தமிழ்நாட்டில் ஒரு கும்பல் நீதிமன்றத்தில் இந்துக் கடவுள்களின் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வேலை இந்துக் கடவுளை புண்படுத்தி விட்டடார்கள் என்று மனு போடுவதுதான். உடனே பாஜக மேடைகளில் 'திமுக ஆட்சி! இந்து விரோத ஆட்சி!" என்று முழங்குவார்கள். உ.பியில் 'ராமராஜ்யம்' நடத்தும் யோகியின் ஆட்சியில் இப்போது ஒரு பார்ப்பன சங்கராச்சாரியை 'வச்சு செய்கிறார்கள்'

ஜோதிர்மட சங்கராச்சாரி அவிமுக்தேஸ்வரானந்த் திரிவேணி சங்கமத்தில் நீராட தனது சீடர்களுடன் பல்லக்கில் சென்றார். ``சங்கராச்சாரி பல்லக்கை நேரடியாக நதியின் கரை வரை அனுமதிக்க முடியாது அதற்கு உனக்கு தகுதி இல்லை நீ இப்போது சங்கராச்சாரியே அல்ல; இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. பல்லக்கை விட்டு இறங்கு” என உ.பி காவல்துறை அதிகாரிகள் தடை போட்டனர். ஆத்திரமடைந்த சங்கராச்சாரி சீடர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல். சங்கராச்சாரியின் பெண் பக்தர்கள் தாக்கப்பட்டனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்லக்கில் சீடர்களுடன் புனித நீராட வந்த பார்ப்பன சங்கராச்சாரி மகர மேளா நடக்கும் இடத்தில் சீடர்களுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். கஜேந்திர சிங் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து பெண் துறவிகள் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த மகளிர் ஆணையம் உ.பி காவல்துறைக்கு தாக்கீது அனுப்பி உள்ளது. காவி உடை சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உ.பியில் இந்த சங்கரச்சாரி அர்ச்சனை நடந்துள்ளது.

இதேபோல் ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்திருந்தால் அவ்வளவுதான்! சங்கிகள் தொடை தட்டிக் கிளம்பி இருப்பார்கள்; மதுரை நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கை எடுத்திருக்கும். அய்யோ தமிழ்நாட்டில் இந்து விரோத ஆட்சி என்று ஓலமிட துவங்கியிருப்பார்கள்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.