்ற முறையில் அழித்தது இந்திய அரசு என்பது ஈழத்தமிழருக்கு வெங்காயமில்லை.
Manikandan
Sivaram: இலங்கை தமிழர் போராட்டம் என்று சொல்வது தவறு, விடுதலை புலிகளின் போராட்டம், ஒரு தீவிரவாத கூட்டத்திடம் இருந்து இலங்கை தமிழர்களை இந்திய அரசு காப்பாற்றி இருக்கிறது, அதனால் தான் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் (சம்பந்தம், விக்னேஸ்வரன்) தமிழக அரசியல்வாதிகளை சந்திப்பதை விட மத்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் பிஜேபி தலைவர்களை சந்தித்து உதவிகளை பெறுகிறார்கள். உங்களை போன்ற ஆட்கள் அனைத்திலும் பொய்களை சொல்லி உண்மைகளை மறைக்க பார்த்திர்கள். தகவல் தொழில்நுட்பம் மட்டும் இல்லை என்றால் உங்களை போன்ற தமிழ் தேசியவாதிகள் சொன்ன கோயபல்ஸ் பொய்கள் உண்மை என்று மக்கள் நம்பும் நிலை வந்து இருக்கும். நல்லவேளை ஜ.நா போன்ற அமைப்புகள் மக்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொன்னது.

நிச்சயம் தமிழ் தேசியவாதிகளை நம்ப கூடாது, அவர்கள் இனவெறி தீவிரவாதம் மூலம் தமிழர்களை அழிக்க வந்தவர்கள். இலங்கையில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரியும் நிச்சயம் உங்களுக்கு எந்த காலத்திலும் தமிழக மக்களிடம் இருந்து ஆதரவு கிடைக்காது.
Sivaram
விடுதலைப் புலிகள் ஒன்றும் சந்திரமண்டலத்திலிருந்து வரவில்லை. மற்ற போராளிக்குழுக்களும் சந்திர மண்டலத்திலிருந்து வரவில்லை. இந்திரா காந்தி போராளிக்குழுக்களுக்கு பயிற்சி தந்தது எதனால். ஏன் இந்தியா இலங்கைப்பிரச்சனையில் தலை இட்டது,

டப்லின் தீர்ப்பாயம் ப்ற்றித் தெரியுமா?

ஐநா அறிக்கைகளை முழுமையாக படித்தீர்களா?

உண்மையில் விடுதலைப்புலிகளே காரணம் என்றால் பயங்கரவாதிகள் என்றால் ஐநா பரிந்துரைத்த சர்வதேச விசாரனைக்கு ஏன் இந்தியா ஒத்துக்கொள்ளவில்லை?
Manikandan
விடுதலை புலிகளும் மற்ற போராளி இயக்கங்களும் இந்தியா வந்து இலங்கையில் சிங்களவர்களால் நாங்கள் தாக்கபடுகிறோம், எங்களை தற்காத்துகொள்ள இந்திய அரசு எங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அரசு இலங்கை போராளிகளுக்கு உதவிகளை செய்தது (ஆனால் புலிகளின் பொய் பிரச்சாரம் இந்த விஷயத்தில் வேறு). இந்தியாவின் உதவி இல்லாமல் வளர்ந்தே இருக்க முடியாத ஒரு இயக்கம் தான் விடுதலை புலிகள் ஆனால் இந்திரா காந்தியிடம் உதவிகளை வாங்கி கொண்டு மகனை கொலை செய்ய துணித நன்றி கேட்ட பாவிகள் புலிகள். அவர்கள் செய்த பாவத்தினால் தான் கடைசியில் யாரும் இல்லாமல் அழிவை சந்தித்தார்கள்

புலிகளை வளர்த்தது இந்தியா தான், புலிகளால் அந்த நாடு சின்னாபின்னம் ஆனது, அந்த தவறை சரி செய்ய இலங்கை பிரச்சனையில் தலையிட இந்தியாவிற்கு தார்மீக உரிமை உள்ளது, மேலும் புலிகளின் கொடுரங்களில் இருந்து இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும் இந்தியாவிற்கு உள்ளது... உங்களை போன்றவர்கள் வேண்டுமானால் புலிகளின் பொய் பிரச்சாரங்களை நம்பி இந்தியாவின் மீது வெறுப்பை தூண்டலாம்.
Manikandan
இந்தியா சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை, இன்று இலங்கை பிரச்சனையில் ஆதரவு அளித்தால் நாளை பாகிஸ்தான் காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கும். மேலும் தீவிரவாதிகளை மனித உரிமை மீறல்கள் இல்லாமல் அடக்க முடியாது அதுவும் விடுதலை புலிகள் போன்ற உலகின் மிக வலுவான தீவிரவாத இயக்கத்தை மனித உரிமை மீறல் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. தீவிரவாதிகளை பொருத்தவரையில் மனித உரிமை மீறல்கள் அவர்களுக்கு ஒரு ஆயுதமே, புலிகள் மக்களை கேடயமாக பிடித்து வைத்து பலியிட்டதும் அதனால் தான்.

என்னை பொருத்தவரையில் இலங்கை யுத்தத்தில் இருதரப்புமே மனசாட்சி சிறிதும் இல்லாமல் நடந்து கொண்டார்கள், அதில் புலிகள் மிக மோசமாக செயல்பட்டார்கள், புலிகளின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் (துரோகம்)
Sivaram
போரில் ஈழப் போராட்டத்திலும் என்ன நடந்தெதென்று உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதன் சாட்சிகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள், சிங்களவர் உட்பட. முறையான விசாரணை நடந்தால் அனைத்தும் வெளிவரும். இந்தியாவின் பங்கு குறித்தும். அது இன்றி இங்கே இந்தியா கஷ்மீர் நொண்டிச்சாட்டுக்கு பின் ஒளிந்துகொளவ்து தர்மமற்ற இந்தியாவின் தன்மையையே காட்டுகிறது. பாகிஷ்தான் பிரிந்தபோது அதற்குரிய நிதியை நேரு இந்தியா முடக்கிய போது காந்தி உண்ணாவிரதம் இருந்தார். அது தர்மத்தின் பாற்பட்டது. பின்னர் நேரு அந்த நிதியை முடக்கும் தீர்மானத்தை மாற்றினார் அதற்காகவே காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சத்திய உணர்வு இன்றைய இந்தியாவிற்கு இல்லை.
Ramachandran Mohan
மணிகண்டன் அவர்களே முதலில் காஷ்மீர் பிரச்சனை என்ன என்பதை புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு எழுதுங்கள் .அதுவும் ஈழ பிரச்னையும் ஒன்றல்ல .காஸ்மீர் இந்த நாட்டின் ஒரு அங்கம் ,ஆனால் அதற்க்கு தனிப்பட்ட அரசியல் சலுகை வழங்கி உள்ளது அரசியல் சட்ட அமைப்பு .இந்தியாவில் எந்த மாகனத்திற்க்கும் இல்லாத ஒரு தனி சலுகை .பாராளுமன்றத்தில் சட்டம் சட்டமானாலும் காஸ்மீரில் அது அந்த மாநிலத்தின் சட்ட சபை ஒப்புதல் வழங்கினால்தான் அந்த சட்டம் செல்லுபடியாகும் .ஆனால் அப்படி இருந்தும் பிரிவினைய அங்குள்ள மக்களும் பாகிஸ்தானின் துணை கொண்டு போராட்டத்தை நடத்தி கொண்டு வருகின்றனர் .இலங்கை விஷயம் முற்றிலும் மாறுபட்டது .அங்கு வாழும் சிறுபான்மை பிரிவனருக்கு நியாயமான உரிமைகள் காலம் காலமாக மறுக்க பட்டுமில்லாது நசுக்கப்பட்டு வருகின்றன.அவர்கள் அந்த நாட்டின் பூர்வ குடிமகன்கள் .அந்த நாட்டின் விடுதலைக்காக பாடு பட்டவர்கள் .ஆங்கிலேயர்களின் அடிமையிலிருந்து மீண்டு மீண்டும் சிங்களவனிற்கு அடிமையானார்கள் .அந்த அடிமைத்தனத்தை மீட்கத்தான் போராட்டம் .இதற்க்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது .ஆனால் போராட்டம் திசை மாற்றப்பட்டது .சூழ்ச்சிகள் சுழற்றி போட்டது .அந்த சுழற்சியில் தமிழர்கள் சிக்கினர் சிலர் விலை பேசப்பட்டனர் .விலை போயினர் .அதனால் மொத்த தமிழ் சமுதாயம் எண்ணலா துயரை அனுபவித்து வருகின்றனர் .புலிகளின் மீது உங்களுக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கலாம் .ஆனால் அதற்காக தமிழர்களின் நியாயமான போராட்டத்தை கொச்சி படுத்தாதீர்கள் காஸ்மீர் பிரச்சனையுடன்
Manikandan
Ramachandran Mohan: காஷ்மீருக்கும் இலங்கைக்கும் ஒரு முக்கிய ஒற்றுமையை நீங்கள் பார்க்க மறுக்கிறிர்கள், இரண்டிலும் கண்மூடிதனமான தீவிரவாத வெறுப்பு தூண்டப்பட்டு இருக்கிறது. காஷ்மீரின் தீவிரவாததிற்கு காரணம் மதம், இலங்கை தீவிரவாததிற்கு காரணம் இனம் மற்றபடி அனைத்தும் ஒன்றே... காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கு எதிராக, இந்தியாவிற்கு எதிராக என்ன என்ன பிரச்சாரங்கள் நடத்தபடுகிறதோ அதே பிரச்சாரம் இலங்கையில் நடத்தப்பட்டது.

எப்படி காஷ்மீர் தீவிரவாதிகள் பிரிவினையை தவிர வேறு எதற்கும் தயாராக இல்லையோ அதேபோல் இலங்கையிலும் தனி நாடு என்பதை தவிர வேறு எதற்கும் விடுதலை புலிகள் ஏற்கும் நிலையில் இல்லை... விடுதலை புலிகளால் தமிழ் இனமும் இஸ்லாமிய தீவிரவாத வழியில் சென்றது, பள்ளிகூட சிறுவர்கள் மீது கூட சிங்களவர் என்ற காரணத்திற்காக தற்கொலை தாக்குதல் நடத்தும் அளவிற்கு மனம் வக்கிரப்பட்டு இருக்கிறது, அதையும் உங்களை போன்றவர்கள் நியாயபடுத்துகிரிர்கள்.

இப்போது நான் சொன்ன இந்த விஷயங்களை வைத்து என் மீதும் நீங்கள் கோபபடுவிர்கள், நான் சொன்னதை சிறிதும் சிந்திக்க மாட்டிர்கள்.

ஹிந்துக்கள் கூட காஷ்மீர் இஸ்லாமியர்கள் சேர்ந்து வாழ முடியாது
சிங்களவனோடு தமிழன் சேர்ந்து வாழ முடியாது

பாகிஸ்தான் என்ற நாடே இஸ்லாமியர்களுக்காக தான் உறுவானது
தமிழனுக்கு தனி நாடு வேண்டாமா

எவ்வுளவு ஒற்றுமை பாருங்கள்
Manikandan
Sivaram: இலங்கை போரில் மனித உரிமை மீறல்கள் போர் குற்றங்கள் நடந்தது உண்மை அதை யாரும் மறுக்க முடியாது ஆனால் விடுதலை புலிகள் போன்ற உலகின் மிக வலுவான ஒரு தீவிரவாத இயக்கத்தை மனித உரிமை மீறல் இல்லாமல் வெற்றி பெற முடியும்மா...

நீங்கள் எல்லாம் பேசுவது இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்திய போற்குற்றங்களை ஆனால் நீங்கள் இன்னொரு விஷயத்தை மறந்து விட்டிர்கள், விடுதலை புலிகள் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கு இழைத்த அநிதிகளை நீங்கள் யாரும் பேசுவது கூட கிடையாது

மேலும் உலகம் புலிகளுக்கு அமைதி வழிக்கு திரும்புவதற்கு பல சந்தர்ப்பங்களை கொடுத்து விட்டு தான் விலகினார், இன்னும் சொல்லபோனால் போரை ஆரம்பித்தவர்கள் புலிகளே... புலிகள் எந்த ஒரு சமரசத்திற்கும் வரவில்லை என்ற பிறகு தான் உலகம் அவர்களை கைவிட்டது, அதுவும் பள்ளி சிறுவர்கள் மீது புலிகள் மனிதவெடி குண்டு தாக்குதல் நடத்திய பிறகு தான் அத்தனை நாடுகளும் புலிகளிடம் இருந்து விலகினார்கள்
Ramachandran Mohan
Manikandanதிரும்ப திரும்ப அரைத்த மாவையே அறைகீரீர்கள் .நான் சொன்னது காஸ்மீர் மக்களின் அரசியல் நிலையையும் இலங்கை தமிழ் மக்களின் நிலையம் ஒன்றல்ல .அனைத்து அரசியல் சாசன நிலை மற்ற சாதாரண இந்திய குடி மக்களுக்கு உண்டான அரசியல் உரிமையை விட அதிக படியான உரிமை காஸ்மீர் மக்களுக்கு உள்ளது .ஆக அவர்களின் கோரிக்கை நியாயமானது இல்லை .இதே அரசியல் உரிமையை மற்ற இந்திய மாநிலங்களுக்கு தராதது ஏன் ? கொச்சி -திருவாங்கூர் மாகாணம் இந்தியவுடன் சேரமால் தனி நாடாகத்தான் விரும்பியது . திவான் சர் .சி .பி .ராமசாமி தனி நாடாகத்தான் இருக்க விரும்பினார் .ஆனால் அவர் மீது வன்முறை தாக்குதல் நடத்தி (கத்தியால் குத்தி ) அந்த மாகாணத்தை இந்திய யூனியனில் சேர்க்கப்பட்டது ( ஆதாரம் RSS ன் இந்திய பிரிவினையின் சோக வரலாறு )உங்களுக்கு புலிகளின் மீது வெறுப்பு இருக்கலாம் .அது உங்களின் தனிப்பட்ட விருப்பம் .ஆனால் அதையே கூறி தமிழ்;மக்களின் உரிமையை கொச்சை படுத்தாதீர்கள் . ஆளுகின்ற சிங்களவர்களின் வன்முறையும் குள்ள நரிதந்திரமும் எதற்கும் குறைந்ததில்லை .
Manikandan
Ramachandran Mohan: காஷ்மீர் உரிமை பற்றி எனக்கும் தெரியும் ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயலும் விடுதலை புலிகளின் செயல்களும் ஒன்றாகவே இருந்தது...

உங்களுக்கு ஒரு கேள்வி தமிழ் மக்களுக்கு உரிமைகள் பறிக்க பட்டது அதனால் விடுதலை புலிகள் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை எல்லாம் இரக்கமே இல்லாமல் கொலை செய்தது நியாயம் என்பது உங்கள் வாதம். அதில் முக்கயமான ஒன்று கல்வி சிங்களவர்கள் குறைவான மதிப்பெண்கள் வாங்கினாலும் அவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது வேலைவாய்ப்புகள் கிடைத்தது ஆனால் தமிழர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் அவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டன அதனால் புலிகளின் தீவிரவாதம் நியாயம் என்று சொல்கிறிர்கள்.

சரி, இங்கே இந்தியாவில் பிராமணர்களின் நிலையம் அது தானே, அவர்களை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம், திறமையும் அதிக மதிப்பெண்கள் பெற்றாலும் பிராமணர்களுக்கு உரிமைகள் மறுக்கபடுகின்றன.

இதற்காக பிராமணர்கள் ஆயுதம் ஏந்தி மற்ற ஜாதி மக்களை எல்லாம் சிறுவர் குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் கொலை செய்தால் அது நியாயம் என்று சொல்விர்களா... --- இந்த கேள்விக்கு உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன் (சும்மா ஏனோதானோ என்று பிராமணர்கள் மீது வெறுப்பை தூண்டும் பதில் சொல்ல வேண்டாம்)
Manikandan
Ramachandran Mohan உங்களை போன்றவர்களிடம் இருக்கும் பிரச்சனையே புலிகளையும் தமிழர்களையும் ஒன்றிணைத்து பேசுவது தான். நிச்சயம் புலிகள் தமிழர்களின் விருப்பத்திற்கு இணங்க செயல்படவில்லை, பிரபாகரன் என்ற தனி மனிதனின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் சுயநலத்தோடு தமிழ் மக்கள் புலிகளின் அடிமைகள் என்ற எண்ணத்தில் தான் செயல்பட்டார்கள்.

அதனால் தமிழர்களின் போராட்டம் என்று சொல்லாதிர்கள், அது புலிகளின் போராட்டம் என்று சொல்லுங்கள் அது தான் சரியாக இருக்கும்
Ramachandran Mohan
நல்ல சிரிக்க வைக்கிறீர்கள் . இலங்கையில் நடந்த போராட்டம் புலிகளின் போராட்டம் தமிழர்களின் போராட்டம் இல்லை என்று .,ஈழத்து காந்தி செல்வா ,TULF ,டெலோ,PLOTE .ENDLF ,மற்றும் EPDLF இவைகள் அனைத்துமே தமிழர் உரிமைகளுக்கான அமைப்புகள் டெலோ வை தவிர அனைத்துமே ஒருகாலத்தில் ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்தின வரலாறு தெரியாமல் புலிகளின் மீதான காழ்ப்பு உணர்ச்சி கொண்டு பழிக்காதீர்கள் .இங்கே நாம் குறிப்பிட்டது காஸ்மீர் பிரச்னையும் ஈழ பிரச்சனையும் ஒன்றல்ல .காஷ்மீர் மக்களுக்கு இந்த நாட்டின் மற்ற குடிமக்களுக்கான உரிமைகளை விட அதிகப்படியான அரசியல் உரிமை உண்டு .அது வழங்கியும் தனி காஷ்மீர் நாடாக /தன்னோடு இணைய பாகிஸ்தான் முயற்சிக்கிறது .இலங்கையில் இழந்த உரிமைகளை மீட்க போராட வேண்டியுள்ளது .வன்முறையை ஆயுதத்தை ஏந்த தூண்டியது இலங்கை அரசு .ஆனால் மித மிஞ்சிய அரசியல் உரிமைகளை வழங்கியும் காஸ்மீர் தீவிரவாதிகள் இந்திய அரசுக்கு எதிரான போக்கையும் பாகிஸ்தானுக்கு ஆதரவான போக்கையும் கொண்டுள்ளனர் .ஈழத்தின் அரசியல் நிலை வேறு காஸ்மீரின் அரசியல் நிலை வேற்று .இதுதான் என் கருத்து .புலிகளின் நிலையை முற்றிலும் ஆதரிக்க வில்லை .இதை புரிந்து கொண்டு எழுதுங்கள்
Manikandan
Ramachandran Mohan: நான் பேசுவது காஷ்மீர் மக்களுக்கு என்ன உரிமைகள் இருக்கிறது இலங்கை தமிழர்களுக்கு என்ன உரிமைகள் இருக்கிறது என்பதை பற்றி அல்ல.

நான் பேசுவது தீவிரவாதத்தை பற்றி மட்டுமே. விடுதலை புலிகளின் தீவிரவாத செயல்களுக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயல்களும் ஒன்றாக இருப்பதை பற்றி மட்டுமே.

மேலும் உலகில் உள்ள அனைத்து தீவிரவாதிகளும் தங்களின் தீவிரவாத செயல்களுக்கு ஏதோ ஒரு நியாயத்தை கற்பித்து கொண்டு தான் இருக்கிறார்கள்... ISIS தீவிரவாதிகளுக்கு இஸ்லாமிய மதம், விடுதலை புலிகளுக்கு தமிழ் இனம் ஆனால் இரண்டு பேருமே தங்கள் சார்ந்த இனத்திற்கு பெரும் தீமையை தான் கொண்டு வந்தார்கள்.

சிங்களவர்கள் கொன்ற தமிழர்களை விட விடுதலை புலிகள் கொன்ற தமிழர்கள் தான் அதிகம்.
Ramachandran Mohan
TULF தவிர
Ramachandran Mohan
Mr.Manikandan ,You have referred the issue of Kashmir with Eealam issue .refer 26/05/2016 posted at 19.12.First understand the issue you compared is not a valid one .My point is these issues are different .The fight for the freedom of Kasmir and Eelam .In Kasmir the people are given full autonomous whereas the rights of the citizen of Srilanka is being trampled and their voice is crushed .Therefore ,comparing and justifying the atrocities committed by the SL Government is wrong and equally condemnable.You can not justify the action of GoSL simply because Tigers indulged in killing .The Tamils ( irrespective Militants group ) took arms because the GoSL forced them to
manivannan
காஷ்மீரில் அப்பகுதியை 50 ஆண்டுகளுக்கு இந்தியாவுடன் ( ஷேக் அப்துல்லாவும் நேருவும் ) ஒப்பந்தம் போட்டு இணைத்தார்கள் ... 50 ஆண்டுகளுக்கு பின் என் காஷ்மீர் மக்கள் விரும்புமாறு செய்யுங்கள்.
50 ஆண்டிற்கு பின் பொது வாக்கெடுப்பின் மூலம் காஷ்மீர மக்கள் இந்தியாவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்களா? தனித்து காஷ்மீரத்தை பிரித்துக் கொள்ள விரும்புகிறார்களா? என்று வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பது நேருவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் கூறுகிறது ! எனவேதான் காஷ்மீர் மக்கள் 50 ஆண்டு ஒப்பந்தம் முடிந்தபின் வாக்கெடுப்பிற்காக போராடுகிறார்கள் !
இந்த ரொம்ப ரொம்ப நியாயவான்(! )இந்திய அரசு என்ன செஞ்சிருக்கணும் ? என்ன செய்யனும்? காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தனுமா ? இல்லையா? இன்றுவரை வாக்கெடுப்பு நடத்தாம அடாவடித்தனம் செய்யுது இந்தியா.... காஷ்மீர் மக்கள் தமது தேச விடுதலைக்காக போராடுகிறார்கள் ... அவன் மண்ணை அவன் கேட்கிறான். அய்யா............ போடப்பட்ட 50 ஆண்டு ஒப்பந்தம் முடிந்தது !
அவனை தனியா வாழ விடுங்க.... ( உங்களுக்கு பாகிஸ்தான் ஆகாதுனா அது உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள பிரச்சினை... அதை நீங்க பேசி தீர்த்துக்குங்க ! போர்செஞ்சி தீர்த்துக்குங்க அது உங்க பிரச்சினை ) அதுக்காக காஷ்மீர் மக்களிடம் எதுக்கு இந்திய ராணுவம் நிக்குது? அந்த மக்களை எதுக்கு குற்றவாளிகள் போல் நடத்துது? ஒப்பந்தம் முடிஞ்சிபோச்சு இல்ல? என்னை தனியா விடுடானு காஸ்மீர் மக்கள் கேட்கிறாங்க? இதுல உங்களுக்கு என்ன வந்துச்சி ? ஏன் விட மாட்டேங்கிறீங்க?
உங்களால் விட முடியாது! காரணம் இருக்குங்க.... காரணம் இருக்கு ! இந்தியாவின் பூகோள நிலைமை அப்படி.... 1. பாகிஸ்தான் கிட்ட பாதி காஷ்மீர் இருக்கு
இந்தியாகிட்ட பாதி காஷ்மீர் இருக்கு !

காஷ்மீர் மக்களை தனி தேசமா விட இந்தியா தயாரில்லை ....... காரணம் ..... இந்தியா காஸ்மீரை மட்டுமா தனது அடாவடித்தனத்தால் தன்னோடு கட்டி வச்சிருக்கு ? மகா ராஷ்டிரம் ( இந்த மாநிலத்தின் பெயரை பாருங்கள்... "பெரிய அரசு" என்று பொருள் வரும் ! அந்த பெரிய அரசு என்ன ஆச்சி ? இந்தியா என்ற பெரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரீரிரிரிய....
அரசால் விழுங்கப் பட்டுடிச்சி ! தமிழ் நாடு ...( கவனிங்க நாடு ! அடடா ? அது எப்படிங்க ஒரு நாட்டுக்குள்ள இன்னொரு நாடு இருக்க முடியும் ? ஆகா இந்தியா என்பதில் பெரிய அரசு உள்ளடங்கி கிடக்கு..... நாடு உள்ளடங்கி கிடக்கு..... ஆனாலும் இந்தியா ஒரு நாடு... அடா அடா உங்க நியாயம் இருக்கே ...... இந்த பாழாய்ப்போன இந்தியா உருவான வரலாறு இருக்கே ? எந்த கல்லூரி பாட புத்தகத்திலும் இது இருக்காதுங்கோ இருக்காது....! ..... வல்லபபாய் படேலால் கடும் இரும்புக் கரம் கொண்டு கட்டப்பட்ட செயற்கையான தேசம் இந்திய தேசம் ....
இங்குள்ள தேசிய இனங்கள் விரும்பி இந்தியாவுடன் இணையவில்லை..... மிரட்டி ... பலாத்கார நடவடிக்கை மூலம் இணைக்கப்பட்டுவிட்டு.... அதே ராணுவ பலாத்கார நடவடிக்கைமூலம் இந்திய அரசு எல்லா தேசிய இனங்களின் மொழி உரிமையை , ஆட்சி உரிமையை , பண்பாட்டு உரிமையை, கலைகளை தனித்தனி தேசிய இனங்களின் வரலாற்றை எல்லாம் திட்டமிட்டும் அட்டவடிதனமாகவும் அழித்து அனைத்தும் இந்திய வரலாறு என பூசி மெழுகுகிறது !
காஷ்மீர் எங்க மண் என காஷ்மீர்இ மக்கள் உலக அர நெறிகளுக்கு உட்பட்டு .... தார்மீக அடிப்படையில் கால காலமாக தனி நிலமாக வாழ்ந்து வந்த தமது அரசை கேட்கிறார்கள்..... கொடுக்க மறுக்குது இந்தியா அடாவடி அரசு !

காரணம் இந்தியா என்பது திட்டமிட்டு உருவாக்கப் பட்ட ஆதிக்க தேசம்..... முழுதும் பல்வேறு தேசிய இன இலக்கியங்களில் உள்ள இலக்கியங்களை எல்லாம் இந்தி இலக்கியம் என பட்டியலிட்டுக் காட்டி 1947 க்கு முன்/ முன் எப்போதுமே வரலாற்றில் இல்லாத இந்திய தேசத்தை பார்ப்பன சாதியாதிக்க தலைமை சக்திகளும்/ இந்திய தரகு முதலாளிய சக்திகளும் திட்டமிட்டு இந்தியா என்ற பொய்யான ஆதிக்க தேசத்தை கட்டி எழுப்பியுள்ளனர்.
இங்கு ஒடுக்குமுறை மட்டுமே ஒவ்வொரு தேசிய இனத்தின் மீதும் இருக்கிறது என்பதை ஒருவர் காண வேண்டும். இன்றுவரை இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி. தமிழ் உட்பட பிற தேசிய இன மொழிகள் வட்டார மொழி தகுதி மட்டுமே பெற்றவை. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் சூத்திர மக்கள் ( இழிபிறவிகள் ) உழைக்காத கூட்டம் தேவரின் பிள்ளைகள் ( கடவுளின் பிள்ளைகள் ) என்ற கொடும் பார்ப்பனிய தத்துவம் பட்டப் பகலில் ஆட்சி நடத்துகிறது ! ஆக ..... உருவாகி நிலைத்த தேசிய இனங்கள் , உருவாகி வரும் தேசிய இனங்கள், ஆட்சி மொழி உரிமைக்காக , தேசிய தகுதிக்காக போராடும் தேசிய இனங்கள் என பல ஏற்ற தாழ்வான பன்முக வளர்சியுடைய பல தேசிய இனங்கள் கொண்ட அவற்றின் வளர்ச்சியை இந்தியா என்ற போர்வையில் தடுக்கும் ஏகாதிபத்திய பேரரசு தான் இந்தியா ! இது ஒரு ஆதிக்க தேசம் .... அடாவடி தேசம்... இந்தியா மக்களால் தூக்கி வீசப் படவேடிய தேசம்.... ஒவ்வொரு தேசிய இனங்களும்... தமது தேசிய தற்சார்பு அரசுகளை அமைக்கவேண்டிய நிலையில் உள்ளன !
நாம் காணவேண்டியது ....இங்கு ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதற்கே உரிய வரலாறும்/ மொழியும்/ கலாச்சாரமும்/ தொழில் நுட்பமும் வேருபட்டவகையில் கொண்டுள்ளன என்பதுதான்.! இதை இவை எந்தசூழலிலும் விட்டுத்தர தயாரில்லை... ஆனாலும்இ இந்தியா கூட்டை ஒருபுறம் ஏற்றுக்கொண்டுள்ளது.... இதுதான் முரண்பாடு !
அனைத்தும் இந்தியா என்ற போர்வையில் இந்திய கலாசாரம் என காட்டி மட்டுப்படுத்திவிட அகன்ற இந்திய தேசக் கனவுகளோடு அலைகிறார்கள் . ! தமிழகத்தின் வளங்கள் எல்லாம் இந்தியா என்ற போர்வையில் கொள்ளை போகிறது ...... ஏன் என தமிழக அரசால் கேட்க முடியாது....... தமிழக அரசிற்கென தனி அதிகாரம் கிடையாது.... இது டெல்லியின் அடிமை அரசு...... மண்ணெண்ணெய் வேணுமா ? மீனவன் பிரச்சினையா? வெல்ல நிவாரணம் வேணுமா? மத்திய அரசுக்கு கடிதம் எழுதறத தவிர தமிழக அரசிற்கு அதிகாரம் கிடையாது!
இங்கு சாதி/ இன / வர்க்க ஒடுக்குமுறையை ஆளும் வர்க்கம் இந்தியா என்ற போர்வையில் நடத்துகிறது ! உழைக்கும் தேசிய இன மக்கள் இந்தியா என்ற ஆதிக்க தேசத்தின் கீழ் அடிமைகளாக/ மாநில அரசு என்ற பெயரில் / பொம்மை அரசிலும் கீழாக எவ்வித உரிமைகளும் அற்று வைக்கப் பட்டுள்ளார்கள். அவர்களின் பண்பாடு இழிவானதாக ஒதுக்கப்பட்டு எங்கும் பார்ப்பன/ மேலை நாகரீக நுகர்வுப் பண்பாடே உயர்வானதாக புகுத்தப் படுகிறது! சொந்த தாய் மொழியில் படிப்பது இழிவானதாக சொந்த மக்களாலேயே கருதப்படும் மன நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். தமது வரலாற்றை மீட்க பார்ப்பனிய சாதி ஆதிக்க இந்திய சமூக அமைப்பு இங்கு தகர்க்கப்பட்டு ஒவ்வொரு தேசிய இனங்களும் தத்தமது தேசிய அரசுகளை அமைத்துகொள்ள வேண்டிய உடனடி தேவை இருக்கிறது....
நாடற்ற ஒரு நாடோடி கூட்டம் ( பார்ப்பன கூட்டமும் இந்திய தரகு முதலாளிகளும் சேர்ந்து தமக்கான நாட்டை இந்திய தேசத்தை கட்டமைத்துக் கொண்ட துரோக வரலாறுதான் இந்திய வரலாறு ! இங்கு எல்லா தேசிய இனங்களும் ஒடுக்கப்படுகின்றன ! இந்தியாவில் எந்த மக்களாலும் பேசப்படாத தூய சமர்க்கிருதமாக்கப் பட்ட இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழி ! தமிழ் உட்பட அனைத்து தேசிய இன மக்களும் பேசும் மொழி சூத்திர மொழி... ஆட்சி மொழி ஆக தகுதியற்ற மொழி !.... இதுதான் இந்தியா அனைத்து தேசிய இனங்களையும் மதிக்கும் லட்சணம்...
இங்கு இரு அரசியல் தான்! ஒன்று இந்தியாவை பாதுகாக்கும் அரசியல் ! இன்னொன்று தத்தமது தேசிய அரசு உரிமைக்காக, மொழி உரிமைக்காக, பண்பாட்டு, அரசியல், வரலாற்று பாதுகாப்பிற்காக, மீட்பிற்காக போராடும் அரசியல் ! முதலாவதில் பிற்போக்கு ஆளும் கும்பல்களின் அகன்ற இந்திய தேசம் எனும் நயவஞ்சக நோக்கம் உள்ளடங்கி உள்ளது. இரண்டாவதில் அறிவுத்துறையினர்/ ஒவ்வொரு தேசிய இன பாட்டாளி, விவசாயி, மகளிர், மாணவர், ஒடுக்கப்பட்டவரின் நலன் அடங்கி உள்ளது ! நாம் எந்த பாதையை பின்பற்றுவது? என்பதை நாம்தான் முடிவுசெய்ய வேண்டும்.அரசின் நிர்வாக எல்லையில் உள்ளதை நாம் தேசம் என எப்படி ஏற்க முடியும் ? அதன் உண்மையான வரலாற்றை ஆய்வு செய்யாமல்?
நான் கூற வருவது .... இந்தியா என்பது திட்டமிட்டும் ஆதிக்கமாக கடந்த 100 ஆண்டுகளில் உருவாக்கிவிட்டு " பாரத தேசம் பழம்பெரும் தேசம் நீர் அதன் புதல்வர் இன் இன் நினைவு அகற்றாதீர் " என கதை அளக்கிரார்களே ..... பிற நாடுகளில் இப்படியா நிலைமை இருக்கிறது ! என் வளங்களை என் அனுமதி இல்லாமல் எதனால் எடுக்கிறாய்? என கேட்டால் ..... என் மொழி ஏன் ஆட்சியில் இல்லை எனக் கேட்டால் உங்களுக்கு நான் பிரிவினைவாதியாக தெரிகிறேனே ? எப்படி ? பலாத்காரமாக நிலங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்த இந்தியா ஒரு ஏகாதி பத்திய அரசு !
இங்கு எல்லா தேசிய இனங்களின் அரசுரிமையையும் மறுத்து இந்தியா என்ற பெயரில் ஒடுக்குமுறை இருக்கிறது. ஒரு தேசிய இனமாக ஒடுக்கவில்லை. இந்தி மொழி நம்மை ஒடுக்குகிறது ... இந்தி பேசும் தேசிய இனம் உள்ளதா ? இல்லை... இருப்பதாக காட்டுகிறார்கள்.
இந்தியாவில்? யார் நம்மை ஒடுக்குவது? இந்தியா முழுதும் தரகு முதலாளிகளின் மூலதனம் இருக்கிறது ! இவர்களுக்கு அகன்ற இந்திய சந்தை தேவைப்படுகிறது ! பார்ப்பனிய சக்திகளின் சனாதன சாதி ஆதிக்க அமைப்பு இந்தியா முழுதும் வேரூன்றியுள்ளது.....அங்கெல்லாம் பார்ப்பனியம் தான்தான் உயர்ந்தவன் என தலைமை இடத்தில் உட்கார்ந்துள்ளது. பார்ப்பனியத்திற்கு தேசிய இன வரலாறு குறித்த அக்கறை இல்லை. நாடற்ற ஒரு நாடோடி கூட்டம் இந்தியா என்ற போர்வையில் ஒரு அரசு கட்டுமானமாகவே இங்கு 2000 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் வசதியாக அமர்ந்து கொண்டது !
10. அதே போல இங்கு முதலாளிகளின் தோற்றமும் ஐரோப்பிய நாடுகளைப்போல பட்டறைத்தொழில் அல்லது கைவினைத்தொழில் மூலம் வந்தவர்களல்ல ! மாறாக வெள்ளைக்காரனோடு யார் தரகு வேலை பார்த்து கூடி தொழில் செய்தார்களோ அவர்கள்தான் இந்திய தொழில் துறையில் முதலாளிகள் என உருவானார்கள் . எனவே இயல்பிலேயே இந்திய முதலாளி வர்க்கம் தரகு தன்மை கொண்டதாகவும், தொழில் துறையிலிருந்து உருவாகாமல் அன்னியர்க்கு அடிமை சேவகம் செய்யும் வர்க்கங்களில் இருந்தே உருவானதாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக பார்ப்பன/ பனியா/ மார்வாடி , குஜராத்தி, சேட்டு போன்ற உயர்சாதி இருபிரவியாளர்களில் இருந்தே இங்கு முதலாளியம் தோன்றியது.
ஆக, இந்தியாவில் இந்தி மொழியின் மூலம் அனைத்து தேசிய இனங்களும் ஒடுக்கப்பட்டு தமிழர் நலனை பேசினாலே " தீவிரவாதிகள் " " பிரிவினைவாதிகள்" " இன வாதிகள் " என முத்திரை குத்துவதற்கு பெயர் என்ன? இந்திய ஆதிக்க மனோபாவம் அது! இந்திய ஆதிக்கத்தை ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏற்க்கசெய்யும் அடிமைப்புத்தி !
தீவிரவாதமாம் .... தீவிரவாதம்.... ஏன்டா ஏன் மண்ணை இன்னமும் ஆள்கிறாய் என கேட்டால் காஸ்மீர் மக்கள் உங்களுக்கு தீவிரவாதிகளா தெரியறாங்க இல்ல?
தனது ஒட்டுமொத்த இளமையையும் தொலைத்துவிட்டு? ஐரோம் ஷர்மிளா மணிப்பூரில் எதற்க்காக ஐய்யா 15 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கிறாள் ? கொழுப்பா? திமிரா?
இந்திய அரசு அதிகாரிகள் அவளுக்கு வலுக்கட்டாயமாக ஒவ்வொரு முறையும் மருத்துவமனையில் குளுகோஸ் ஏற்றுவதின் மர்மம் என்ன ? யோசிக்கவே மாட்டீர்களா?

இந்தியா..... இந்தியா என்று கூப்பாடு போடுகிறீர்களே .... நம்ம பாசத்திற்குரிய பாரததேசம் .... மணிப்பூர் மண்ணில் இந்திய ராணுவப் படையை நிறுத்தி எந்தப் பெண்ணை வேணா கண்ட இடத்துல கைய வச்சி சோதனை போடும் கொடுமை.... சுட்டுத்தள்ளும் கொடுமை.... மணிபூர் ராணுவ சட்டத்தை திரும்பப் பெறத்தானே ஷர்மிளா.... உண்ணாவிரதம் இருக்கிறார்? அந்த நிலைமை தமிழகத்துலயும் வந்தால்தான் நீங்க பார்ப்பீங்கலோ என்னவோ ? ( சென்னை உயர் நீதி மன்றத்திற்குள் மத்திய படை நிற்குதே அது ..... ஒரு துவக்க நிலை அச்சுறுத்தல் ! .... நீங்களா ஒரு இந்தியா தேசத்தை கட்டமைசுக்குவீங்க ... எங்க வேணா இந்தியா ராணுவத்தை நிறுத்துவீங்க .... சோதனைன்னு பொது மக்களோட இயல்பு வாழ்வை கேடுப்பீங்க? யாரும் கேள்வி கேட்க கூடாது? கேட்டா உங்களுக்கு சாதாரண மக்கள் கூட தீவிரவாதி ? அப்ப இந்தியா அரசு செய்றது அன்பின் வெளிப்பாடா? இலங்கை இந்தியா அரசின் கட்டுப் பாட்டுல இருக்கணும்னு விடுதலைப் புலிகளை அழிசீங்க... அப்பகூட அவங்க சீனாவோடையும் .... பாகிஸ்தானோடும் கொஞ்சி குலாவுரத உங்களால தடுக்க முடியல.... புலிகள் ... பயங்கரவாதிக.... தீவிரவாதிக ? நல்லா இருக்குங்க உங்க நியாயம்... தன மக்களை பாதுகாக்குறவன் தீவிரவாதி... சரிப்பா ...உங்க வழிக்கே வர்றேன்... அப்ப அமைதியா பொதுக்கூட்டம் போட்டு பேசிகிட்டிருந்த ஈழ மக்களை கொன்ன சிங்களவன என்ன சொல்வீங்க? குழந்தைகள /// பொதுமக்கள ரோட் றோலர ஏத்தி நசுக்கி கொன்னானே சிங்களவன் அவன என்ன பெயரிட்டு அய்யா அழைப்பீங்க ? உலகில் எங்கும் இல்லாத மொழி வளத்தோடு பல்லாயிரம் ஆண்டுகளா பாதுகாத்து வந்த எங்கள் தமிழ் மொழியின் யாழ் நூலகத்தை சிங்களன் எரித்து அழித்தானே .... எதற்க்காக அய்யா ? எங்கள் வரலாற்றை அழித்துவிட்டால் தமிழர்கள் கள்ளத்தோணி என கதை அளக்கலாம் என்பதால் தானே? ..... இங்கு பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டை மறுக்கிறோமா? அய்யய்யோ நல்லா நாடகம் ஆடுறீங்க ........ நேற்றுவரை நான் நாடகம் நடிக்க மாட்டேன்... உடல் உழைப்பில் ஈடுபட மாட்டேன்னு சொன்னீங்க.... நாங்கல்லாம் பிரம்மனோட நெத்தியில பொறந்தோம்.... பிரம்மத்த உணர்ந்தவங்க.... பிராமிணர்கள் னு கதை விட்டீங்க..... இப்ப வந்து .... வேலை வாய்ப்பு வேணுமின்னு நிக்கறீங்க? காலம் காலமா கோயில்ல மணி ஆட்டிநீங்க ... வாங்க கொஞ்ச நாளைக்கு முனிசிபாலிட்டி வேலைக்கு மனு போடுங்கனு சொன்னா சாதிய சொல்லி இழிவுபடுத்தறதா கூப்பாடு போடறீங்க? தலை முறை தலைமுறையா அடக்கப் பட்டு சாதியால் இழிவு படுத்தப் பட்ட எம் தமிழ் மக்களை முன்னேத்த இட ஒதுக்கீது வந்தது..... நீங்க முதலில் தமிழ்தான் எங்க தாய் மொழின்னு சொல்வீங்களா? சமற்கிருதம் தானே உங்க வீட்டு மொழி? தமிழை " ஷா" போட்டு கொல்லாம விடமாட்டீங்களே ? அப்புறம் தமிழ் நாட்டு வேலை வாய்ப்பில மட்டும் பங்கு கேட்கறீங்க ?. எல்லாரும் இங்கு வாழ உரிமை இருக்கு ! நீங்களும்... எங்கள் சகோதரர்கள் தான்... ஆனா ..எப்போ ? எங்க தமிழ் ஈழ மக்களின் வேதனையை காது கொடுத்து நிக்கிறப்ப ! நீங்களும் எங்க சகோதரர்தான் எப்போ? எங்க தமிழ் மொழியை உண்மையிலேயே நீங்க உங்க சமர்க்கிருதத்த விட மேலா மதிக்கிரப்ப ..... எங்க கூட வே வாழ்ந்துகிட்டு ..... நாங்களா கடவுளுக்கு பொறந்தவங்க நீங்கலாம் நீசர்கள்.... சூத்திரர்கள்.... னு சொல்றத நிறுத்தினா..... கோவில்ல இருந்து வெளிய வந்து எங்களோட .... வயல் வேலைக்கும் இட ஒதுக்கீடு கேட்டீங்கனா ..... அப்ப ! ஆனா அதிகாரியாக தமிழனோட வரிப்பணம் வேணும் ! வாழறதுக்கு சமஸ்கிருதம் வேணும்....... உங்கள காயப் படுத்தறது எங்க நோக்கம் இல்ல ! .... விடுதலை புலிகளும் பயங்கர வாதிங்கனு சொன்னீங்க பாருங்க..... சிங்கலநாள் கற்பழிக்கப் பட்டு... இந்த கருப்பை தானே தமிழனை மீண்டும் மீண்டும் சுமக்குதுனு எம் தமிழ் பெண்களின் கருப்பையை எல்லாம் நீக்கின சிங்களவனுக்கு ஆதரவா நின்ன இந்தியாவோட பக்கம் நின்னீங்க பாருங்க ? அடா.... அடா.... அப்பவே நீங்க யாருன்னு நாங்க முடிவுக்கு வந்துடமாட்டோமா? தயவுசெஞ்சி வரலாற்றை முதல்ல படிங்க.... உண்மையின் பின்னால் நில்லுங்க... நீங்க இந்த மண்ணுல வாழுறீங்க .... உண்மையிலேயே நீங்க அறியாமையில் ஆளும் வர்க்கங்களின் குரலா ஒலிக்கறீங்க..... மக்களின் குரலா அல்ல ........ இந்தியாவே ஒரு ஆதிக்க தேசம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..... இதுல நீங்க வேற எங்க வயித்தெரிச்சல கொட்டிக்கறீங்க !

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.