“ஒரு பாட்டாளி வர்க்கம் தனக்கான ஒரு நாடு,வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட இறையாண்மையுள்ள ஓர் ஆட்சிப் பகுதி இருந்தால் தான் அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கெதிரான வர்க்கப் போராட்டத்தையும், உலகு தழுவிய உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வதேசிய போராட்டத்திலும் பங்கெடுக்க இயலும். தனக்கு அருகில் உள்ள அண்டை தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடவும் இயலும்”. இதுவே மார்க்சிய அடிப்படை. - தத்துவ மேதை அதிரடியான்.

பாசிசத்தில் மார்க்சியம் தேடும் தத்துவ மேதை அதிரடியான் என்கிற நபர் கீற்று இணைய தளத்தில் 'அவதூறுகளை அள்ளி வீசூம் சீர்குலைவு சக்திகள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். புலி ரசிகனுடைய மனப்பான்மையிலிருந்து, தமிழகத்தில் செயல்பட்டு வரும் புரட்சிகர அமைப்புகளை அவதூறு செய்யும் நோக்கத்துடன் மட்டுமே அவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்த நபர் இதே கீற்று இணையத்தில் ஏற்கனவே ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதை பொருட்படுத்தி பதிலளிப்பதற்கு முற்றிலும் தகுதியற்றதொரு அவதூறு கதம்பம் என்பதால் நாம் அதை அப்போது சட்டை செய்யவில்லை. அப்படியானால் இந்த கட்டுரை பொருட்படுத்தத்தக்கது என்று கருதிவிட வேண்டாம். இது அதற்கும் மேலான புலி பற்றிய கற்பனாவாத சவடால் கதம்பம். இதற்கு நாம் பதிலளிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று

புலிகள் மீது வைக்கப்படும் குறிப்பான சில விமர்சனங்களுக்கு இவர் அரைகுறையாகவும், சப்பைக்கட்டு கட்டும் விதமாகவும் பதிலளித்திருப்பதை அம்பலமாக்க வேண்டும் என்கிற நோக்கம்.

இரண்டு

புலிகளை யார் விமர்சித்து பேசினாலும், எழுதினாலும் அவர்களை தமிழின விரோதியாகவும், சிங்கள கைக்கூலியாகவும் சித்தரித்து அவதூறு செய்யும் தமிழினவாத கும்பலின் நேர்மையற்ற அரசியலை அம்பலமாக்குவது.

இந்த இரண்டு காரணங்களிலிருந்து மட்டுமே இந்த காழ்ப்புணர்ச்சி கதம்பத்திற்கு எமது மறுப்பை முன் வைக்கிறோம்.

சிங்கள இனவெறி அரசையோ அதற்கு முழு உதவிகள் புரிந்த இந்தியாவையோ, உலக நாடுகளையோ கண்டிக்க வக்கற்ற கூட்டம் என்று தமது கட்டுரையை துவங்குகிறார் அதிரடியான்.

யார் வக்கற்ற கூட்டம் ?
இந்தியாவே போரை நிறுத்து!
இந்தியாவே தலையிடு!
இந்தியாவே ஈழத்தை அங்கீகரி!

என்று இந்தியாவிடம் பிச்சை கேட்ட தமிழ்தேசிய அமைப்புகள்(நேரடியாக மற்றும் மறைமுகமாக)சோனியா காந்தியிடம் மடிபிச்சை கேட்டும், ஒபாமாவின் மனிதாபிமான உணர்வுக்கும், கருணாநிதியின் தமிழின உணர்வுக்கும் கோரிக்கைகள் வைத்தும்,மக்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு பார்ப்பன ஜெயலலிதாவை நம்பச்சொன்னதும் யார்? ம.க.இ.க வா? தமிழ் தேசிய கூட்டமா ? யார் வக்கற்ற கூட்டம் ?

ஓட்டுப்பொறுக்கிகளை, அதுவும் ஜெ போன்ற பாசிஸ்டுகளை கூட தாஜா செய்து ஈழத்தைப் பெற்றுவிடலாம், அல்லது அங்கே போரையாவது தடுத்து நிறுத்தலாம் என்கிற அளவுக்கு அரசியல் மூடர்களாக இருக்கும் தமிழினவாதிகளுக்கு ம.க.இ.க புலிகளின் இராணுவாதத்தை, சுய அழிவுப்பாதையை நேர்மையாக விமர்சித்தால் எமது அமைப்புகளையும், பத்திரிக்கைகளையும் பார்ப்பனீயம் என்றும் பார்ப்பன கும்பல், கைக்கூலிகள் என்றும் இந்த கருப்பு பார்ப்பன கும்பல் அவதூறுகளை அள்ளி வீசுகிறது. அவற்றுக்கு பதிலளித்தாலோ, கேள்விகளை எழுப்பினாலோ, நேர்மையாக விவாதிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டு அதே அவதூறுகளை திரும்பத் திரும்ப வாரி இறைக்கிறது.

புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று திரு.அதிரடியானே ஒப்புக்கொள்கிறார். சரி புலிகள் மீதான ம.க.இ.க வின் விமர்சனம் அவதூறு என்றால், அது தவறு என்றால் உங்களுடைய விமர்சனம் தான் என்ன? எந்த தமிழ்தேசிய அமைப்பு இதுவரை புலிகளை விமர்சித்துள்ளது? அவற்றை எங்கே பதிவு செய்திருக்கிறீர்கள்?

கடந்த காலத்தில் களத்தில் நிற்பவர்களை விமர்சிக்க கூடாது என்றார்கள். தற்போதோ மரணித்தவர்களை விமர்சிக்க கூடாது என்கிறார்கள்.

தொடக்கத்தில் லட்சிய உறுதியுடனும், போர்க்குணத்துடனும் செயல்படத் தொடங்கியவர்களில், இறுதி வரை அதே போர்க்குணத்துடனும், லட்சியத்துடனும் நீடித்தவர்கள் சிலரே ஆனால் புலிகள் அவ்வாறின்றி, இறுதி வரை உறுதியுடன் இருந்தனர் என்கிறார்.

அதற்கு வேறு ஒன்றும் காரணமில்லை. மற்ற அனைவரையும் கொன்று ஒழித்தது தான். துரோகிகளை கொன்றதை நாம் ஒன்றும் சொல்லவில்லை. நேர்மையானவர்களையும், தோழர்களையும் கூட கொன்றார்கள். சோசலிசம் பேசுகிற புலி புரட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகளையும் கூட கொன்றொழித்து தமது லட்சிய உறுதியையும், போர்க்குணத்தையும் நிலை நாட்டினார்கள்.

புலிகளுக்கு அரசியல் கண்ணோட்டம் இருந்தது, அவர்கள் அரசியலையும் முக்கியப்படுத்தி தான் இயக்கத்தை கட்டி முன்னெடுத்தார்கள் என்று பிரச்சாரம் செய்யும் பலரும் புலிகள் எந்த முறையில் அரசியலை முன்னெடுத்தார்கள் என்று விளக்குவதில்லை.

மார்க்சிய அமைப்பாக அதிரடியான் முன்னிறுத்தும் புலிகள் எப்போதாவது மார்க்ஸியத்தை கடைபிடித்தார்களா என்றால் இல்லை. ஆனால் அவர்களுடைய வேலைத்திட்டப்படி அவர்களின் லட்சியமாக இருந்தது ’சோசலிச தமிழீழம்’ தான் என்கிறார். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ’கட்சித் திட்டம்’ என்று ஏட்டில் எழுதி வைத்துக்கொள்ளலாம். அதை கடைபிடிக்கிறார்களா அல்லது நடைமுறைப்படுத்தப் படுத்துகிறார்களா என்பது தானே முக்கியம்.

சோசலிச திட்டமுள்ள ஒரு கட்சி மக்களை அரசியல் படுத்த வேண்டும். புலிகள் அதை செய்தார்களா என்றால் இல்லை. ஆனால் புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தியதன் காரணமாகத்தான் புலிகள் கை காட்டியதும் புலம் பெயர் நாடுகளில், அந்தந்த நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் மக்கள் திரளாக அவர்களால் வளர முடிந்துள்ளது என்கிறார். புலிகள் மக்களை அரசியல் ரீதியாக வளர்த்திருந்தால் அவர்கள் தமது தேசத்தை விட்டு அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஓடியிருக்க மாட்டார்கள். புரட்சியை தமது சொந்த தோள்களில் தாங்கி நின்றிருப்பார்கள். ரசியாவிலும், சீனாவிலும் புரட்சி நடந்தபோது வெளி நாடுகளில் இருந்தவர்கள் கூட சொந்த நாட்டிற்கு ஓடி வந்து செஞ்சேனையில் இணைந்து கொண்டார்கள். ஆனால் ஈழத்திலோ ஒரு பக்கம் சிங்கள இனவெறி அரசுக்கு பயந்தாலும் இன்னொரு பக்கம் எங்கே வலுக்கட்டாயமாக புலிப்படைக்கு இழுத்துக்கொண்டு போய் விடுவார்களோ என்கிற அச்சத்திலும் நாட்டை விட்டே ஓடிப்போனார்கள். இது தான் புலிகள் மக்களை அரசியல்படுத்திய லட்சணம்.

அவர்கள் மக்களை அரசியல் படுத்தியிருந்தால் மாமேதை மார்க்ஸ் சொன்னதை போல ”கருத்துக்கள் மக்களை பற்றிக்கொண்டால் அது பவுதீக சக்தியாகிறது.” என்பது நடந்திருக்க வேண்டும். சோசலிச தமிழீழ குடியரசை அமைக்க புறப்பட்ட புலிகள் மக்களை மக்களாக நடத்தவில்லை. மந்தைகளாகவே நடத்தினர். எங்கும் மக்களை முன்னிறுத்துவதில்லை. மாறாக தங்களை முன்னிறுத்தும் இராணுவ வாதத்தையே நம்பி இருந்தனர். அவர்களது முழக்கத்தில் கூட - 'புலிகளின் தாகம் - தமிழீழ தாயகம்' என்று தங்களை முன்னிறுத்தும் ஜனநாயகவாதிகள் புலிகள் (பிறகே இது தமிழரின் தாகம் – தமிழீழ தாயகம் என்று மாறியது). அரசியல் எனும் வலிமை மிகு ஆயுதம் தரிக்கப்பட்ட கூட்டமாக அந்த மக்கள் மாற்றப்பட்டிருந்தால் சிங்கள பாசிசம் ஒழித்துக்கட்டப்பட்டிருக்கும். இது தான் உண்மை. மாறாக புலி புகழ் பாட வேண்டும் என்பதற்காக கதை புனையக் கூடாது. மக்களை அரசியல் ரீதியாக பயிற்றுவிக்கும் எந்த ஒரு அமைப்பும் அரசியலை தான் தலையாயதாக, முதன்மையானதாக வைக்க வேண்டும். அரசியலின் கட்டுப்பாட்டில் தான் இராணுவம் இருக்க வேண்டும். ஆனால் புலிகளிடமோ அரசியல் தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.

”எமது இயக்கம் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது” என்று கூறும் புலித் தலைமை, “ஆயுத போராட்டத்தை ஒரு அதியுயர்ந்த அரசியல் போராட்ட வடிவமாகவே கொள்கிறது” என்றும் கூறுகிறது. இதன் மூலம் ஆயுதப்போராட்டம் தான் அதியுயர்ந்த அரசியல் போராட்டம் என்கிற புலிகளின் இராணுவவாதமும், மக்களை மந்தைகளாக நடத்தியதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அதே போல ம.க.இ.க “அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம் தான் ஆயுத போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அநுபவத்தினூடாக ஆயூதப்போராட்டத்தின் அவசியத்தை மக்களை உணரச் செய்ய வேண்டும் ” என்றும் கூறுகிறது. ஆனால் அதை மாவோயிஸ்டுகளோ புலிகளோ செய்தால் அவர்களை தூற்றுகிறது என்கிறார். இந்த வாக்கியத்திலிருந்து அதிரடியான் என்ன புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. அந்த பத்தினுடைய இந்த வரிக்கு என்ன பொருள் ’ஆயூதப்போராட்ட்த்தின் அவசியத்தை மக்களை உணரச் செய்ய வேண்டும்' ஆயுதங்களை புலிகளோ, மாவோயிஸ்டுகளோ தூக்கிக் கொண்டு போய் வாங்கிகொடுக்க புரட்சி ஒன்றும் குச்சி மிட்டாய் அல்ல, அதை மக்களே தமது சொந்த கரங்களில் செய்ய வேண்டும். மக்களை வழி நடத்துவது மட்டும் தான் நம்முடைய வேலை. மக்களை மந்தைகளாக்கும் சாகசவாதத்தை கேள்விக்குள்ளாக்கி ’புதிய ஜனநாயகம்’ வெளியிட்ட நூலின் வரிகளுக்கு அர்த்தம் என்ன என்பதைக் கூட புரிந்து கொள்ளாதவர் தமக்கும், புலிக்கும் எதிரான வரிகளை கொண்டு வந்து நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்.

புலிகளை சர்வாதிகாரிகள் என்று சொல்லிவிட்டு பின்னர், அவர்களுக்கே ’வீரவணக்கம்’ வைத்தது ம.க.இ.க வின் ஊரை ஏமாற்றும் வேலை என்கிறார் அதிரடியான். புலிகளுக்கு யாரும் ‘வீரவணக்கம்’ வைக்கவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறோம், மாறாக ’வீரமரணம்’ என்று தான் குறிப்பிட்டுள்ளோம். அதுவும் தப்பித்து உயிர் பிழைக்க நினைத்த தலைமைக்கு அல்ல, கடைசி வரை போராடி மரணித்த அணிகளுக்கு தான் எமது முழக்கம். புலி தலைமை துரோகம் செய்வதும், காட்டிக் கொடுப்பதும் பற்றிய அனுபவம் நமக்கு ஒன்றும் புதியதல்ல. ராஜீவ் கொலைக்குப் பிறகு இரண்டு வாரங்களில் இலண்டன் பிபிசி பேட்டியில் அன்றைக்கு உயிருடன் இருந்த கிட்டு ராஜீவ் கொலையை நட்த்தியது ம.க.இ.க தான் என்று கேவலமான ஒரு பொய்யை சொன்னார். ஆனாலும் அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. அடுத்த ’புதிய ஜனநாயகம்’ இதழிலேயே புலிகளின் இந்த இழிவான நடவடிக்கையை கடுமையாக எச்சரித்து எழுதினோம். அவர்கள் அரசியல் நேர்மையை என்றுமே மீட்டெடுக்கவில்லை.
 
புலிகள் வலதுசாரி சிந்தனையாளர்கள் அல்ல என்றும், புலிகள் 80-களிலேயே சோசலிச பாதையைத் தேர்ந்தெடுத்ததாக புளங்காகிதமடையும் இவர்களின் மார்க்ஸியப் பார்வையை கண்டு நமக்கு மாரடைப்பே வந்து விடும் போல் இருக்கின்றது.

தேசிய இன விடுதலை பற்றிய மார்க்சிய புரிதலுடன் தான் புலி இயக்கம் கட்டியமைக்கப்பட்டது என்கிறார் அதிரடியான். அவர்களுடைய மார்க்சிய தத்துவத்தையும் அதை நடைமுறைப்படுத்திய விதத்தையும் இப்போது பார்ப்போம்.

ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்கம் சக்திகள் இல்லாத நிலையில் ஒடுக்கப்படும் இனம் எப்படி அவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியும் என்கிறார் அதிரடியான். இவருடைய கூற்றுப்படி புலி இயக்கம் மார்க்சிய அடிப்படையை கொண்டிருந்தது என்பது உண்மை எனில்(?) அது தான் தமிழ் பாட்டாளி வர்க்கம். ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்கம் சக்திகள் இல்லை எனில் (அவ்வாறு சுத்தமாக இல்லாத நிலை ஒன்றும் இல்லை) இனவாதத்தில் மூழ்கிக்கிடக்கும் ஒடுக்கும் இனத்தின் பாட்டாளி வர்க்கத்தை வெளியேற்றி பாட்டாளி வர்க்க உணர்வை, வர்க்க உணர்வுள்ள தமிழ் பாட்டாளி வர்க்கம் தான் ஊட்ட வேண்டும். ஆனால் இங்கு அதிரடியானுடைய வரலாற்றுப்பொருள் முதல்வாத ஆய்வின்படி ஒடுக்கும் சிங்கள இனத்தில் அவ்வாறான புரட்சிகர பாட்டாளி வர்க்கம் உருவாகாமல் போனதற்கும், அதற்கு உணர்வூட்டமுடியாமல் போனதற்குமான காரணம் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த காரணம் என்னவெனில், சிங்கள உழைக்கும் மக்களின் உளவியல் தான். இவ்வாறான (எவ்வாறான என்பதை அவர் விளக்கவில்லை) உளவியலைக் கொண்ட சிங்கள உழைக்கும் மக்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றையும் செய்ததில்லை, இனிமேல் செய்யப் போவதுமில்லை என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இவருடைய மார்க்சிய ஆய்வின்படி இனத்திற்கு ஒரு உளவியல் இருக்கும் போலிருக்கிறது. அப்படியானால் ஒடுக்கப்படும் தமிழ் இனத்தின் உளவியல் என்ன? பாசிசமா?

மேற்கண்டது தான் தத்துவம் என்றால் கீழ் உள்ளது தான் நடைமுறை.

"சிங்கள இன மக்களுடன் இணைந்து போராட வேண்டும்” என்கிற புலிகளின் 1980 வரையறுப்பிற்கு பிறகுதான், புலிகள் 18ஆம் காலனி, அனுராதாபுரம், அரண்தலவா போன்ற இடங்களில் சிங்கள வியாபாரிகளையும், சிங்கள குடும்பத்தினரையும் கொன்றிருக்கின்றனர். சிங்கள குடியிருப்புகளில் புகுந்து பல மணி நேரம் தாக்குதல்கள் நடத்தியிருக்கிறார்கள். அதாவது கிராமங்களில் புகுந்து மக்களைக் கொல்வதன் மூலம் இலங்கையை பேச்சுவார்த்தைக்கு இழுக்கலாம் என்கிற ’ரா’வினுடைய திட்டத்தை, தூண்டுதலை பின்னாட்களில் சீரழிந்து போன PLOT, EPRLF போன்றவர்கள் கூட செய்ய மறுத்த வேலையை பணத்தையும், ஆயுத்த்தையும் பெற்றுக்கொண்டு புலிகள் செய்தார்கள். கடைசியாக 2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிலாவ் பூந்த், கோகைலா ஆகிய கிராமங்களில் புகுந்து 60 பேரை கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டார்கள். இதில் 14 பேர் சிறுவர்கள்.

மார்க்சியத்திற்கு ஏற்ற பொருத்தமான நடைமுறை தான்.

சிங்கள இனத்தில் சரியான பாட்டாளி வர்க்கம் இல்லை. அதனால் இனவாதத்தை முன் வைத்துப் போராடியதாக இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். சுயநிர்ணய உரிமையை வெறும் பிரிந்து செல்லும் உரிமையாக குறுக்கும் தமிழ்தேசியர்கள் தான் இதையெல்லாம் மறைத்து புலிகளை மார்க்சிய இயக்கம் என்று காட்டமுனைகின்றனர்.
சிங்கள மக்களுடன் புலிகள் இணைந்து போராட முன் வந்தார்கள் என்று கூறும் தமிழினவாதிகள், பாட்டாளி வர்க்க சக்திகளுக்கெதிரான புலிகளின் செயல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது.

புலிகள் தமிழ் மக்களையும் வென்றெடுக்கவில்லை, சிங்கள பாட்டாளி வர்க்கத்தையும் வென்றெடுக்கவில்லை. ஆனால் பணத்தைக்காட்டி தனக்கு ஆதரவாக சிங்கள இராணுவ அதிகாரிகளை வென்றெடுக்கும் கலையை மட்டும் கற்றிருக்கிறது. இது வெட்கக்கேடாக இல்லை. இராணுவத்திலுள்ள உயர் அதிகாரிகளை உன்னால் கொண்டு வர முடிகிறது என்றால் சாதாரண மக்களை ஏன் கொண்டுவர முடியவில்லை ?

புலிகள் மாற்று இயக்கத்தினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நாம் கூறுவதற்கு அதிரடியான் கீழ்கண்டவாறு திரித்து எழுதியுள்ளார்.

சிங்கள பேரினவாதத்துடனும், இந்திய ஆரியத் தலைமையுடனும் சமரசம் செய்து கொண்ட அது போன்ற ஒட்டுக்குழுக்களுடன் புலிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கு “சேவகம்” புரிய வேண்டுமாம். இதை தான் இந்தக் கூலிக்கும்பல் விரும்புகிறது.

இந்திய உளவு அமைப்புகளிடம் சமரசம் செய்து கொள்ளச் சொல்லி புலிகளுக்கு ம.க.இ.க வா பாடம் நடத்தியது? அல்லது ம.க.இ.க வுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று புலிக்கு ’ரா’ பாடம் நடத்தியதா? அவர்களுக்கு (RAW) வுடன் இருந்த கள்ள உறவிற்கு யார் காரணம்? நாங்கள் காரணமா? இல்லை அவர்களுடைய மார்க்சிய தத்துவம் தான் காரணமா?

அதே போல பொய்க்கு மேல் பொய் சொல்கிறது இந்த இனவாத சந்தர்ப்பவாதிகள் கூட்டம். ம.க.இ.க ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்துகிறதாம் ம.க.இ.க எங்கும் அப்படி வலிறுத்துவதில்லை தமிழினவாதிகளே, இதை ’சுய நிர்ணய உரிமை’ என்கிற வார்த்தையை காதால் கூட கேட்க விரும்பாத சி.பி.எம் போலிகளிடம் போய் சொல்லுங்கள். ம.க.இ.க தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையையே ஆதரிக்கிறது. இந்த சுயநிர்ணய உரிமையை பிரிந்து செல்லும் உரிமையுடன் ஒன்றுபடுத்தியும், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைவதை ஒன்றுபட்ட இலங்கையாக திரித்தும் பேசுவதன் மூலம் நம்மை எதிரியாக்குவது தான் இந்த திரிபுவாத, குறுந்தேசிய வெறியை கிளப்பும் கும்பலின் நோக்கமாகும்.

நாம் இந்திய மாயையிலிருந்து விடுபடவில்லையாம், எனவே விடுபட வேண்டுமாம். நாங்கள் இந்திய மாயையிலிருந்து விடுபடுவது இருக்கட்டும், நீங்கள் ஆரிய மாயையிலிருந்து எப்போது விடுபடுவீர்கள்? இதே ஆரியக் கும்பல் தான் முப்பது வருடங்களுக்கு முன்பு புலிகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கியது. அதற்கான காரணம் என்ன? எந்த வன்மமும் வர்க்க நலன்களுக்கு, பொருளாதார நலன்களுக்கு அப்பாற்பட்ட்தல்ல. அப்போது இந்தியா புலிகளுக்கு உதவியதும், இப்போது சிங்களவர்களுக்கு உதவியதும் இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்குட்பட்டே நடக்கிறது. ஆரிய சதி, மலையாளிகள் சதி என்பதெல்லாம் வெறும் தமிழின வாத உளறல்களே. புலி தலைமையின் மானசீக தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி என்பதை இவர்கள் புலிமயக்கத்தில் மறந்து போனார்களோ?

ஏகாதிபத்தியம், காலனித்துவம், நவ-காலனித்துவம், இனவாதம் ஆகியவையே உலக மக்களின் பொது எதிரிகள் என்று புலிகள் வரையறுத்திருந்தனர்.

”தமிழ் மக்கள் தமது இனத்துவ அடையாளத்துடன் தமது சொந்த மண்ணில் வரலாற்று ரீதியாக தாம் வாழ்ந்து வந்த தாயக மண்ணில், நிம்மதியாக, சமாதானமாகவும், கெளரவத்துடனும் வாழ விரும்புகிறார்கள். அவர்களது அரசியல் பொருளாதார கொள்கையை அவர்களே நிர்ணயித்து கொள்ள விரும்புகிறார்கள்” என்று புலிதலைவர் பிரபாகரன் குறிப்பிட்டார்.

ஒரு தேசியத்தின் மையமான விடயம் என்ன?

அது எப்போதும் எங்கும் தேசிய பொருளாதாரம். தமிழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், ஒரு நிலத்தொடர் அனைத்தும் தேசிய பொருளாதாரம் மீது கட்டமைக்கப்பட வேண்டும். தேசியத்தின் மையமான விடயத்தை விட்டு தேசியத்தை விளக்கினால் அது தேசிய பொருளாதாரமில்லாத ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு அடிமையாக வாழ்வதையே குறிக்கும்.

தமிழ் மக்களின் ”அரசியல் பொருளாதார வாழ்வு” என்பது எதனை குறிக்கிறது எனில் ஏகாதிபத்திய பொருளாதாரம். ஏகாதிபத்தியத்தின் அடிப்படையிலான பண்பாடு, ஈழ மண்ணில் ஊடுருவதை எதிர்த்து, அதற்கெதிரான அரசியல் பொருளாதாரத்தை புலி கட்டியமைத்ததா எனில் இல்லை. ஆயுதங்களை ஏகாதிபத்திய உலகத்தில் இருந்து கடத்தியது போல, ஏகாதிபத்தியத்திய பொருளாதார கொள்கையை தான் தங்களுடைய பொருளாதாரமாக கட்டமைக்க முயன்றனர்.

சாதியை புலிகள் பேசவில்லையா என்று அதிர்ந்து போய் ஆச்சர்யமாக கேட்கும் தமிழின வாதிகள், சாதியை ஒழிக்க புலிகள் "ஒரே சாதியில் யாரும் திருமணம் செய்தல் கூடாது" என்று சட்டம் விதித்திருந்தனர் என்று கூறுகின்றனர். சரி, மதிவதனி எந்த சாதி தாழ்த்தப்பட்ட சாதியா??

சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் உடனடியாக அதனை ஒழிக்க முடியாது என்பதையும் அதற்கு தொடர்ச்சியான நீண்டகாலத் திட்டங்கள் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்பதனை இவை காட்டுகின்றன.

ஏட்டளவில் சோசலிஸத்தை வைத்துக் கொண்டு வெளி உலகத்தில் ஈழ சோசலிஸ மாயையை உருவாக்கியது போலவே தான், சாதியை ஒழிப்போம் என்கிற புலி கோசமும். சாதியை ஒழிக்க நீண்டகாலத் திட்டம் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்று அத்தோடு முடிப்பது ஏன்? அதற்கான திட்டத்தை உண்மையில் புலிகள் வகுத்தார்களா? இல்லையா ?

தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் மீது தொடர்ந்து ஆதிக்க சாதிவெறி முத்திரை குத்தப்படுகின்றது என்றும் இதற்கான வேலையை தமிழகத்தின் ஏஜெண்டாக ’தோழர் மதிமாறனை’ திட்டகுழுவில் வைத்திருப்பது போலவும் இவர்கள் கூறுகிறார்கள். இதுவரை அவர் தனது வலைதளத்தில் புலிகளைப் பற்றி விமர்சித்தது கூட கிடையாது. இருந்தும் ஏன் அவர்களுக்கு மதிமாறனைப் பிடிக்கவில்லை என்றால் தமிழ் இனவாதிகளின் சாதிய முகத்தை டார் டாராய்க் கிழித்து தமிழ் என்பதற்கு உண்மையான பொருளான சாதியை சுட்டிக் காட்டுகிறார். அதுவும் அம்பேத்கர், பெரியாரின் துணை கொண்டு தமிழினவாதிகளின் கருப்பு பார்ப்பனிய முகத்தை அம்பலப்படுத்துகிறார். இதற்காக சாதிவெறியர்கள் கோபப்படுவது இயற்கையே. ஆனால் தன்னை போராளிகள் என்றும், புரட்சியாளர்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் கோபப்படுவது உண்மையிலேயே நல்ல நகைச்சுவை.

அம்பேத்கர் சட்டக்கல்லூரி சாதி மோதல்களுக்கும் மற்றும் தமிழகம் முழுமைக்குமுள்ள சாதி பிரச்சனைகளுக்கும் உளவுத்துறைதான் காரணமா? பார்ப்பனியம் காரணமில்லையா?
தியாகி முத்துகுமரனின் அனுமானத்தை பிடித்து கொண்டு சாதிய பிரச்சனைகளை உளவு துறையின் மேல் போட்டு விட்டு லாவகமாக தன்னை விடுவித்து கொள்ள பார்க்கிறார்கள் இந்த தமிழ் பார்ப்பனியவாதிகள். தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வரும் சாதிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் உளவு துறையினரின் சதிதான் எனில் உங்கள் பார்வையில் தென் மாவட்டங்களில் 60களில் சாதிய கலவரத்தை தூண்டிய ’முத்துராமலிங்கம்’ உளவு துறையின் கைக்கூலியா?

சாதியை வைத்து தமிழரின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக கூறும் தமிழினவாதிகள், தியாகி முத்துகுமரனின் இரங்கலுக்கு அவரின் சாதியை முன்னிறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டனவே, இதை எதிர்த்து ’சாதியின் முத்திரையை இந்த தியாகிக்கு குத்த வேண்டாம்’ என்று சிறு முனகலாவது முனகினார்களா உண்மையான தமிழினவாதிகள்?
இவர்கள் சொல்வது போல உண்மையிலேயே தமிழ் மக்கள் சாதி மத வேறுபாடின்றி ’நாம் தமிழர்’ என அணி திரள்கிறார்களா? இவர்கள் கனவிலிருந்து விழிப்பதுமில்லை, மக்களை வர்க்க உணர்வுடன் விழிப்படையச் செய்வதும் இல்லை.

முஸ்லீம்களுடன் நல்லிணக்கம் பேணியதாக புலிகளை பாதுகாக்கும் இவர்களைப் பார்த்து ஏட்டளவில் இருந்த சோசலிச குடியரசு திட்டத்திலும், தனி இனமாக அங்கீகரிகத்த(!) முஸ்லீம் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையையோ, பிரதேச தன்னாட்சியையோ உறுதி செய்யவில்லையே ஏன் என்று கேட்டால் பதிலில்லை.

எங்களைப்போன்ற இளைஞர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படும் அதிரடியான் அவர்களே! இளைஞராகிய நாங்கள் சிந்திப்பதால் தான்,சந்தி சிரிக்கும் உங்கள் அமைப்பில் இல்லாமல் உண்மையான மார்க்சிய அமைப்பில் இருக்கிறோம்.

- சர்வதேசியவாதிகள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

22 comments

22
தமிழரங்கம்
இளைஞராகிய நாங்கள் சிந்திப்பதால் தான்,\\\

அப்படியா நன்று

\\\சந்தி சிரிக்கும் உங்கள் அமைப்பில் இல்லாமல் \\\
எந்த சந்தியில் சிரிக்கின்றார்கள் என்று சொல்லவில்லையே நாமும் சென்று சிரிக்கலாம் ஓ சிந்திக்கலாம்

\\\உண்மையான மார்க்சிய அமைப்பில் இருக்கிறோம்.\\\
அப்படி ஒன்று இருக்கின்றதா ??
தமிழரங்கம்
//துரோகிகளை கொன்றதை நாம் ஒன்றும் சொல்லவில்லை. //
நீங்களே ஒத்துக் கொண்ட பின்னர் எதற்கு மறு பேச்சு

//நேர்மையானவர்களையும், தோழர்களையும் கூட கொன்றார்கள். //
துரோகத்தில் நேர்மையான துரோகம் என்று ஒன்று இருக்கின்றதா ???

புலிகளுக்கு யாரும் ‘வீரவணக்கம்’ வைக்கவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறோம், மாறாக ’வீரமரணம்’ என்று தான் குறிப்பிட்டுள்ளோம். ///

பச்சிளம் குழந்தை முதல் பாட்டி , பூட்டி வரை சிங்களத்தால் அல்லது உங்கள் தோழர்களால் கொல்லப்பட்டால் புலியாகச் சித்திரித்த நீங்கள்

ஏன் இப்போது வீரமரணம் என்று குறிப்பிடுகின்றீர்கள் ???

//// கடைசி வரை போராடி மரணித்த அணிகளுக்கு தான் எமது முழக்கம்.///
அப்படியானால் கடைசி யுத்தத்திற்கு முதல் வீரமரணம் அடைந்தவர்களை

ஏன் நீங்கள் வீரமரணம் என்று குறிப்பிடவில்லை ???
venkat
good response article.....srilankan racist state has been accepted without any second thought...but LTTE's mistakes and fasicm has to be accepted....if we make criticism against LTTE..immediately dont brand us as tamil traitors..( Similar mistake of LTTE)................
ஏகலைவன்
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்!
27/08/2009

தமிழ்த்தேசியவாதிகள் அம்பேத்கரை புறக்கணிப்பதற்கு காரணம் அவர் இந்திய தேசியத்தை வலியுறுத்தினார் என்பதினாலா?

-எம். முருகன்

தோற்றத்தில் அப்படி தெரியலாம். ஆனால் அது மாயத்தோற்றம்.

தேசியத்திற்காக டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்கணிப்பதாக சொல்லிக்கொள்கிற, அல்லது வெளியில் சொல்லமால் அவரை குறிப்படுவதை தவிர்க்கிற இந்த தமிழ்த்தேசியவாதிகள்தான், தன் வாழ்நாள் முழுக்க இந்திய தேசியத்தை வலியுறுத்திய, அதற்காகவே தன் வாழ்நாளை அர்பணித்துக்கொண்ட காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை மனமார விரும்புகிறார்கள். அல்லது அவர்களை விமர்சிக்க மறுக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய இந்திய தேசியத்தில் ஒரு நியாயம் இருந்தது. அது இந்தியா முழுக்க தாழ்தத்தப்பட்ட மக்களின் துயரம் ஒரு போலவே இருப்பது. ஊருக்கு வெளியே சேரி இந்தியா முழுக்க ஒரே மாதிரியாக இருப்பது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் அரியான ஜாட், உத்திரபிரதேச யாதவ், ஆந்திர ரெட்டி, தமிழகத்து தேவர், வன்னியர் ஜாதியை சேர்ந்தவர்களிடம் எந்த பிராந்திய வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியான ‘இந்திய குணம்’ இருப்பது.

இந்திய தேசியத்திற்கு அடையாளமாக இருக்கிற தலித் விரோத போக்கையும், ஜாதியையும், ஜாதிவெறியர்களையும் எதிர்த்து போராடியதால்தான் டாக்டர் அம்பேத்கர், இநதியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக உயர்ந்து நின்றார்.

ஆனால், காமராஜர் – முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்கள் வலியுறுத்திய தேசியத்தில் எந்தவிதமான முற்போக்கு அம்சங்களும் கிடையாது. பார்ப்பனர்கள், இந்து கண்ணோட்டம் கொண்டவர்கள் என்ன காரணத்திற்காக இந்திய தேசியத்தை வலியுறுத்தினார்களோ, அதுபோன்ற பிற்போக்கு காரணங்களும், ஆளும் வர்க்க மனோபாவமும்தான் இவர்கள் வலியுறுத்திய தேசியத்திலும் இருந்தது.

‘காமராஜர் கிராம பள்ளிக்கூடங்களை திறந்தார், அதற்காகத்தான் அவரை ஆதரிக்கிறோம்’ என்று தெளிவாக காமராஜரை தேசியத்தில் இருந்து பிரித்துப் பார்த்து ஆதரிக்கத் தெரிந்து இருக்கிற தமிழ்த்தேசியவாதிகள், அதைவிட பல படிகள் மேலேபோய் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக இடஒதுக்கீடு, இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்று விஸ்வரூபம் எடுத்து நின்ற டாக்டர் அம்பேத்கரை விமர்சிக்கிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள் அல்லது அவரை கொண்டாட மறுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம், இந்திய தேசியமா? அல்லது அவர்கள் மனதில் இருக்கிற இந்து ஜாதியமா?

காமராஜரை ஆதரிப்பதற்குக்கூட இதுபோன்ற ஒரு காரணமாவது இருக்கிறது. ஆனால் முத்துராமலிங்கத் தேவரை ஆதரிப்பதற்கு இதுபோன்ற எந்த முற்போக்கு காரணங்களும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தார். தேசியமும், தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்தார். முக்குலோத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்களை இந்திய தேசியத்தை காப்பதற்காக ராணுவத்தில் போய் சேரச் சொன்னார்.

ஆனால், தலைவர் பெரியார் தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்தார். அதற்காகவே அவரை மிக கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் முத்துராமலிங்கத் தேவர். தேசியத்தை ஆதரித்த காமராஜரையும் அவரின் இடஒதுக்கீடு கொள்கைக்காக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். திராவிட இயக்கத் தலைவர் என்ற காரணத்திற்காகவே அண்ணாத்துரையை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார் முத்துராமலிங்கத் தேவர்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இருந்தார் என்பதை கூட விட்டுவிடுங்கள், ‘அதை குறித்து விமர்சித்தால் தமிழனின் ஒற்றுமை குலைந்து விடும்’ என்று ஒரு தமிழ்த்தேசிய காரணமாவது கூச்சமில்லாமல் கூறிக்கொள்ளலாம். ஆனால், இவர்கள் தீவிரமாக எதிர்க்கிற, அவர் தீவிரமாக வலியுறுத்திய தேசியத்திற்காகக் கூட அவரை விமர்சிக்க மறுக்கிறார்களே தமிழ்த்தேசியவாதிகள். இதற்கு எது காரணம்?

தத்துவத் தெளிவில்லாமல் இருப்பதைக்கூட அறியாமை என்று புரிந்து கொள்ளலாம். அதுகூட ஒன்றும் மாபெரும் தவறல்ல. ஆனால், தவறாகவோ, சரியாகவோ தான் தீவிரமாக சொல்லுகிற ஒரு விஷயத்திற்குக்கூட உண்மையாக இல்லாத இந்தப் போக்கு பச்சையான சந்தர்ப்பவாதம்.

பல தமிழ்த்தேசியவாதிகள், சில பெரியாரிஸ்டுகள், சில மார்க்சிஸ்டுகள் நேரடியாகவே ஜாதி அடையாளத்தோடு இருக்கிறார்கள். இன்னும் சிலர் தன் ஜாதி அடையாளத்தை மறைத்தாலும், தான் தலித் அல்ல என்பதை மறைமுகமாக அடையாளப்படுத்தி விடுகிறார்கள்.

இந்த ஜாதிய மனோபாவமும், தலித் வீரோத போக்கு அல்லது தலித் மக்கள் மீதான் வன்கொடுமைகள் பற்றிய அலட்சியப் பார்வைதான் டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதற்கு அல்லது முக்கியத்துவம் தராமல் இருப்பதற்கு காரணம். மற்றபடி அவர் தமிழனல்ல என்பதோ, தேசியத்தை வலியுறுத்தினார் என்பதோ காரணமல்ல. (சேகுவேராவும், எம்.ஜி. ஆரும் தமிழர்களா?)

தந்தை பெரியாரின் இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு என்கிற கண் கொண்டு பார்த்தால் டாக்டர் அம்பேத்கர் பச்சைத் தமிழனாகத்தான் தெரிவார்.

பெரியாரின் பார்வையில்லையேல், சந்தன கடத்தல் வீரப்பனுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம் கூட டாக்டர் அம்பேத்கருககு தரமாட்டார்கள் தமிழ்த்தேசியவாதிகள்.

........................................................................................

இதற்கு நம்ம ‘அதிரடியான்’கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். மாறாக, எப்போதும் போல் கள்ள மவுனம்தான் பதில் என்றால் அதற்கும் எனது அட்வான்ஸ் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

ஏகலைவன்.
”ஆருடன்”
சர்வதேசியவாதிகளிடம் ஒரு கேள்வி, “ஐயா இப்போது உலகில் எந்த நாட்டில் நீங்கள் கூறும் ‘மார்க்ஸீய’ அரசு ஆட்சியில் உள்ளது என்று சற்று விளக்கமாக எழுதினால் எமது அடுத்த தலைமுறையாவது பிழைத்துப்போகும். ஏனையா ‘போகாத ஊருக்கு’ வழிகாட்டி இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறீர்கள்.எப்போதும் கனவுலகில் மிதக்கும் உங்களுக்கு, உலகின் பெரும் பகுதி இனம்-தேசியம் என்றுதான் முதலில் சிந்திக்கிறது.மார்க்ஸிஸம் இப்பொது ‘பேசுபொருளாக’ மட்டுமே உள்ளது.இலங்கையில் முதலில் தமிழன் வாழ வேண்டும் அதற்கப்புறந்தான் அவன் முதலாளியாக வாழ்வதா அல்லது தொழிலாளியாக இருப்பதா என்பது. புலிகள் இயக்கம் அங்கு தமிழர்கள் உயிரோடு இருப்பதற்காக ஆயுதம் ஏந்தினார்கள்.தயவுசெய்து இலங்கையின் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றை ப் படித்து விட்டு அங்கே முதலில் தேவைப்பட்டது ‘மார்க்ஸிஸமா’ அல்லது ‘வாழ்விஸமா’ எனபதைத் தீர்மானியுங்கள். இன மானத்துடன் போராடி இறுதியில் இருபது நாடுகளின் கூட்டுச்சதியால் தோற்றுப்போன ’இன விடுதலைப் போரை’ ‘இஸங்களின்’ பேரால் அவமதிகாதீர்கள்.முதலில் நாம் மனிதர். அதற்கப்புறம் ‘தமிழர்” அதன் பின்புதான் மற்றதெல்லாம்.
ஈழ முத்துக்குமரன்
அய்யா அதிமேதவி ஏகலைவன் அவர்களே, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் என்றொரு தமிழ் தேசிய இயக்கம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அவர்கள் என்றாவது அம்பேத்கரை புறக்கணித்திருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? வழக்கம் போல் எவனாவது செய்கின்ற பேசுகின்ற விசயங்களை பொதுமைபடுத்தி தமிழ்தேசியவாதிகள் இவ்வாறு செய்கிறார்கள( இதுதான் ம.க.இ.க வின் விமர்சன பாணி) என்று நீங்கள் எழுதும் போது, பொறுக்கித் தின்னும் கம்யூனிஸ்ட்களை கணக்கில் கொண்டு எல்லா கம்யூனிஸ்ட்களுமே பொறுக்கி தின்பவன்தான் என்று நாங்கள் பேசுவதற்கு எவ்வளவு நாளாகும்? அது சரியான அனுகுமுறைதானா.
pari
mao ethiriudan kootu vaithal athu pilaippu vaatham alla,hugo savos vellai maaligaikku sendru nakki pilaithal athuvum thavaralla,hitlarukku nigaraana kodum kolaigalai seithavan joseph stalin ivargallukku nallavan,kodungolan polpat ivangalukku puratchikkaran anal thalaivar pirabakaran mattum pasist.nallathu indha marxia maththai serntha pilappuvaatha,pachchai parpana,thamilina throga siru koottam ippadi iruppathu nallathu.periyar solluvar,''PARPPAN THITTINAL NAM SARIYAGA IRUKKIROAM ENDRU ARTHAM,PARATTINAL NAM PILAI SEIGIROAM ENDRU ARTHAM"intha sivapu sattai potta parpan thittattum.varaverkiroam.ivan idathu,valathu,maoist,pwg yaarum communist illai enban,naan ammam sami endru solla vendum.melainattu sarayaththai kudithuvittu ularum kudikaranai pola marxiam yendru solli kondu mannukku porunthatha valakkolinthathai mukki mukki,intha parpanargal thinikka mudiyathu.anaithu mathangalum oliga.MARXIA MATHM ulpada.
ஏகலைவன்
///////////அய்யா அதிமேதவி ஏகலைவன் அவர்களே, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் என்றொரு தமிழ் தேசிய இயக்கம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அவர்கள் என்றாவது அம்பேத்கரை புறக்கணித்திருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? வழக்கம் போல் எவனாவது செய்கின்ற பேசுகின்ற விசயங்களை பொதுமைபடுத்தி தமிழ்தேசியவாதிகள் இவ்வாறு செய்கிறார்கள( இதுதான் ம.க.இ.க வின் விமர்சன பாணி) என்று நீங்கள் எழுதும் போது, பொறுக்கித் தின்னும் கம்யூனிஸ்ட்களை கணக்கில் கொண்டு எல்லா கம்யூனிஸ்ட்களுமே பொறுக்கி தின்பவன்தான் என்று நாங்கள் பேசுவதற்கு எவ்வளவு நாளாகும்? அது சரியான அனுகுமுறைதானா.//////////////

நண்பர் ஈழமுத்துக்குமார்,

உங்களுடைய மேற்கண்ட கேள்வி மிகவும் நியாயமானதே. த.ஒ.வி.இயக்கத்தினர் தமது சக தமிழினவாதிகளின் பித்தலாட்டப் போக்கைக் கண்டித்து பேசியது அல்லது எழுதியது உண்டா. நானறிந்தவரை இல்லை. நீங்களறிந்திருந்தால் எமக்கு அறியத்தாருங்கள், ஒப்புக்கொள்கிறேன்.

கம்யூனிச முகாமில் உள்ள போலிகளான சி.பி.ஐ., சி.பி.எம். கூட்டத்தைத் திரைகிழித்து யாம் முன்வைத்த விமர்சனங்கள் பற்றி அனைவரும் அறிந்ததுதான்.

உங்களின் பரிதாப நிலை புரிகிறது. அதற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
ஏகலைவன்
அய்யா ஆருடன்,

நீங்கள் இங்கே பதிந்துள்ள ஆருடம் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டியவைகளே. இதுதான் தமிழினவாதம் என்று நாங்கள் எடுத்துக்காட்டுவதற்கு, அம்பலப்படுத்துவதற்கு எளிதான அடையாளங்களை உங்களது பின்னூட்டத்தில் நிரப்பியுள்ளீர்கள். நன்றி!

நீங்கள் இன்னும் செய்ய வேண்டிய வேலை ஒன்றே ஒன்றுதான். மணியரசன் என்பவரின் தலைமையிலான தமிழினவாத கும்பல் ஒன்று இருக்கிறது, அது தமது கட்சிக்கு ‘தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி’ என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசியம் அமைப்பதற்கு ஒத்துவராத (உங்கள் கூற்றுப்படிதான்) அந்த பொதுவுடைமையை நீக்கிவிட்டு தமது கட்சியின் பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள்தான் வலியுறுத்த வேண்டும். என்ன செய்வீர்களா!
Anony
self determination pesum MAKA EKA ,oru kurippana prichanail enna theervu endru solluvathillai.Kuripitta varalatru kattathil ,soolalil ungal mudivu enna vendru solluvathilai..eela prachnail thani eelam theerva illaya endru sollalamal...nilai padu matru pesi kondu irunthal enna arasiyal?
kalai
comrade,
Let us not reduce Tamil Nationalism to a particular party like Nedumaran or Maniyarsan. And so with eelam question. There are many who recognise the brahmins role as well as the expansionist economic interest of indian ruling class in the eelam war. If Tamil Natilonalist that you are taliking about, are reducing the problem only with Brahmins, then what about your economic reductionism, it is nothing but a vulgarisation of Marxisim. Both aspects played major role in exterminatining tamils in the island. Comrade, we wont forget, the same party you represent, once called periyar a crude materialist, still understanding caste and not able to take postion on reservation.. sorry you might cite your book on reservation but which even didnt touch the issue. Last but no least, there cant be a Indian Revolution with our liberation of natiolaitites similary there will never be a liberation of natiolities in the subcontinent with out indian revoultion. therfore, since am coming from this tamil nation, my national liberation becomes important for me, nothing more nothing less. Am sorry to say about your vulgarsation of marxisim, you cant just reduce a nation question to a indentity like religion...
expecting more debates and discussions.
kalai
இளங்கோவன், பொதுக்குழு உறுப்பின
திரு. ஏகலைவன் அவர்களுக்கு
தங்களது கட்டுரை குறித்த மறுமொழிகளில் எமது இயக்கம் குறிப்பிடப்பட்டதையொட்டி ஒருசில செய்திகள்.
.// த.ஒ.வி.இயக்கத்தினர் தமது சக தமிழினவாதிகளின் பித்தலாட்டப் போக்கைக் கண்டித்து பேசியது அல்லது எழுதியது உண்டா.//
1. முதலில் த.ஒ.வி.இ உட்பட தமிழ்த்தேசியவிடுதலை ஆர்வலர்களை தமிழினவாதிகள் எனச்சுட்டுவதை நிறுத்துங்கள்.
''தமிழ்நாடு ஒரு தேசம். தமிழக மக்கள் ஒருதேசிய இனத்தவர்.''என்பதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லையெனில் இத்தேசவிடுதலை கோருபவர்களை (எவ்வளவு இனவாதக்கூறுகள் இருந்தாலும்) தமிழ்தேசியர்கள் என்று சுட்டி அழையுங்கள். இது வெறும் பெயர்ச்சிக்கல் இல்லை. அடிப்படை அரசியல் சிக்கல்.
2. ஈழ முத்துக்குமரன் தன் மறுமொழியில் சொன்னதைப்போல தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் அம்பேத்கரை புறக்கணித்தல்ல, முன்னிறுத்தி பரப்புரைசெய்கிற இயக்கம். ஏனெனில் வர்க்கம் மட்டுமே கொண்டிருந்த மேற்கத்திய சூழலில் கருக்கொண்ட மார்க்சியம் வர்க்க/சாதிய அடிப்படைச்சமுகமான தமிழ்ச்சமூகத்தில் அப்படியே பொருந்தும் தன்மையற்றது. மார்க்சியத்தினை நம் மண்ணுக்கானதாக்க அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனைகள் கோட்பாடு நடைமுறை என இரண்டிலும் தேவை.அதன்பொருட்டே அம்பேத்கரை முன்னிருத்துகிறோம்.
3. தமிழ்தேசிய விடுதலை கோருபவர்களில் பல்வேறு போக்கினர் உண்டு. அவர்களை ஒற்றைத்தன்மையாய் விமர்சிப்பீர்களானால் உங்களின் தேசிய இன விடுதலை குறித்த அரசியலில் கோளாறு (அ) பிழை உள்ளது என்பது எங்கள் நிலைப்பாடு.
4. த.ஒ.வி.இ தனது சக தமிழ்தேசியர்களிடம் அதன் தொடக்க காலந்தொட்டே கூரிய விமர்சனங்கள் மூலமே உறவை கையாண்டுவந்திருக்கிறது. (கூரிய விமர்சனம் என்பது ''நபர்களைக்குறிவைத்ததோ'' அல்லது '' பிழைப்புவாதி, இனவாதி, பாசிஸ்ட்டு,'' என்பது போன்ற பெயர்சூட்டல்களோ அல்ல என்பதை இங்கு சுட்டவிரும்புகிறேன்). அதற்கான எமது கடந்த கால சான்றுகள் ஏராளம் உண்டு. தேவைப்படின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி.
சர்வதேசியவாதிகள்
இங்கு தமிழரங்கம் பெயரில் பின்னூட்டமிட்டிருப்பவர் உண்மையான தமிழ் அரங்கம் அல்ல, எழுந்துள்ள முரன்பாட்டை பெரிதுபடுத்தி குளிர்காய நினைக்கும் சதிகாரர்களின் வேலை என நாங்கள் அறிவோம்.

உண்மையான தமிழ் அரங்கம் எமது தளத்தில் இட்ட பின்னூட்டம்
/////tamilcircle
5:37 பிற்பகல் இல் ஆகஸ்ட்26, 2009

சரியான பதிலடி. வாழ்த்துகள்///////

அது சரி, சிண்டுமுடியும் வேலையை செய்யும் நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?
புரச்சி
மேலும், இன்றைய மறுகாலனிய பொருளாதார தாக்குதல் தமிழை முற்றிலும் துடைத்தெரியும் வேகத்துடன் முன்னேறி வருகிறது. ஒற்றை பாடத் திட்டம் என்ற பெயரில் ஆரம்ப கல்வியை மையப்படுத்தி இந்து இந்தி இந்தியாவை கொண்டு வர இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் எதிர்கொள்ள என்னவிதமான திட்டம் வைத்திருக்கிறார்கள் தமிழ்த் தேசியவியாதிகள்?

இந்த பிரச்சினைகள் பூதகரமாக வெடித்து மக்களின் பண்பாட்டு வாழ்வையும், பொருளாதார வாழ்வையும், அரசியல் வாழ்வையும் சிதைத்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்கள் மலையாளி, கர்நாடாக, ஆந்திர, மஹாராட்டிரா என்று கை காட்டி மக்களின் கவனத்தை பிரதான எதிரியிடமிருந்து திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால்தான் உங்களை போலி தமிழ் தேசியவியாதிகள் என்கிறோம்.

புரச்சி
புரச்சி
//''தமிழ்நாடு ஒரு தேசம். தமிழக மக்கள் ஒருதேசிய இனத்தவர்.''என்பதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லையெனில் இத்தேசவிடுதலை கோருபவர்களை//

தமிழ்நாடு எனும் ஒரு வரலாற்று வழி, பண்பாடு சார்ந்த நிலப்பரப்பில் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் இது தவிர்த்து சிறுபான்மை தமிழ்நாட்டுத் தெலுங்கர்கள், தமிழ்நாட்டுக் கன்னடர்கள் என்று பல் தேசியங்கள் உள்ளன. இதே போலத்தான் மற்றைய இடங்களிலும் இன்னும் புதிதாக, மறுகாலனியச் சூழலில், தாங்கிலம் பேசும்/தமிழறியாத தமிழ்நாட்டு தேசியர்கள் புதிதாக நுகர்வு பண்பாட்டு கூறுகளுடனும் குறிப்பிடத்தகுந்த காலனிய வரலாற்று நீட்சிகளுடனும் பெருகி வருகிறார்கள். இந்த முரன்பாடுகளை த.ஒ.வி.இ எப்படி எதிர்கொள்கிறது? அல்லது தமிழ்த் தேசிய வியாதிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?
புரச்சி
மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாட்டின் வாக்கு அரசியலுக்கு
அப்பாற்பட்ட அரசியல் இயக்கமாகும். ஈழப் படுகொலைகள் நடைபெற்றுக்
கொண்டிருந்த போது, தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழர்களுக்கு
ஆதரவான போராட்டங்களைத் திட்டமிட்டுச் சீகுலைத்தது. தமது
அணிசேர்க்கையினூடாக சந்தர்ப்பவாதக் கட்சிகள் இப் பிரச்சனையைக் கைவிட்டு
அரசியல் வியாபாரப் பேரம் பேசின. இந்த நிலையில் மக்களை நம்பியிருந்த
வாக்கு அரசியலுக்கு உட்படாத இடதுசாரிக் குழுக்களின் போராட்டங்கள் மட்டுமே
சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புகளையும் மீறி நடைபெற்றன. இவற்றுள்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பங்கு குறித்துக் காட்டத்தக்கது. இதன்
மாநிலச் செயலாளர் மருதையனின் நீண்ட நேர்காணல் மூன்று பிரிவுகளக
வகைப்படுத்தப் படுகிறது.
1. இந்திய கம்யூனிச இயக்கங்களின் வரலாறு.
2. தமிழ் நாட்டில் பின் நவீனத்துவம்.
3. இலங்கை இனப்படுகொலையின் போதான தமிழ் நாட்டுக் கட்சிகளின் போராட்டம்.
இம்மூன்று பகுதிகளில் மூன்றாவது பகுதி இங்கே தரப்பட்டுள்ளது…. இன்னும் வரும்…

++++++++++++++++++++
இனியொரு: முத்துக்குமார் தீக்குளித்த பின்னதான உணர்ச்சிகரமான அரசியல்
சூழலில் உங்கள் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருந்தது?

முத்துக்குமார் தீக்குளிப்பிற்குப் பின்னர், ஓய்வடைந்த நிலையிலிருந்த
போராட்டங்கள் புத்துயிர் பெறலாயின. போராட்டங்க ஓய்வடைந்த சூழலில் விரக்தி
மனப்பான்மை நிலையிலிருந்தே அவர் தீக்குளிக்கிறார். இதன் பின்னர்
உத்வேகமடைந்த போராட்டங்கள் பொதுவாக தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களாலும்
வழக்குரைஞர்களாலும் முன்னெடுக்கப்படுகின்றன. இப்போராட்டங்களில் எமது
அமைப்பு மிக முக்கிய பங்காற்றியது.
ஆறு மாவட்டங்களில் மாணவர்களைத் திரட்டி வேலைநிறுத்தம் செய்து
போராட்டங்களை நடத்தினோம். சில இடங்களில் சிபி ஐ மாணவர்கள் சிலர் கலந்து
கொண்டனர். மற்றைய இடங்களில் ஏனய மாணவர் அமைப்புக்கள் எதுவும்
இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தவில்லை. கல்லூரி மாணவர்கள் அனைவரையும்
அழைத்துவந்து சாலை மறியல் செய்வது, வேலை நிறுதம் செய்வது, ஊர்வலங்கள்
நடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

இவற்றையெல்லம் மீறி, அக்டோபரில் ஆரம்பித்த போராட்டமானது, ஜனவரி 26ம்
திகதி குடியரசு தினத்தன்று அண்ணாசாலையில் மிகப்பிரமாண்டமான போராட்டமாக
நடத்தப்பட்டது. அதற்குப் பின்னரும் பல்வேறு வழிகளில் ஈழப் போராட்டம்
தொடர்ந்தது.
உண்மையிலேயே முத்துக்குமார் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுத் தான்
இந்த முடிவை எடுத்திருந்தார்.

போராட்ட வடிவம் என்ற முறையில் நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாதாயினும்,
ஈழத் தமிழ் ஆதரவு உணர்வு கொண்டவர்களை அணிதிரளச் செய்வதற்கு
முத்துக்குமார் தீக்குளித்த பின்னதான உணர்ச்சிகரமான அரசியல் சூழல்ஒரு
ஆரம்பமாக அமைந்தது.

தமிழ் நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், அவர் பல சந்தர்ப்பங்களில்
எமக்கு ஆதரவளிப்பவர், அவரது மரணச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை
மேற்கொள்ளுகிறார். இந்த சந்தர்ப்பத்தில், நாம் இதனை ஒரு கிளர்ச்சியாக
மாற்ற வேண்டும் என்று கருத்தை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தோம். திரு
வெள்ளையனும் இந்தக் கருத்தில் மிகத் உறுதியுடனிருந்தார்.

மறுநாள் காலையில் அரசியற் கட்சித் தலைவர்கள் வருகிறார்கள். வை.கோ,
தா.பாண்டியன், திருமாவளவன், நெடுமாறன் போன்ற புலி ஆதரவுத் தலைவர்கள் மரண
ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வருகிறார்கள். இவர்கள் எல்லோரும்
உடனடியாக அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தை
முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில் நாமும், வெள்ளையனும் இதனை மக்கள் எழுச்சியாக, மிகப்பெரிய
ஊர்வலமாகத் தயார்படுத்தி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
இதை இந்த அரசியள் கட்சித் தலைவர்கள் அனைவரும் நிராகரிக்கிறார்கள்.

இனியொரு : ஏன் இவர்கள் இவ்வாறான போக்கை எதிர்த்தார்கள்?

அங்கு மக்கள் கணிசமான அளவு கூடியிருந்தனர். அங்காங்கே ஆர்ப்பாட்டங்கள்,
நாடகங்கள், பாடல்கள் என்று கிளர்ச்சி மனோபாவம் கூடியிருந்தவர்கள்
மத்தியில் மேலோங்கியிருந்தது.

இவ்வாறான கிளர்ச்சிகரமான சூழ் நிலை சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகிவிடும்
என்று அரசியற்கட்சித் தலைவர்கள் அஞ்சினர். மக்கள் எழுச்சியைக்
கட்டுப்படுத்த முடியாது போய்விடும் என்று வெளிப்படையாகவே கூறினர்.
ஆக, புலி ஆதரவாளார்களான மேற்குறித்த தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான
மக்கள் எழுச்சியை விரும்பவில்லை என்பதையே இது சுட்டி நின்றது.

இதன் பின்னர் அரங்கத்தினுள் இந்தத் தலைவகளுடன் நடத்திய பேச்சு
வார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படாமல், கூடியிருந்த மக்களிடம்
அபிபிராயம் கேட்பதாக முடிவெடுக்கப்பட்டது.
வெள்ளையன் பின்னதாக வெளியே வந்து ஒலிவாங்கியின் முன்னால் கூடியிருந்த
மக்களிடம் பேச ஆரம்பித்தார். இம்மரண ஊர்வலம் குறித்து இரண்டு
கருத்துக்கள் இருப்பதாகவும், அதில் முதலாவது உடலை உடனே எடுக்கவேண்டாம்,
ஓரிரு நாட்கள் வைத்திருந்து மக்களைத் திரட்டிப் பின்னதாக பெரிய ஊர்வலமாக
நடத்தலாம் என்று ஆரம்பித்து மற்றைய கருத்தைக் கூற ஆரம்பித்த போது அங்கு
கூடியிருந்த பொதுமக்கள், முதலாவது கூறியது தான் சரியான கருத்து எனச்
சத்தமிட்டு மற்றக் கருத்தைச் சொல்வதற்கே இடம்வைக்கவில்லை.

அப்படியிருந்தும் இரண்டாவது கருத்தை நீங்களே கூறுங்கள் என்று திருமாவளவன்
கையில் மைக்கைக் கொடுக்கிறார். அங்கு கூடியிருந்த மக்கள் திருமாவளவனைப்
பேசவே அனுமதிக்கவில்லை. அதனால் தவிர்க்க முடியாமல் மக்கள் விருப்பப்படியே
இறுதி ஊர்வலத்தை நடத்துவதற்கு ஒத்துக்கொண்டனர்.

இதன் பின்னர் திருமாவளவன், நெடுமாறன், பாண்டியன் உட்பட அனைத்துத்
தலைவர்களும் அந்த இடத்திலிருந்து அகன்று விடுகிறார்கள்.

இவ்வாறு இறுதி ஊர்வலத்தை எழுச்சி மிக்கதாக நடத்தவேண்டும் என்று எமது
தோழர்கள் இவர்களுடன் போராடியது ஒருபுறமிருக்க, இதற்காகப் போராடிய
செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்,
இளைஞர்கள், வழக்குரைஞர்கள், போன்ற பல தரப்பினர் கூடியிருந்த மக்கள்
மத்தியிலிருந்தபோதும், கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு பலத்த
எதிர்ப்பு எழுந்தது.

இவர்களெல்லாம் வெளியேறிய பின்னர் இரண்டு நாட்கள் உடல்
வைக்கப்பட்டிருந்தது. பெருந்தொகையான மக்கள் திரண்ட பின்னர் எழுச்சிக்
குரல்களோடு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தின் போது எமது
தோழர்கள் ஈழ ஆதரவு வீதி நாடகத்தை நடத்திய வண்ணம் முன்னால் சென்றனர்.

இனியொரு: மற்றைய பாராளுமன்ற வழிக் கட்சிகளும் நீங்களும் நடத்திய
போராட்டங்களிடையேயான வேறுபாடு என்ன?

ம.க.இ.க மாணவர்களை அணிதிரட்டி நடத்திய போராட்டங்கள் தவிர தன்னிச்சையாகப்
பல இடங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். பல இடங்களில்,
உதாரணமாக, திருச்சி போன்ற பகுதிகளில் இதற்குத் தலைமை தாங்கிய மாணவர்கள்
கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அரச படைகளால் கைது
செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களை அணிதிரட்ட முயன்ற
எமது தோழர்களை போலிசார் மூர்க்கத் தனமாகத் தாக்கி, குறிப்பாக ஐந்து
தோழர்கள் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு சிறை
வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை வெளியே எடுப்பதற்காக வக்கீல்கள்
போராட வேண்டியிருந்தது.

தவிர, வழக்குரைஞர்கள் போராட்டம் என்பது குறித்துக்
காட்டத்தக்கது.ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என்று
பல தரப்பு வர்க்கப்பிரிவுகளைச் சார்ந்தவர்களை எடுத்துக்கொண்டால் அதில்
தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தை நடத்தியவர்கள்
வழக்குரைஞர்களே ஆவர். இவர்களின் போராட்டத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பு
என்பது கோடிட்டுக் காட்டத்தக்கது. இது தவிர சோனியா காந்தியின் கொடும்பாவி
எரிப்பு, காங்கிரஸ் கட்சிக் கொடி எரிப்பு போன்ற போராட்டங்கள் மதுரை போன்ற
இடங்களில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் மத்தியிலும்
சரி, மதுரையிலும் சரி, மற்றும் திருச்சி, கரூர் தஞ்சாவூர், தூத்துக்குடி,
திருவெண்ணாமலை, போன்ற பல பகுதிகளில் எமது தோழர்களான வழக்குரைஞர்கள்
முன்னணியிலிருந்து இப்போராட்டத்தை நடத்தினர்.

ஈழ ஆதரவுப்ப் போராட்டதை சென்னை உயர் நீதி மன்றத்தில் நடத்தியவர்கள் மீது
போலிஸ் நடத்திய மூர்க்கமான தடியடிக்கும் ஒரு பின்புலம் உண்டு.

சிதம்பரம் கோவிலில் சமஸ்கிருதத்திற்கு எதிராகத் தமிழ் பாடும் உரிமையை
நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை எமது அமைப்பினூடாக நடத்தி
வெற்றிகண்டிருந்தோம். இது ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளாக முடியாத ஒரு காரியமாக
இருந்து வந்தது. இதற்கான சட்டரீதியான உரிமையை வழக்காடி வெற்றிபெற்றோம்.
இவ்வுரிமைக்கான நீதிமன்ற ஆணையை இரத்துச் செய்வதற்காக, சுப்பிரமணிய
சுவாமிகள் தலையிடுகிறார். இவரை சிதம்பரம் கோவிலில் விசேட பூஜைகளை
மேற்கொண்டு, தீட்சகர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.
தமிழ்மதியன்
//தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வரும் சாதிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் உளவு துறையினரின் சதிதான் எனில் உங்கள் பார்வையில் தென் மாவட்டங்களில் 60களில் சாதிய கலவரத்தை தூண்டிய ’முத்துராமலிங்கம்’ உளவு துறையின் கைக்கூலியா? //

மிகப் பெரிய ஜமீன் குடும்பத்தில் பிறந்து நாட்டுக்காக தன் வாழ்ந்த காலம் முழுவதையும் அர்பணித்தது மட்டும் அல்லாமல் ; தன் சொத்துக்கள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு மறைந்த முத்துராமலிங்கத் தேவர், உங்களை பொருத்தமட்டும் சாதிக்கலவரங்களை தூண்டிவிட்டவர்.

அவர் பிறந்த பசும்பொன் கிராமத்திற்கு சென்று பாருங்களடா.. அவர் வாழ்ந்த வீடு முதல் அவரின் சமாதி வரை அத்தனையும் இன்றும் நிர்வகித்து பராமரிப்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தாம்..

அவர் வழியில் வந்த நாங்கள் ஈழ மக்களுக்காக போராடவில்லையா..? இல்லை அதரவுதான் தெரிவிக்கவில்லையா..?

கொஞ்சம் யோசியுங்களடா.. முட்டாள்களா....

http://thayagapookkal.blogspot.com
புரச்சி
//சிங்கள இனவெறி அரசையோ அதற்கு முழு உதவிகள் புரிந்த இந்தியாவையோ, உலக நாடுகளையோ கண்டிக்க வக்கற்ற கூட்டம் என்று தமது கட்டுரையை துவங்குகிறார் அதிரடியான்.

யார் வக்கற்ற கூட்டம் ?
இந்தியாவே போரை நிறுத்து!
இந்தியாவே தலையிடு!
இந்தியாவே ஈழத்தை அங்கீகரி!

என்று இந்தியாவிடம் பிச்சை கேட்ட தமிழ்தேசிய அமைப்புகள்(நேரடியாக மற்றும் மறைமுகமாக)சோனியா காந்தியிடம் மடிபிச்சை கேட்டும், ஒபாமாவின் மனிதாபிமான உணர்வுக்கும், கருணாநிதியின் தமிழின உணர்வுக்கும் கோரிக்கைகள் வைத்தும்,மக்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு பார்ப்பன ஜெயலலிதாவை நம்பச்சொன்னதும் யார்? ம.க.இ.க வா? தமிழ் தேசிய கூட்டமா ? யார் வக்கற்ற கூட்டம் ?//

காமெடியான், உய்யாலா, லபுக்கு தோசை இவிங்கள்ளாம் ஒவ்வொருத்தரா வந்து மேல உள்ளதுக்கு பதில் சொல்லிட்டு போங்க கண்ணுங்களா...

புரச்சி
இவான்
////////அவர் பிறந்த பசும்பொன் கிராமத்திற்கு சென்று பாருங்களடா.. அவர் வாழ்ந்த வீடு முதல் அவரின் சமாதி வரை அத்தனையும் இன்றும் நிர்வகித்து பராமரிப்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தாம்..////////////

அப்புறம் ஏன் தேவர் ஜெயந்தி நெருங்கும் நாட்களில் தென் மாவட்டங்களில் பதற்றம் ஏற்படுகிறதாம்?
அந்த நாட்களில் தலித் மக்கள் ஏன் தாக்கப்படுகிறார்களாம்?

டாக்டர் பாண்டியனும் மற்ற தமிழ் தேசியவாதிகளும், இவரை போலுள்ள சாதிவெறியரையாவது அம்பலப்படுத்துவார்களா?

இவரை போலுள்ளவர்களின் சாதி அபிமானம் சரிதானா? தமிழ்தேசியத்திற்க்கு உகந்தது தானா?
Sivam Amuthasivam
ஐயா! உலகில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமாக: பெற்றதாயின் நடத்தை குறித்து ஒருவன் விமர்சனம் செய்யத்துணிவானா? அடுத்தவன் விமர்சனம் செய்தாற்றான் பொறுத்துக்கொள்வானா?
இஃதொருபுறமிருக்க, இந்தவிதத்தில் இதை ஆராய்ந்துபார்ப்போம்.
ஒரு தொழிற்சாலையின் உற்பத்திப்பொருட்களில், நாளொன்றுக்குச் சராசரி ஒரு இலட்சம் சேதாரம் என்றால், உடனேயே அடடா! ஒரு இலட்சமா? என்று வாயைப்பிளக்கக்கூடாது ! மாறாக, அத்தொழிற்சாலையின் நாளாந்த உற்பத்தி எவ்வளவு என்பதை முதலில் அறிந்துகொள்ளவேண்டும்!
10 கோடி உற்பத்தி நடைபெறும் இடத்தில், ஒருசில இலட்சங்கள் சேதாரம் ஏற்படத்தான் செய்யும்.
இதேபோலத்தான், புலிகள் செய்த சாதனைகளகளையெல்லாம் பட்டியலிட்டால், நீங்கள் குறிப்பிடும் விடயங்களெல்லாம் வெறும் அல்பங்கள்!
உற்பத்தியே இல்லாமல் வெறும் சேதாரங்களை மட்டுமே ஏற்படுத்தியவனையெல்லாம் விட்டுவிட்டு, “ கடிக்கிறதை விட்டு ஊருவதைத்தடவிய கதையாக” புலிகளையே போட்டுத்தாக்குகிறீர்களே!
senthil kumar.p
விடுதலை என்னும் விடியலை தேடி வீறு கொண்டு போர் செய்த புலிகள் வீழ வில்லை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! மீண்டும் துவங்கும் போரட்டம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நடக்கும் வெற்றி தேரோட்டம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
mani
It is ridiculous for people like you, having Marxist totalitarianism
as your ideological talking about Tamil fascism and LTTE. you have again proved that communists are a bunch of hypocrites. First you take care of your backyard, before criticizing others.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.