திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும் உருகமாட்டார் என்று சொல்லக் கேட்டதுண்டு.

கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்தான் என்று தன் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துச் சொன்ன நம்முடைய திருவாசகத் தம்பிரான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இப்போது புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறார்.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு பா.ஜ.கவை எப்படி எதிர்ப்பது? - இதுதான் அந்த புதிய கண்டுபிடிப்பு.

அப்படியானால் தி.மு.கவும், அ,தி. மு.கவுக்கு எதிர்கட்சி தானே!

இதை மாங்குமாங்கு என்று எதிர்த்துப் பேசும் எடப்பாடியார், இதே கைவரிசையை பா.ஜ.கவிடமும் காட்டவேண்டாமா?

அதுதான் முடியாது, ஏன்? அதை அடிமைச் சேவகம் என்று சொன்னாலும், ‘ராஜவிசுவாசம்’ அல்லது ‘ராஜதந்திரம்’ என்றும் சொல்லலாம்.

அந்த இரட்டை இலையின் கீழ் இருந்தவர்களைக் கொஞ்சம் பாருங்கள்.

 “இப்போது அம்மா இல்லை, அந்த இடத்தில் மோடி இருக்கிறார்”, இது டி.டி.வி. தினகரனின் உருக்கமான பேச்சு.

“எங்களை கூட்டணியில் சேர்க்காவிட்டாலும் நாங்கள் மோடியுடன்தான் இருப்போம்” என்று சொல்லும் தைரியத்தை ஒற்றை ஆளாக இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்திடம் பார்க்கிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆனால் எடப்பாடி அப்படியில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யத் தெரியாமல் மக்களிடம் கெட்ட பெயர் வாங்கியிருக்கும் பா.ஜ.கவின் கள்ளக் கூட்டாளி அவர்.

 பா.ஜ.கவின் மோடி அரசு கொண்டு வந்த நீட் தேர்வு, சி.ஏ.ஏ போன்ற மக்கள் விரோத சட்டங்கள் நிறைவேற வாக்களித்து விட்டு, பொதுத் தேர்தல் வந்தவுடன் பா.ஜ.கவை எதிர்க்கிறாராம்.

வேறொன்றும் இல்லை. நான் அடிப்பதுபோல அடிப்பேன். நீ அழுவது போல அழு. தேர்தல் முடிந்தவுடன் நாம் கூடி கும்மியடிக்கலாம் என்ற எஜமானிய விசுவாசம் தான் அது.

தலைவர் ஸ்டாலின் மீது பாயும் எடப்பாடி, மோடியிடம் பம்முகிறார். எல்லாம் பயம்தான்.

மொத்தத்தில் அவர்களிடம் அம்மா இல்லை, மோடி இருக்கிறார்.

‘காவி’ கள்ளக் கூட்டணி, கரை சேராது.

‘இந்தியா’ நல்ல கூட்டணி, மகுடம் சூடும்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It