...

இளமையில் கல் என்று

எழுத்துக்கூட்டிப் படிக்கும்போதே,

வாழ்க்கையில் விழுந்தது

வறுமையெனும் பாறாங்கல்...

 

கல்லை நகர்த்த

முயற்சித்துத் தோற்றுப்போக,

கல்விதான் நகர்ந்துபோச்சு

கைகளுக்கு எட்டாமல்...

 

இன்றைக்கு,

அடுக்கிக் கல்சுமந்தால்

அடுத்தவேளைக்குச் சோறு,

அதிலும்

வளர்த்திக் குறைவென்று

சம்பளமும் 'வேறு'...

 

ம்...ஒன்று ஒன்றாய்க் கூட்டி

தலையில்

நாலுவரிசை வச்சாச்சு

 

இன்னும் சிலவரிசை

ஏற்றிப் பூசிவிட்டால்,

நானும்கூடத் தூண்தான்

நாளைய இந்தியாவுக்கு!

Comments

1 comment

1
ramanujan
இளமையில் கல் என-இவர்
எழுதிய கவிதை நல்
வளமிகு மரபு வழிதனில்-இங்கே
வந்தது சிற்ப்பே ஆயினும
உளமதில் துன்பம் ஊற்றென-பொங்க
உதிரத் தொடங்குமே கண்ணீரதங்கி
அளவிட இயலா அவலக்காட்சி-பட
ஆவணமிங்கே அளித்திடும் சாடசி

புலவர் சாஇராமாநுசம் சென்னை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.