H.Raja twitter 600அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை டெல்லி ஷாஹின் பாக்காக ஆக்கப் பார்க்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைச் சேர்ந்த சங்கிகள் என்பதற்குச் சான்று மேலே இருக்கும் ட்விட்டர் பதிவு.

குடியுரிமைச் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதன் பின், அதனால் மக்களுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை உணர்ந்த மக்கள் அச்சட்டத்திற்கு எதிராக, அமைதியாகப் போராடி வருகிறார்கள்.

போராட்டம் மக்களின் உரிமை.

தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் இதுவரை கலகங்கள் வெடித்தது இல்லை.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பல்வேறு போராட்டங்களை அமைதியாகத்தான் நடத்தி இருக்கிறார்கள். இன்று அதே வழியில்தான் தமிழக மக்களும் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகிறார்கள்.

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை, அமைதியற்ற கலவர பூமியாக மாற்றிட மதத்தை அடிப்படையாக வைத்துப் பேசி வருகிறார்கள் சங் பரிவாரங்கள்.

அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மக்களும், எதிர்க்கட்சிகளும் போராடுவது இயல்பு.

ஆனால், ஆளும் அரசின் சட்டத்தை, ஆளும் கட்சியே வேண்டும் என்று சொல்லிப் போராடுவது எந்த வகையில் சரியாகும்?

இந்த நடவடிக்கை டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் நடந்ததைப் போலத் தமிழ்நாட்டிலும் நடத்துவதற்கான அறிகுறியாகத் தெரிகிறது.

எச்.ராஜா சமூக விரோதக் கருத்துகளைச் சொல்வதும் அதனால் தீதிமன்றத்துக்குப் போகும் நிலை ஏற்பட்டால் மன்னிப்பு கேட்பதும் வழக்கமாக உள்ளது.

இப்பொழுது தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்க எச்.ராஜாவின் பேச்சு தூண்டுகோலாக இருக்கிறது.

மோடியை விமர்சித்ததற்காக விரைந்து சென்று நெல்லைக் கண்ணனை கைது செய்த எடப்பாடி அரசின் காவல்துறை, எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோரைக் கைது செய்யாமல் இருப்பது அவர்களின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாகப் போராடிவருகிறார்கள் மக்கள்.

இங்கு வன்முறை ஏற்பட்டால் அதற்குக் காரணம் எச்.ராஜாவின் பேச்சாகத்தான் இருக்கும்.

Pin It