சர்வதேச சமூகங்களுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. இருக்காதா பின்னே. மனித உரிமை பாதிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா நமது சர்வதேச சமூகங்கள். அவர்களின் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இம்மனிதகுலத்தை எண்ணையூட்டி சீராட்டி வளர்ப்பதுதான். லிபியாவில் எண்ணெய் இருக்கிறது. அதோடு மனிதஉரிமை பாதிக்கப்படுகிறது. ஆகா உள்ளே நுழைய வழியிருக்கிறது. கொதித்தெழுந்து விட்டார் நமது அமெரிக்க சாம் மாமா. அமெரிக்க மற்றும் இதர அய்ரோப்பிய விமானங்கள் குண்டுகளை சரமாரியாக லிபிய நாட்டின் அரசுப்படைகளின்மீது போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வீசத் தொடங்கிவிட்டன. அடடா என்னே அமெரிக்காவின் மனித உரிமைத்தொண்டு என்று நீங்கள் புல்லரித்துப் போய்விடாதீர்கள்.
இது எண்ணெய் உரிமைத்தொண்டு. இந்த மனித உரிமைப்போரில் சின்னண்ணன் இந்தியாவின் வேடம் மிகப் பிரசித்திப் பெற்றது. அவர்கள் சே குவேராவைப் போலல்லாமல் புரட்சியை இறக்குமதியோ அல்லது ஏற்றுமதியோ செய்யமுடியாது என்பதில் திட்டவட்டமான கருத்துடையவர்கள். (இறக்குமதியோ அல்லது ஏற்றுமதியோ செய்ய அது கச்சா எண்ணெயா என்ன?). இந்தியாவின் இந்த புதிய மனித உரிமை வேடத்துக்கு காரணம் வேறொன்றுமில்லை. கடாபி முன்பு ஒரு மிரட்டலை மேற்குலக நாடுகளுக்கு விட்டிருந்தார் அதாவது சும்மா மனித உரிமை என்று பந்தா விட்டுக்கொண்டிருந்தால் அனைத்து எண்ணெய் வளங்களின் உரிமையையும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்போவதாகச் சொல்லியிருந்தார். எண்ணெய் உரிமைக்காக போட்ட மனித உரிமை வேடம்தான் இந்தியாவின் இந்த கூக்குரல். சிங்கங்கள் தின்னும் இரையில் மீந்துபோய் ஏதேனும் கிடைக்குமா என்று நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு கிடக்கும் ஓநாய்களின் நிலைதான் இந்தியாவின் நிலை.
இந்த மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவின் மனித உரிமைக் கோவணங்கள் ஈழத்தில் கிழிந்து அம்மணமாக இவர்கள் உலக அரஙகில் உலா வந்தததும், அது பற்றிய எந்த பிரஞ்ஞையும் இல்லாமல் மங்குமங்கென்று குதித்து கிங்கிணியாட்டம் ஆடியதும் யாருக்குத்தான் மறந்துபோயிருக்கும். அடுத்த வருட விக்கி கசிவுகளில் இந்த மனித உரிமைத் தலைவர்கள் ஈழத்தில் மனித உரிமை பற்றி கண்ணை மூடிக்கொண்டது பற்றி இப்படிச் சொன்னது வந்தாலும் வரலாம். “லிபியாவில் எண்ணெய்வளம் இருக்கிறது. எனவே அவர்களின் மனித உரிமையில் தலையிடுகிறோம். ஈழத்தில் எண்ணெய் வளம் இல்லை, எனவே எம்மால் தமிழர்களின் மனித உரிமை விடயஙகளில் தலையிட முடியவில்லை. இப்போது அனைத்து தமிழர்களையும் கொன்று புதைத்துவிட்டோம். எனவே ஈழத்திலும் எண்ணெய்வளம் பெருகும். அதன்பின்பாக நாங்கள் அவர்களின் மனித உரிமையில் தலையிடுவோம். வரலாறு முக்கியம் அமைச்சரே". நிற்க.
கர்நாடகா மாநிலத்தின் மங்களுரில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராகயிருப்பவர் ஒரு தமிழர். தமிழர் என்றால் நம் சரண்டர் 114 தொகுதி தமிழரல்ல. தமிழராய்ப் பிறந்ததிலும் தமிழ்மொழியைப் பேசுவதிலும் பெருமை கொள்பவர். தாய்மொழி தவிர ஆங்கிலம், மலையாளம், கன்னடம், லத்தீன் போன்ற மொழிகளில் சரளமாக உரையாட மட்டுமன்றி பின்னி எடுக்கும் திறமையுள்ளவர். ஆயினும் தமிழில் பேசும்போது மட்டும்தான் தமக்கு பேச்சுத்திருப்தி கிடைப்பதாக உளமார்ந்து சொல்பவர். தமிழகத்தைவிட்டு வந்து சுமார் முப்பத்திஏழு ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் தமிழ் அடையாளங்களை கொஞ்சமும் கைவிட்டு விடாமல் தான் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் தமது குழந்தைகளையும் பின்பற்ற வைப்பவர். அவர் வீட்டை அடையாளங்காண்பது மிகவும் எளிது. தமிழ் நாடகம் அல்லது தமிழ்ப் பாடல் ஒன்று தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும். இவர் லுங்கியில் அமர்ந்து ஏதேனும் ஒரு தமிழ் செய்தித்தாளை படித்துக் கொண்டிருப்பார். அதிலும் இவரின் தமிழ்ப்பற்று சமீபத்திய தமிழ்த்தேசிய பின்னடைவிற்குப் பின்பும், தேசியத்தலைவர் பிரபாகரன் ஆயிரத்து பத்தாம்முறையாம் முறையாக செத்துவிட்டார் (எத்தனைமுறை தலைவர் கொல்லப்பட்டார் என்று மிகச்சரியாக கணக்கு வேண்டுபவர்கள் திருமிகு காஞ்சி காமகோடி இந்து ராமை கேட்டுத் தெரிந்துகொல்லவும்) என்று அறிவிக்கை வெளியானபின்பும் மிகவும் அதிகரித்திருந்தது.
அதுபோக இவர் ஒரு ரோமன் கத்தோலிக்க கிறித்தவர். ஏன் மதத்தைப்பற்றி நான் பேசுகிறேன் என்றால் மங்களுரில் சிறுபான்மை மதத்தினராய் இருப்பது மிகவும் ஆபத்தானது. அதிலும் இவர் தமிழ் கிறித்தவர். இவர் வீடு இந்துத்துவ வெறியர்கள் நிரம்பியுள்ள பகுதியில் இருந்தாலும் தாம் பின்பற்றும் மதத்தில் மிகுந்த பற்றுதலோடு இருப்பவர். எந்த நெகிழ்வும் இன்றி காலைப்பூசைக்கு (ஆங்கிலத்தில் மாஸ் என்று சொல்வது, பாதர் என்று கிறித்தவ சாமியார்களை அழைப்பது என்பதெல்லாம் இவர் அகராதியில் கிடையாது. தமிழர்களிடம் அல்லது நன்றாக தமிழ் தெரிந்தவர்களிடம் பேசும்போது தூயதமிழ்தான்) சென்றுவிடுவார். இவரோடு நான் ஒருமுறை மகிழ்வுந்தில் பயணம் செய்தபோது சிலபேர் சாலையின் குறுக்கே நின்று விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். உடனே இவர் அவர்களைப் பார்த்து இந்த துளுக்கனுங்க மல்லுக்கட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொன்னார். இசுலாமியர்கள் என்றாலே ரௌடிகள், முரடர்கள் என்ற எண்ணம் எவ்வளவுதான் முற்போக்கானவராகயிருந்தாலும் அவர் உள்ளத்தில் ஆழ இடம்பெற்றிருந்தது. அவரின் நடவடிக்கைகளை நான் தொடர்ச்சியாக உற்றுக்கவனித்தபோது இந்த இசுலாமியர்கள் பற்றிய தவறான போக்கு அவரின் எல்லா நடவடிக்கைகளிலும் தவறாமல் இடம்பெற்றிருந்தது எனக்கு வியப்பை அளித்தது. ஓரளவிற்கு சமூக அறிவோடு இருந்தும் இந்த இசுலாமியர் பற்றிய கட்டுக்கதைக்கு அவர் எப்படி ஆட்கொண்டார் என்று நான் பல சமயங்களில் என்னை நானே கேள்வி கேட்டுக்கொள்வேன். நிற்க.
இசுலாமியர்களைப் பற்றி பல கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன. அவர்கள் முரடர்கள், எந்தவிதமான நெகிழ்வுத்தன்மையும் அற்றவர்கள். இசுலாமியப் பெண்களை காதலித்தால் ஒன்று மேலே வெட்டுவார்கள் (கழுத்தை) அல்லது கீழே (எதுவென்று சொல்ல வேண்டியதில்லை) வெட்டுவார்கள். இன்னும் பல கட்டுக்கதைகள் சுதிப்தா கவிராஜன் இந்தியாவின் கற்பிக்கப்பட்ட நிறுவனம் என்ற கட்டுரையில் வருவதுபோல் அங்கீகரிக்கப்பட்ட கதையாடல்களாகிப் போயின. இதற்கு பல முற்போக்குவாதிகளும் இரையாகிப் போவதுதான் கொடூரமான விடயம். இதுபற்றி நான் சில புத்தகங்களை தமிழ்நாட்டில் இருந்தபோது வாசித்துள்ளேன். ஓன்று மகஇகவின் ‘கண்ணை மறைக்கும் காவிப்புழுதி’. மற்றொன்று அண்ணன் அ.மார்க்சின் சில கட்டுரைகள். இசுலாமியர்களின் தவறுகளாக புனையப்பட்ட தவறுகளை போராட்ட வளர்ச்சிப்போக்கில் நடக்கும் சில பிசிறுகளாக மிகச்சரியாகப் பார்க்கும் அ.மார்க்சு, புலிகளின் தவறுகளை பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கி அய்யோ அம்மா என்று கதறுவது அவரை தோள்களில் தாங்கிப் பிடித்துக்கொண்டு “செல்லக்குட்டி அம்முக்குட்டி அப்படி எல்லாம் கத்தியால குத்தக்கூடாது, தமிழங்களுக்கு வலிக்குமுல்ல”என்று இன்னமும் கொஞ்சிக் கொண்டிருக்கும் மாலெ தோழர்களுக்கே வெளிச்சம். நிற்க.
எட்வர்டு செயித் - இன்னும் பல இசுலாமியர்களால் இசுலாமியர் என்றே அறியப்படுபவர். ஆனால் இவர் ஒரு பாலத்தீனிய கிறித்தவக் குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் புகைப்படங்கள் எனது பதின்ம வயதில் என்னைக் கவர்ந்து இழுத்தன. அதிலும் இவரின் அட்டகாசமான கல்லெறியும் புகைப்படங்கள் இளைஞர்கள் மனதில் இன்னும் அதிக வீரியத்தை இட்டுச்சென்றன. அறிவுஜீவிகள் என்றால் வெறுமே எழுதுவதோடும், நோகாமல் நொங்கெடுக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசித்தீர்க்க வேண்டும் என்று காகிதப்புலிகளுக்கு வரையப்படும் இலக்கணங்கள் மற்றும் வரைமுறைகளையெல்லாம் தாண்டி பாலத்தீனிய எல்லையில் வந்து அமர்ந்திருக்கும் இசுரேலிய சூரப்புலிகளின் மீது கல்லெறிந்தவர். இந்தக் கல்லெறிதலுக்கு எதிராக இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்பதால் இவர் மீது அய்யய்யோ வன்முறை என்று கதறுபவர்களின் கண்டனக்குரல் அதிகமானபோது, அது சும்மா கல்லெறியும் விளையாட்டுபா, சீரியசா ஒண்ணும் இசுரேலியப் படைகளின் மீது எறியவில்லை என்று புளுகியவர். இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எட்வர்டு செயித்தின் கட்டுடைப்புகள் பற்றி. பதவி மற்றும் இத்தியாதிகளின் மீதான முதலாளித்துவ கட்டுமானங்களை கட்டுடைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அதற்கு மேலே சொன்ன கல்லெறிதலும், புளுகுதலும் இரு உதாரணங்கள்.
பாலத்தீனிய தேசியக்குழுவில் ஒரு முக்கிய உறுப்பினர். பாலத்தீனிய நெருப்புக்கவிஞன் முகமது தார்வீசின் சிறந்த நண்பர். பல சமயங்களில் பாலத்தீனிய தேசத்தின் குரலை சர்வதேச அரங்கில் ஒலிக்கச்செய்தவர். இன்னும் நிறைய இருக்கிறது, இவரைப்பற்றிப்பேச. இவர் ஆங்கிலத்தில் ஓரியண்டலிசம் (கீழைநாட்டு வழக்காற்றியல் மொழிபெயர்ப்பு சரிதான் என்று நினைக்கிறேன்) என்றொரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கீழை நாடுகளின் மீதான மேற்கத்திய நாடுகளின் எண்ணங்கள்மீதும் அதுபற்றிய அவர்களின் பண்பாட்டுக் கட்டமைப்புகள் பற்றியும் பேசி பின்பு அதை கட்டவிழ்க்கிறார். மேற்கத்திய மேலாதிக்க எண்ணங்களை அவர் கட்டுடைக்கும் விதம் அலாதியானது. அவரின் எழுத்துக்கள் இந்த மாதங்களில் மிக முக்கியமானது. ஏனெனில் அனைத்து கிழக்கு முக்கியமாக இசுலாமிய நாடுகளில் மக்கள் புரட்சி கொதித்துக்கொண்டிருக்கிறது.
உலக மக்கள் மற்றும் உலக ஆளும் வர்க்கங்கள் அனைவரும் இசுலாமிய மன்னர்கள் மற்றும் தலைவர்களின் கொடூரங்கள் பற்றி கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுபோக உடனடியாக அய்க்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று கூக்கிரலிட ஆரம்பித்து விட்டார்கள். அய்க்கிய நாடுகள் சபைக்கென்று படை ஏதுமில்லை என்பதும் அது பயன்படுத்தும் படைகள் அனைத்தும் பகாசுர நாடுகளான அமெரிக்க, பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் தமது நாட்டில் கொட்டிக்கிடக்கும் புரட்சியை ஏற்றுமதி செய்ய தனது படைக்கலன்களை அனுப்ப ஆரம்பித்துவிட்டது. எண்ணெய் வளமிக்க நாடுகளான மத்திய கிழக்கு இசுலாமிய நாடுகளின் பிரச்சனைகளில் அமெரிக்க மற்றும் இன்னபிற நாடுகள் தலையிடுவதற்கு முக்கியமான காரணமாக எண்ணெய் வளம் இருந்தாலும் அதுபற்றிய சிந்தனை இருந்தும் மீண்டும் மீண்டும் மேற்குலக மக்கள் அதை வரவேற்பதற்குக் காரணம் இந்த அய்ரோப்பிய மேல்நிலையாக்க உளவியலே என்கிறார் எட்வர்டு செயித்.
செயித்தின் ஓரியண்டலிசத்தை சுருக்கமாக மூன்று பகுதியாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் மேற்கத்திய உலகம் உலகை மேற்கு கிழக்கு என்று இரண்டு பிரிவாகப் பிரித்துவிட்டதாகவும், ஒரு செயற்கையான எல்லை ஒன்றை இடையில் வரைந்து, நம்முடையது, அவர்களுடையது என்று ஆக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார். மேற்கத்திய நாடுகள் கிழக்கு நாடுகளையும் அந்நாடுகளைச் சேர்ந்த மக்களை நாகரிகமற்றவர்கள் என்றும் முரடர்கள் என்றும் வரையறுத்ததன்மூலம் தம்மை நாகரிகமானவர்கள் என்றும் மென்மையானவர்கள் என்றும் வரையறுத்துக் கொண்டார்கள். அராபிய மற்றும் கிழக்கு நாடுகளின் மதங்களை பயங்கரவாத மதம் என வரையறுத்ததன் மூலம் தம்மதத்தை கருணையுள்ள மதமாக வரையறுத்துக் கொண்டார்கள். கிறித்துவின் பெயரால் கிறித்தவமதம் என்று கிறித்துவ மதம் அழைக்கப்படுவதுபோல் முகமதுவின் பெயரால் முகமதியம் என்று இசுலாமிய மதத்தை மேற்குலகினர் அழைப்பதை செயது குற்றஞ்சாட்டுகிறார்.
மேலும் அவர் மேற்கத்திய நாடுகள் கிழக்குநாடுகளின் மீது இருவிதமான பார்வைகளை வைத்திருப்பதாகக் கூறுகிறார். ஓன்று இழிவான பார்வை (அது மேலே நாம் கண்டது) இரண்டாவது பார்வை மிகவும் போலித்தனமான உயர்வான பார்வை. அதாவது திருமணத்திற்கு முன்பாக மற்றும் பின்பாக பெண்கள் பற்றிய ஆண்களின் பார்வை எப்படி மாறுபடுகிறதோ, அதைப்போன்ற பார்வை இது. திருமணத்திற்குமுன் தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தமென்று குடிப்பார் நம்மாளு, திருமணத்திற்குப்பின் அந்த தேவதை சனியனாகிவிடும். அதுபோன்ற பார்வை மேற்குலக நாடுகளுக்கு கிழக்கு நாடுகளின்மீதும் அம்மக்களின்மீதும் இருப்பதாக கூறுகிறார் செயது. இந்த கிழக்கு நாடுகள் எந்த பாவமுமற்ற புனிதமான நிலங்கள் என்றும் அம்மக்கள் அனைவரும் அப்பாவிகள் என்றும் அப்பாவிகளை மேற்குலக மீட்பர்களே காப்பாற்றமுடியும் என்றும் மேற்குலக தத்துவம் சொல்வதாக செயது குற்றஞ்சாட்டுகிறார். எப்படி மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய மனிதகுலத்தை வெறும் ஆட்டுமந்தையாக கிறித்தவ மதம் கண்டு, இரக்கப்பட்டு ரட்சிக்க இயேசு என்ற மேய்ப்பரை இறக்குமதி செய்தததோ, மீண்டும் அவர் வருவார், அதுவரை பொறுங்கள் ஆடுகளே என்று ஆறுதல்படுத்தித்கொண்டிருக்கிறதோ அதுபோல மேற்குலகம் கிழக்குலக நாடுகளின் மீட்பர்களாக மாற முயற்சிப்பதற்காக கட்டுக்கதை அவிழ்த்துவிடுவதாக குற்றஞ்சாட்டுகிறார்.
மூன்றாவது பகுதியில் அவதார் படத்தின் வேலைகளை மேற்குலகங்கள் பார்ப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். அதாவது கிழக்கு நாடுகள் ஏதோ கையாலாகாதவர்கள் என்பதுபோலவும் எனவே அமெரிக்கா கதாநாயகன்களின் உதவி அவர்களுக்கு தேவைப்பட்டே ஆகிறது என்ற மேற்குலக ஏகாதிபத்திய மனோநிலையை மிகக்கடுமையாக கண்டிக்கிறார் செயது. எந்த அவதார்களும் இன்றி அவர்கள் எதையும் சாதித்துக்காட்டும் வல்லமையுள்ளவர்கள் என்பதில் செயதுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையுண்டு. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியற்பிரிவுச்செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன் சொன்னது நினைவில் வருகிறதா? இப்படி மேற்குலகநாடுகள் நாம் முதற்பத்தியில் கண்ட காரணங்களுக்காக எழுப்பி விடப்பட்ட கட்டுக்கதைகள் பெரும் பூதங்களாக எழும்பி உலகமெலாம் வியாபித்திருக்கிறது. அந்தக்கதைகளின் தாக்கம்தான் நாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் பத்திகளில் கண்டது. இந்தக் கருத்துக்களை அப்படியே இந்துத்துவாதிகள் கையில் எடுத்துக்கொண்டு அப்பாவி இசுலாமியர்களைப்பற்றி தமது சொந்த ஊர்களுக்கேற்ப கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதை அப்பாவி இசுலாமியர்களே நம்பும் நிலை இன்றுள்ளது.
தொடர்ச்சியாக ஒரு பொய் மீண்டும் மீண்டும் சொல்லப்பட அது உண்மைதானோ, நம் இசுலாமிய மக்கள் முரடர்கள்தானோ என்று இசுலாமியர்களும், ஏனைய முற்போக்காளர்களும் கருத ஆரம்பித்துவிட்டார்கள். இந்த பொய் பரப்புரையில் மேற்குலக கட்டுமானங்களைக் காட்டிலும் இந்திய இந்துத்துவாதிகள் நிரம்ப வெற்றி பெற்று விட்டதாகத்தான் சொல்லவேண்டும். இருதினங்களுக்கு முன்பாக கடாபி விடுத்த மிரட்டல் அறிவிக்கையில் வரிக்கு வரி எட்வர்டு செயதின் ஓரியண்டலிசத்தை தெரிந்தோ தெரியாமலோ சொல்லியிருக்கிறார். ஓரியண்டலிசத்தின் எளிமைப்படுத்தப்பட்ட வரிகளாக அவரின் அனல் அறிவிக்கையிருக்கிறது. பேச்சில் நியாயம் இருந்து என்ன செய்ய? சாத்தான் வேதம் ஓதுவதாகத்தான் சொல்லவேண்டும். ஆனால் ஓரியண்டலிசம் கதைக்கும் விடயங்கள் இன்னும் அப்படியே செயல்பாடுகளில் இருப்பதுதான் கொடூரமானது. மேற்குலங்கள் இதோ மீண்டும் சையது சொன்ன குற்றச்சாட்டை உறுதி செய்வதுபோல நியாயத்தை தமது போர்விமானங்களில் ஏற்றிக்கொண்டு அரபுதேசங்களில் ஏவுகணைகளாக இறக்குமதி செய்ய சென்றுவிட்டன.
கொடூரமான விடயம் என்னவெனில் மேற்குலக நாடுகளின் மக்களும் அதே (இசுலாமியர்கள் முரடர்கள், இசுலாமிய மதம் பயங்கரவாதிகளின் மதம் என்ற) கட்டுக்கதைகளில் கண்மூடிக்கொண்டு மல்லாந்து படுத்துக் கிடக்கிறார்கள். இதோ கடாபியைக் கட்டுப்படுத்த சென்ற போர்விமானங்கள் இனிமேல் அவரை ஒழித்தபின்பு நாடாள்வது எப்படி என்று அந்நாட்டு மக்களுக்கு கற்றுத்தர ஆரம்பிக்கும். அதைக்கண்டு பொறுக்கமாட்டாமல் மக்கள் கிளர்ந்து எழுந்து அமெரிக்க நாயே அல்லது அய்ரோப்பிய நாய்களே வெளியே போ என்று செருப்பாலும் நெருப்பாலும் அடித்து விரட்டுவார்கள். இந்தக் கொடுமைகளை கண்டு கண்டுங்காணாமல் இருந்த மேற்குலக மக்களின்மீதும் அவர்களின் கோபம் திரும்பும். அந்தக்கோபங்கள் சில சமயங்களில் மேற்குலக நாடுகளின் வீதிகளில் மனித வெடிகுண்டுகளாய் வெடிக்கும். தம் நாட்டின் அடாவடிகளை தட்டிக் கேட்காத நீயும் அடாவடிகளின் பங்காளன்தான் என்ற நீதி மேற்குலகிற்கும் பொருந்தும். அது பற்றி அண்ணன் அ.மார்க்சும் ஒரு கட்டுரை எழுதுவார். ஏன் மாலெ இயக்கங்களும் அதை ஆதரிப்பார்கள். ஆனால் அதை ஒரு சில சமயங்களில் விடுதலைப்புலிகள் செய்ய நேரிட்டால் நீண்ட கால நோக்கில் பிரச்சனைகளை புலிகள் அணுகவில்லை. சர்வதேச சமூகத்தின் கோபத்திற்கு ஆளாகி ஈழப்போராட்டத்தை முட்டுச்சந்தில் நிறுத்திவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழும்பும். அண்ணன் பாமரன் மொழியில் சொல்வதென்றால் மனித உரிமைப் புடுங்கிகள் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
போங்கடா, நீங்களும் உங்க சர்வதேச சமூகமும் என்று கோபத்தோடு காறித்துப்பத் தோன்றினாலும், மடிக்கணினியில் எச்சில் படும் என்பதால் எச்சிலை முழுங்கிக்கொண்டு கட்டுரையை முடிக்கிறேன்.
இறுதியாக மேற்குலகம்தான் ஆகப் பிரசித்திப் பெற்றது. கிழக்குலகம் இழிவானது. மேற்குலகத்தார்களே அறிவின் தந்தை, நவீன கருவிகளின் உரிமையாளர்கள், கிழக்குலகம் இன்னும் வில் அம்போடு திரிகிறது. மேற்குலத்தார்களே அறிவில் சிறந்தவர்கள். கிழக்குலகத்தார்கள் முட்டாள்கள் போன்ற மேற்குலக மேலாதிக்கச் சிந்தனைகளை சிந்தாந்தரீதியாக உடைத்து நொறுக்கியவர் எட்வர்டு செயது. அதை நடைமுறையில் செய்து காட்டியவர் யாரென்று தெரியுமா? நம் ஓசாமா பின்லேடன்தான். இறுமாந்திருந்த அமெரிக்காவின் நடுமண்டையில் நச்சென்று ஆணியடித்தவர். உடைக்கவே இயலாது என்று பீத்திக்கொண்டிருந்த அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்ளே நுழைந்து ஜார்ஜ் புஷ்ஷை கோமணம் அவிழ்ந்ததுகூட தெரியாமல் ஓடவைத்தவர். எட்வர்டு செயது நினைத்திருக்க மாட்டார் அவரின் ஓரியண்டலிசம் என்ற தியரித்தாளின் செய்முறை வகுப்பை ஒசாமா பின்லேடன் இரட்டைக்கோபுரத்தின் மீது செய்துகாட்டுவார் என்று.
- சார்லசு அன்ரனி (