கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
கடந்த 10 ஆண்டுகளாகவே நரம்பியல் வல்லுநர்கள் உடம்பு அரிப்பதற்குக் காரணம் என்பதைப் பற்றி தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் வலிக்குக் காரணமான நரம்புகள்தான் அரிப்பு உணர்வுக்கும் காரணம் என்று பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்து வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர்.
வாஷிங்டன் பல்கலையின் மருத்துவப் பிரிவின் நரம்பியல் வல்லுநர் சென் என்பவர் எலிகளின் ஜீனோமை ஆராய்ந்தபோது கேஸ்ட்ரின் ரிலீசிங் பெப்டைட் ரிசப்டார் (GRPR Gastrin Releasing Peptide Receptor) என்றொரு ஜீனைச் செயல்படுத்தும் நரம்பு செல்கள்தான் அரிப்பிற்குக் காரணமான தகவல்களை மூளைக்கு அனுப்புகிறது என்றும் அவை முதுகுத்தண்டில்தான் செயல்படுகின்றன என்றும் கண்டுபிடித்துள்ளார்.
பாம்பெசெரின் என்ற நரம்பு விஷத்தைப் பயன்படுத்தி மேற்கூறிய ஜிஆர்பிஆர் புரதத்தைத் தாங்கிய நரம்பு செல்களை பரிசோதனை முறையில் எலிகளிடம் நீக்கியபிறது அதற்கு அரிப்பே ஏற்படவில்லை என்பதை நிரூபித்தார் திரு சென். அரிப்பை உண்டு பண்ணும் பொருளை தோலில் போட்டுத் தேய்த்தாலும் அந்த எலிக்கு அரிப்பு ஏற்படவில்லையாம்.
இனி எரிச்சலூட்டும் அரிப்பை நீக்க மருந்து கண்டுபிடிப்பதுதான் பாக்கி.
- முனைவர் க.மணி (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். கோழிதான் முதலில் வந்ததாம். இந்த கண்டுபிடிப்பு கணினியின் உதவியோடு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஷெஃப்பீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் முடிவின்படி முட்டையின் ஓட்டில்தான் ரகசியம் பொதிந்திருக்கிறது. முட்டை ஓடு உருவாவதில் கோழிக்குஞ்சின் புரதம் பெரும் பங்கு வகிக்கிறது. vocledidin-17 (OC-17) எனும் புரதம் முட்டை ஓட்டினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது ஏற்கனவே அறிவுலகம் அறிந்த ஒன்று.
கணினியின் துணைகொண்டு ஒரு செயற்கையான வேதிவினை நிகழ்த்தப்பட்டது. இந்த வேதிவினையில் கால்சியம் கார்பனேட் துகள்களின் மீது vocledidin-17 (OC-17) புரதம் ஒட்டிக்கொண்டு படிகங்களை உருவாக்கின. காலப்போக்கில் படிகத்தின் உட்கரு தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு பெரிதானதும் vocledidin-17 (OC-17) துகள்கள் உதிர்ந்துவிட்டன. அதாவது vocledidin-17 (OC-17) ன் பங்கு ஒரு கிரியா ஊக்கி என்பதோடு சரி. இவ்வாறு உதிர்ந்த vocledidin-17 (OC-17) புரோட்டின் துகள்கள் மீண்டும் கால்சியம் கார்பனேட் படிகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறது. இந்த வினையின் விளைவாக குறைந்தகாலத்தில் முட்டை ஓடு உருவாகிறது.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://news.discovery.com/tech/computer-simulation-cracks-chicken-egg-puzzle.html#mkcpgn=rssnws1
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
மனிதருடைய செவி வெளிச்செவி, நடுச்செவி, உட்செவி என மூன்று பாகங்களைக் கொண்டிருக்கிறது. வெளிச்செவி கண்ணால் காணக்கூடியது. வெளிச்செவியில் காணப்படும் துளை நடுச்செவிவரையில் நீண்டிருக்கும். நடுச்செவி ஒருபுறம் அடைபட்டுள்ள காற்று நிரம்பிய அறையாகும். நடுச்செவியையும், வெளிச்செவியையும் செவிப்பறை பிரிக்கிறது. வெளிச்செவிக்கும் நடுச்செவிக்கும் இடையே Eustachian எனும் குழாய் காற்றோட்டம் ஏற்படுத்துகிறது. புறச்செவியின் உள்ளே இருக்கும் காற்றழுத்தைவிட நடுச்செவியில் காற்றழுத்தம் அதிகரிக்கவோ, குறைவுபடவோ செய்யும்போது காதுகேளாமை, காதுவலி, சீழ் உருவாதல் ஆகிய நோய்கள் தோன்றுகின்றன. உட்காதில் காணப்படும் நுண்ணிய ஒலிஉணர் நரம்புத்தொகுதிகள் அதிர்வுகளை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. ஒலிஅதிர்வுகளை மூளை ஒலியாக உணர்ந்து கொள்ளும்.
நடுக்காதில் நீண்டகால நோய்த்தொற்று ஏற்படும்போது சீழ் உருவாகி விடுகிறது. மழைக்காலங்களில் நோய்க்கிருமிகள் எளிதில் பல்கிப் பெருகுகின்றன. இதனால் 75 சதவீத குழந்தைகள் காது நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். எதிர் உயிரிகளைக் கொண்ட மருந்துகளால் இந்த சீழ்வடியும் நோய் குணமாக்கப்பட முடியாமல் போகும்போது அறுவை சிகிச்சை நிபுணரால் மயக்கமருந்தின் உதவியால் காற்றோட்டக்குழாய்கள் நடுக்காதுக்குள் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஏழு லட்சம் குழந்தைகள் இந்தவகையான நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு செருகி வைக்கப்படும் குழாய்கள் நான்கு முதல் ஏழு மாதங்களுக்குள் கழன்று விழுந்துவிடுவதால் சீழ்வடியும் நோய் மீண்டும் உருவாகிவிடுகிறது.
காதில் வலி ஏற்படுதல், சீழ்வடிதல் போன்ற நோய்கள் சாதாரணமாக எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடியவை. இந்நோய்களை விரைவாக குணப்படுத்த துருப்பிடிக்காத எஃகினாலான ஒரு சாதனத்தை காதுநோய் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு அளவில் சிறியது; உள்ளீடற்ற ஒரு உலோகத்தண்டினால் ஆனது. இதன் ஒரு முனை அகலமாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. உலோகத்தண்டின் ஒரு முனையை அறுவை சிகிச்சை நிபுணர் காதுக்குள் செலுத்தி நடுக்காதில் தேங்கியுள்ள சீழ்போன்ற திரவங்களை உறிஞ்சி எடுத்துவிடுவார்.
வழக்கமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையில் மூன்று சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்று தனித்தனி சாதனங்களை ஒருங்கிணைப்பதும், செயல்பாடு வெற்றிகரமாக இருப்பதும் இந்த புதிய சாதனத்தின் சிறப்புகள் ஆகும்.
ஒரே ஒரு முறை அறுவை சிகிச்சை நிபுணர் நடுச்செவிக்குள் இந்த சாதனத்தை நுழைப்பதால் நோயாளியின் மயக்கநிலை நேரம் குறைகிறது. செவிக்குள் அதிக எண்ணிக்கையிலான கருவிகளை பலமுறை செலுத்தும்போது உட்செவியின் மெல்லிய தோல் சுவர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. சில சமயங்கள் இந்த சேதத்தின் விளைவாக இரத்தம் கசியவும் வாய்ப்பு உள்ளது. இரத்தக்கசிவை பார்க்கும் வாய்ப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை மேலும் சிக்கலாகிவிடுகிறது.
ஆதாரம்: http://english.farsnews.com/newstext.php?nn=8901070101
தகவல்: மு.குருமூர்த்தி (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஒவ்வொரு காந்தமும் வடக்கு தெற்கு என இரண்டு துருவங்களைக் கொண்டது. ஓரினத் துருவங்கள் அருகருகே வரும்போது அவற்றிற்கிடையே விலக்குவிசை தோன்றும். எதிரினத் துருவங்கள் அருகருகே வைக்கப்படும்போது அவற்றிற்கிடையே கவர்ச்சி விசை தோன்றும். காந்தங்களின் இந்த அடிப்படைப் பண்பு காந்த மிதவை ரயிலை இயக்க பயன்படுகிறது.
காந்த மிதவை இரயில் வழக்கமான இரும்புத் தண்டவாளங்களில் ஓடும் இரயில் அல்ல. guideway எனப்படும் சிறப்புப்பாதைகள் வழியாக இந்த மிதவை இரயில்கள் ஓடுகின்றன. guideway யின் வழியாகச் செல்லும் வலிமையான காந்தச்சுருள் இரயில் பெட்டியின் அடிப்பகுதியுடன் ஒரு விலக்கு விசையை தோற்றுவிப்பதால் guideway யில் இருந்து 1 முதல் 10 செமீ தொலைவிற்கு இரயில் வண்டி உயர்த்தப்படுகிறது. Guideway ன் பக்கச்சுவர்களுக்கு கொடுக்கப்படும் மின்னோட்டம் காரணமாக மற்றொரு காந்தப்புலம் தோற்றுவிக்கப்படுகிறது. மின்னோட்டத்தின் திசை மாறும்போதெல்லாம் காந்தவிசையின் துருவங்களும் மாறிக்கொண்டிருக்கும். இதன் விளைவாக ஒரு இழுத்தல் - தள்ளுதல் விசை தோற்றுவிக்கப்படுகிறது.
இரயில் வண்டியின் முன்புறம் இழுத்தல் விசை தோற்றுவிக்கப்படும் அதே வேளையில் பின்புறம் தள்ளுதல் விசை தோற்றுவிக்கப்படும். எனவே, இரயில் வண்டி காற்றுமெத்தையின்மீது சுகமான பயணத்தை மேற்கொள்ளுகிறது. உராய்வு இல்லை என்பதாலும், இரயில் வண்டியின் உடலமைப்பு காற்றை கிழித்துச்செல்லும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் வண்டியின் வேகம் அதிகமாக இருக்கும். அதாவது ஒரு மிதவை இரயிலின் வேகம் போயிங்-777 விமானத்தின் வேகத்தை விட அதிகமாக இருக்கும்.
மிதவை இரயிலில் பயன்படும் காந்தவிசையின் கவர்ச்சி-விலக்கல் தத்துவம் உணவுப்பொருட்களின் இயற்பியல், வேதியியல் பண்புகளை ஆராயப் பயன்படுகிறது என்பது அண்மைக்கால கண்டுபிடிப்பாகும். காந்த மிதவை மண்டலத்தில் வைக்கப்படும் உணவு, நீர் மற்றும் பானங்கள் இவற்றின் தன்மைகள் எளிதில் அளவிடப்படுகின்றன. உணவுசார்ந்த தொழில்நுட்பங்களில் ஒரு பொருளின் அடர்த்தி முக்கியமான பங்கு வகிக்கின்றது.
ஒரு உணவுப்பொருளில் அடங்கியுள்ள வேதிப்பண்புகளை அறிந்துகொள்ள அதன் அடர்த்தி பற்றிய அறிவு அவசியம். ஒரு மென்பானத்தில் அடங்கியுள்ள சர்க்கரையின் அளவு, ஒயினில் அடங்கியுள்ள ஆல்கஹாலின் அளவு, பாசன நீரில் அடங்கியுள்ள உப்பின் அளவு, பாலில் அடங்கியுள்ள கொழுப்பின் அளவு இவையெல்லாம் அடர்த்தியை சார்ந்தவை. இதுவரை உபயோகத்தில் இருந்துவந்த ஆய்வுக்கருவிகள் அனைத்தும் விலை கூடியவை, எளிதில் கையாள முடியாதவை, மேலும் சிக்கலானவை.
காந்த மிதவை மண்டலத்தில் அளவீடுகளை செய்வதற்கென ஒரு உணர்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு முனைகளிலும் காந்தங்கள் பொருத்தப்பட்ட இந்த உணர்கருவியில் ஒரு திரவம் நிரப்பப்பட்டிருக்கும். சோதித்து அறிய வேண்டிய உணவுப்பொருட்களின் மாதிரிகள் இந்த திரவத்திற்குள் கடந்துசெல்லும்போது உணவுப்பொருட்களின் அடர்த்தியை எளிதில் அளவிட்டுக் கொள்ளலாம்.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/06/100623124256.htm
- பிடுங்கிய பல்லில் இருந்து ஸ்டெம் செல்கள்
- பெட்ரோலை ஒழித்துக் கட்டவருகிறது லித்தியவாயு
- மனித மரபணுக்களுக்கும் காப்புரிமை
- ஒளி மின் விளைவு – ஓர் அறிமுகம்
- ஏறுநடை போடும் ஏழை நாடுகள்
- கற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும்?
- உடல் தூங்க உள்ளம் விழித்திருக்கிறது.
- மண்டையைப் பிளந்த பிறகும் பேசலாம்
- நினைவு வலுப்பெற மூக்கில் ஸ்ப்ரே
- உயிரி கார்பன்
- கார்பன் டை ஆக்சைடில் இருந்து எரிபொருள்
- நின்றொளிரும் விந்தை
- 2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்
- மர எண்ணெயில் கார்கள் ஓடப் போகின்றன
- வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக் கருவி
- ஆர்டரின் பேரில் உடல் உறுப்புகள்
- பளபளக்கும் நிக்கல் - டங்ஸ்டன்
- செயற்கையாக ஓர் உயிரினம்
- உலோக ரப்பர்
- கட்டுச்சோறை கெடாமல் பாதுகாக்க...