ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் தேர்தல் ஆணையம் கைப்பற்றப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, சிபிஐ போன்ற நிறுவனங்களும்கூட கைப்பற்றப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் இருப்பதால் தேர்தலை வடிவமைக்க அது இவர்களுடன் இணைந்து செயல்படுகிறது" என்று நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.

இந்தப் பேச்சை அவ்வளவு சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது.

இந்தியா உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த ஜனநாயகம் இன்று கேள்விக்குள் நின்றுகொண்டு இருக்கிறது.

மக்களுக்கு உரிமையான வாக்குகள், மக்களாட்சியை நிறுவக்கூடிய வலிமைமிக்க மக்களின் வாக்குகள், தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முடிவைச் சொல்லுகின்ற வாக்குகள் இன்று திருடப்படுகின்றன என்றால், இதன் பெயர் ஜனநாயகமா? வாக்குத் திருட்டு என்பது தேசவிரோதச் செயல் என்கிறார் ராகுல் காந்தி.

மக்கள் மன்றம் முதல் நாடாளுமன்றம் வரையும் இதை விளக்கிச் சொல்லி விட்டார் அவர். இதுகுறித்துக் பேசுவதற்குக் கூட வழிவிடாமல், கூச்சம் இல்லாமல் ஒன்றிய ஆளும் பாஜக அரசு இருந்து வருகிறது என்பதை ஜனநாயகம் என்று எப்படிச் சொல்லிட முடியும்?

பேசுவதெல்லாம் பொய்கள். மக்கள் பற்றியோ அல்லது மசோதாக்களைப் பற்றியோ எதிர்கட்சிகள் விவாதித்தால், உடனே நேரு போன்ற தலைவர்களை இழுத்து வைத்துக் கொண்டு இழிவு செய்கிறார்களே தவிர நேர்மையாகப் பேச ஒன்றிய பாஜக முனைவதில்லை என்றால் எங்கே இருக்கிறது ஜனநாயகம்?

சர்வாதிகாரக் கோரப்பிடிக்குள் இருக்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டியது மக்களின் கடமை.

அதற்கு ஒரே வழி மதவாத ஆர்எஸ்எஸ்/பாஜக ஆகியவைகளைத் துடைத்து எறிய வேண்டும் மக்கள்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.