மனம் பிசகிய

ஒருவன்

கனவுகளை விற்பனை

செய்து கொண்டிருந்தான்

 

நிஜங்களைப் பறிகொடுத்து

முண்டியடித்துக் கனவுகளை

வாங்கினார்கள்

 

அவனுக்கு ஆசை

ஒன்றிருந்தது எல்லோரும்

கனவுகளோடு

இருக்க

 

யாவரும் கனவுகளில்

கரைந்திருக்க

நிஜமாய் நின்றிருந்தான்

 

இடதுகை சுட்டுவிரல்

நகத்தில் கருப்பு மைப்புள்ளி

சிம்மாசனமிட்டிருந்தது

அனைவருக்கும்.

Comments

2 comments

2
mu alagarbhaarathi
திரு இலக்கியரஜா அவர்கலுக்கு கனவு கவிதை சிரப்பு.
மீன்டும் சந்திப்பொம்.
mu alagarbhaarathi
கனவு கவிதை அழகு.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.