ஈழத்தமிழினம் ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்திருக்கிறது. 2.85 லட்சம் மக்கள் சிங்கள இனவெறி அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழினம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. தமிழகத் தமிழர்கள் புழுங்கிச் சாகின்றனர். இத்தகையச் சூழலில், ஈழத்தமிழர்களின் இந்த அவல நிலைக்குக் காரணமான சிங்கள இனவெறி அரசையோ, அதற்கு முழு உதவிகள் புரிந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளையோ கண்டிக்க வக்கில்லாத ஒரு கூட்டம், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும், போராட்ட இயக்கத்தையும், இயக்கத் தலைமையையும் வேண்டுமன்றெ கொச்சைப்படுத்தியும், அவதூறு செய்து எழுதியும் பேசியும் மகிழ்ச்சி கொள்கிற மனசாட்சி இல்லாதவர்களாக இன்றைக்கும் உலவி வருகின்றனர்.

 ஒரு இனவாத அரசு தன்னால் ஒடுக்கப்படுகின்ற ஓர் இனம், அதன் விடுதலைக்காகப் போராடும் பொழுது அந்த இனத்தில் உள்ள பலவீனமான குழுக்களை முதலில் அடையாளம் காணும் வேலையைச் செய்யும். அப்படி அடையாளம் காணும் குழுக்களை நேரடியாக ஒடுக்குகின்ற இனத்தின் ஆளும் வர்க்கம், தன்னுடன் இணைத்துக் கொள்வதும் உண்டு. மாறாக, அவர்களை இருக்குமிடத்தில் அப்படியே வைத்துக் கொண்டு அங்கிருந்து நீங்கள் எங்களுக்கான வேலையை செய்யுங்கள் என உத்தரவிடுவதும் உண்டு. டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் முதல் வகையறா. “இந்து வெறி” அ.தி.மு.க., பார்ப்பனீய பா.ச.க., பூணூல் கம்யுனிஸ்ட்கள் மட்டுமின்றி முற்போக்கு முகமூடி போட்டுத் திரியும் ம.க.இ.க, உள்ளிட்ட அமைப்புகள், “துக்ளக்” சோ, சு.சுவாமி, “இந்து” என்.ராம், அ.மார்க்ஸ், இரயாகரன், சோபாசக்தி உள்ளிட்ட முற்போக்கு முகமூடிகள் அணிந்த தனிநபர்கள் என இரண்டாம் வகையறா பட்டியல் நீள்கிறது.

அ.தி.மு.க., பா.ச.க., பார்ப்பனக் கம்யுனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளையும், சோ, சு.சுவாமி, இந்து ராம் போன்றவர்களைப் பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை. அவர்கள் நேரடியாக எதிரி முகாமில் எச்சம் தின்பவர்கள் என்பது வெளிப்படை. ஆனால், ம.க.இ.க., இரயாகரன், அ.மார்க்ஸ், சோபா சக்தி உள்ளிட்டவர்கள் அப்படியானவர்கள் அல்ல. அதாவது சிங்கள அரசின் வெளிப்படையான சேவகர்கள் அல்ல. மறைமுக சேவகர்கள் அவ்வளவே. ம.க.இ.க.வினரின் அரசியலைக் கேள்விக்குட்படுத்தி எழுதப்பட்ட எமது முந்தைய கட்டுரைக்கு “கீற்று” இணையதளத்தில் சிலர் எதிர்வினை புரிந்திருந்தனர். கேள்விகளுக்கு பதில் கேட்டால் அதற்குப் பதிலளிக்காமல் அக்கேள்விகளை மறுபடியும் கேள்விக்குட்படுத்துவதும், “நக்கல்” அடித்து பேசி கேள்வியை திசைமாற்றுவதும், வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு “நாங்கதான்டா புரட்சியாளர்கள்.. நீங்களெல்லாம் துரோகிகள்/எதிரிகள்" என்று நகைச்சுவை செய்வதும் இவர்களுக்கு கைவந்த கலை என்பதனை இவர்களது கமெண்ட்டுகள் நமக்கு உணர்த்தியது.

விமர்சனம் என்ற போர்வையில் ம.க.இ.க., இரயாகரன் உள்ளிட்டோர் செய்து வரும் வேலைகளை மென்மையான முறையில் அ.மார்க்ஸ், சோபா சக்தி வகையறாக்கள் “முற்போக்கு” முகமூடியில் ஒளிந்து கொண்டு செய்கின்றனர்.

ஈழவிடுதலைக்கு உதவ முடியாமலும், தம் இரத்த சொந்தங்களை போர் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாமலும் போய் விட்டதே என்ற வருத்தம் தமிழ்நாட்டுத் தமிழர் மனதில் ஆறாக் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிங்கள அரசிற்கு உதவிகளை வாரி இறைத்து சிங்களனுடன் “நட்புறவு” பேணும் இந்தியாவின் இவ்வகை போக்கால், இந்த வருத்தம், இந்திய அரசின் மீதான கோபத்தை கிளறிவிட்டிருக்கிறது. இந்திய அரசின் மீது மட்டுமல்ல, தமிழ்நாட்டை இந்திக்காரர்களுக்குக் காட்டிக் கொடுத்து லாபம் பெறும் தமிழ்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் மீதும் தமிழக மக்களுக்கு இயல்பானதொரு கோபமும் இருக்கின்ற நிலையில், இவற்றைத் தணிக்க பெருந்திட்டம் தீட்டி வருகின்றது, ஆரிய இந்திய அரசு. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் தமிழ்நாட்டில் எழுந்து வரும் தமிழ்த் தேசியம், ஈழவிடுதலை குறித்த கருத்தியல்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றது, இக்கூலிக் கும்பல.

விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள்

“புலிகள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. வடதுசாரிய சிந்தனையுள்ளவர்களாக இருந்தனர். சாதி ஒழிப்பைப் பற்றி எங்கும் அவர்கள் பேசவில்லை. புலிகள் முஸ்லிம்களை விரட்டினார்கள். சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து புலிகள் செயல்படவில்லை. மாற்று இயக்கத்தினருடன் இணைந்து பணியாற்றவில்லை. தமிழ் மக்களை புலிகள் அழித்தொழித்தனர்”

- மேற்கண்டவை தாம் புலிகள் மீதான இக்கூலிக்கும்பலின் பிரதான குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்புவதால் இவர்கள் எல்லோரும், ஏதோ சனநாயகவாதிகள் என்றோ, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்றோ கருத முடியாது. என்.ஜி.ஏ. அமைப்புகள் செய்யும் பணிகளுக்கு பின்னால் ஏகாதிபத்தியம் எப்படி ஒளிந்து கொண்டுள்ளதோ அதே போன்று தான் இவர்களது நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஆரியம் ஒளிந்து கொண்டுள்ளது. இவர்களது செயல்பாடுகளை உற்று நோக்கினால், சிங்களப் பேரினவாதம் செய்யும் வேலையை இவர்கள் நம்முடன் இருந்து கொண்டே செய்கிறார்கள் என்பது புலப்படும். இன்னும் சரியாக சொல்லப் போனால், சனநாயகம், மார்க்சியம் போன்ற முற்போக்கு கருத்தியலின் சொல்லாடல்களைக் கொண்டு, அவதூறுகளை அள்ளி வீசும் அற்பத்தனங்களை திறம்பட செய்பவர்கள் இவர்கள் என வரையறுக்கலாம்.

புலிகள் என்றுமே விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் கிடையாது. அவர்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தான். அந்த விமர்சனத்தை அவர்கள் மீது எழுப்புகின்றவர்களின் நோக்கமும், விதமும் தான் விமர்சனங்களை எழுப்புபவர்களின் அரசியலைத் தீர்மானிக்கிறது. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கம், தன் மீதான விமர்சனங்களுக்கு ஏற்ப தன்னை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும் என்று இவர்கள் எண்ணுவதில்லை. மாறாக, அப்போராட்ட அமைப்பு மீது சேறடித்து வீழ்த்துவதன் மூலம், சிங்களப் பேரினவாதத்திற்கு மறைமுகமாக துணை போவது தான், இந்த எழுத்துப் போர் “ஏகாம்பரங்களின்” வேலைத்திட்டம்.

கீற்று இணையதளக் கட்டுரையின் பின்னூட்டத்தில் ம.க.இ.க. தோழர் ஒருவர் எழுதியிருந்தார், ”நல்ல நண்பன் குறைகளை சுட்டிக் காட்டுவான்” என்று. நான் திருப்பிக் கேட்கிறேன், “நீங்கள் என்றைக்கு புலிகளுக்கு நண்பனாக இருந்தீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்”. வாய்த்திறந்தாலே “புலிகள் பாசிஸ்ட்கள்” என்று சொல்வதும், எழுதுவதும் தவிர தமிழ்நாட்டில் இவர்களது ம.க.இ.க.வும் அதன் தலைமையும் ஈழத்திற்காக செய்த வேலை தான் என்ன? “பிரபாகரன் ஒரு பாசிஸ்ட்டு” - “புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கம்” என்று வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் இவர்கள் முழங்காமல் அடக்கி வாசித்ததும், புலிகள் சர்வாதிகாரிகள் என்று சொல்லி விட்டு பின்னர், அவர்களுக்கே ”வீரவணக்கம்!” போட்டுக் கொண்டதும் தானே இவர்களது ”வீரதீர” நடவடிக்கைகள்.

விமர்சனம் என்ற பெயரில் தான் மேற்கொண்டுவரும் காட்டிக்கொடுப்பு வேலைகளையும், அவதூறுகளையும் இதுவரை யாருமே அங்கீகரித்தில்லை என்பது தெரிந்தும் அதனை மட்டுமே தொடர்ந்து செய்து வரும் இவர்களது “வீரதீர” நடவடிக்கைகள் வேடிக்கையாக இருக்கிறது. ஈழப் போராட்டம் பற்றி இவர்கள் எழுதுவதை கண்டாலே இதனை தெரிந்து கொள்ளலாம். இவர்களைப் போன்ற சிங்கள இனவெறி அரசின் துணைக்குழுக்கள் எழுப்பும் கேள்விக்கெல்லாம் நாம் பதிலெழும் பட்சத்தில் அவர்கள் திருந்திவிடப் போவதில்லை. மாறாக, அப்படிப்பட்ட துரோகக் குழுக்களில் உண்மை தெரியாமல் சிக்கியிருக்கும் அப்பாவி தமிழ் இளைஞர்களை மீட்டெடுப்பதற்கும், அவர்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களை உடைத்தெறியவுமே அவை உதவும்.

புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லையா?

புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லை என்று இக்குழுக்கள் கூறுகின்றன. இதற்கான பதிலை புலிகளே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்ட “சோசலிச தமிழீழம்” என்று தலைப்பிடப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் வேலைத் திட்டம் குறித்த நூலில் இதற்கான பல விளக்கங்கள் உள்ளன. அதன் முதற்பகுதி விடுதலைப்புலிகள் இயக்கமும், தேசிய விடுதலைப் போராட்டமும் என்று தலைப்பிடப்பட்டது. இரண்டாம் பகுதி அரசியல் வேலைத்திட்டமும் கொள்கை விளக்கமும் என்று தலைப்பிடப்பட்டதாகும். இந்நூலை தற்பொழுது எடுத்துக்காட்டுவதன் நோக்கம், புலிகள் இயக்கம் வீரியமுடன் செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்தே மேற்கொண்டு வந்த பல கொள்கைகளும், வரையறுப்புகளும் தற்பொழுது பெரும்பாலானோர்க்கு தெரிந்திருப்பதில்லை. அதனால் இதனை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறேன்.

அதே நேரத்தில், தொடக்கத்தில் லட்சிய உறுதியுடனும் போர்க் குணத்துடனும் செயல்படத் தொடங்கியவர்களில், இறுதி வரை அதே போர்க்குணத்துடனும் லட்சிய உறுதியுடனும் நீடித்தவர்கள் சிலரே. ஆனால், புலிகள் அவ்வாறல்லாமல், தனது தொடக்க காலத்தில் தனக்கென வரையறுத்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இறுதி வரை கடைப்பிடித்தனர். அதனால் தான் அவர்களது இயக்கம் இன்று வரை உலகத் தமிழர் மனதில் நீங்கா இடத்துடனும், உலக வரலாற்றில் வேறு எந்த கெரில்லா விடுதலைப் போராட்ட இயக்கமும் செய்திராத மாபெரும் சாதனைகளை செய்தும் உள்ளது.

எமது இயக்கம் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியல் இலட்சியமே ஆயுதப் பாதையை வழிநடத்த வேண்டும் என்பதில் நாம உறுதியாக இருக்கிறோம்.

ஆரம்பகாலத்திலிருந்து எமது இயக்கம் அரசியல் பிரிவிலிருந்து இராணுவ அமைப்பை வேறுபடுத்தவில்லை. பதிலாக, இரு பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்ட அரசியல் - இராணுவ வேலைத் திட்டத்தின் அடிப்படையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டம் ஆயுதப் போராட்டத்தை ஒரு அதியுயர்ந்த அரசியற் போராட்ட வடிவமாகவே கொள்கிறது."

(பக்கம் 9 பத்தி 2இன் பிற்பகுதி முதல் பத்தி 3 வரை, முதல் பகுதி)

இது 1980களில் புலிகளால் எழுதப்பட்டது. ஒரு அரசியல் சக்தியாக இல்லாவிட்டால், புலிகள் அம்மண்ணில் கடந்த 35 வருடங்களாக காலூன்றி நின்றிருக்க முடியாது. மக்களை அரசியல்மயபடுத்தியதன் காரணமாகத்தான், புலிகள் கைகாட்டியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். மக்களை அரசியல்படுத்தியதால் தான், “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற பிரகடனம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று இன்றைக்கு உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகின்றது. புலம் பெயர் மக்களை புலிகள் அரசியல்படுத்தியதால் தான் அவர்கள் புலம் பெயர் நாடுகளில், அந்தந்த நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் மக்கள் திரளாக அவர்களால் வளர முடிந்திருக்கிறது. இவ்வாறு, ஈழத்தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தனது இராணுவ நடவடிக்கைகளின் மூலமாகவே அரசியல்படுத்தியவர்கள் புலிகள். இவர்களைப் பார்த்து மக்களை அரசியல்படுத்தவில்லை என்ற குற்றம் சாட்டுகின்றது, இக்கூலிக் கும்பல்.

புலிகள் மீது மட்டுமின்றி, தமிழகத்தில் ஆயுததாங்கியப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மாவோயிஸ்டுகள் மீது ம.க.இ.க. - புதிய ஜனநாயகக் கும்பல் அவதூறுகளை அள்ளி வீசின. புதிய ஜனநாயகத்தின் இந்த அவதூறுகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தனர். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக புதிய ஜனநாயகமும் ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தது. அவ்வெளியீட்டில், புதிய ஜனநாயகம் தானே அம்பலப்பட்டது.

அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம்தான் ஆயுதப் போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணரச் செய்யவேண்டும்என்று நாம் கூறுவதையும் மாவோயிஸ்டு அமைப்பினர் ஏளனத்துடன் மறுக்கிறார்கள்.

(மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் கருவிலே சிதைவது ஏன்?, பு.ஜ.வெளியீடு, சனவரி 2008, பக்கம் 63, பத்தி 3 தொடக்கம்)

அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம் தான் ஆயுதப் போராட்டம் என்று தானே கூறும் ம.க.இ.க. - புதிய ஜனநாயகக் கும்பல், அதனை புலிகளோ, மாவோயிஸ்டுகளோ செய்தால் தூற்றுவார்களாம். அவதூறு செய்வார்களாம். அதனை அவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமாம். மற்ற யார் செய்தாலும், அது சாகசவாதம் என்பார்களாம். நக்சல்பாரிகளின் ஆயுததாங்கிய எழுச்சி மிக்க போராட்டத்தைப் பற்றி புகழ்ந்தும் இவர்கள் எழுதுவார்கள், அதே சமயம் அதனை சாகசவாதம் என்றும் வாதாடுவார்கள். இவர்களது துண்டறிக்கைகள் பலவற்றில், “ஆயுதாங்கிய பாதையில் அணி திரள்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், 30 வருடங்களாக தன்னை நம்பியுள்ள தோழர்களிடம் அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியது கிடையாது. இது தான் இவர்களின் அரசியல் லட்சணம். அப்பாவித்தனமாக இவர்களிடம் சிக்கியிருக்கும் இளைஞர்களின் நிலை தான் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

புலிகள் வலதுசாரிச் சிந்தனையுள்ளவர்களா?

தனது இலக்கு சுதந்திர சோசலிச தமிழீழத் தனியரசே என்று முதலிலேயே தனது அரசியலை பிரகடனப்படுத்தியவர்கள் புலிகள். தேசிய இன விடுதலைப் பற்றிய மார்க்சியப் புரிதல்களுடன் தான் அவர்களது போராட்ட இயக்கம் கட்டமைக்கப்பட்டது. தேசிய விடுதலையும், சோசலிச சமூகப் புரட்சியுமே தமது இயக்கத்தின் அடிப்படை அரசியல் இலட்சியங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்டவை.

உலகமயம் அழித்து வரும் தேசிய இன அடையாளங்களை பாதுகாப்பதன் மூலமும், தேசிய இன அடையாளத்தை மீட்டெடுப்பதன் மூலமும், தேசிய இன விடுதலைக்குப் போராடுவதன் மூலமும் உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் புலிகள். ஈழ மண்ணில் எந்தவொரு ஏகாதிபத்தியமும் காலூன்ற முடியாத படி தனது இராணுவத்தைக் கட்டமைத்தது புலிகள் இயக்கம். ஏகாதிபத்தியம், காலனித்துவம், நவ-காலனித்துவம், இனவாதம் ஆகியவையே உலக மக்களின் பொது எதிரிகள் என்று புலிகள் வரையறுத்திருந்தனர்.

தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. அதே சமயம், எமது சமூகத்தை பிரபுத்துவ சமூக வடிவமாகவும் சித்தரிக்க முடியாது. தமிழீழ சமுதாய அமைப்பானது தனக்கேயுரிய ஒரு தனித்துவமான பொருளுற்பத்தி வடிவமாகத் திகழ்கிறது. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு சிக்கலான பொருளாதா அத்திவாரத்தில் எமது சமுதாயம் கட்டப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் எமது சமுதாயத்திற்கு அத்திவாரமாக விளங்கும் பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்குமுறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது.

எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்.

(பக்கம் 11 பத்தி 8 மற்றும் 9, இரண்டாம் பகுதி)

1980களில் எழுதப்பட்ட மேற்கண்ட வரிகள், புலிகளின் தமிழ்ச் சமூகத்தின் மீதான புரிதல்களையும், மார்க்சிய இயங்கியல் கண்ணோட்டத்திலேயே தமிழர் பிரச்சினையை புலிகள் அணுகியதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

சாதி ஒடுக்குமுறை பற்றி புலிகள் பேசவில்லையா?

சாதிய ஒடுக்குமுறை பற்றி புலிகள் எங்குமே பேசவில்லை. யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்தினரின் மனநிலையே புலிகள் இயக்கத் தலைமையின் மனநிலை என்று ஒரு பெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த அவதூறுகளுக்கும் புலிகளின் முதல் அரசியல் அறிக்கையே பதில் அளிக்கிறது.

எமது சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு சாபக்கேடாகவும் சமூக சமத்துவத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருந்துவருவது சாதியக் கொடுமையாகும். சாதிய அமைப்பு எமது கிராமியப் பொருளாதார வாழ்வுடன் ஒன்று கலந்திருக்கிறது. வர்க்க அமைப்புடன் இணைப்பெற்றிருக்கிறது. தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள் உற்பத்தி உறவுகளுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. மத சித்தாந்த உலகிலிருந்து வேரூன்றி வளர்ந்திருக்கிறது.

தொழிலின் மகத்துவத்தை இழிவுபடுத்தி, மனிதனை மனிதன் வேறுபடுத்தும் இந்த மூட வழக்குமுறையை முற்றாக ஒழித்துக்கட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது. சாதியத்தின் பெயரால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து நசுக்கப்பட்டுவரும் தமிழீழப் பாட்டாளி வர்க்கத்தின் விடிவிற்காக எமது இயக்கம் அயராது உழைக்கும். உழைப்பின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச பொருளாதாரத் திட்டத்தை அமுலாக்குவதன் மூலமும், புரட்சிகரமான கல்விமுறை வாயிலாகவும் இந்த சமூக தீமையை எமது இயக்கம் ஒழித்துக்கட்டும்.

(பக்கம் 12 பத்தி 1 மற்றும் 2, இரண்டாம் பகுதி)

சாதியைப் பற்றி எங்குமே புலிகள் பேசவில்லை என்ற அவதூற்றை, 1980களிலேயே எழுதப்பட்ட புலிகளால் எழுதி வெளியிடப்பட்ட அரசியல் அறிக்கையின் மேற்கண்ட வரிகள் தோலுரித்துக் காட்டுகின்றன. சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் உடனடியாக அதனை ஒழிக்க முடியாது என்பதையும் அதற்கு தொடர்ச்சியான நீண்டகாலத் திட்டங்கள் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்பதனை இவை காட்டுகின்றன. புலிகள் இயக்கத் தோழர்கள் அவரவர் சொந்த சாதியிலேயே திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்ததை இச்சமயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

முஸ்லிம்கள் மீதான அணுகுமுறை

இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தனித்துவமான ஒர் இனக்குழு என்றும் முஸ்லிம்களின் தாயகம் வடகிழக்குப் பிரதேசமே என்றும் புலிகள் அங்கீகரித்திருந்தனர்.

வடகிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவான தாயகத்தையும், பொதுவான மொழியையும், பொதுவான பொருளாதார வாழ்வையும், பொதுவான நலன்களையம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் ஒன்றிணைந்த சமூகப் பொருளாதா வாழ்வு காரணமாக ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் தங்கியிருப்பதால் தமிழரும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்ட சக்தியாக ஒருங்குசேர்ந்து தமது உரிமைக்காகப் போராடுவது அத்தியாவசியமானதாகும். முஸ்லிம் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், தமது நலன்களை அடைந்து நல்வாழ்வு காண வேண்டுமென்றால், முக்கியமாக, தமது இன, மத, கலாச்சார தனித்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால் தமிழருடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, தமிழருடன் ஒருங்கிணைந்து போராடுவதே சாலச்சிறந்ததாகும்.

(பக்கம் 13 பத்தி 7, இரண்டாம் பகுதி)

தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தைக் குலைத்து, தமிழ்த் தேசிய ஒன்றியத்திணை சிதறடிக்கும் நோக்கத்துடன் சிங்கள இனவாத அரசானது தமிழர் முஸ்லிம் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டிவிடும் நாசகார முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு எமது பொதுத் தாயகப் பூமியையும் படிப்படியாக விழுங்கி வருகின்றது. பொதுவான எதிரியையும், பொதுவான இலட்சியங்களையும் எதர்கொள்ளும் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

(பக்கம் 14 பத்தி 1, இரண்டாம் பகுதி)

புலிகள் முஸ்லிம் மக்களுடன் உறவு பேண விரும்பியதையும், அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஈடுபாட்டையும் புலிகள் கொண்டிருந்தனர் என்பதனை மேற்கண்ட வரிகள் தெளிவுபடுத்துகின்றன.

காலப்போக்கில், முஸ்லிம் மக்கள் சிங்கள இனவெறியர்களுடன் உறவு பேணியதால், சில உரசல்கள் ஏற்பட்டன. முஸ்லிம் மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில், புலிகளின் முதல் முஸ்லிம் போராளியின் படத்தைத் தாங்கியபடி “ஒன்றிணைந்து போராடுவோம்” என்று புலிகளின் அரசியல் பிரிவு ஒரு புத்தகத்தையும் இந்நேரத்தில் வெளியிட்டது. அந்த புத்தகத்தில் புலிகள் முஸ்லிம் மக்களுக்கும் தமிழர்களுக்குமான பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை முறியடிக்க ஒன்றிணைந்து போராடுதல் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தி இருந்தார்கள்.

சிங்களப் பேரினவாதம் தமிழ் - முஸ்லிம் மக்களிடையிலான உறவை சீர்குலைத்து, பகைமையைக் கட்டமைக்கும் வழிமுறைகளில் ஈடுபட்டிருந்ததையும் புலிகளின் வெளியீடுகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தன. ஆனால், முஸ்லிம் இனவாதக் குழுக்கள் பல உருவாக்கப்பட்டு, சிங்கள இனவெறி சக்திகளுடன் இணைந்து கொண்டு ஆயுதம் தரித்து தமிழர்களை வேட்டையாடிதை வரலாறு கண்டது.

சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து நடவடிக்கைகளில் பல முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டு வந்தன. இவர்களுக்கு எதிராக புலிகளின் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட சிலரை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரானவர்கள் புலிகள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. மூதூர் வெளியேற்றம் குறித்து மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுகின்ற பலரும், அந்த வெளியேற்ற நடவடிக்கைக்காக புலிகள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது குறித்து வாய்த்திறக்காமல் முடிக்கொள்வதற்கு, பின்னணியில் பேரினவாதம் தான் ஒளிந்து கொண்டுள்ளது.

சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடவில்லையா?

சிறீலங்காவின் பாசிச அரசானது தமிழ் பேசும் மக்களது விரோதி மட்டுமின்றி ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சிங்களப் பாட்டாளி மக்களதும் பிரதான எதிரியாகும். இந்தப் பாசிச அரச இயந்திரத்தை இயக்கிவரும் ஆளும் வர்க்கமானது தமிழருக்கு எதிரான இனவெறியைக் கிளறிவிட்டு தனது ஆட்சி அதிகாரத்தை நீடித்து வருகிறது. பேரினவாத சித்தாந்தத்தைப் பரப்பி தமிழ் - சிங்கள பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டையும் சிதறடித்து வருகிறது. இந்தப் பேரினவாத பாசிச அரசையே விடுதலைப் புலிகள் இயக்கம் தனது எதிரியாகக் கருதுகிறதே தவிர, சிங்களப் பொது மக்களை அல்ல. சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தோழமை சக்தியாகவே எமது இயக்கம் செயல்படும். சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக நாம் முன்னெடுக்கும் சுதந்திரப் போராட்டம் சி்ங்களப் பாட்டாளி வர்க்கத்தின் சுபீட்சத்திற்கும் வழி வகுக்கும் என்பது திண்ணம்.

.... சுதந்திர தமிழீழத்தில் தமிழ் பேசும் மக்களோடு ஐக்கியமாக வாழவிரும்பும் சிங்கள மக்களை தமிழீழப் பிரஜைகளாக ஏற்று, அவர்களுக்கு சகல சனநாயக சுகந்திரங்களையும், உரிமைகளையும் வழங்க எமது விடுதலை இயக்கம் முடிவு செய்திருக்கிறது.

(பக்கம் 14 பத்தி 1, இரண்டாம் பகுதி)

தனது முதல் கொள்கை அறிக்கையிலேயே தெளிவுடன் சிங்களப் பாட்டாளி வாக்கத்துடன் இணைந்து போராட தயாராக இருந்ததாக புலிகளின் மேற்கண்ட வரிகள் தெரிவிக்கின்றன. புலிகளின் இம்முடிவை அங்கீகரித்து தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து போராட முற்பட்ட சிங்கள பாட்டாளி வர்க்க சக்திகள் ஏதேனும் ஒன்றையாவது இந்தக் கூலிக்கும்பல் அடையாளம் காட்ட முடியுமா?

முடியாது. சிங்கள இனத்தில் அப்படிப்பட்ட பாட்டாளி வர்க்க சக்திகளே இல்லாத நிலையில், தமிழ்த் தேசிய இனம், தனது விடுதலைப் போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு, சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கம் எழுந்து நிற்கிற வரை சிங்கள இனவெறிக் கும்பலின் ஒடுக்குமுறைகளை தாங்கிக் கொண்டு அப்படியே அழிந்து போக வேண்டுமாம். இது தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று புளுகுகிறது, சோபாசக்தி, அ.மார்க்ஸ், ம.க.இ.க. கும்பல். இது தான் இந்திய சிங்கள ஆரியக் கும்பலின் ஆசையும் கூட..

“ஒன்றுபட்ட இலங்கை” என்ற பெயரில் ஓலமிடும் இந்திய சிங்கள ஆரியக்கும்பலின் முழக்கத்திற்கும் “சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுங்கள்” என்று முழக்கமிடும் ம.க.இ.க., சோபாசக்தி உள்ளிட்ட ஆரியக் கூலிக்கும்பலின் முழக்கத்திற்கும் வித்தியாசம் இது தான். ஆசியக் கும்பல் “தேசிய ஒருமைப்பாடு” என்று கூச்சலிடுவதை, இந்தக் கூலிக்கும்பல் மார்க்சிய சாயம் புசி வாந்தி எடுக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம். இந்தியாவின் போலிக் கம்யுனிஸ்டுகளின் “ஒன்றுபட்ட இலங்கை” முழக்கத்தையே அதிலிருந்து பிறந்த ம.க.இ.க.வும் வலியுறுத்துகிறது. பாட்டாளி வர்க்க சர்வதேசிய சாயமடித்து பார்ப்பனியத்தை திணிக்கும் கலையில் ம.க.இ.க.விற்கு நிகர் அவர்களே தான்.

முதலில் தமிழ் இனம் ஒர் அங்கீகரிக்கப்பட்ட தேசத்தை பெற வேண்டும் அதற்குப் பிறகு தான் சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து சர்வதேசியத்தைப் பற்றி சிந்திக்க முடியும் என்று இக்கும்பல் சொல்வதற்கு வக்கில்லை. ஆனால், தனித்தமிழ் ஈழத்திற்காக போராடும் புலிகளை மட்டும் சிங்களர்களைப் போலவே இவர்களும் சேர்ந்து இழிவுபடுத்துவதை மட்டும் தவறாமல் செய்வார்களாம். என்னே இவர்களது சர்வதேசியம்..!

ஒரு பாட்டாளி வர்க்கம் தனக்கான ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட இறையாண்மையுள்ள ஒர் ஆட்சிப் பகுதி இருந்தால் தான் அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தையும், உலகு தழுவிய உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வதேசியப் போராட்டத்திலும் பங்கெடுக்க இயலும். தனக்கருககில் உள்ள அண்டை தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடவும் இயலும். இதுவே மார்க்சிய அடிப்படை.

ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய விடுதலைக்கான தீர்வை இன்னொரு நாட்டின் பாட்டாளி வர்க்கம் வரையறுக்கக் கூடாது என்றும் சிலர் சொல்கிறார்கள். தனித்தமிழ் ஈழக் கோரிக்கை தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை என்பது போல அரைவேக்காட்டுத் தனமாக புரிந்து கொண்டிருக்கும் ம.க.இ.க. கும்பலின் கூற்று இது. ஈழசிக்கலுக்கு தமிழ்த் தேசிய இன மக்கள் நாடிய தீர்வே தனித்தமிழ்ஈழம் என்பது. இதனை அவர்கள் 1977இல் நடந்த தேர்தலில் மெய்ப்பித்தார்கள். இதனடிப்படையில் தான் புலிகளும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தனித்தமிழ் ஈழமே தமது இலட்சியம் என கொண்டனர். இது ம.க.இ.க.விற்கு நன்கு தெரியும். ஆனால், அதை அவர்கள் எவ்வாறெல்லாமோ மழுப்பி கடைசியில் “ஒன்றுபட்ட இலங்கை” குட்டைக்குள்ளும் “பாட்டாளி வர்க்க சர்வதேசிய” சொல்லாடல்களிலும் விழுந்து விடுவார்கள்.

ஒடுக்குகின்ற இனத்தின் பாட்டாளி வர்க்கம் தனது விடுதலைக்காக முன்னெழுந்து போராடுகின்ற நிலையில், ஒடுக்கப்படும் இனத்தின் பாட்டாளி வர்க்கம் அதனுடன் சேர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்க சக்திகள் இல்லாத நிலையில், ஒடுக்கப்படும் இனம் எவ்வாறு அவர்களுடன் சேர்ந்து செயல்பட இயலும்?

ஜனதா விமுக்தி பேரமுனா கட்சி சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கக் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டு, இன்று சீரழிந்த இனவாதக் கட்சியாக உள்ளது. இது போன்ற சிங்களப் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இனவாதத்தில் விழுந்து போவதற்குக் காரணம் என்ன? சிங்கள உழைக்கும் மக்களின் உளவியல் தான் காரணம். இவ்வாறான உளவியலைக் கொண்ட சிங்கள உழைக்கும் மக்கள், தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்தின் விடியலுக்காக இதுவரை செய்தது தான் என்ன? செய்யப் போவது தான் என்ன? ஒன்றுமில்லை.. ஆனால் இவை பற்றி எண்ணாமல், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் உறவு பேணவே புலிகள் விரும்பினர். எழுச்சியுடன் ஜே.வி.பி. வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர்களுடன் உறவு பேண புலிகள் முயற்சி எடுத்தனர். “ஹீரூ” -HIRU என்ற ஜே.வி.பி. ஆதரவு பத்திரிக்கை புலிகளின் முயற்சியை வரவேற்று, புலிகளின் கொள்கைகளையும் அங்கீகரித்து எழுதியது. பின்னால், அப்பத்திரிகையின் ஆசிரியர் துரத்தியடிக்கப்பட்டு அம்முயற்சி ஜே.வி.பி.யாலேயே உடைத்தெறியப்பட்டது. இது மறுக்க முடியாத உண்மை.

புலிகள் மாற்று இயக்கத்தினருடன் இணைந்து செயல்படவில்லை என்கிறார்கள். மாற்று இயக்கத்தினர் என்று இக்கூலிக்கும்பல் சொல்லும் அனைத்து இயக்கங்களையும் அவர்களே “ஒட்டுக்குழுக்கள்” என்று தான் விமர்சிப்பார்கள். சிங்கள பேரினவாதத்துடன் இந்திய ஆரியத் தலைமையுடனும் சமரசம் செய்து கொண்ட அது போன்ற ஒட்டுக்குழுக்களுடன் புலிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கு “சேவகம்” புரிய வேண்டுமாம். இதைத் தான் இந்தக் கூலிக்கும்பல் விரும்புகிறது. அதாவது, சிங்கள பேரினவாதத்துடனும், இந்திய உளவுத்துறையினருடனும் சமரசம் செய்து கொண்டு புலிகள் இருக்க வேண்டுமாம். இந்த ஒரு வாதமே இந்தக்கூலிக்கும்பலை யாரென அம்பலப்படுத்துகின்றது. தமிழ் மக்களை புலிகள் கொல்லுகிறார்கள் என்று சிங்களர் குரலில் பேசும் இந்தக் கூலிக்கும்பலுக்கும், அந்தக் கூலிகளே “சதியாளர்கள்” என விமர்சிக்கும் இந்து என்.ராம், பார்ப்பன செயா, சோ, சு.சுவாமி போன்றவர்களுக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தும் இந்தத் துரோகக் குழுக்கள், இந்த விமர்சனங்களை எழுப்புகின்ற போர்வையில் ஒளிந்து கொண்டு நீங்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினால் மட்டும் இருந்த இடம் தெரியாமற் காணாமற் போய்விடுவார்கள். புலிகளின் மீது இந்த ஆரியக் கூலிக்கும்பலுக்கு இருக்கும் வன்மம், புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்த் தேசிய சக்திகளையும் விட்டுவைப்பதில்லை.

இந்தியாவின் ராஜதந்திரம் தோற்றுவிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அய்யா கூறிவருகிறார். இன்னும் இந்தியத் தேசிய மனநிலையிலிருந்து முற்றிலும் விடுபடாத அவரது இக்கருத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் இந்தியத் தேசியததை ஏற்பவர்கள் தாம் என்று முழங்கி வரும் ம.க.இ.க.வின் பார்ப்பனீய செயல்பாடுகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.

உண்மையான தமிழ் உணர்வாளர்கள், இந்தியத் தேசியத்தை ஏற்கவில்லை என்பது இந்த கும்பலுக்கு நன்கு தெரியும். இருந்தாலும், அவ்வப்போது நெடுமாறன் போன்ற பலவீன சக்திகளை மய்யப்படுத்தி தமிழ் உணர்வாளர்களை, இனவாதிகள் எனறு சேறடிக்க வேண்டும் என்று செயல்படுவது இவர்களது தமிழ்நாட்டு வேலைத்திட்டத்துள் ஒன்று. இது தனது எஜமானர்களிடமிருந்து ம.க.இ.க. கற்றுக் கொண்ட பார்ப்பனிய ராஜதந்திரம் போலிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகத் தான், புலிகள் மீது எப்படி யாழ்ப்பாண வெள்ளாளர் மனநிலை உள்ளவர்கள் என்று முத்திரைக் குத்தப்படுகின்றதோ அதே போல, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் மீது தொடர்ந்து ஆதிக்க சாதி வெறி முத்திரை குத்தப்படுகின்றது. புலிகளுக்கு சோபாசக்தி போல, தமிழ்நாட்டு தமிழ்த் தேசியர்களுக்கு மதிமாறன் போன்றவர்கள் இதற்கேற்ப செயல்படுகின்றனர்.

வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் குறிப்பிட்டது போல, தமிழர் என்ற ஒற்றுமை உணர்வை சீர்குலைக்கவே உளவுத்துறையினர் சட்டக்கல்லூரி சாதி மோதலை தூண்டியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. ஈழத்தில் ஏற்பட்டுள்ள இன அழிவால் தமிழகத்தில் தற்பொழுது ஓரு தமிழ்த் தேசிய அலை மெல்ல எழுந்து வருகின்றது. அனைத்துத் தரப்பிலிருந்தும் “நாம் தமிழர்” என்ற முழக்கம் சாதி வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி மெல்ல அரும்பி வருகின்றது. இச்சூழல் ஆரிய இந்தியத் தலைமைக்குத் தலைவலியைக் கொடுத்துள்ளது. இதனை சீர்குலைக்க மற்றொரு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழர் என்ற அடையாளத்தை அழித்து சாதி வேற்றுமையை முதன்மைப்படுத்துவது தான் அது. இல்லையெனில், எப்பொழுதோ எழுந்த ஒரு விவாதத்தை “நாம் தமிழர்” என்று எல்லோரும் உணர்ந்து வரும் இவ்வேளையில் வெளியிட்டு, தமிழ்ச் சமூகத்தின் சாதி வேற்றுமைகளை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என்று எண்ணுகிற “குமுதம்” இதழ் குசும்பிற்கு சற்றும் சளைக்காத மதிமாறன்கள் தற்பொழுது வேகமாக செயல்படவேண்டிய அவசியம் என்ன?

நட்பு சக்திகள் போல் வேடமிட்டு வரும் சீர்குலைவு சக்திகளை நாம் அடையாளம் கண்டு கொண்டால் தான் நாம் எதிரியை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும் என்ற புரிதலை நாம் பெற்றாக வேண்டும். இது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. இந்தக் கூலிக்கும்பலில் சிக்கியிருக்கும் இளைஞர்கள், இனியாவது சிந்திக்க வேண்டும்.

- அதிரடியான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Comments

47 comments

47
rasheedkhan
கம்யூனிச்டுகள் மீது இனி நம்பகம் கொள்ள முடியாது போல உள்ளது.
உலக் சர்வதேச சமூகம் மீதும் நம்பிக்கை கொள்ளமுடியவில்லை.
தமிழ் பேசும் முசுலீம்களுக்கு இனி என்ன நடக்கும் என்று இப்போது தெரியாது. ரசப்க்சே இலங்கையில் சிங்கள இனம் ஒன்ரும் இரண்டாவதாக
சிங்கள கலப்பினம் என்ரும் இரண்டு இனம் மட்டுமே இருக்கும் என்ரு சொன்ன பின் இவர்கள் சிங்கள கல்ப்பினமாக இருப்பதில் கவலை கொள்ளமாட்டார்களோ என்னவோ, அதுதான் மதம் {பித்து} இருக்கிறதே,அப்படியே வாழவேண்டும் அல்லது கோலியாய் சாகவேண்டும்
என்ற நிலைக்குத்தள்ள்ப்படுவார்கள்.
--இரசீத்நாத்திகன்.
மகிழ்நன்
தங்களுடைய கட்டுரை ஊக்கமளிப்பதாகவே இருந்தது........மிக்க மகிழ்ச்சி..

தமிழர்கள் என்ற ஒற்றைக் குடை அனைத்து தமிழர்களுக்கும் உடன்பாடானதுதான். ஆனால், தமிழர்கள் போல் வெளியில் நடித்துவிட்டு, சாதிய திமிரில் சக தமிழனை ஒடுக்கும் போலிகளை நாம் கண்டிக்க தவறக் கூடாது....

ஈழப்பிரச்சினை அவ்வளவு சிக்கலுக்கு உள்ளாகியிருந்த சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய பிரச்சினையில் மூன்று தமிழர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது...நம் தமிழ்ச்சமூகத்தின் கேவலம்...

தமிழர்களை, தமிழர்களாக அணிதிரட்ட முயலும் நம் போன்றவர்கள், நம் சகோதரர்களின் நடுவில் இருக்கும், சாதிய வேறுபாடுகளை அகற்ற துரித கதியில் செயல்பட வேண்டும்....அப்பொழுதுதான் உண்மையாகவே தமிழர்களாக நாம் எழ முடியும்...

நம்மோடு வாழும் சக தமிழினச் சகோதரனை சாதியின் பெயரால் இழிவுபடுத்தி ஒதுக்கி வைத்துவிட்டு, வெளியில் தமிழன் என்று வேடம் போட்டு நம்மை ஏமாற்றுபவர்களை இனம்கண்டு ஒன்று திருத்த முயல வேண்டும், அல்லது துரத்தியடிக்க வேண்டும்..

நம்மிடம் சாதிய வேற்றுமைகள் ஆழமாக இருக்கின்றது தோழர், கொஞ்சம் வெளிப்படையாக பேசினால்தான் தீர்வு கிடைக்கும், இல்லையேல் உள்ளுக்குள் புகைந்து கொண்டுதான் இருக்கும்...சாதியின் கொடூரம் மிகவும் அவலமானது, அவமானமானது..

ஈழப்பிரச்சினையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட, தமிழ்தேசியம்தான் தமிழர்களின் தீர்வு என்று நம்பி களமாட காத்துக் கிடக்கும் என் போன்ற இளைஞர்களையும், இந்தச் சமூகம் சாதிய அடையாளத்தோடு பார்க்கிறது, பேசுகிறது....

இந்த துயரை துடைத்தலும், நம் தலையாயப்பணி என்று எனக்கு தோன்றுகிறது
mani
நான் மணி

த‌வறு செய்பவனை சுட்டிக்காட்ட வேண்டியது நண்பனுடைய கடமை.. அதில் தவறியவர்கள் பரிசீலிக்க வேண்டிய விசயம்தான் பேசப்பட்ட்ட‍து. மற்றபடி புலி அல்லது வேறு பல குழுக்களுக்கும் அவர்களது கொள்கை மற்றும் நடைமுறையை வைத்துதான் ஆதரவு அல்லது எதிர்ப்பு செய்வோமே தவிரவும் வைச்சா குடுமி சிரைத்தால் மொட்டைன்னு அடம் பிடிப்பது மா.லெனினிய இயக்க நடைமுறை ஃஅல்ல•. இது இனவாதம் மாத்திரம் பேசித் திரிபவர்களுக்கு புரியாது..

புலித்தலைமைதான் பாசிஷ்டு.. அணிகள் அல்ல•. இது ஏன்னு தனியா விளக்கனுமா..

வீரம் என்பதை நானும் முத்துக்குமார் ஊர்வலத்தில் பார்த்தேன். அந்த வீரம் மறுநாளில் வடிந்த சந்தர்ப்பவாத இனவாத்த்தைய்ம் பார்த்தேன்.. அதற்கு பிறகு திலீபன் டிசர்ட் போட்டவர்களை பார்க்க முடியாத வீரத்தையும் பார்த்தேன்.. வீரம் என்பது என்பதுகளில் மக்களது ஆதரவு உணர்ச்சிபூர்வமாக புலிகளுக்கு இருந்தபோதே விமர்சித்த மா.லெனிய அமைப்புகளிடம் உள்ளது. அதனை அடையாரில் பத்திரிகையை எரித்த புலிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஏன் அங்கு பிரபாகரனை விமர்சிக்கவில்லை என்ற உங்களது ஆதங்கம் புரிகின்றது. ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் நடவடிக்கையை இல்லாமல் செய்ய அமைப்பு பெயர் கூட இல்லாமல் ஊர்வலத்தில் மெழுவர்த்தி ஏந்தச் சொன்ன என்ஜிஓ க்களை அம்பலப்படுத்துவதுதான் அன்று முதன்மையானது. அப்படி அம்பலப்படுத்தும்போது புலித்தலைமையை அம்பலப்படுத்துவது என்ற வேலையை செய்திருந்தால் அடிக்கின்ற் அளவுக்கு உங்களுக்கு அரசியல் பத்தாதுன்னு எங்களுக்கு தெரியும். உணர்ச்சியை காசாக்கும் மஞ்சள் பத்திரிக்கை காரனின் வேலையை நீங்கள் செய்தீர்கள். அதனை அரசியல் என்ற உணர்வுதளத்திற்கு நாங்கள் உயர்த்த முயன்றோம்...கடைசியில் மஞ்சள் பத்திரிகை கார்ர்கள் புதலைவிக்கு விளக்கு பிடிக்க போனீர்கள். நாஃங்கள் மக்களிடம் தேர்தலைப் புறக்கணிக்க போனோம். எது முதன்மைய்ஆனது என்பது தெரியாத்தால்தான் தனி ஈழத்தை எதிர்க்க கூடிய மார்க்சிஸஃஃடுகளுக்க்ஆக தேர்தல் பணி செய்தீர்கள். நீங்கேளே இப்படி இருக்கும்போது நீங்கள் ஆதரிக்கும் அவர்களது அரசியலை தனியாக விமர்சிக்க வேண்டியதில்லை.

அடுத்து அரசியல் போராட்டம் என நீங்கள் எதனை புரிந்து வைத்துள்ளீர்கள்.. அப்போ கோவைல சிபிஎம் ஜெயித்த்து மக்கள் அரசியல் படுத்தப்ப்ப‍ட்டதாலா... அந்த மக்கள் ஈழத்த ஆரதரித்த உங்களுக்காக ஓட்டுப் போட்டாங்களா.. எதிர்த்த சிபிஎம் க்காக ஓட்டுப் போட்டாங்களா... இதுதான் உங்களது புரிதலின் கீழ் அரசியலா..

புலம்பெயர்ந்த சைவ வேளாளர்களின் அரசியல் க்கு ஏற்றபடிதான் ஆடினார்கள் புலிகள்...
sugunadiwakar
அபத்தமான கட்டுரை. எல்லா விமர்சனங்களுக்குமான பதிலை புலிகளின் 'சோஷலிசத் தமிழீழ'ப் புத்தகத்தில் தேடியிருக்கிறார் கட்டுரையாளர். புத்தகமெல்லாம் இருக்கட்டும், அதை எப்போதாவது புலிகள் கடைப்பிடித்தார்களா என்பதுதானே கேள்வி. புலிகளை வலிய ஆதரிக்கும் தமாஷான கட்டுரைகளை வெளியிடும் கீற்றுவிற்கு வாழ்த்துக்கள் ((‍-
எல்லாளன்
நன்றி அதிரடியான்

புலிகளும் சரி புலி ஆதரவு ஊடகங்களும் சரி இந்த துரோகளுக்கும் அவர்களது அருவருடிகளுக்கும் எதிர்வினையாக ஒரு நாளும் எழுதுவதில்லை

காரணம்
ஒன்று
நாய் வாலை நிமர்த்த முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்

இரண்டு
பதில் அளிப்பதற்கு கூட இவர்களில் ஒன்றும் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்

இவர்களும் இவர்களது கூட்டமும் எப்போதும் குரைத்துக்கொண்டு தானிருக்கும்

இவர்களுக்கு புலி எதிர்ப்பைத் தவிர வேறேதுவும் தெரியாது
mani
அரசியலை முன்னெடுக்கும் இயக்கங்கள் அவற்றை மக்களிடம் பிரச்சாரம் செய்வதும், அரசியல் போராட்ட்ங்க்ளைக் கட்டமைப்பதும் அவசியமாகும். அப்படி அரசியல் போராட்டம் நிகழ்ந்து அதன் வழியே மக்கள் ஆயுதப்போராட்டம்தான் தீர்வு என்பதைத் தமது சொந்த அனுபவத்தின் மூலம் வந்தடைவதும் புரட்சிக்கு முன் நிபந்தனை. அப்படி இல்லாமல் இந்திய மாவோயிஸ்டுகளும் சரி புலிகளும் சரி இவற்றை நடைமுறைப் படுத்தாமல் மக்கள் சார்பாக தாமே ஆயுதம் ஏந்தினர். மக்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் தாங்கள்தான் திறைமைசாலிகள் என்ற நடுத்தர வர்க்க மனோபாவம்தான் இவர்களை முன் செலுத்தியத்து.

அபத்தமான புலிகளின் திட்டத்தை எடுத்து பேசமுன்வந்த உங்களது தன்னம்பிக்கைக்கு முதலில் வணக்கங்கள் பல உரித்தாகுக்.. அரசியல் ஆயுத்த்தை வழிநடத்தும்.. அது சரி அடுத்த வரியிலே இரணைடையும் பிரிக்க முடியாது எனக் கூறக் காரணம் என்ன•.. அரசியல்னா அது இனவாதம்தானே... அப்புறம் என்ன மீதமிருக்கு.. ஓ சோசலிச தமிழீழம் அதுதானே... அத எப்படி அடைவீங்க•.. பாட்டாளி வர்க்கத்தை நீங்க காப்பாத்தி அவங்களுக்கு சோசலிச பொருளுற்பத்தி மூலமா சம ஊதியம் தந்து புரட்சிகர கல்வி மூலமா சாதிய ஓழிப்பீங்க•.. சம ஊதியம் இல்லாத்தாலயா சாதி இருக்கு... புரச்சிகர கல்விய தருவதற்கு தனி ஈழம் கிடைப்பது முன் நிபந்தனையா என்பதையும் சொல்லுங்க•.

அது எப்படிங்க வர்க்கப் போராட்டாம் நடத்தாம சோசலிச சமூகம் படைப்பீங்க•.. புலிகள் இயக்கத்தில் அகமண முறையை ஒழித்த்தாக நீங்க சொல்றீங்க•. பல தலைமைத் தோழர்களே அப்படி இல்லைங்கிறது இருக்க,, அரசியல்படுத்தப்பட்ட மக்களிடம் அகமணமுறை ஒழிக்கப்பட்டதா... இவ்வ‌ள‌வுக்கும் ம‌க்க‌ளை மிர‌ட்டி ராணுவ‌த்தில‌ சேர்க்க‌ முடிந்த‌ புலிக‌ளால‌ அக‌ம‌ண‌ முறையை ஒழிக்க‌ முடிய‌ல‌யா...

இந்துக் கோவில்க‌ள் பாதுகாப்பு அமைப்பு என்ற‌ பெயிரில் பாரிசில் இய‌ங்கும் அமைப்பான‌து புலிக‌ளோட‌ ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாம‌லா அவ‌ங்க‌ இல‌ச்சினையைப் ப‌ய‌ன்ப‌டுத‌துறாங்க•.. அதுல‌ வ‌சூலான‌ ப‌ண‌ம் புலிக‌ளுக்கு போக‌லையா... ஒரு வேளை இந்தும‌த‌ம்தான் சாதிய‌க் காப்பாதுதுன்னு சொன்ன‌ அம்பேத்கார‌ புலிக‌ள் முட்டாள்னு நினைக்கிறாங்க‌ளோ...

சாதி ஒழிப்புக்கும் நில‌ப்ப‌கிர்வுக்கும் தோட‌ர்பு எதுவும் இல்லையா... இல்ல‌ அதுப‌த்தி எதுவும் தெரியாதா...
Sankar
I am sankar,

Ltte does not tolerate even the moderate critisizms coming from tamil interllectuvals. The have developed the personality cult in thier movements. No any ltte leader can decide about what path the muslims must follow. The are distinct and seperate.You take the book of Socialist tamil eelam as a examples. But could you identify any procedures of Ltte that was followed from that book. Ltte is the pure militant group and thier political wing is the servant of these war lord. You need not teach the Marxism to tamil interllectuvals.
ஏகலைவன்
/////டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் முதல் வகையறா. “இந்து வெறி” அ.தி.மு.க., பார்ப்பனீய பா.ச.க., பூணூல் கம்யுனிஸ்ட்கள் மட்டுமின்றி முற்போக்கு முகமூடி போட்டுத் திரியும் ம.க.இ.க, உள்ளிட்ட அமைப்புகள், “துக்ளக்” சோ, சு.சுவாமி, “இந்து” என்.ராம், அ.மார்க்ஸ், இரயாகரன், சோபாசக்தி உள்ளிட்ட முற்போக்கு முகமூடிகள் அணிந்த தனிநபர்கள் என இரண்டாம் வகையறா பட்டியல் நீள்கிறது./////

இரண்டாம் வகையறா பட்டியல் நீளுகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதைப் பிறகு பார்க்கலாம். ஒருவேளை நீளலாம் என்று ‘அதிரடியான்’ குத்துமதிப்பாக முடித்திருப்பது ஒருவேளை இந்துவெறியர்களையும் அதிமுக வையும் ஆதரித்து பேசிவரும் பழ. நெடுமாறன்களையும் மணியரசன்களையும் அவற்றுள் சேர்க்கலாம் என்பதற்காகக் கூட இருக்கலாம் போலும்!

ம.க.இ.க.வைத் திட்டுவதற்குத்தான் இத்தனை சுற்றி வளைப்புகளும் என்பது அதிரடியானின் வயிற்றெரிச்சல் வரிகளிலிருந்து தெளிவாகிறது. ம.க.இ.க., இரயாகரன் ஆகியோரது விமர்சனங்கள் ஒருபுறமிருக்கட்டும், பார்ப்பன பாசிச ஜெயாவுக்கு ஓட்டுப் பொறுக்கத் துணிந்த உங்கள் தமிழ் தேசிய அரசியல்வாதிகளையும், ஆர்.எஸ்.எஸ்.க்கு வெளிப்படையாகக் காவடித் தூக்கியாடும் பழ.நெடுமாறனையும் உங்களுடைய ‘அறிவுக்கண்’ தேடுவதில்லையே அது ஏன்?

தமிழ் தேசிய வாதிகளின் பிழைப்புவாத பித்தலாட்டங்களை அம்பலபப்டுத்தி எழுதப்படும் பதிவுகளில், குறிப்பாக வினவு, மதிமாறன் ஆகியோரது தளங்களில் வந்து உங்கள் தரப்பு நியாயத்தைப் பதிந்து தர்க்கப்பூர்வமாக விவாதிக்க உங்களுக்கு என்ன தயக்கம்? இவர்களுக்கு எதிராக அடிப்படையற்ற அவதூறுகளை எங்கே யார் கொண்டுவந்தாலும் கீற்று அகமகிழ்ந்து பதிப்பித்துவிடும் என்பதாலா?!

தமது தளத்தில் ஒரு கட்டுரையாளர் பதிந்துள்ள கட்டுரைக்கு எதிர்வினைகள் வரும்போது நேர்மையாக அவற்றுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவராக அக்கட்டுரையாளர் இல்லாமல், ஏதோ அனாமதேயங்களைப் போல ஒதுங்கியிருப்பதற்கு கீற்று எப்படி வழியமைத்துக் கொடுக்கிறது? மாறாக கட்டுரையாளர் பதிலளிக்காமல் தவிர்க்கிறார் என்றால் கீற்று முன்வந்து அவருக்காக வாதாடலாமல்லவா? இரண்டும் கிடையாது.

இந்த லட்சனத்துல ’அதிரடியானோட’ முந்தைய கட்டுரையின் பின்னூட்டப் பகுதிகளில் பதியப்பட்ட எமது பின்னூட்டங்கள் முறையாக இல்லையாம்; இத்தனைநாள் அவற்றுக்கு முகம்காட்டாமல் ஒதுங்கியிருந்துவிட்டு இப்போது வந்து கதையளக்கிறார். இதையும் கீற்று அனுமதிக்கிறது. இதுமாதிரி காமெடி பீஸுங்களை விட்டா கீற்றுக்கு வேறு வழியில்லைதான் போலும்.

ம.க.இ.க.வின் மீது விமர்சனம் பதிந்ததை நாங்கள் மகிழ்ச்சியாக வரவேற்கிறோம். அதேவேளையில் அந்த விமர்சனத்திற்கு தார்மீக ரீதியில் பதியப்படும் எமது எதிர்வினைகளை கண்டுகொள்ளாமல் இருட்டடிப்பு செய்வது கேவலம் என்பதையும் கண்டிக்கக் கடமைபட்டுள்ளோம். பின்னூட்டங்களைத் தனிக்கை செய்யும் அதிகாரம் படைத்த கீற்றுவிற்கு பதிவுகளின் மீது தனது ‘பொறுப்பை’க் காட்ட விருப்பமில்லையா என்பதுதான் எமது கேள்வி. எத்தகைய அவதூறுகளை வேண்டுமானாலும் அகமகிழ்ந்து பதிந்துகொள்ளுங்கள்; அதற்கான எதிர்வினைகளுக்கும் மறுப்புகளுக்கும் பதிலளிக்கும் பொறுப்போடு பதியுங்கள் என்பதுதான் கீற்றுவிற்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

தோழமையுடன்,
ஏகலைவன்.
ஏகலைவன்
கீற்று நிர்வாகிகளுக்கு!

எனது முந்தைய பின்னுட்டம் பதியப்பட்டு சுமார் மூன்று மனிநேரங்கள் ஆகிய பிறகும் அதனை வெளியிடாமல் நீங்கள் நிறுத்தி வைத்திருப்பது சரியில்லை.

ஏகலைவன்.
ஏகலைவன்
கீற்று தள நிர்வாகிகளுக்கு!

கீழே நான் முதலில் பதிந்த பின்னூட்டத்தை மீள்பதிவிட்டிருக்கிறேன். எமது அரசியலின் மீது ஒரு அவதூறுப் பதிவை உவப்போடு பதிப்பிக்கத் தெரிந்த உங்களுக்கு எமது எதிர்வினையை சுருக்கி வெட்ட அல்லது இருட்டடிப்பு செய்ய எந்த உரிமையும் கிடையாது. எனது கீழ்கண்ட பின்னூட்டம் கேவலமான முறையில் உங்களால் சுருக்கி வெட்டப்பட்டு வெளியிடப்படிருக்கிறது. பின்னூட்டங்களை இருட்டடிப்பு செய்கின்ற உங்களது தகிடுதத்த வேலைகள் எனக்கு முன்னமேயே தெரியும் என்பதால் இதனை ‘எதற்கும் தேவைபப்டும்’ என்று சேமித்து வைத்திருந்தேன். அது இப்போது உதவுகிறது.

இதிலிருந்தே உமது அறிவு நாணயமும் வெளிப்படையாக அம்பலமாகிறது. எனது பின்னூட்டம் உங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட செயலுக்கு நீங்கள் முறையான விளக்கம் எனக்கு இந்த பதிவினூடாகவே சொல்வீர்கள் என்று நம்புகிறேன். அத்தோடு இந்த பின்னூட்டத்தை நீங்கள் இருட்டடிப்பு செய்யாமல் பதிவிடுவீர்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் உமது ஒருசார்பான நாரதன் வேலைகள் வேறு தளங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தப்படும்.

- ஏகலைவன்.

................................................................................................................

/////டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் முதல் வகையறா. “இந்து வெறி” அ.தி.மு.க., பார்ப்பனீய பா.ச.க., பூணூல் கம்யுனிஸ்ட்கள் மட்டுமின்றி முற்போக்கு முகமூடி போட்டுத் திரியும் ம.க.இ.க, உள்ளிட்ட அமைப்புகள், “துக்ளக்” சோ, சு.சுவாமி, “இந்து” என்.ராம், அ.மார்க்ஸ், இரயாகரன், சோபாசக்தி உள்ளிட்ட முற்போக்கு முகமூடிகள் அணிந்த தனிநபர்கள் என இரண்டாம் வகையறா பட்டியல் நீள்கிறது./////

இரண்டாம் வகையறா பட்டியல் நீளுகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதைப் பிறகு பார்க்கலாம். ஒருவேளை நீளலாம் என்று ‘அதிரடியான்’ குத்துமதிப்பாக முடித்திருப்பது ஒருவேளை இந்துவெறியர்களையும் அதிமுக வையும் ஆதரித்து பேசிவரும் பழ. நெடுமாறன்களையும் மணியரசன்களையும் அவற்றுள் சேர்க்கலாம் என்பதற்காகக் கூட இருக்கலாம் போலும்!

ம.க.இ.க.வைத் திட்டுவதற்குத்தான் இத்தனை சுற்றி வளைப்புகளும் என்பது அதிரடியானின் வயிற்றெரிச்சல் வரிகளிலிருந்து தெளிவாகிறது. ம.க.இ.க., இரயாகரன் ஆகியோரது விமர்சனங்கள் ஒருபுறமிருக்கட்டும், பார்ப்பன பாசிச ஜெயாவுக்கு ஓட்டுப் பொறுக்கத் துணிந்த உங்கள் தமிழ் தேசிய அரசியல்வாதிகளையும், ஆர்.எஸ்.எஸ்.க்கு வெளிப்படையாகக் காவடித் தூக்கியாடும் பழ.நெடுமாறனையும் உங்களுடைய ‘அறிவுக்கண்’ தேடுவதில்லையே அது ஏன்?

தமிழ் தேசிய வாதிகளின் பிழைப்புவாத பித்தலாட்டங்களை அம்பலபப்டுத்தி எழுதப்படும் பதிவுகளில், குறிப்பாக வினவு, மதிமாறன் ஆகியோரது தளங்களில் வந்து உங்கள் தரப்பு நியாயத்தைப் பதிந்து தர்க்கப்பூர்வமாக விவாதிக்க உங்களுக்கு என்ன தயக்கம்? இவர்களுக்கு எதிராக அடிப்படையற்ற அவதூறுகளை எங்கே யார் கொண்டுவந்தாலும் கீற்று அகமகிழ்ந்து பதிப்பித்துவிடும் என்பதாலா?!

தமது தளத்தில் ஒரு கட்டுரையாளர் பதிந்துள்ள கட்டுரைக்கு எதிர்வினைகள் வரும்போது நேர்மையாக அவற்றுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவராக அக்கட்டுரையாளர் இல்லாமல், ஏதோ அனாமதேயங்களைப் போல ஒதுங்கியிருப்பதற்கு கீற்று எப்படி வழியமைத்துக் கொடுக்கிறது? மாறாக கட்டுரையாளர் பதிலளிக்காமல் தவிர்க்கிறார் என்றால் கீற்று முன்வந்து அவருக்காக வாதாடலாமல்லவா? இரண்டும் கிடையாது.

இந்த லட்சனத்துல ’அதிரடியானோட’ முந்தைய கட்டுரையின் பின்னூட்டப் பகுதிகளில் பதியப்பட்ட எமது பின்னூட்டங்கள் முறையாக இல்லையாம்; இத்தனைநாள் அவற்றுக்கு முகம்காட்டாமல் ஒதுங்கியிருந்துவிட்டு இப்போது வந்து கதையளக்கிறார். இதையும் கீற்று அனுமதிக்கிறது. இதுமாதிரி காமெடி பீஸுங்களை விட்டா கீற்றுக்கு வேறு வழியில்லைதான் போலும்.

ம.க.இ.க.வின் மீது விமர்சனம் பதிந்ததை நாங்கள் மகிழ்ச்சியாக வரவேற்கிறோம். அதேவேளையில் அந்த விமர்சனத்திற்கு தார்மீக ரீதியில் பதியப்படும் எமது எதிர்வினைகளை கண்டுகொள்ளாமல் இருட்டடிப்பு செய்வது கேவலம் என்பதையும் கண்டிக்கக் கடமைபட்டுள்ளோம். பின்னூட்டங்களைத் தனிக்கை செய்யும் அதிகாரம் படைத்த கீற்றுவிற்கு பதிவுகளின் மீது தனது ‘பொறுப்பை’க் காட்ட விருப்பமில்லையா என்பதுதான் எமது கேள்வி. எத்தகைய அவதூறுகளை வேண்டுமானாலும் அகமகிழ்ந்து பதிந்துகொள்ளுங்கள்; அதற்கான எதிர்வினைகளுக்கும் மறுப்புகளுக்கும் பதிலளிக்கும் பொறுப்போடு பதியுங்கள் என்பதுதான் கீற்றுவிற்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

தோழமையுடன்,
ஏகலைவன்.
கீற்று ஆசிரியர்
தோழர் ஏகலைவனுக்கு,

வணக்கம். தங்களது பின்னூட்டம் முதலில் முழுமையாக வெளிவரயிலாமல் போனதற்கு வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறோம். அதற்கான தொழில்நுட்ப காரணத்தையும் உங்களோடும், வாசகர்களோடும் பகிர்ந்து கொள்கிறோம்.

கீற்று சமீபத்தில் Joomla CMSக்கு மாற்றப்பட்டுள்ளதை - அதன் வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் நீங்கள் அறியலாம். Joomla comments module-ல் பின்னூட்டங்களுக்கான default settting - 1000 chars என உள்ளது. அதனால்தான் 1000 charsக்கு அதிகமாக இருந்த வார்த்தைகள் தானாகவே வெட்டப்பட்டு இருந்தது. தாங்கள் அனுப்பிய பின்னூட்டம் மூலமாகவே இது பற்றி நாங்கள் அறிய நேர்ந்தது. அதன்பின் default settings-ஐ மாற்றியுள்ளோம். இதை நேர்ப்படுத்த உதவியதற்கு தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றபடி, ம.க.இ.க.விற்கு எதிரான கட்டுரைகளை கீற்று மகிழ்வுடன் வெளியிட்டு வருகிறது என்ற தங்களது கருத்தில் (சிபிஎம் தோழர்கள் சிலருக்கும் இத்தகைய வருத்தம் இருக்கிறது) எங்களுக்கு உடன்பாடில்லை. தங்களது தரப்பிலிருந்து யாரும் கட்டுரைகளை அனுப்புவதில்லையாததால் ம.க.இ.க. தரப்பு கட்டுரைகள் கீற்றில் அதிகமாக வெளிவருவதில்லை.

கீற்று ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் எப்போது, பின்னூட்டம் பகுதிக்குச் சென்று பார்க்கிறார்களோ அப்போதுதான் அவை வெளிவரும், இதில் ஏற்படும் தாமதம் தவிர்க்க முடியாதது.
suresh s
we have already discussed a lot about the ideology and functioning of ltte and the stand of supporters of ltte , tamil elam .now the duty of the democratic thinkers is to protect the tamilans those who are in the custody of rajapakse. so we will plan such things. cpm announce the district level programme to protect the life aggrieved tamilan. we stop the discussion. act in the field in the highest humanist approach.
ஏகலைவன்
////////தோழர் ஏகலைவனுக்கு,

வணக்கம். தங்களது பின்னூட்டம் முதலில் முழுமையாக வெளிவரயிலாமல் போனதற்கு வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறோம். அதற்கான தொழில்நுட்ப காரணத்தையும் உங்களோடும், வாசகர்களோடும் பகிர்ந்து கொள்கிறோம்./////////

கீற்று நிர்வாகிகளுக்கு!

முதலில் பதில் என்று எதையாவது எழுதியமைக்கு மிக்க நன்றி. ஆனால், இப்போது உங்கள் தளம், அதன் வடிவமைப்பு மாற்றப்பட்ட பிறகுதான் பின்னூட்டப்பகுதியில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது என்கிறீர்கள். ஆனால், எனது அதன் முந்தைய வடிவத்திலேயே, சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போதே, என்னுடைய பின்னூட்டம் பதிப்பிக்கப்படாத அனுபவம் உங்களோடு முன்னமேயே இருந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான் நான் ’Backup’ வைத்திருந்து இப்போது மீள் பதிவிட ஏதுவாகிப்போனது.

இம்மாதிரியான எனது முந்தைய அனுபவங்களுடன் இணைத்துப் பார்க்கையில் உங்களது பதில் நேர்மையானதாகத் தெரியவில்லை. இருப்பினும், பெயரளவுக்காவது அதனை நான் ஏற்கிறேன்.

அடுத்து அதிரடியான் என்கிற ‘காமெடியான்’ ம.க.இ.க.வுக்கு எதிராக அவதூறு பரப்புவதற்கு மட்டும்தானா, பின்னூட்டங்களிலும் அவரது பங்களிப்பு இருக்குமா என்பதை ஒரு தளத்தின் ஆசிரியர் குழு என்கிற பொறுப்போடு உறுதிப்படுத்திச் சொல்லியிருக்கலாமல்லவா?

கட்டுரை எழுதும் ஒருவர் அதன் மீதான தர்க்க ரீதியிலான எதிர்வினைகளுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவராகிறார். அல்லது அந்த கட்டுரையின் ஆசிரியரின் சார்பாக வேறு எவராவது விமர்சனங்களுக்கு பதிலளித்து தொடர்ந்து விவாதிக்கத் தயாராக இருக்க வேண்டும். இதுதான் அறிவுநாணயமுள்ளவர்களின் அடிப்படை. விவாதங்கள் பொறுப்போடு நடத்தப்படவேண்டும். அவை வெறும் அவதூறுகள் தான் எனும் பட்சத்தில் அப்படிப்பட்ட ‘பொறுப்பு’ தேவையில்லை. இங்கே கருத்து பதிந்துள்ள ‘காமெடியான்’ அவர்களின் ‘பொறுப்பும்’ அப்படிப்பட்டதே.

எனவே, ‘அதிரடியானின்’ முந்தைய பதிவிலும், இப்போதைய பதிவிலும் பதியப்பட்டிருக்கும் எதிர்வினைகள் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு வாசகர்களின் முன்னால் விவாதம் தொடர்ந்து நடத்த கீற்று ஆசிரியர் குழு பொறுப்பேற்கவேண்டும். இல்லையென்றால் இங்கே பதியப்பட்ட எமது தோழர்களின் பின்னூட்டங்களைத் தொகுத்துத் தருகிறேன், அதனையும் ஒரு கட்டுரைக்கு உரிய முன்னுரிமையோடு மீள்பதிப்பிக்க கீற்று முன்வர வேண்டும். இவையிரண்டிற்கும் கீற்று தயாரில்லை என்றால், ம.க.இ.க.வின் மீதான அவதூறுப் பதிவுகளுக்கு கீற்று வெளிப்படையாக உடந்தையாக நிற்கிறது என்பதுதான் பொருளாகிறது.

தோழமையுடன்,
ஏகலைவன்.
noyyalnathi
ஏகலைவன் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியான திமுக வை உள் விமர்சனம் செய்யாத அல்லது அதற்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாத கண்ணை மூடிக்கொண்டு திமுகவை ஆதரிக்கும் கலைஞர் டிவி அபிமானி.. இவர்களது முட்டாள்தனமான போகிகினால்தான் திமுகவுக்கு எதிராக கருணானிதியின் கபட போக்கை குட்டுவதற்க்காகத்தான் தேர்தலின் போது சில மாற்று நிலைப்பாடுகளை தமிழ் தேசிய இயக்கங்கள் எடுக்கும் சூழல் வந்தது. அதை பரப்புரையாகவும் செய்ய நேர்ந்தது . . . ஈழப்பிரச்சனையில் சுபவீ திருமா போன்ற கருணாநிதி அடி வருடும் பக்தர்களுள் ஏகலைவனும் ஒருவர் ஒரு நல்ல இணையதளமான கீற்று ஊடகதர்மப்படி நடந்துகொண்டதற்கு நன்றி.....
வினோத்குமார்
ஏனுங்க ஏகலைவன் சில கேள்விகள்ங்க....

அப்படினா நடந்து முடிந்த தேர்தலில், உங்க கூட சேர்ந்து ”தமிழ் மக்களே” தேர்தலை புறக்கணிங்கனு எல்லோரும் சொல்லியிருக்கணும்னு சொல்றீங்க... அப்படித்தானே....

சரி, அப்படியே செஞ்சோம்னா, அது யாருக்கு சாதகமானதாக இருந்திருக்கும்னு நீங்க யோசிக்கவே மாட்டீங்களா, அல்லது யோசித்து தான் சொல்கிறீர்களா...

மக்களே தேர்தலை புறக்கணிங்கனு சொன்னா தமிழ்நாட்டு மக்கள்ல எவ்வளவு பேர் கேட்பாங்கனு நீங்க நினைக்கிறீங்க..?

ம.க.இ.க அமைப்பு தேர்தலைப் புறக்கணிங்கனு சொல்லி கடந்த 30 வருடமா பிரச்சாரம் செங்சிட்டு தானே வர்றீங்க... இந்த 30 வருடத்தில எத்தனை லட்சம் பேர் உங்களை நம்பி ஓட்டுப் போடாம இருந்தாங்க...?

மக்களுக்கு தோ்தல் மீதுள்ள நம்பிக்கை இன்னும் முழுவதுமாக தகரவில்லை. மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலை நம்புகிறார். அது சனநாயகம் என்று கருதுகிறார்கள்.. இந்த உளவியலை ஒரேடியாக உடைத்து விட முடியாது.. மெல்ல மெல்ல அம்பலப்படுத்தி தான் உடைக்கணும்..

ஆனா, தேர்தலின் போது இருந்த நிலைமை என்ன?

ஈழத்தில் தினம் தினம் தமிழர்கள் குண்டு மழையில் சாகும் போது, அதற்கு உதவி செய்யற காங்கிரஸ் கட்சிய முதல்ல ஆட்சிய விட்டு இறக்கணும்னு மட்டும் தான் எல்லாருக்கும் நோக்கமா இருந்துச்சு..

அதனால தான் எல்லாரும் ஒன்றுபட்ட, கொள்கை வேறுபாடுகளைக் கூட மறந்துவிட்டு காங்கிரசை ஆட்சிய விட்டு விரட்டியேத் தீரணும்னு வேலை செய்தார்கள்...

இந்த சூழ்நிலையில், ம.க.இ.க. காரங்க போல இந்த சின்ன சின்ன தமிழ் அமைப்புகளும் தேர்தலப் புறக்கணித்திருந்தால், நிலைமை என்னவாகியிருக்கும்...?

சோனியா கும்பலுக்கு உச்சி குளிர்ந்து போயிருக்கும்..

“இந்தத் தமிழ்நாட்டு மக்களை நாம நேரடியா சுட்டுக் கொன்றால் கூட மிஞ்சிப் போனால் இவங்களால ”தோ்தல் புறக்கணிப்பு” தான் செய்ய முடியும்.” ”நம்ம தேர்தல் அரசியலுக்கு இவனுங்களால எந்த பாதிப்பும் வராது” என்றே கருதியிருப்பார் சோனியா...

வர்க்கம் பற்றி வாய்கிழிய பேசும் ம.க.இ.க. அமைப்புகளும் குட்டி குட்டி அமைப்புகளாக இருக்கும் தமிழ்த் தேசியம் பேசுகிற அமைப்புகளும் தேர்தல் புறக்கணிப்பு செய்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தானே உண்மை... பெரும்பான்மை மக்களை இவ்வமைப்புகள் இன்னும் சென்றடையவில்லை என்பதும் உண்மை தானே...

இந்த இனத்தை அழிச்ச நாசக்கார நாய்ங்களுக்கு எதிராக வேலை செய்யறத விட்டுட்டு ஓடிப் போய் ஒளிந்து கொண்டு ”நாங்க புறக்கணிக்கிறோம்”னு சொல்லணும் ம.கஇ.க. சொல்லுது...

இந்த முடிவை ம.க.இ.க. விரும்புகிறதோ இல்லையோ.. நிச்சயம் கருணாநிதியும், காங்கிரசும் விரும்பியிருக்கும்..

தமிழ்நாட்டுல கட்சி வளர்த்துட்டு யாருக்குங்க சேவகம் பண்றீங்க நீங்க...?
ஏகலைவன்
///////////எனவே, ‘அதிரடியானின்’ முந்தைய பதிவிலும், இப்போதைய பதிவிலும் பதியப்பட்டிருக்கும் எதிர்வினைகள் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு வாசகர்களின் முன்னால் விவாதம் தொடர்ந்து நடத்த கீற்று ஆசிரியர் குழு பொறுப்பேற்கவேண்டும். இல்லையென்றால் இங்கே பதியப்பட்ட எமது தோழர்களின் பின்னூட்டங்களைத் தொகுத்துத் தருகிறேன், அதனையும் ஒரு கட்டுரைக்கு உரிய முன்னுரிமையோடு மீள்பதிப்பிக்க கீற்று முன்வர வேண்டும். இவையிரண்டிற்கும் கீற்று தயாரில்லை என்றால், ம.க.இ.க.வின் மீதான அவதூறுப் பதிவுகளுக்கு கீற்று வெளிப்படையாக உடந்தையாக நிற்கிறது என்பதுதான் பொருளாகிறது.//////////

எனது மேற்கண்ட கேள்விகளுக்கு இதுவரி கீற்று பதிலளிக்கவில்லை. எனது இக்கருத்து நியாயமற்றதாகவோ, தவறானதாகவோ அல்லது உங்களால் ஏற்கமுடியாததாகவோ இருந்தால் கீற்று நிர்வாகிகள் அதனை வெளிப்படையாக தெரிவிக்கலாம். மாற்றுக்கருத்துக்களை பரிசீலிக்கக் காத்திருக்கிறேன்.

ஆனால், கட்டுரை எனும் பெயரில் அவதூறுகளைச் சும்மா போகிற போக்கில் பதிந்து செல்வதை அனுமதிக்க முடியாது. கட்டுரை ஆசிரியரின் அரசியல் - அறிவு நாணயம் அவர் சார்ந்திருக்கும் பிழைப்புவாத அரசியலைப் போன்றதுதான் என்பது எமக்குத் தெரியும். ஆனால், இதற்கு கீற்று தரப்பிலிருந்து என்ன பதில் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல்தான் மீண்டும் மீண்டும் இதனைக் கோரச்செய்கிறது.

தோழமையுடன்,
ஏகலைவன்.
கீற்று
தோழர் ஏகலைவனுக்கு,

மேற்படி கட்டுரைக்கு தங்கள் தரப்பு எதிர்வினைகளைத் தொகுத்து கட்டுரையாக அனுப்பும் பட்சத்தில், ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்கும் பொருட்டு எப்போதும்போல் கட்டுரையை பரிசீலனைக்குப்பின் பதிப்பிக்க “கீற்று” தயாராகவே உள்ளது.
ஏகலைவன்
//////////தோழர் ஏகலைவனுக்கு,

மேற்படி கட்டுரைக்கு தங்கள் தரப்பு எதிர்வினைகளைத் தொகுத்து கட்டுரையாக அனுப்பும் பட்சத்தில், ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்கும் பொருட்டு எப்போதும்போல் கட்டுரையை பரிசீலனைக்குப்பின் பதிப்பிக்க “கீற்று” தயாராகவே உள்ளது.////////////

ஆக, பதிவுகளை எழுதும் ஆசிரியர் அதன் மீது நடைபெறும் விவாதங்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவராக இருக்க வேண்டியதில்லை, என்பதை கீற்று சுற்றி வளைத்து, கடந்த இரண்டு நாட்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது. சரிதானே!

எனது முந்தைய பின்னூட்டங்களில், பதியப்பட்ட கட்டுரையின் மீது எந்த விவாதத்தையும் நான் இன்னும் முன்வைக்கவில்லை. அவ்விவாதத்தில் பங்கெடுக்க கட்டுரை ஆசிரியரோ அல்லது அவர் சார்பாக கீற்று ஆசிரியரோ வருவார்களா என்பதை உறுதி செய்வதற்காகத்தான் கடந்த இரண்டு நாட்களாக உங்களோடு போராடிக்கொண்டிருக்கிறேன்.

அதற்கு எந்த ஒரு நேர்மையான பதிலையும் கீற்று இந்த நிமிடம் வரை பதியவில்லை. ஏதோ சில அனாமதேயங்கள் பதியும் அவதூறுகளுக்கு கீற்று புகலிடமாக இருக்கக் கூடாது. அவை அவதூறுகள் அல்ல, முற்றிலும் தர்க்கப்பூர்வமானவை என்பதில் கட்டுரை ஆசிரியருக்கும் கீற்று ஆசிரியர் குழுவிற்கும் உண்மையிலேயே நம்பிக்கை இருந்திருந்தால் எனது கேள்விக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பொறுப்பான பதில் கிடைத்திருக்கும்.

’விரைவில்’ கிடைக்கும் என்றும் நம்புகிறேன்!

தோழமையுடன்,
ஏகலைவன்.
- உய்யலாலா
கீற்று ஆசிரியர் குழு, எவ்வளவு நிதானத்துடன், பதிலளிக்கிறது. ஆனால், ஏகலைவன் தொடர்ந்து மிரட்டும் பாணியிலேயே எழுதுகிறாரே... ஏன்?
அதுமட்டுமல்லாமல், அதிரடியானுக்கு பதில் சொல்லுவதை விட்டுவிட்டு, ம.க.இ.க.-வினர், கீற்று இணையத்தின் மீது பாய்வது, ஏன்?
ம.க.இ.க.வினருக்கு ஒரு அரசியல் இருப்பது போல, எல்லோருக்குமே ஒரு அரசியல் இருக்கத்தானே செய்யும்...? இதை ஏன், ம.க.இ.க.வினர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்...?
ஏகலைவன்
நண்பர் வினோத் குமார் அவர்களுக்கு!

மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எல்லாவற்றையும் மக்கள் தலையில் கட்டிவிட்டு தப்பித்துக் கொள்வது எளிது. நீங்கள் பேசுகிற புலியாதரவு அரசியலை மட்டும் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா?, அதனால்தான் ராஜீவ் மரணத்தின்போது ‘அடக்கி’ வாசித்தீர்கள் போலும்!

உங்களது தமிழ்த் தேசிய அரசியலை மட்டும் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா, என்ன? ஆனால் பேசிக்கொண்டிருக் கிறீர்களல்லவா? நாம் முன்வைக்கிற கருத்து நியாயமானதா, நேர்மையானதா என்பதில் மட்டும் உறுதியாக நின்று பேசினால் போதும், மக்கள் மீது பழிபோட்டு நமது கீழ்த்தரமான நடவடிக்கையை நியாயப்படுத்திக் கொள்ளும் அவசியம் ஏற்படாது, என்பது எனது தாழ்மையான கருத்து.

ஆனால் எமது கருத்து ஆளும் வர்க்க கருத்தியல்கள் சென்றடையும் வீச்சோடு பரவலாக சென்றடைய முடியவில்லை என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இதையே காரணம் காட்டி, சமயத்திற்கொருமுறை சந்தர்ப்பவாதம் பேசி, தாம் நேசிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் புலிகளைப் புதை குழிக்குள் தள்ளிவிட்ட தேசியப் பிழைப்புவாத – சந்தர்ப்பவாத அரசியல் என்ன விமர்சனத்திற்கப்பாற் பட்டதா?

மக்கள் கேட்கமாட்டார்கள் என்பதற்காகத்தான் ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப் பட்டபோது அனைத்துப் புலன்களையும் அடக்கி வெறும் பார்வையாளராக மட்டும் இருந்தீர்களா? புலிகள் மீது எமக்கு அரசியல் ரீதியில் ஆயிரம் விமர்சன்ங்கள் இருந்த போதிலும், ராஜீவ் காந்தி கொன்றழிக்கப்பட வேண்டியவனே என்பதையும் ராஜீவ்காந்தி ஈழமக்களுக்குச் செய்த துரோக்ங்களைப் பட்டியலிட்டு அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து அதனாலேயே கடுமையான வழக்குகளையும் தண்டனைகளையும் சந்தித்த நாங்கள் கைக்கூலிகளா?

இந்தியா என்கிற போலித் தேசியக் கட்டமைப்புக்குள் இந்திய அரசு காஷ்மீரத்திலும் அஸ்ஸாமிலும் இன்ன்பிற மாநிலங்களிலும் செய்துவரும் பாசிச இன ஒடுக்குமுறையை வெளிப்படையாக்க் கண்டித்து உங்கள் பழ.நெடுமாறன் பேசியிருக்கிறாரா?

இந்தியாவிற்குள்ளான தேசிய இன ஒடுக்குமுறைகளை, நீங்கள் கடந்த தேர்தலில் பரிந்துரைத்த ஓட்டுப்பொறுக்கி கும்பலின் நிலைப்பாடுகள் என்ன என்பது உங்கள் பேரறிவுக்கு எட்டவில்லையா?

இந்தியாவிற்குள்ளேயே இவனது தேசிய மேலாதிக்க வெறி துருத்திக் கொண்டிருக்கும்போது அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் மூடிமறைத்துக் கொண்டு “இலை’ மலர்ந்தால் ’ஈழம்’ மலரும்” என்றும், “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் ‘ஈழம்’ கிடைத்துவிடும்” என்றும் தங்களது பிழைப்புவாத மோசடி அரசியலை விதைப்பதற்கு ‘கைக்கூலி’ பெற்றது யார்?

////தமிழ்நாட்டுல கட்சி வளர்த்துட்டு யாருக்குங்க சேவகம் பண்றீங்க நீங்க...? /////

இதைக் கேட்பதற்கு தமிழ்த் தேசிய அரசியல் வியாபாரிகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை, நண்பரே!
Dr.S.Thiru
//குறிப்பாக வினவு, மதிமாறன் ஆகியோரது தளங்களில் வந்து உங்கள் தரப்பு நியாயத்தைப் பதிந்து தர்க்கப்பூர்வமாக விவாதிக்க உங்களுக்கு என்ன தயக்கம்?//

தோழர் ஏகலைவன் பின்னூட்டங்களிலிருந்து ஒரு செய்தி (பயனுள்ள) கிடைக்கின்றது.

'வினவு'ம் 'மதிமாறனும்' ஒரே சங்கை வெவ்வேறு வாய்களில் வைத்து ஊதிக்கொண்டுள்ளார்கள்! என்பதுதான் அது. ஒரு வகையில் சிறிது அய்யத்துடன் தான் மதிமாறன் தளத்தில் எதிர் வினையாற்றிக் கொண்டிருந்தேன்! பல குழப்பங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது!

தமிழ் தேசியம் என்கிற கருத்தியலுக்கு மூலவரான தந்தை பெரியாரை, நெடுமாறன், போன்ற தத்துவ பலவீனமான சக்திகளை காரணம் காட்டி, மணியரசன் போன்ற கருத்தியலுக்கு ஏதோ ஒரு வகையில் அரசியல் ரீதியான ஆதரவு சக்திகளை பகடி செய்தும் கடைசியில் தமிழ் தேசியம் என்கிற கருத்தியலையே ஏதோ ஒரு சாதிக்கு உரியதாகக் காட்டும், மணியாட்டும் பார்ப்பனத் தந்திரம் புரிகிறது ('குமுதம்' செய்வது போல என கட்டுரையாளர் தெளிவாக குறிப்பிட்டது போல).

எமது வரலாற்று எதிரிகளான பார்ப்பனியத்தின் வல்லமை ஒரு வகையில் அச்சமூட்டுவதாகவும் இருந்தாலும் (மதிமாறனைக் கூட முகவராக்கி விட்டார்கள்) பெரியாரியவாதிகளான எங்களுக்கு ஒரு அரசியல் பாடம் மீண்டும் புகட்டப் பட்டுள்ளது. என்ன இருந்தாலும் எதிரியின் திறமையை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

தந்தை பெரியாரின் தாடியை பூணூலாக மாற்றி, அம்பேத்கரிய மந்திரங்கள் முழங்கி பார்ப்பனியத்துக்கு உபனயனம் செய்ய மதிமாறன் மாங்கு மாங்கு என்று உழைக்கிறார்! ஏன் என்பது இந்தத் தளத்தில் தெளிவாகியிருக்கிறது.

///தமது தளத்தில் ஒரு கட்டுரையாளர் பதிந்துள்ள கட்டுரைக்கு எதிர்வினைகள் வரும்போது நேர்மையாக அவற்றுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவராக அக்கட்டுரையாளர் இல்லாமல்///

'வினவு' ஒரு வகையில் பரவாயில்லை! ஆனால் எதிர்வினைகளுக்கு ஏகலைவன் இன்னொரு எடுத்துக்காட்டாக கூறிய மதிமாறனின் நேர்மையான பதில்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். மதிமாறனின் கட்டுரைகளுக்கான விவாதங்களில் கலந்து கொண்டவன் என்கிற முறையில் இதைக் கூறுகிறேன்!

மதிமாறன் பற்றி இந்தப் பதிவில் இவ்வளவு பேச வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்று தான். ஆனால் இங்கு தோழர் அதிரடியான் கருத்துகளை எதிர் கொள்வதை விட்டு விட்டு 'கீற்றின்" மீது தோழர் ஏகலைவன் பாய்வதில் எந்த நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
Dr. V. Pandian
//
மக்கள் கேட்கமாட்டார்கள் என்பதற்காகத்தான் ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப் பட்டபோது அனைத்துப் புலன்களையும் அடக்கி வெறும் பார்வையாளராக மட்டும் இருந்தீர்களா? புலிகள் மீது எமக்கு அரசியல் ரீதியில் ஆயிரம் விமர்சன்ங்கள் இருந்த போதிலும், ராஜீவ் காந்தி கொன்றழிக்கப்பட வேண்டியவனே என்பதையும் ராஜீவ்காந்தி ஈழமக்களுக்குச் செய்த துரோக்ங்களைப் பட்டியலிட்டு அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து அதனாலேயே கடுமையான வழக்குகளையும் தண்டனைகளையும் சந்தித்த நாங்கள் கைக்கூலிகளா?

இந்தியா என்கிற போலித் தேசியக் கட்டமைப்புக்குள் இந்திய அரசு காஷ்மீரத்திலும் அஸ்ஸாமிலும் இன்ன்பிற மாநிலங்களிலும் செய்துவரும் பாசிச இன ஒடுக்குமுறையை வெளிப்படையாக்க் கண்டித்து உங்கள் பழ.நெடுமாறன் பேசியிருக்கிறாரா?
//

இவ்வளவும் சொல்லும் ஏகலைவன் அவர்களே, பிறகு ஏன் இந்திய தேசியத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு அலைகிறீர்? இவ்வளவும் சொல்லும் நீங்கள் தானே முதலில் தனித்தமிழ்நாடு கேட்டிருக்க வேண்டும்? ஆனால், தமிழ்த்தேசம் கேட்பவர்கள் மீது பாயவேண்டியதன் அவசியம் என்ன?

இத்தனைக்கும் உங்களது கட்சி தமிழ் நாட்டைத் தவிர வேறெங்கும் இடையாது. ஆக, எந்த நெருக்கடியும் இல்லாத நீங்கள் தமிழ்த்தேசம் கேட்பதுதானே முறை?

அன்றிலிருந்து இன்று வரை அனைத்து அழிவையும் தமிழனுக்கு செய்யும் இந்தியாவிலிருந்து விடுபடுவது தான் தமிழனுக்கான ஒரே வழி. இது கட்சிகளுக்கப்பால் உள்ள சாதாரண மக்களின் புரிதல்.

இது புரியாத உங்கள் கட்சியின் உள் நோக்கம் என்ன?

சொல்ல முடியுமா தோழரே!
சின்னகுட்டி
அதிரடி......உன் எழுத்துகள் எல்லாம் நமத்து போன வெடி ........இனிமேலும் கடித்தால்........உன்னை வந்தடையும் கருத்துகளின் அடி......ஒழுங்காய் நல்ல புத்தங்களைஆராய்ந்து படி.......!
தன் இனத்துமக்களின் விடுதலைக்கு மனித வெடிகுண்டாக மாறும் ஒரு போராளியின் தியாகத்தை தவறான வழியில் இட்டு செல்வதை எந்த கம்யுனிஸ்ட் கட்சியும் வேடிக்கை பார்க்காது.....இதை தான் ம.க.இ.க தொடர்ந்து செய்து வந்துள்ளது.

அதிரடியாய் அதிரடியாய்......
புலிகளின் தோல்வி விழ்ந்தது
ஈழமக்களின் தலையில் பெருமிடியாய்
இப்படியாய் ஈழம் கொள்ளூமொரு
படிப்பினயாய் நிமிர்ந்தெழும் பாட்டாளிவர்க்கம்
போராட்டத்தை இட்டு செல்லும்
மார்க்சிய ஓலியாய்.......!
stalinguru
சான்டினிஸ்டுகளும் விடுதலைப்புலிகளும் பகுதி - 1

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும்
தமிழர்களும்,தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு சக்திகளும்
விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவோடு முடங்கி
போய்விடுவார்கள் என்று கருதியவர்களுக்கு இன்று
ஏமாற்றமே பதிலாக கிடைத்திருக்கிறது.சிங்கள அரசின்
தடுப்பு முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி
மிக மோசமான மனித உரிமை மீறல்களின் மத்தியில்
இருத்தப்பட்டிருக்கும் மக்களை அவர்களின் சொந்த
வாழ்விடங்களில் மீள் குடியேற்ற உலக நாடுகளை
வலியுறுத்துவது.மகிந்த ராஜபக்ஸேவையும் அவரது
கும்பலை சேர்ந்தவர்களையும் போர்க்குற்றவாளிகளாக
அறிவிக்க கோருவது என்று தங்கள் செயல்பாடுகளை ஈழ
ஆதரவாளர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் ஈழவிடுதலைக் கோரிக்கை எழக் காரணமான சூழல் இன்றுவரை மாற்றப்படாத நிலையில் விடுதலைப்புலிகளின் மேலான விமர்சனம் என்கிற பேரில் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையே சிதைக்க முனைபவர்களால் இணையத்தள விவாத மேடைகள் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன.இதுபோன்ற
கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு நாம் தொடர்ந்த
எதிர்வினைகள் செய்துகொண்டிருப்பது மட்டுமே
கருத்தியல் ரீதியாக அவர்களை அம்பலப்படுத்த உதவும்.

இந்த விமர்சனப் போக்குகளில் பின்நவீனத்துவ,இடதுசாரிய
அடையாளங்களை முன்நிருத்தி பேசுபவர்களை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

மாவட்டத்துக்கு பத்து பேர் படிக்கிற இதழை வெளியிட்டு
முப்பது பேருடன் மாபெரும் ஆர்பாட்டங்களை நடத்தி
இந்திய அதிகாரவர்க்கத்தை நடுங்க வைக்கும் தங்களை
சார்ந்திராமல் இந்திய ஆளும்வர்க்கத்தோடு புலிகள்
சமரசப்போக்கை கடைபிடித்ததால்தான் இந்த பேரழிவு
நிகழ்ந்ததாக கூறும் மக்கள கலை இலக்கிய கழகத்தினர்
அவர்களில் முக்கியமானவர்கள்.இதில் குறிப்பிடத்தக்க
விசயம் வேறு ஒன்றும் உள்ளது.இந்த இந்திய புரட்சிக்
கட்சிக்கு தமிழ்நாட்டை தாண்டி வேறு மாநிலங்களில்
ஒரு கிளை கூட இலலை என்பதுதான் அது.

தமிழகத்தில் மட்டும் கட்சி கட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது இவர்களுக்கு.இந்தியா முழுவதும் கட்சி கட்ட எப்படியும் இவர்களுக்கு ஒரு முன்னூறு ஆண்டுகள் தேவைப்படும்.இவர்கள் இந்தியாவில் புரட்சி நடத்தி ஆட்சியை பிடிக்கும்வரை புலிகள் தங்கள் போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று சொல்ல வருகிறார்களா தெரியவில்லை.

ஒன்றே கால் கோடி சிங்களர்களில் ஒற்றைப் பெயரைக்
கூறி, அந்த நபருடன் ஐக்கிய முன்னனி கட்டி சிங்கள
பாஸிஸ்டுகளை எதிர்த்துப் போராடும் வாய்ப்பை புலிகள்
தவற விட்டதால்தான்இந்த பேரழிவு நிகழ்ந்ததாக பஜனை
பாடும் இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள் என்றே
கருத வேண்டியிருக்கிறது.

இந்திய அமைதிப்படை ஈழத்தைவிட்டு வெளியேறுகையில்
நாற்பது இலட்சம் மக்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்து
கொண்டிருந்தார்கள் என்று கூறியது.இன்றைக்கு முப்பது
இலட்சம் பேராவது இருப்பார்களா தெரியவில்லை.தமிழ்
மக்களை படுகொலை செய்வது,உள்நாட்டுக்குள்ளும்
வெளிநாடுகளுக்கும் அகதிகளாக இடம்பெயரச் செய்வது,
சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழர் நிலங்களை
ஆக்கிரமிப்பது என்ற தனது நீண்ட கால இன அழிப்பு
திட்டங்களின் அடிப்படையில் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் சிங்கள அரசு,புலிகள் இல்லாமல்
இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் என்று ஒரு
இனம் இருந்தது என்பதற்கான அடையாளம் கூட
இல்லாது அழித்திருக்கும் என்பது போன்ற விசயங்கள்
இவர்களுக்கு பரிசீலிக்க தேவையற்ற விசயங்களாக
தெரிவது நம்மால் இன்றுவரை புரிந்துகொள்ள
இயலாததாவே உள்ளது.

ஈழத்தின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் சந்தையை
கைப்பற்றவும் கடந்த மூன்று ஆண்டுகளாக போர் நடத்திக்
கொண்டிருந்த இந்தியாவை களத்தில் எதிர்த்து நின்றது
புலிகள்தான் என்பது போன்ற எளிய உண்மையைக் கூட
காணச் சக்தியற்ற இவர்களின் கண்களுக்கு புலிகள் இந்திய ஆளும்வர்க்கத்துடன் கடைபிடித்த பெயரளவிலான
சமரசப்போக்கை காணும்போது மட்டும் நெற்றிக்கண்ணும்
திறந்துகொள்கிற மர்மம் இன்றுவரை விளங்கவில்லை நமக்கு.

இவர்களைப் பொறுத்தவரை இயங்கியல் என்பது மனிதனில் இருந்து குரங்கு தோன்ற வேண்டும் என்பதுதான் போல.நாம் அறிந்தவரை குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணமித்தான். ஒரு தாழ்நிலை வடிவத்திலிருந்துதான் உயர்நிலைக்கு
முன்னேற்றம் நிகழ முடியுமே ஒழியே துவக்கத்திலேயே எந்த தவறுகளும் பிழைகளும் இல்லாமல் ஒரு அமைப்பு
கட்டப்படுவது எந்த விதத்திலும் சாத்தியமில்லை.இது
புலிகளுக்கும் பொருந்தும்.

சாத்தியமான அளவுக்கு தர்க்கரீதியா அலசி ஆராய்ந்தாலும் தற்போதைய பின்னடைவுக்கு புலிகளின் அரசியல்ரீதியான மிகச் சில தவறுகளை மட்டுமே பொறுப்பாக்க முடியாது என்கிற முடிவுக்குத்தான் நம்மால் வர முடிகிறது.

மார்க்சிய முன்னோடிகளின் எழுத்துக்களை அகராதியாக
பயன்படுத்துவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
பைபிளாக கருதுபவர்களாக மட்டுமே இவர்களை கருதிக்
கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.சர்வதேச நாடுகள் குறிப்பாக இந்தியா ஈழத்தின் இனபடுகொலையில் வகித்த
பாத்திரத்தை எளிமைப்படுத்துகிற போக்குக்கு உதவி
செய்கிற எழுத்துக்களுக்கு இடதுசாரிய சாயம் பூச
முயலுகிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.

அ.மார்க்ஸ் மற்றும் ஷோபாசக்தி,சுகன் போன்றவர்களை
ஏற்க்கனவே அம்பலப்படுத்தி எழுதி விட்டதால் அது பற்றி
அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.ஆனாலும்
மார்க்சிய அரிச்சுவடி நூல்களை கூட புரட்டிப் பார்க்காத
இவர்களின் ரசிகர்கள் சோசலிசத்தின் மேல் திடீர் காதல்
கொண்டு புலிகளை விமர்சிக்க புகுந்திருப்பதைப் பார்க்க
வேடிக்கையாக இருக்கிறது.மனநெருக்கடிக்கு உள்ளான
மார்க்சியர்களின் எழுத்துக்களுக்கு நேரடியாகவே இவர்கள்
தாவிவிட்டதை இவர்கள் எழுத்துகளே நமக்கு காட்டிக்
கொடுக்கின்றன.

விளிம்பு,மையம்,பெருங்கதையாடல்களை நிராகரித்து விளிம்பு நிலையினரின் அடையாள அரசியலை உயர்த்திப் பிடிப்பது என்று பேசும் இவர்கள்,திருநங்கைகள்,உடல் ஊனமுற்றோர்,
தலித்திய அரசியலை முன்னெடுக்கும் இயக்கங்கள் என்று சகல விளிம்புநிலையினரும் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பை தடுத்து நிறுத்தும்படி கோரியும்,அந்த குரல்களை எல்லாம்
புறங்கையால் தள்ளிவிட்ட பாசிச இந்திய அரச கட்டமைப்பு பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறார்கள்.?

தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றான நிகராகுவாவில்
அமெரிக்க கைப்பாவையாக ஆட்சியில் இருந்த
அனஸ்டாசியோ சோமோசாவுக்கு எதிராக வீரம்மிக்க
கொரில்லா போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்ற சான்டினிஸ்டாக்களின் ஆயுத போராட்டதோடு
விடுதலைப்புலிகளை ஒப்பிடுவதன் மூலம் நாம்
ஈழ விடுதலைப் போரை புரிந்துகொள்ள முயலலாம்.

மூன்றாம் உலக நாடுகளில் தேசிய விடுதலைப் புரட்சிக்கு
மார்க்சிய லெனினிய கட்சி கட்டுவதா அல்லது கொரில்லா
ராணுவ அமைப்பை கட்டுவதா என்கிற கேள்விக்கு புலிகள் கொரில்லா அமைப்பைத் தேர்ந்தெடுத்தன் நியாயம் புரிந்து கொள்ளத்தக்கதே.கட்சிகள் தலைமைதாங்கி முன்னெடுத்த ஆயுத போராட்ட நடவடிக்கைளின் மூலம் அரசு அமைத்த
ரஸ்ய,சீன,வியட்நாமிய,நாடுகளில் இன்றைக்கு
முதலாளித்துவம் முற்றாக மீட்டமைக்கபட்டுள்ள நிலையில் கொரில்லா அமைப்பாக துவங்கிய கியூபாவில் மட்டுமே இன்றைக்கு சோசலிசம் சார்ந்த அரசு நிலவிக்
கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கீற்று இணையத்தில் புலிகளுக்கு ஆதரவான
கட்டுரை மீது எதிர்வினையாற்றிய நண்பர் கூறிய கருத்து
ஒன்றில் புலிகளும்,இந்திய மாவோயிஸ்டுகளும்
போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மக்களை
தள்ளி வைக்கும் குட்டிமுதலாளித்துவ மனபான்மையில்
செயல்படுவதாக கூறி இருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் முன் கொரில்லா யுத்தம் பற்றி
என்னும் தனது நூலில் சேகுவேரா சொல்லியிருக்கும்
கருத்தைப் பற்றி பார்ப்போம்.

அரசமைப்பு சார்ந்த சட்டத்தன்மை கொண்ட,முதலாளித்துவ சுதந்திரங்களை பேணும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு
அரசுக்கு எதிராக சட்ட ரீதியான போராட்ட வழிவகைகள்
முற்றிலும் தீராத நிலையில் புரட்சிகர இயக்கம் ஆயுதப்
போராட்டத்தை தொடங்கக் கூடாது.இத்தகைய நிலையில்
கொரில்லா இயக்கம் வளர முடியாது.

அரசியல்ரீதியான போராடங்களை சிங்கள அரசு
மூர்க்கத்தனமாக ஒடுக்கிய பிறகே புலிகள் ஆயுதங்களை
எடுத்தனர்.சட்டபூர்வ போராட்ட முறைகளில் மக்கள்
நம்பிக்கை இழந்த இடங்களில் மட்டுமே இந்திய
மாவோயிஸ்டுகள் ஆயுதமேந்தி இருக்கின்றனர்.

நீண்டகால மக்கள் யுத்தப்பாதை என்ற மாவோவின்
சிந்தனைக்கு ஒத்திசைவாக அரசு ஒடுக்குமுறை நிலவும்
பிற்பட்ட பகுதிகளில் தளங்கள் அமைத்து நகர்புறங்களை
நோக்கி முன்னேற துவங்கையில் அரசியல் போராட்ட
வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது,பிறகு ஆயுத
அரசியல் போராட்ட வடிவங்களை தக்க விதத்தில்
பயன்படுத்தி எதிரியை ஆட்சியில் இருந்து அகற்றுவது
என்கிற் வழிமுறைகளை கடைபிடிக்கும் இந்திய
மாவோயிஸ்ட்டுகளை குட்டிமுதலாளித்துவவாதிகள்
என்று எவ்வாறு கூற முடியும்.நல்வாய்ப்பாக
மாவோவையே குட்டிமுதலாளித்துவவாதி என்று
சொல்லாமல் போனதையிட்டு மகிழ்சி அடையலாம்
அதிரடியான்
அனைவருக்கும் வணக்கம்..

ம.க.இ.க. போன்ற போலி புரட்சி பேசும் சீர்குலைவு சக்திகளை அம்பலப்படுத்த வேண்டும் என பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த போது தான் நண்பர் ஒருவர் மூலமாக தமிழில் கணினியில் தட்டச்சு செய்வது குறித்து தெரிந்து கொண்டேன்.

வலைப்பதிவுகளில் ம.க.இ.க.வினர் செய்யும் அட்டகாசங்களையும் அறிந்து கொண்டேக். வலைப்பதிவு ஒன்றும் தொடங்கினேன். நிறைய அதில் எழுதலாம் என நினைத்திருந்தேன். வேலை காரணமாகவும், எனது இருப்பிடம், காரணமாகவும் வசதிகள் இல்லாததாலும் தொடர் பயணங்களாலும் என்னால் கணினியில் அமர முடியவில்லை. இது எனது வாழ்நிலை காரணமான பிரச்சினை. இதன் காரணமாகவே எந்த தளங்களிலும் நான் பின்னூட்டமோ விவாதமோ மேற்கொள்ள இயலவில்லை. ஆனால், அனைத்து தளங்களையும் பார்த்துவிட்டு வருவேன். தோழர் ஏகலைவன் வேண்டுகோளின்படி இனி, வினவு உள்ளிட்டத் தளங்களில் கமெண்ட் எழுதுவேன், காலம் இடங்கொடுக்கும் வரை....

ஆனால், ம.கஇ.க.வினருடன் விவாதங்கள் குறித்து எனக்கு நீண்ட அனுபவங்களுண்டு. இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட் - லெனினிஸ்ட்)யில் இருந்த போது நடந்த உட்கட்சி விவாதங்கள், பிரிந்து தனி அமைப்புக் கண்ட பின் நடந்த விவாதங்கள், தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி, த.நா.ம.லெ.க. ”கேடயம்” என இவர்கள் பலருடனும் 80களிலும் 90களிலும் நடத்திய விவாதங்களை நான் கண்டிருக்கிறேன். தற்பொழுது பெ.தி.க., த.தே.பொ.க., உள்ளிட்ட உணர்வாளர்களின் அமைப்புகள் மீது நடத்தும் விமர்சனத்தின் பெயரிலான தாக்குதல்களையும் கவனித்து வருகின்றேன்.

இவர்களது விமர்சன நெறியையும் தர்க்க அறிகையும் இவர்கள் நடத்தும் பல்வேறு பிளாகுகளில் நடக்கும் விவாதங்களை ஒருமுறை சென்று பார்த்தால் நாம் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் நக்கல், கொஞ்சம் நாகரீகமற்ற சொற்கள், கொஞ்சம் வாய்ச்சவடால், கொஞ்சம் மார்க்சியம், கொஞ்சம் லெனினியம், கொஞ்சம் உலக ஞாயம் - இது தான் இவர்களது விமர்சன பாணி. இது இன்று நேற்றல்ல பல்லாண்டுகளாக இப்படித்தான் நடந்து வருகின்றது.

ஒரு உதாரணத்திற்கு, superlinks என்ற ம.க.இ.க. ஆதரவாளர் எனது தளத்தில் கீழ்க்கண்டவாறு கருத்து பதிந்திருந்தார்..

“முதல்ல உங்க‌ மூஞ்சி மொகரக்கட்டைய விலாசத்தோட‌ காட்டிக்கிட்டு வந்து அப்புறமா உங்க‌ நியாத்த‌ பேசுங்க சார்” என்று எழுதியிருந்தார்.

தமது அமைப்பின் தலைமைப் பொறுப்பிலும், முக்கிய நிர்வாகிகளும் போலிப் பெயர்களில் உலா வருவது பற்றி இவர்களில் பலருக்கும் தெரிவதில்லை. சரி, இவரது அமைப்பு தான் இப்படி, இவராவது தனது முகத்தையும் விலாசத்தையும் இவரது பிளாக்கில் காட்டினாரா என்றால் அதுவும் இல்லை..

”சூப்பர்லிங்க்ஸ்” என்ற பெயருக்குள் இவர் ஒளிந்து கொண்டுள்ளார்... இந்த லட்சணத்தில் எனக்கு இவர்கள் கேட்டிருக்கும் கேள்வியை பார்த்தால் சிரிப்பு தான் வருகின்றது..

இவ்வாறான போலித்தனமான வாய்சவடால்களையே இவர்கள் தர்க்கங்கள் நிறைந்த விவாதம் என்று எண்ணுகிற போது, நாம் என்ன செய்வது?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இந்த கமெண்ட் இவர்களது விமர்சன பாணியை எடுத்துரைக்கிறது என்றே சொல்வேன்.

பல போலிப் பெயர்களில் எழுதும் ம.க.இ.க. காரர்களின் உண்மைப் பெயரை நாம் யாரெனக் கேட்டால் நாம் காக்கிச் சட்டை உளவாளிகள்,

அமைப்பின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் போலிப் பெயர்களில் செயல்படுவது குறித்து கேட்டால் நாம் காவல்துறை உளவாளிகள்,

ஆனால், இவர்கள் மட்டும் நம்மை ”முகரயைக் காட்டு” என்று கேட்பார்களாம். நாம் ”சரிங்க” என்று காட்டனுமாம்.. ”ஏன்” என்று கேட்டால், நாம் ”பிழைப்புவாதிகள்”... இது தான் இவர்களது தர்க்க ஞாயங்கள் போலும்...

புரட்சிகர நேர்மை இல்லாமல், தரக்குறைவாகத் திட்டுவதும், சம்பந்தமில்லா ”சந்தானம்” வகையறா நக்கல்களும், கேள்வி கேட்டால் அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் சுற்றி சுற்றி வந்து புதிய கேள்விகள் கேட்டு திசைத் திருப்புவதும், ”நீங்கள் எல்லோருமே பிழைப்புவாதிகள்” என்று சொல்லி விட்டு ”நாங்கள் மட்டும் தான் ISO 9001 ஒரிஜினல் புரட்சியாளர்கள்” என்று சீன் போடுவதும் தான் இவர்களது வேலையாக இருக்கிறது. இதைத் தானே, இவ்வளவு காலமாக இவர்கள் செய்கிறார்கள்...

ஆனால் நாம் இவர்களை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டுமெனவே நினைக்கிறேன். இந்த சீர்குலைவு இயக்கத்தின் பின்னால் உள்ள மறைமுகக் கட்சி, மறைமுகத் தலைமை குறித்த எந்த அறிவும் இல்லாமல் இதில் சிக்கி மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் அப்பாவி இளைஞர்கள் குறித்து அக்கறை கொள்கிறேன். ஆயுதப் புரட்சி தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு பல ஆண்டுகளாக இவ்வியக்கத்தில் உழைத்து உழைத்து தனது சக்தியை எல்லாம் இழந்து, இந்த அரசியலே வேண்டாமென ஒதுங்கி சென்ற நண்பர்களை கூட நான் கண்டிருக்கிறேன். இந்த பாதிப்புகள் தான் என்னை எழுதத்தூண்டியது.

வலைப்பதிவில் எழுதுவதை விட கீற்று போன்ற இணையதளங்களில் எழுதுவது குறித்து நண்பர்கள் கதைத்தால், நான் கீற்று”வில் எழுதினேன். அவர்களும் கட்டுரைகளை பிரசுரித்தார்கள். ”கீற்று” இதழை பொறுத்தவரை பெரும்பாலான கட்டுரைகளின் பின்னால் வரும் கமெண்ட்டுகளில் கட்டுரையாளரின் கருத்து குறித்து விவாதம் நடந்திருக்கிறதே தவிர, கட்டுரையாளரே விவாதம் செய்ததை நான் பார்த்ததில்லை. இதனால் நான் கட்டுரையின் கீழ் நடக்கும் விவாதங்களில் பங்கு கொள்வதில்லை. மேலும் நான் கீற்றுக்கு புதியவன் என்பதாலும், ஏகலைவன் போன்றோர் கீற்றில் கட்டுரையாளருடன் விவாதம் செய்ய வேண்டுமென கோரியிருப்பதை பார்க்கும் பொழுது, கீற்றில் இதற்கு முன்பு கட்டுரையாளர்கள் கமெண்ட்கள் மூலமாக விவாதித்திருப்பார்களோ என்று ஐயம் எழுந்துள்ளது. இருக்கட்டும். ஒரு கட்டுரைக்கு மறுப்புரையாக எதிர்வினை எழுவதையே நான் கீற்றில் கண்டிருக்கிறேன். கீற்று இணையம் ம.க.இ.க.வினர் எழுதும் கட்டுரைகளையும் அனுப்பினால் அதனை பிரசுரிக்கத் தயாராகவே உள்ளதாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் ம.க.இ.க.வினர் எழுதுவார்களா? அல்லது இவற்றை நிராகரிப்பார்களா எனத் தெரியவில்லை.. ஆனால், எனது கட்டுரையை வெளியிட்டு விட்டார்கள் என கீற்று இணையதளத்தின் மீது வெறுப்பை மட்டும் உமிழ்கிறார்கள்... வாழ்க அவர்களின் ”புதிய கலாச்சாரம்”...

விரைவில் இவர்களது மறைமுக இயக்கத்தையும் இவர்களது புரட்டல்களையும் அம்பலப்படுத்துவேன்...

அதிரடியான்...
Dr. V. Pandian
முனைவர் திருமுகம் சொன்னது போல மதிமாறன் அவரது கட்டுரைகளுக்கான விமர்சனங்களுக்கு அவர் பதில் சொல்வதில்லை. அப்படி இருக்கும் போது ஏகலைவனின் அழைப்பு சிறிப்பை வரவழைக்கின்றது. திருமுகம் அவர்கள் சொல்வது போல இவர்கள் திட்டமிட்ட சீர்குலைவு செய்கின்றனர் என்பது தான் உண்மை.

அதிரடியான் சொல்வதுபோல இவர்களிடம் விவாதம் செய்வது நமது தகுதிக்கு அப்பாற்பட்டது. நமது கருத்துக்கு முறையான பதில் இல்லாத போது இவர்கள் அனைத்து விதமான எழுத்து வன்முறைகளையும் கையாளுகின்றனர். இது அவர்களை அம்பலப்படுத்துகிறது என்பது அவர்களுக்கு உரைப்பதில்லை.

எளியமக்கள் இவர்களது சூதுக்கு மயங்காமல் இருக்க நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கடமை, அதிரடியான் சொல்வது போல, உள்ளது.
Dr. V. Pandian
ஸ்டாலின்குரு அவர்களின் செறிவான பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல. ஈழமக்கள் ஓயவில்லை என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டு படித்த இளைஞர்களும் தீவிரமான தமிழ்த்தேசிய நடவடிக்கைகளில் இறங்கி விட்டனர் என்பது தான் உண்மை.

இனி விரைந்து செல்லும் தமிழ்த்தேர்!
Kalai
ஆதிக்க சாதிக் குடிகள், இயக்கம் வளர்க்க கோடிகளைக் கொட்டியிருக்கலாம்; அதற்கென உழைத்திருக்கலாம். ஆனால் வேளாளர் கல்வி கற்க, அரசுத் துறைகளில் கோலோச்ச, அரசியல் பொறுப்புகள் வகிக்க, நாடாள, தமிழறிஞராக, தகை சான்றோராய் உலகு உய்ய, இனத் துவேசம் வளர்ந்தபோது ஏதிலிகள் என அயலகம் புக, அங்கிருந்து மண்ணை மீட்கப் பிறப்பித்த கட்டளைகளை முன்னெடுக்க, யுத்த மேட்டில் அழுகிய பிணங்களாக நாற, தடுப்பு முகாம்களில் வதைபட, கூட்டு வன்புணர்ச்சியில் மயங்கிச் சரிய, சவமான பிறகும் பேரின வெறியால் குதறப்பட... இன்னும் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிக் குடியினருக்கென, தம் குருதியும் நிணமும் தந்து உருக்குலைந்து கொண்டேயிருக்கும் போது, எம் மக்களுக்காக வேறு யார் பேசுவது?
........................

http://www.keetru.com/dalithmurasu/apr09/ilamparithi.php
ஏகலைவன்
முதலில் நண்பர் ’அதிரடியானை’ வருக வென்று வரவேற்கிறேன்!

கீற்றுவில் எதை வேண்டுமானாலும் கட்டுரை எனும் பெயரில் பதிந்துகொண்டு அவற்றிற்கு வரும் எதிர்வினைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, என்கிற வழக்கத்திலும் வழக்கமான (உங்கள் கூற்றுப்படிதான்) முறையை உடைத்து உங்களையும் கீற்றுவையும் பிடித்து கடந்த நான்கு நாட்களாக உலுக்கியதன் விளைவுதான் உங்களது மாபெரும் பிரஸன்னம் இங்கே நேர்ந்திருக்கிறது, என்பதை வாசகர்களுக்கு மீண்டுமொருமுறை நினைவூட்ட விரும்புகிறேன்.

இவரது இரண்டு அவதூறுக் கட்டுரைகளிலும் எமது தோழர்கள் தமது விளக்கத்தைப் பதிந்து விவாதித்திருக்கிறார்கள். இதோ இப்பதிவில் கூட தோழர் மணி சில கருத்துக்களைப் பதிந்துள்ளார். அத்தனையையும் ஒரேயடியாக இருட்ட்டிப்பு செய்துவிட்டு, இவரைப் பிடித்து இழுத்து வந்து இங்கே பதில் சொல்ல விட்ட எரிச்சலில், சூப்பர் லிங்க்ஸின் வரிகளில் ஏதாவது கிடைக்குமா என்று ஆராய்ந்து புதிய இலக்கிய ஆசானாக பரிணமித்திருக்கிறார், திருவாளர் ‘அதிரடியான்’.

அய்யா இலக்கிய ஆசிரியரே! உங்களை இங்கே அழைத்த்து எமது பதில்களில் சொற்குற்றம் இருக்கிறதா? அல்லது பொருட்குற்றம் இருக்கிறதா? என்பதைக் கண்டறிந்து மார்க்குகள் போட அல்ல, என்பதை உங்கள் பேரற்வு சொல்லிக் கொடுக்கிறதா? பதியப்பட்ட எதிர்வினைகள் குறித்து ஏதேனும் கருத்து இருந்தால் பதியுங்கள் முதலில், அதற்காகத்தான் உங்களைப் பிடித்து இங்கு இழுத்து வந்திருக்கிறோம். அரசியல் கள வேலைகள், பயண நேரங்கள் என்று நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள உங்களது வேலை நெருக்கடிகள் எங்களுக்கும் உள்ளவைதான், என்பதையும் மிகவும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதை விடுத்து ஒரே பாய்ச்சலாக ம.க.இ.க.வின் அரசியல் தலைமை பற்றி இனி (நாளை முதலா!?) அம்பலப்படுத்துவேன் என்கிற உங்களது ‘அதிரடியான’ அங்கலாப்பைக் கொண்டு பார்த்தால் நீங்கள் சுத்தமான ‘காமெடியானாக’த்தான் காட்சியளிக்கிறீர்கள். இதுவரை நீங்கள் செய்த்தும், செய்துகொண்டிருப்பதும் வேறென்ன வேலை, ம.க.இ.க.வின் மீதான அவதூறுகளைத் தவிர வேறொன்றுமில்லை. இதுல புத்தம் புதுசா நாளையிலயிருந்து வேற ஆரம்பிக்கப் போகிறீர்கள் போலும்!

உங்களது முந்தைய பதிவில் பதியப்பட்ட எமது தோழர்களின் பின்னூட்டங்களை வேண்டுமானால் இங்கே மீள்பதிவிடலாமா? அதிரடியானின் பதில்களுக்காகத்தான். இதனை கீற்று ‘பெருந்தன்மையுடன்’ அனுமதிக்க வேண்டும். அனுமதிக்குமா?

ஏகலைவன்.
venkat
ுரை. எல்லா விமர்சனங்களுக்குமான பதிலை புலிகளின் 'சோஷலிசத் தமிழீழ'ப் புத்தகத்தில் தேடியிருக்கிறார் கட்டுரையாளர். புத்தகமெல்லாம் இருக்கட்டும், அதை எப்போதாவது புலிகள் கடைப்பிடித்தார்களா என்பதுதானே கேள்வ............comedy katturaikku nanri.......................
ஏகலைவன்
////இவ்வளவும் சொல்லும் ஏகலைவன் அவர்களே, பிறகு ஏன் இந்திய தேசியத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு அலைகிறீர்? இவ்வளவும் சொல்லும் நீங்கள் தானே முதலில் தனித்தமிழ்நாடு கேட்டிருக்க வேண்டும்? ஆனால், தமிழ்த்தேசம் கேட்பவர்கள் மீது பாயவேண்டியதன் அவசியம் என்ன?//////
டாக்டர் அய்யா,
உங்களது கேள்வியும் குமுறலும் நியாயமானதுதான். இங்கே ’சேட்டுக்களையும், சேட்டான்களையும்’ எதிரியாக்க் காட்டி தமிழ் தேசம் கேட்பவர்களுக்கும், மராட்டியர்களின் உரிமைக்காக கூப்பாடு போடும் தாக்கரேக்களுக்கும் என்ன வித்தியாசம். தமிழக உழைக்கும் மக்களுக்கும் மராட்டிய உழைக்கும் மக்களுக்கும் எதிரி யார்? இவர்களைச் சுரண்டிக் கொழுக்கும் பெருமுதலாளிகளும், நாட்டை விற்கும் தரகு முதலாளிகளுதானேயொழிய பிற மாநிலத்தவனோ, பிற இனத்தவனோ கிடையாது.

இதை மறைக்கத்தான் அம்பானியின் ஸ்பான்சரில் இனவெறி ஆட்டம் போடுகிறான் ராஜ்தாக்கரே.

////இத்தனைக்கும் உங்களது கட்சி தமிழ் நாட்டைத் தவிர வேறெங்கும் இடையாது. ஆக, எந்த நெருக்கடியும் இல்லாத நீங்கள் தமிழ்த்தேசம் கேட்பதுதானே முறை? ////

உங்களது கட்சி (எது என்று எனக்குத் தெரியாது, இருந்தாலும்...) இலங்கையில் இருக்கிறதா? ஈழத்தில் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காக நேர்மையாக்க் குரல் கொடுக்கிறீர்கள் அல்லவா, அதுபோலத்தான் இதுவும். பேசப்படுகின்ற கருத்து சரியானதா அல்லது தவறானதா என்பதில் ஊன்றி நின்று நியாயமாகவும் நேர்மையாகவும் மக்களிடம் சென்று பேசினால் போதும், என்று நினைக்கிறேன்.

///அன்றிலிருந்து இன்று வரை அனைத்து அழிவையும் தமிழனுக்கு செய்யும் இந்தியாவிலிருந்து விடுபடுவது தான் தமிழனுக்கான ஒரே வழி. இது கட்சிகளுக்கப்பால் உள்ள சாதாரண மக்களின் புரிதல்.///

ஒட்டுமொத்த இந்தியாவையும் அதற்குள் ஒரு தேசிய இனமாகச் சிறைபிடிக்கப்ப்ட்டிருக்கும் தமிழ்நாட்டையும் ஒரு சேர மொட்டையடித்து மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய – தரகுமுதலாளித்துவ கூட்டு எப்படிப்பட்ட்து என்பதை இனியாவது சற்று கூர்ந்து கவனியுங்கள், தமிழர்களின் எதிரி யார் என்று தெளிவாகப் புரியும், அய்யா.
குருத்து
//அபத்தமான கட்டுரை. எல்லா விமர்சனங்களுக்குமான பதிலை புலிகளின் 'சோஷலிசத் தமிழீழ'ப் புத்தகத்தில் தேடியிருக்கிறார் கட்டுரையாளர். புத்தகமெல்லாம் இருக்கட்டும், அதை எப்போதாவது புலிகள் கடைப்பிடித்தார்களா என்பதுதானே கேள்வி. புலிகளை வலிய ஆதரிக்கும் தமாஷான கட்டுரைகளை வெளியிடும் கீற்றுவிற்கு வாழ்த்துக்கள் ((‍- //

படித்து முடித்ததும்... சுகுணா அவர்களின் கருத்து தான் எனக்கும் தோன்றியது.

இப்படி ஏட்டளவில் புலிகள் எழுதியுள்ளதை எடுத்துப்போட்டு எழுதிய அபத்த கட்டுரைக்கு கீற்று ஏன் பதிகிறது என்பது ஆச்சர்யம்.

தமிழ் தேசியர்கள், புலி ஆதரவாளர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் விடுகிற வாய்சவடால்களை தொடர்ச்சியாக ம.க.இ.க. அம்பலப்படுத்துவது இவர்களுக்கு வருகிற எரிச்சல் இருக்கிறதே! அப்பப்பா!

அதிரடியான் தொடர்ந்து மக.இ.க. வை (!) பற்றி அவதூறுகளை அள்ளி வீசுகிறாரோ இல்லையோ! ம.க.இ.க இவர்களை தொடர்ந்து அம்பலப்படுத்தும்.
Dr. V. Pandian
ஏகலைவன் அவர்களே! ஏதோ எனது கேள்விகளுக்கு அபாரமான பதில்களைத் தந்துவிட்டது போல, பகுதி, பகுதியாக பிறித்து விடையளித்துள்ளீரே, உங்கள் விடைகள் உங்களையே திருப்திப் படுத்துகிறதா? படிக்கறவனை எல்லாம் கேனயன்கள் என்று கருதுகிறீர்களா?

எனக்கு பால் தாக்கரே பற்றியோ மோர் தாக்கரே பற்றியோ கவலை இல்லை! எனக்கு எனது தேசம் பற்றித்தான் கவலை. அன்றிலிருந்து இன்றுவரை தமிழருக்கு துரோகம் மட்டுமே செய்யும் இந்தியாவிலிருந்து பிறிவது தானே தமிழருக்கு நல்லது? மராத்தியனுக்கு இந்தியா இந்த அளவு துரோகம் செய்யவில்லை. துரோகம் செய்யப்பட்ட மக்கள் காஷ்மீர மக்கள், அஸ்ஸாம் மக்கள், நாகாலாந்து மக்கள், தமிழ் மக்கள். இவர்கள் எல்லோருமே தனி நாடு கேட்கின்றனர். இதில் தவறு உண்டா?

நீங்கள் சொல்லுகிற மளையாள "சேட்டன்கள்" தான் தமிழினத்தை ஈழத்தில் அழித்தவர்கள். அவர்கள் எமது எதிரிகள். டிக்ஷித் என்ற சேட்டன். மேனன் என்ற சேட்டன். நாராயணன் என்ற சேட்டன். நம்மியார் என்ற ஐ.நா வின் சேட்டன். கோபிநாத் என்ற ஐ.நா வுக்கான இந்திய தூதன் சேட்டன். இந்தப் பட்டியல் மிக நீண்டது தம்பி! சேட்டன் ஒரு ஒட்டுண்ணி! Parasite. அவனுக்கு தனித்தேசம் தேவையில்லை என்றிருப்பவன். அதனால் தான் அவன் பார்ப்பனீயத்தோடும், முதலாளிய சேட்டுகளோடும் கூட்டு சேர்ந்து இந்தியாவைக் கட்டியாளும் ஒரு சக்தியாகத் திகழ்கிறான். எங்கு பார்த்தாலும் சேட்டன்களின் ஆதிக்கம் தான். ஒடுக்கப்படும் இந்திய தேசிய இனங்களின் ஒட்டுமொத்த எதிரி அவனும் தான்.

தரகு முதலாளிகள் இந்திய தேசிய இனங்களை சிறை வைத்துள்ளார்கள், நம்மையெல்லாம் சுரண்டுகிறார்கள் என்பீர்கள். அதைச் செய்கிற சேட்டுகளைக் காட்டி தமிழத்தேசம் பேசினால் அதை கொச்சைப் படுத்துவீர்களா? ஏனிந்த அபத்த முரண்கள்? நீங்கள் எழுதுவதை ஒருமுறையாவது, திரும்பிப் படிப்பதுண்டா?

ஈழத்தில் எம்மக்கள் கொடூரமாக, லட்சக்கணக்கில் கொல்லப்ட்ட போது இந்தியாவின் எந்த உழைக்கும் வர்க்கமும் தமிழனுக்காக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. ஆக, அவர்களைப்பற்றி தமிழன் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீர் வேண்டுமானால் கவலைப்படும். ஆனால், எம்மக்களை மடையர்களாக்க முயற்சிக்காதீர். அவனவன் சிக்கல்களை அவனவன் தீர்த்துக் கொள்ளட்டும். எம்மைப்பற்றி சற்றும் கவலைப்படாதவன் பற்றி அலட்டிக் கொள்ளும் பத்தாம்பசலிகளல்ல தமிழர்கள். அந்தக் காலம் மலை ஏறிவிட்டது. தமிழன் விழித்தக் கொண்டான்.

தமிழனுக்கு எதிரி யார் என்று நீர் சொல்லி எனக்கு விளங்கவண்டியதில்லை. இதையெல்லாம் புரிந்துகொள்ளும் ஆழந்த அறிவும், நேர்மையும், கருத்துத் தௌிவும் எமக்குண்டு.

நிறைய எழுதுங்கள் ஏலைவன். அது உங்களை மக்களுக்கு அடையாளம் காட்டும். நாங்கள் விரும்புவதும் அது தான்.
Dr. V. Pandian
கலை அவர்களே! நீங்கள் சொன்னது முற்றிலும் சரியே!

இயற்கை சீற்றமானாலும், எதிரிகளின் சுரண்டலாயாருந்தாலும், தனது தேசத்தின் ஆதிக்க சக்திகளின் சுரண்டலாக இருந்தாலும், மிகவும் பாதிக்கப் படுவது பொருளாதார பாதுகாப்போ, சமூக பாதுகாப்போ இல்லாத விளிம்பு நிலை மக்கள் தான்.

(ஆனால், ஈழத்தில் இன்று அந்த நிலை வெகுவாக மாறிவிட்டது. கொடூர எதிரியை எதிர்கொள்ளும் அவர்கள், தமக்குள் உள்ள வேற்றுமைகளைக் களைந்து கொண்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் மாபெரும் மனமாற்றங்கள் உண்டாகியுள்ளன. தமிழகத்திலும், ஈழ சோகத்தின் பின்னனியில், சாதிக்கெதிரான மனமாற்றங்கள் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது என்பதை, களப்பணி ஆற்றுகின்றவன் என்ற முறையில் என்னால் நன்கு உணர முடிகிறது.)

ஆனால், அப்படிப்பட்ட விளிம்பு நிலை ஈழவர் சமூகத்தைச் சேர்ந்த பிரபாகரனைத்தான், பாஸிஸ்டுகள் என்று அன்றிலிருந்து, (ஒட்டுமொத்த உலகத்தின் கயமையால் ஒழித்துக்கட்டப்பட்டுள்ள) இன்று வரை, இந்தப் பார்ப்பனீய ம.க.இ.க. தூற்றிக்கொண்டுள்ளது.

ஏதோ பிரபாகரணிண் தவறுகளால் தான் அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்பது போன்ற ஒரு சித்திரத்தை இந்தக் கும்பல் வலிந்து வரைய முற்படுகிறது. இதற்கு உள் நோக்கமுண்டு.

இன்று சிங்களக் கம்மனாட்டிகளின் அட்டூழியங்களைப் பற்றியும், இந்தக் கேடுகெட்ட இந்திய அரசின் துரோகக் கொடூரங்களைப் பற்றியும் பல உண்மைகள் வௌிவந்த வண்ணம் உள்ள நிலையில், ஈழ மக்களின் ஞாயமான வேட்கைகள் பற்றி தமிழகத் தமிழர்களிடம் பரிதாப உணர்வு வந்து விடக்கூடாதென்று திட்டமிட்டு செயல்படுகிறது ம.க.இ.க. ஞாயத்தை நம்மக்கள் உணர்ந்தால் தமிழ்த்தேசத்திற்காக அணிதிரள்வார்கள் பாருங்கள்! ம.க.இ.க. தான் இந்திய தேசிய வாதிகளாயிற்றே! இப்போது புரிகிறதா கலை?

நான் சமீபத்தில் தான் இந்தியா சென்றுவந்தேன். அங்கு, (உ. பி. பீகார், ம.பி. யில்) ஒடுக்கப்பட்ட மக்கள், பள்ளிகளில் தனியாகத் தான் அமர்கிறார்கள். அனைத்து வேற்றுமைகளும் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன, இன்றும்; சற்றும் குறைவில்லாமல்.

தமிழ் நாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள் கலை. ஒரு சில இடங்களைத் தவிர பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழக ஒடுக்கப்பட்ட சமூகம், பொருளாதாரத்திலும், சமூக அந்தஸ்த்திலும் வளமான மாற்றங்களை அடைந்துவருகின்றனர். உங்களிடம் யதார்த்தமான, பரிவான அனுகுமுறை இருக்குமானால் இந்த மாற்றங்கள் துரிதமாக நடக்கும்.

நமக்குள் வேறுபாடுகளைக் களைந்து ஒரே தமிழ் சமூகமாக மலர கடுமையாக உழைத்துக் கொண்டுள்ளோம். நம்பிக்கையோடு ஒத்துழையுங்கள். ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்காலமும் மிளிரும்.
Superlinks
உங்கள் மூஞ்சை காட்டுங்கள் என்று சொன்னது கூட உங்களுக்கு புரியவில்லையா ?

நாங்கள் ஆயிரம் பெயர்களில் எழுதினாலும் நாங்கள் எங்களை ம.க.இ.க வினர் என்று அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
உங்கள் அரசியல் என்ன, நீங்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது எமக்கு தெரிய வேண்டாமா.உங்களிடம் அதை தான் கேட்டேன்.
லார்ட் லபக்கு தாஸ்
நல்ல கட்டுரை வாழ்த்துகள் தோழர் அதிரடியான்....

இப்பொழுது வரை உங்கள் கட்டுரையில் மேல் விமர்சனம் வைக்காமல் பேசி கொண்டு இருப்பது தான் நம்ம அம்பியின் தம்பிகள் வேலை...அதிலும் பாருங்க நம்ம ஏகலைவன் பேர மாத்தி மாத்தி ஒரே சமயத்துல 3 பதிவு போட்டு குழலி என்பவரின் பதிவில் பதில் சொல்லாமல் ஓடி வந்தவர் என்பது சிறப்பு செய்தி..

அம்பிகளின் தம்பிகள் தங்கள் புரச்சியை நடத்தி இன்னும் பல கீ போர்டுகளையும், மெளஸ்களையும் உடைக்க எல்லாம் வல்ல காரல்மார்க்ஸை வேண்டுகிறேன்.

வணக்கத்துடன்
லார்ட் லபக்கு தாஸ்
புரச்சி
புளிச்ச பாயாசமும், பழைய குழம்பும் - போலி தழிழ்த் தேசியப் பொடிமட்டை - டவுசர்-1!!

தார்மீக ஆவேசம் பொங்க இங்கு குதித்தாடும் அதிரடியான், அவரது ஆரம்ப கட்டுரையில் தோழர்கள் செய்த எதிர்வினைகளை அவதூறு என்றும் அவற்றில் ஒன்றுமே இல்லையென்றும் மிகச் சுலபமாக ஒதுக்கித் தள்ளியுள்ளார். யாரும் அவற்றை பார்க்கப் போவதில்லை என்ற தைரியமா அல்லது தொடர்ந்து இது போல அவதூறு மழையை பொழிந்தால் பழைய விவாதங்கள் மறைந்துவிடுமே என்ற கோயபல்ஸ் தந்திரமா என்பதை படிக்கும் வாசகர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

இப்பொழுது அந்த பழைய விவாதங்களை அதிரடியானின் முன்பு மீண்டும் வைக்க விரும்புகிறேன்.

அதிரடியானைப் போல சுட்டி கொடுக்காமலேயே அவதூறு என்ற தூற்ற மாட்டேன். மாறாக, அதிரடியானின் அந்த குறிப்பிட்ட கட்டுரைக்கான சுட்டியைத் தருகிறேன். (http://www.keetru.com/literature/essays/athiradiyaan.php)

அவரது குறிப்பிட்ட அந்த முதல் கட்டுரை முற்றிலும் பொய்களும், புனைச்சுருட்டுகளும் நிரம்பியது என்பதை அம்பலப்படுத்தும் பின்னூட்டங்கள்:

#1)
2009-06-17 04:08:00
[email protected]
//தேசியத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடித் துள்ளிக் குதித்த ஒரே கும்பல் ம.க.இ.க. - பு.ஜ. பு.க. கும்பலாகத் தான் இருக்கும்.//

இந்த பொய்க்கு எதுவும் ஆதாரம் இருக்கா? வாய்க்கு வந்த பொய்களை எழுத ஒரு தேசியவாதி வேசம் வேறு..

//’நீங்களே பாசிஸ்ட் என வரையறுத்தவர்களுக்கு ஏன் வீரவணக்கம் செலுத்துகிறீர்கள்?’ என்று விசாரித்தால் ‘இல்லை. தோழர்.. அதான் இப்ப டிரண்ட்.. அதனால் தான்..’ என்று ஆரம்பித்து லெனின், மாவோ உட்பட பல தலைவர்களை மேற்கோள் காட்டி விளக்கம் பேசுவார்கள். பா//

இப்படி அந்த தோழர்களிடம் கேட்டீர்களா? அவர்களிடம் கேட்க்காமெலேயே உங்களுக்கு விருப்பமான கருத்துக்களையெல்லாம் ம க இகவின் மீது ஏற்றி அதனை மறுத்து விமர்சனம் செய்யும் நேர்மையற்றத்தனத்திற்கு நீங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். அது சுயமரியாதையுள்ளவன் செய்யக் கூடிய செயல். உங்களிடம் எதிர்பார்க்கலாமா என்று தெரியவில்லை.

ஈழ போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரையான அவர்களின் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக சல்லிசான விலையில் விற்று வருகிறார்கள். படித்து பாருங்கள். பிறகாவது உங்கள் கண் திறக்கிறதா என்று பார்க்கலாம்.

புரச்சி

#2)
2009-06-17 04:11:00
[email protected]


//ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாகவும் தான் செயலலிதா இன்று வரை கூறி வருகிறார். இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?//

அப்படியா? விடுதலை புலிகளை சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்ளச் சொல்லி தனது தவறுகளை சரி செய்து கொள்ளச் சொல்வதுதான் ம க இகவின் நிலைப்பாடு என்பது எனது புரிதல்.

ஒருவேளை நீங்கள் நம்புவது போல புலிகளை எதிர்ப்பதுதான் அவர்களின் நிலைப்பாடு எனில் அதனை ஏன் கேள்வி வடிவில் கேட்கிறீர்கள்? (இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?)

உங்களுக்கே தெளிவாக தெரியாத ஒன்று என்ற பயத்தில்தானே அந்த கேள்வி.

இது முற்றிலும் ஒரு காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்டுரை. நேர்மையான எந்தவொரு விமர்சனமோ, கேள்வியோ இல்லாத ஒரு கட்டுரை

#3)
2009-06-17 04:52:00
[email protected]

//‘ம.க.இ.க.வின் மறைமுகப் பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்தியத் தேசியமும்’ என்று தனியொரு நூலே எழுதியுள்ளார். மேலும் ‘தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை மறைமுகமாக பறித்திட அறைகூவல் விடுத்தது, இதே ம.க.இ.க. தான். இதனை மணியரசன் நடத்தும் தமிழர் கண்ணோட்டம் இதழ் அம்பலப்படுத்தியது.//

விடுதலைப் புலிகள் குறித்த ம க இக கருத்துக்களை விமர்சிப்பார் என்று பார்த்தால் அதிரடி அதிரடியாக தனது பழைய அரிப்புகளையெல்லாம் பட்டியலிடுகிறார். பிழைத்துப் போகட்டும் அதனையும் ஒரு முறை பார்த்து விடலாம்.

ம க இ கவின் இடஓதுக்கீட்டு கொள்கை குறித்து புத்தகம் உள்ளதே அதனை மறுத்த் பே.ம உள்ளிட்டோர் எதுவும் எழுதவில்லையே ஏன்? இதே இணையத்தில் மயிர்பிளக்க இரு வருடம் முன்பு கூட ம க இகவுடன் சர்வ கட்சி கூட்டணியினர் விவாதம் செய்தனரே அவர்கள் எல்லாம் கடைசியில் பதுங்கி பம்மி ஓடினரே ஏன்? உங்களுக்கு விருப்பம் எனில் அந்த சுட்டிகளை தருகிறேன் நீங்கள் அந்த விவாதத்தை தொடருங்கள். அம்பலமாவது யார் என்று தெரிந்து விடும்.

'தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ இது அம்பேத்கரின் முழக்கம். அம்பேத்கரை மறுப்பதுதானே பெ.ம கும்பலின் நுண்ணரசியலும் கூட. கருணாநிதியின் நாக்கை வெட்டுவேன் என்று ஒரு ஆர். எஸ். எஸ் பன்றி சொன்ன போது இந்து மதத்தை கருணாநிதி விமர்சிப்பது தவறு என்று கட்டையை திருப்பிப் போட்டு அடித்தவர்தானே இந்த பார்ப்பன, இந்து மத ஆதரவு பெ.மணியரசன்.

இந்திய தேசியத்தை எதிர்ப்பவர்கள் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள்? இந்து, இந்தி, இந்தியா என்ற அடிப்படையில். ஆனால் அதிரடியான் ஆதரிக்கும் புலிகளும் சரி, அல்லது வேறு எந்த அமைப்பும் சரி(பெதிக ஓரளவு விதிவிலக்கு இந்த விசயத்தில்) இந்திய தேசியத்தை எதிர்க்கிறோம் என்பதை முல்லைப் பெரியாறு, காவேரி தாண்டி வேறெதிலும் காட்டுவதில்லை. இந்த யோக்கிய சிகாமணிகள் எல்லா வகையிலும் 'இந்து'வுடனும், 'இந்தி'யுடனும் சமரசம் செய்பவர்கள்தான். ஏன் ஈழப் பிரச்சினையில் கூட இவர்கள் இந்தியாவை கடசி வரை விட்டுக் கொடுக்கவில்லை. இந்தியாவை நிராகரித்து, அதனை அம்பலப்படுத்தி களத்தில் செயல்பட்டவர்கள் ம க இ கவினர்தான்.

//ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று ஊளையிடும் பார்ப்பனக் கம்யுனிஸ்டு தலைவர் வரதராஜனின் நிலைபாடு தானே ம.கஇ.க.வின் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு...!?//

இது இன்னொரு பொய். இதெற்க்கெல்லாம் ஆதாரம் கேட்டாலே அதிரடியான் பொய்யடியானாக மாறிவிடுவார். இன்னொரு தேசத்தின் விடுதலைப் போருக்கு இன்ன வகையான தீர்வு என்று அடுத்த நாட்டு பாட்டாளி வர்க்க கட்சி வரையறுக்க முடியாது. அதன் அடிப்படை உரிமைகளை ஆதரிக்க மட்டுமே முடியும். அந்த உரிமைகளை வென்றெடுப்பது, அதற்க்கான சரியான தீர்வு இதனை அந்த நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் தனி ஈழமோ, ஒன்றுபட்ட இலங்கையோ எதுவாகிலும், ஈழத் தமிழ் தேசிய இன்ங்களின் சுயநிர்ணய உரிமை வெல்ல வேண்டும் என்பதே ம க இ கவின் நிலைப்பாடு. போலி கம்யுனிஸ்டு CPM சொல்வது போல ஒன்று பட்ட இலங்கை என்று ம க இ க எங்கும் சொன்னதில்லை.

//, புத்தக விற்பனை செய்வதற்கும், ஆள்பிடிக்கும் வேலை செய்வதற்கும் இந்த ‘பிழைப்புவாதிகள்’ நடத்தும் கூட்டங்களுக்குத் தான் வெட்கமின்றி செல்வார்கள்.//

விடுதலைப் புலி தலைமை பாசிச-சந்தர்ப்பவாத வழிமுறைகளை கையாண்ட அதே நேரத்தில் அதன் அணிகள் தியாக உணர்வுடன், நேர்மையாக போராடினர். ஈழப் போரின் இறுதி நிகழ்வாகக் கூட புலித் தலைமையின் சரணடைவு துரோகமும், புலி அணிகளின் வீரத் தியாகமும் நிகழ்ந்தது. அதே போல பல்வேறு அமைப்புகளின் அணிகள் நேர்மையாக உள்ளனர். இவர்களை வென்றெடுக்க பிரச்சாரம் செய்வதில் என்ன தவ்று? ஒரு வேளை உங்களிடம் பிரச்சாரம் செய்யும் வலு இல்லை என்ற பொறாமையா அதிரடியான்?

//இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று உளறுவார்கள். இந்த கம்பெனிக்கு ஈழத்தமிழர்களை பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளதென்று கேட்டால் கூட நாம் ‘பாசிஸ்ட்’ அல்லது ‘தமிழின பிழைப்புவாதி’ ஆகிவிடுவோம்.//

முதல் விசயம், இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் என்று ஒற்றை வரியில் ம க இ க எங்கும் சொன்னதில்லை. அப்படி ஒரு கருத்து மார்க்ஸிய வரலாற்று பொருள்முதல்வாத வழிப்பட்ட கண்ணோட்டமும் அல்ல. இவ்வளவிற்கும் காரணம் என்ன என்று பரிசீலியுங்கள், ஆய்வு செய்யுங்கள் என்று கடைசி நிமிடம் வரை புலிகளிடம் கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர் ம க இ கவினர். இரண்டாவது விசயம், கேள்வி கேட்பவர்களை தமிழின பிழைப்புவாதி, பாசிஸ்டு என்று ம க இ க எங்கு சொன்னது என்று அதிரடியான் நீருபிக்க வேண்டும். உண்மையில் கேள்வி கேட்பவர்களான ம க இ கவை 'மறைமுக பார்ப்பனியம்' என்ற உளுத்துப் போன முழக்கம் கொண்டு அணுகும் நேர்மையற்ற தற்குறிகளின் குரல்தான் அதிரடியானுடைய இந்த புரளி கட்டுரை.

//இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ‘தமிழ்த் தேசியவாதி’ என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.//

இந்த நெடுமாறனோ ஆர் . எஸ் . எஸ்ஸின் தமிழக குடி தாங்கியாக இருக்கிறார். தமிழ் தேசியம், இந்துத்துவம், பார்ப்பனியம், இந்தியம், ஈழம் இவையெல்லாம் ஒருங்கே திகழும் இந்த அற்புத மனிதர்தான் அதிரடியான் கண்களில் தமிழ்த் தேசியவாதியாக தெரிந்தால். அது தமிழ் தேசியத்திற்கு பிடித்த வியாதி என்றே நாம் கருத இடமுள்ளது.

//இவர்களை உண்மையான ‘தமிழ்த் தேசியவாதிகள்’ என்று ம.க.இ.க.வைத் தவிர வேறு எந்த அடிமுட்டாளும் வரையறுக்கமாட்டான்//
உண்மை, உண்மை... உங்களைப் போன்ற அதிமேதாவி வரையறுத்த தமிழ் தேசியவியாதியான நெடுமாறனின் வீரதீரங்களை நான் இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.. என்னே அவரின் தமிழ்த் தேசிய போராட்டங்கள்.

எனக்கு ஒரு சந்தேகம், ஈழ போராட்டத்தின் ஒட்டு மொத்த நிகழ்வில் நெடுமாறன் மீது ஒரு சருகு கூட விழவில்லையே ஏன்? கைதான கொளத்தூர் மணி, சீமான் எல்லாம் அதிரடியான் பார்வையில் தமிழ் தேசியவாதிகள் இல்லையெனில், உண்மையில் அவ்ர்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்கள். பின்னே நெடுமாறனுடன் அவர்களும் ஒன்றாக நிற்க்க வைக்கப்படுவது என்பது அவர்களது போராட்ட உணர்வுக்கு அவமானம்.

//அதே போல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகின்ற ‘தமிழ்த் தேசியம்’ என்பது இந்தியத் தேசியத்தின் வரையறைக்கு உட்பட்ட ஒரு சில உரிமைகளுடன் கூடிய ஒரு தமிழர் மாகாணத்தை ஏற்படுத்த வலியுறுத்துவதாகும்.//

இது என்னையா இது. மாமியார் பிடிச்சா கொளுக்கட்டை அப்படினு ஒரு பழமொழி சொல்ற மாதிரி, தமிழ் தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும், இந்திய புரட்சி பேசும் ம க இ க பார்ப்பனிய கட்சியாம். ஆனா, இந்தியாவுக்குள்ளேயே ஏதோ ஒரு மாதிரி தமிழ் மாகாணத்தை பேசும், ஆர். எஸ். எஸ்வுடன் கூடிக் குழாவும் நெடுமாறன் தமிழ் தேசியவியாதியாம். எனக்கென்னவோ அதிரடியான் டிக்சனரியில் தமிழ்தேசியம் என்பது நேடுமாற தேசியம் என்று இருக்கும் என்று தோன்றுகிறது.

//காங்கிரஸ் மரபு வழி வந்த அய்யா நெடுமாறன், ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்.//

இந்தியாவை புலிகள் ஆதரிக்கலாமாம். அவர்கள் பார்ப்பனியவாதிகள் கிடையாதாம். அவர்களின் அந்த நிலைப்பாட்டை நெடுமாறன் ஆதரிப்பார் அவர் பார்ப்பனியவாதி கிடையாதாம். ஆனால் இந்தியாவில் பார்ப்பனி கொடுங்கோன்மையில் உழலும் மக்களின் ஒற்றுமையை முன்னிறுத்தும் இந்திய புரட்சி பேசும் ம க இ க, 'இந்து' இந்தியாவின் ஒற்றை பார்ப்பனிய தேசியத்தை சமரசமின்றி எதிர்க்கும் ம க இ க பார்ப்பனியவாதிகளாம். உங்களது நோக்கம் நேர்மையாக இல்லையே அதிரடியான்.

// மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா ஆனைமுத்து அவர்களும் இதே போன்றதொரு தீர்வை, ‘தமிழ்த் தேசியத்’தை ஏற்கிறார் எனலாம்.//

ஆக இவர்கள் யாருக்குமே இந்திய தேசியத்தை எதிர்க்க துப்பில்லை. வெற்று வாய்ச்சவடால். இந்த சமரசவாதிகள் அனைவருமே ராஜீவ் படுகொலை நிகழ்ந்த சமயத்தில் பதுங்கி இருந்த இடம் எங்கு என்று தெரியவில்லை. அப்பொழுதும் களத்தில் ஈழத் தமிழர்களுக்கும், ராஜீவ் கொலையை ஆதரித்தும் குரல் கொடுத்தவர்கள் ம க இ கவினர்தான்.

//இந்திய அரசை எந்த சமரசமும் //
//தோழர் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தோழர் மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி ஈழப்பிரச்சினையை முன்னிறுத்தி போராடி வருகின்றனர். இக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரிக்கும் கூட்டமைப்பாகும். இந்திய அரசை எந்த சமரசமும் இன்றி எதிர்க்கும் ஒரே கூட்டமைப்பாக//

இந்தியத் தேர்தலில் மறைமுகமாக பங்கெடுப்பதன் மூலம் இவர்களின் சம்ரசமற்ற தன்மை வெளிப்பட்டதே அது குறித்து அதிரயானின் கருத்து என்ன?

//என்றாவது இவ்விரு அமைப்புகளும் புலிகளின் வெளியுறவுக் கொள்கையான ‘இந்திய ஆதரவு நிலையை நாங்களும் ஆதரிக்கிறோம்’ என்று எழுதியிருக்கிறார்களா பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. //

எதிர்க்கிறோம் என்று என்றைக்காவது பேசியிருக்கிறார்களா? இந்த அமைப்புகள் கள்ளமௌனம் சாதித்ததன் அர்த்தம் என்ன்வென்று சொல்லுங்கள் அதிரடியான்.

//தமிழக இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள்! எதிரிகளைவிட உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிககள் மிகவும் ஆபத்தானவர்கள்...! //

இதே எச்சரிக்கையைத்தான் நானும் கொடுக்க விரும்புகிறேன்..

புரச்சி

#4)
2009-06-17 04:54:00
[email protected]


வெற்று விளம்பரத்திற்காகவோ அல்லது வேறு ஏதாவொரு காரணத்திற்காகவோதான் இந்த கட்டுரை முகப்பில் இடப்பட்டுள்ளது என்பது எனது வலுவான எண்ணம். ஏனேனில் கட்டுரை மிக கீழ்த்தரமாக, முற்றிலும் ஆதாரமற்ற பொய்களும், அவதூறுகளும் நிரம்பியதாக உள்ளது.

#5)
2009-06-18 04:43:00
[email protected]


////இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ‘தமிழ்த் தேசியவாதி’ என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.////

தமிழ்தேசியவியாதியும், அதிரடியானின் அன்பு தலைவருமானன மாவீரன் நெடுமாறனின் இந்திய மேலாதிக்க பூசாரி வேலை குறித்த கட்டுரை:

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!
http://www.vinavu.com/2009/06/18/nedumaran/

புரச்சி

#6)
2009-06-26 03:28:00
[email protected]


//தமிழ்தேசியவியாதியும், அதிரடியானின் அன்பு தலைவருமானன மாவீரன் நெடுமாறனின் இந்திய மேலாதிக்க பூசாரி வேலை குறித்த கட்டுரை://

மாவீரனுக்கு மாவீரன் என்று பெயர் வந்த கதை தெரியுமா அதிரடியான்?

பாசிச இந்திரா காந்தி மதுரை வந்திருந்த போது அவர் மீதான தாக்குதலில் இருந்து வீராதீரமாக பாதுகாத்ததினால் நெடுமாறனுக்கு மாவீரன் பட்டம் வந்தது.

இந்திய பார்ப்பன தேசியத்தின் பாதுகாவலந்தான் உங்களாது தமிழ தேசிய திருமகன்

புரச்சி
[email protected]
suresh
பாவம் சூப்பர்லிங்ஸ்

மக இக வின் அவல அரசியலைத்தான் வெளிப்படுத்துகிறார்.

சிபிஐ.சிபிஎம்.ஓட்டுகட்சிகள்,பெதிக.ததேபொக.தநாமாலெக,தியாகு நெடுமாறன் என்று எதாவது ஒரு அமைப்பை சேர்ந்தவராக அதிரடியான் இருந்தால் மட்டுமே அவர் மீது பாய்ந்திருக்க முடியும் இவர்களால்

அதனால்தான் பாவம் அமைப்பை சொல்லு முகத்தைக் காட்டு என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எந்த அமைப்பியும் சாராத தனிமனிதர்கள் கருத்துகளை முன்வைத்தால் எதிர்கொள்ள தங்களுக்கு வக்கில்லை என்பதை மீண்டும் நிறுபித்திருக்கிறார்கள்.
லார்ட் லபக்கு தாஸ்
//////////எந்த அமைப்பியும் சாராத தனிமனிதர்கள் கருத்துகளை முன்வைத்தால் எதிர்கொள்ள தங்களுக்கு வக்கில்லை என்பதை மீண்டும் நிறுபித்திருக்கிறார்கள்.////////

சுரேஷ் அவர்களே இதோ முத்திரை குத்திவிட்டார்கள் , மணியரசன், நெடுமாறன், சீமான், கொளத்தூர் மணி கோஷ்டி என்று அதிரடியான் மேல்..!! இனி ஆட்டம் பாருங்க அம்பியின் தம்பிகளுக்கு !! ஒரே ஆளு பல பேருல வரும்

http://lordlabakkudass.blogspot.com
புரச்சி
உண்மையிலேயே அதிரடியானுக்கு சூடு சொரனையிருந்தால் நெடுமாறன் குறித்த எமது கருத்துக்களுக்கு பதில் சொல்லட்டும். அல்லது நெடுமாறன் தமிழ்தேசியவாதி அல்ல அவர் ஒரு இந்திய/பார்ப்பனிய பாத தாங்கி என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளட்ர்டும்
aaruran
அது என்ன ம.க.இ.க. இது ஈழத்தமிழர்களின் ஒரு கட்சியா. கேள்விப்பட்டதேயில்லை. தயவு செய்து முழுப்பெயரையும் யாராவது எழுதுங்கள். இவர்களுக்கென்று ஏதாவது இணையத்தளம் உண்டா? நன்றி.
கலை
///////உண்மையிலேயே அதிரடியானுக்கு சூடு சொரனையிருந்தால் நெடுமாறன் குறித்த எமது கருத்துக்களுக்கு பதில் சொல்லட்டும். அல்லது நெடுமாறன் தமிழ்தேசியவாதி அல்ல அவர் ஒரு இந்திய/பார்ப்பனிய பாத தாங்கி என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளட்ர்டும் /////////

யப்பா பொரட்ச்சி... ஒரு கதை சொல்லவா பதில் நீயே சொல்லு ஒ.கே.வா

ஒரு வீட்ல நீ லூசு , நான் லூசுன்னு ரெண்டு பேரு இருந்தானுங்க...நீ லூசு வெளிய போயிட்டான் அப்போ வீட்ல இருக்கறது யாரு ?? சொல்லுங்க பார்ப்போம்

அந்த மாதிரி தான் இருக்கு நெடுமாறன் தமிழ்தேசியவாதி அல்ல அவர் ஒரு இந்திய/பார்ப்பனிய பாத தாங்கி என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளட்ர்டும் என்பது
Tharmini
அதிரடியானுக்கு,
1) 1980ல் புலிகளால் வெளியிடப்பட்ட சோசலிஸசத் தமிழீழம் புத்தகத்தை வைத்துப் பந்தி பந்தியாகப் பாடம் நடாத்தும் உங்கள் அப்பாவித்தனத்தை என்னவென்பது?
1980களில் அவ்வாறான கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இயக்கத்துக்குப் போனவர்கள் பின்னர் தடம் மாறிச் செல்லும் கொள்கைகளால் முரண்பட்டு வெளியேறினர். தாம் கவரப்பட்ட அக்கொள்கைகளின் பிறழ்வினைத் தாங்க முடியாமல் இன்றும் விமர்சிக்கின்றனர்.அப்படியே கடைசி வரை கொள்கைகள் இருந்ததாக எப்படி நம்புகிறீர்கள்? உங்களுக்கு விளங்குவது போல் சுருங்கச்சொன்னால்,தமிழ்நாட்டு அரசியல்வாதி ஒருவர் தன் தேர்தல் வாக்குறுதியில் சொன்னவற்றை அவரது ஆட்சியின் தரத்தை விளக்குவதற்கு உபயோகிப்பீர்களா?செயற்படுத்தினாரா? என்பதல்லவா முதற் கேள்வி.
2) ஏன் எப்பொதுமே தமிழ்நாட்டுக்காரர்கள் யாராக இருந்தாலும் சிங்களவர்கள் என்று அவ்வினத்தையே ஒட்டு மொத்தமாகக் குற்றஞ்சாட்டுகிறீர்கள் இவ்வளவு இனவெறியா உங்களுக்கு என்று எமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. தமிழர்களுக்காக நியாயமாகக் கவலைப்படும் பத்திரிகையாளர்கள் கலைஞர்கள் மற்றும் பலரை அவ்வாறு பொதுமைப்படுத்தவதால் அவமதிக்கிறீர்கள். மறுவளமாகப் பார்த்தால் தமிழர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் எனச் சிறிலங்கா அரசும் அதன் பாதுகாப்புப் படைகளும் செயற்படுவதை ஒத்ததாக இக்கருத்து இருக்குமே.
3) ஈழத்தமிழர்களை எண்ணி தமிழகத்தமிழர்கள் வேதனைப்படுவதை எழுதியிருந்தீர்கள்.முதலில் உங்கள் காலடியில் அகதிகளாக வந்து கிடக்கும் இலங்கை அகதிகளைச் சரியாகப் பராமரிக்க முயலுங்கள். நானும் அகதியாக மண்டபம் முகாமில் வாழ்ந்தவள்.அங்கு இறங்கியதிலிருந்து இரக்கமற்றுப் பணம் பறிப்பதிலேயே பொலிஸ், முகாம் பராமரிப்பாளர்கள, கடைக்காரர்கள் என எல்லோருமே குறியாயிருப்பர். நல்ல அறை பூட்டியிருக்கும்.பொறுப்பான அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு அது கொடுக்கப்படும்.இப்படிப்பலதும் முகாமிலென்றால்; கூலி வேலைக்குப் போனால் குறைந்த கூலி. வேறு வழியின்றி முறிந்து வேலை செய்ய வேண்டிய பொருளாதார நிலை.அகதியென்றால் சற்று இளக்காரம் தான்.அகதிப் பசங்க பள்ளிக்கூடம் போகையிலும் அது உண்டு. இவ்வளவு வருடங்களாக முகாம்களில் வாழ்ந்து கஷ்டப்படபவர்களுக்கு உதவும் திட்டங்களை ஈழத்தமிழர்களுக்காக இரக்கப்படும் அமைப்புகள் கட்சிகள் ஆர்வலர்கள் எத்தனைபேர் செய்தீர்கள்?
உங்கள் பகுதிகளில் இருக்கும் முகாம் மக்களை எவ்விதம் நோக்கினீர்கள்? ஆயுதந் தாங்கியவர்கள் மட்டுமே ஈழத்தமிழர்களல்ல.
புரச்சி
//ம.க.இ.க. போன்ற போலி புரட்சி பேசும் சீர்குலைவு சக்திகளை அம்பலப்படுத்த வேண்டும் என பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த போது தான் நண்பர் ஒருவர் மூலமாக தமிழில் கணினியில் தட்டச்சு செய்வது குறித்து தெரிந்து கொண்டேன்.

வலைப்பதிவுகளில் ம.க.இ.க.வினர் செய்யும் அட்டகாசங்களையும் அறிந்து கொண்டேக். வலைப்பதிவு ஒன்றும் தொடங்கினேன். நிறைய அதில் எழுதலாம் என நினைத்திருந்தேன்.///

இணையத்தில் ம க இ க தோழர்கள் எழுத வந்த பின்னணி குறித்து பார்த்தால், சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளும், ஏகாதிபத்தியவாதிகளும் கேட்பாரின்றி பொய்யையும், புரட்டையும் எழுதி வந்தனர். இந்தச் சூழலை மாற்றியமைத்து புரட்சிகர ஜனநாயக சக்திகளுக்கான தளமாக இணையத்தை மாற்றியமைக்கும் உத்வேகத்துடன் உள் நுழைந்தனர் ம க இ க தோழர்கள் பலர். இதனை அந்த தோழர்கள் பலரின் ஆரம்பகால பதிவுகளை படித்தால் புரிந்து கொள்ளலாம்.

திராவிட அரசியல் பேசுபவர்களுடன் பிரதானமாக நட்பு சேர்ந்து ம க இ க தோழர்கள் இணையத்தில் நெடியதொரு போராட்டத்தை நடத்தினர்.

இப்படிப்பட்ட சூழல் அதிரடியானை இணையத்தில் எழுதத் தூண்டவில்லை என்பதும், ம க இ கவினர் இணையத்தில் வலுப் பெற்ற சூழலே தம்மை எழுதத் தூண்டியது என்றும் அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்திலிருந்து அவரது அரசியல் என்னவென்பதை நமக்கு அறியத் தருகிறார்.

பார்ப்பன பயங்கரவாதிகளோ அல்லது ஏகாதிபத்தியவாதிகளோ அல்லது இவரது பிரதான எதிரிகளான இந்திய தேசியவாதிகளோ அல்ல மாறாக ம க இ க போன்ற புரட்சிகர முற்போக்குவாதிகளை எதிர்த்தே அதிரடியானுடைய இணைய பிரவேசம் ஏற்பட்டுள்ளது அவருக்கு பொருத்தமான இண்ட்ரோடக்சனே.

நல்ல தமிழ் தேசிய அரசியல்(??)

புரச்சி
RAAJAA
WHEN I SEE ALL THIS, I THINK THIS IS THE TIME FOR US TO EXPOSE WHAT MA.KA.E.KA DID IN THE FUNERAL OF MUTHUKUMARAN. I WAS WITH THEM WHENEVER THEY MADE ABSURD AND IMMATURE ATTEMPT TO DEVIATE THE ENTIRE MASS.AS USUAL THEIR AMATUER POLITCAL ACTIVISM AND INABILITY TO COMMUNICATE TO THE IMMEDIATE PEOPLE HELPED THE YOUTHS TO TAKE UP THE PROCESSION IN A LARGE SCALE. AND YET INT HE LAST MOMENT MA.KA.E.KA HELPED VIDUTHALAI SIRUTHAIGAL TO MAKE THE PROCESSION TO GET DEVIATED INTO AN UNPLANNNED AND UN-POPULATED ROUTE. EVEN THEY WERE WATCHING SILENTLY WHEN YOUTHS WERE BEATEN UP BY THE VIDUTHALAI SIRUTHAIGAL. THIRUMAVELAN EXECUTED M.KARUNANITHI'S PLAN , MA.KA.EI.KA SUPPORTED IT ON GROUND.

IF ONLY JAYALALITHA WAS THERE IN POWER MA.KA.EI.KA WOULD DARE TO FIGHT FOR CHIDAMBARAM CAUSE. THEY VERY WELL KNOW GOVT IS WITH THEM.

THEY SHOULD EXPLAIN TO THE TAMILNADU PEOPLE WHAT HAPPPENED TO " COKE PLANT ON TAMIRAPARANI".

PLACHIMADA PROPLE IN KERALA FOUGH CONTINOUSLY TO UNDERMINE COKE, MA.KA.EI.KA IN ASSOCIATION WITH COCK AND GOVERNMENT, TO AVOID PEOPLE TO FIGHT SUCH A CAMPAIGN IN TAMIRABARANI(GANGAI KONDAN), THEY INITIATED AN AGITATION AND KILLED IT ,SO THAT PEOPLE GET THE FEAR AND BURNOUT FEEL AN D LEAVE THE PROTEST IN MIDDLE.

THEY ARE INSULTING REVOLUTIONARY ATTITUDE OF PEOPLE.

IF ONLY GOVT BAN THE POSTER, WALL WRITING & PRINITNG MAGAZINE, MA.KA.EI.KA LEFT WITH NO OPTIONS TO RUN ITS REVOLUTION. THEY RUN THEIR PARTY WITH THIS STUNT.

IF ANYWHERE YOU MA.KA.EI.KA GUYS TALK ABT YOUR CONTRIBUTION TO MUTHUKUMAR RISING, YOU WILL GET THE BEAT WITH EXPOSING WHAT CRIMINAL STUFF YOU DID ON THE OTHERDAY. IF YOU WUD HAVE DONE SOMEHTING YOUR ACT WUD HAVE SHOWN TO THE WORLD WHAT OU WORTH FOR. I FELT ASHAMED OF GIVING DONATIONS IN MY EARLY LIFE TO YOU
Munazir
till LTTE hunting the Muslims in 1990s there were no arm groups in muslims..and further without any major reason they chase out all muslims from north part of sri lanka with in 24 hours of time amd they didnt allow them to carry any of their asset..jewells or money..only they allow 500 rupees per family..on tha time where u went? why u didnt shout against this? its similar lik hitlor did in 1940s...LTTE may fight for tamils...but definately not for muslims ..even the muslms who participated in the LTTE were killed by LTTE themselve only then afte muslims thought they cant any more with tamils then only they decide to form a political party for thmselve as Muslim congress...we never ever be a supporter of sinhalese..dont try to misguide the innocent public
anu
கட்டுரையாளர் பதில்கள் தெளிவாக உள்ளன.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.