கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
மின்னணுக்கழிவுகளை வெளியிடுவதில் முன்னணியில் இருக்கப்போவது யார்? வளர்ந்த நாடுகளா? அல்லது வளரும் நாடுகளா? இன்னும் 6 முதல் 8 ஆண்டுகளுக்குள் வளரும் நாடுகள் வெளியேற்றும் மின்னணுக் கழிவுகளின் அளவு வளர்ந்த நாடுகள் வெளியேற்றும் மின்னணுக்கழிவுகளைப்போல இருமடங்காக இருக்குமாம். இப்படித்தான் சொல்கிறது Environmental Science & Technology வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை. 2030 ஆம் ஆண்டில் வளர்ந்த நாடுகள் 200 முதல் 300 மில்லியன் கம்ப்யூட்டர்களை குப்பையில் வீசி எறிந்தால், வளரும் நாடுகள் 400 முதல் 700 மில்லியன் கம்ப்யூட்டர்களை குப்பைக்கு அனுப்புமாம்.
வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் தனிநபர் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவது உண்மை. தொழில் நுட்பம் வளர்ந்து வருவதால் மின்னணு சாதனங்களின் ஆயுள் முன்பைவிட குறைந்து வருவதும் உண்மை. மின்னணு சாதனங்களின் பாகங்களில் நச்சுப்பொருட்கள் கலந்திருக்கும் நிலையில் பயன்படாத மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக அழித்தொழிக்கும் அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.
உலகெங்கும் தூக்கி எறியப்படப்போகும் தனிநபர் கணினிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டதில், 2016 ஆம் ஆண்டுவாக்கில், வளரும் நாடுகள் வீசியெறியும் பயனற்ற கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகள் வீசியெறியும் கம்ப்யூட்டர்களைக்காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கழிவுகளின் பாகங்களில் நச்சுப்பொருட்கள் இருப்பதால் மிகப்பெரிய பொருளாதார சமூக சீர்கேடுகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மின்னணு சாதனங்களை அழித்தொழிப்பதற்கான சட்டதிட்டங்களில் உடனடியாக மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்தாகும்.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/04/100428121451.htm
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
புதிதாகக் கற்றுக்கொள்ளும் தகவல் நினைவில் நிரந்தரமாக நிற்கவேண்டுமானால் 20 நிமிடம் இடைவேளை விட்டபிறகுதான் அடுத்ததை கற்றுக்கொள்ள செல்ல வேண்டும்.
எப்படி கற்றவை நீண்டநாட்கள் நினைவில் இருக்கின்றன என்பதை யி ழாங் என்பவர் (கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகம்) ஆராய்ந்து கொண்டு வருகிறார். ஈக்களை வைத்து ஆராய்ந்து வரும்போது பிடிபி 11 என்ற ஜீனில் பிழை ஏற்படுத்தினால் ஈக்களுக்கு கற்றவை நினைவில் நிலைத்து நிற்பதில்லை என்று கண்டுபிடித்தார். இந்த ஜீன் மனிதனுக்கும் உண்டு.
வழக்கமாக ஈக்களுக்கு புதிதாக கற்றுக்கொடுத்தால் அதைத்தொடர்ந்து 15 நிமிடத்திற்கு அதற்குரிய நரம்பு செல்களில் பல ரியாக்ஷன்கள் நடை பெறுகின்றன. அவை முதல் உச்சக் கட்டத்தை அடைந்து தணிவதற்கு 15 நிமிடங்கள் ஆகின்றன. அதற்குப் பிறகுதான் ஈக்களால் அடுத்த பாடத்திற்கு தயாராக முடியும்.
ஜீனில் பிழை ஏற்பட்ட ஈக்களுக்கு ரியாக்ஷன்கள் தணிவதற்கு 40 நிமிடங்கள் பிடித்தன. அதற்குள்ளாக இன்னொரு பாடத்தை சொல்லிக்கொடுத்தால் அவற்றால் அவற்றை கற்றுக்கொள்ள முடிந்தாலும் நிரந்தர நினைவில் அது நிற்பதுமில்லை. உடனே மறந்து விடுகின்றன. ஆனால் நாற்பது நிமிட இடைவேளை விட்ட பிறகு கற்றுக்கொடுத்ததை ஜீன் பிழையுடைய ஈக்கள் வழக்கம்போல நினைவில் நிறுத்திக்கொள்கின்றன.
யி ழாங்கின் இந்த கண்டுபிடிப்பு நமக்கு ஒரு பாடமாக அமைகிறது. சயின்ஸில் ஒரு கான்செப்டை சொல்லிக்கொடுத்த பிறகு உடனேயே இன்னொரு புதிய கான்செப்டை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கக் கூடாது. அது மூளையில் பதிந்து நிலைப்படுவதற்கு ஒரு சில குழந்தைகளுக்கு 15 நிமிடங்களும் சில குழந்தைகளுக்கு 40 நிமிடங்களும் பிடிக்கலாம். இதை அனுசரித்து பாடங்களை தக்க இடைவெளி விட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும். முதலில் சொல்லித் தந்த கான்செப்ட் மனதில் பதிந்து விட்டதா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு அடுத்த கான்செப்ட்டுக்குப் போகவேண்டும். இடைவேளையின்போது வேறு கைவினைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதிலும் புதிதாக எதையும் சொல்லித்தராமல் ஏற்கனவே செய்ததை மறுபடியும் நினைவு படுத்த வைக்கலாம்.
கணக்கு போன்ற பாடங்களில் புதிய கான்செப்ட் சொல்லிக் கொடுத்த பின் வீட்டுப்பாடம் செய்யச் சொல்வது நல்லது. தகுந்த இடைவேளையில் மறுபடியும் வீட்டில் செய்து பார்க்கும்போது கற்றது நன்றாக நினைவில் நிற்கிறது.
ஒரு பாடம் நடத்த ஒரு மணி நேரம் கல்லூரிகளில் தருகிறார்கள். அதில் 20 நிமிடம் புதிய கான்செப்டை சொல்லிக்கொடுக்கவும் மீதமுள்ளதை ஏற்கனவே கற்ற பழைய பாடங்களுடன் பொருத்திப் பார்க்கவும் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும் என்பதை என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்து உங்கள் அனுபவங்களை எனக்குத் தெரிவியுங்களேன்!
- முனைவர் க.மணி (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
கோமா நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு உள்ளே நினைவிருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல்கூட இருக்கலாம். மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்திருப்பவரும்உணர்வில்லாமல் இருப்பார் அதே சமயல் நினைவில்லாமலும் இருப்பார். இந்த வித்தியாசம் மிக முக்கியம். கோமா நிலையிருப்பவர் நினைவுடன் இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஸ்கேன் எடுத்து மூளையைப் பார்க்க வேண்டும். இதை விட எளிய முறையை அர்ஜென்டினா நாட்டு மருத்துவர்கள் வேறு நாட்டு மருத்துவர்களுடன் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
கோமா நிலை நோயரின் கண்களைத் திறந்து லேசாக காற்றை பீய்ச்சி அடிப்பார்கள். அதற்கு முன் மெல்லிய மணி ஓசையைக் கேட்கச் செய்வார்கள். இப்படி மூன்று நான்கு முறை செய்த பிறகு வெறும் மணி ஓசை சப்தம் கொடுத்தாலே போதும் நோயர் கண் இமைகளை அசைப்பார். காற்று அடுத்து படுமே என்று அவர் உணர்ந்திருக்கிறார் என்பதற்கு இது அடையாளம். இதிருந்து கோமா நிலையில்கூட மனிதன் ஐவகை உணர்வுகளையும் கவனிக்க முடியும் என்பது தெரிகிறது.
-மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
விக்ரம் பிரபு லயோலா யூனிவர்சிட்டி ஹாஸ்ப்பிட்டலின் தலைமை நரம்பியல் மருத்துவர். இவர் நோயாளியின் மண்டையைத் திறந்து மூளையில் உள்ள கட்டிகளை வெட்டி எடுக்க முயலும் முன்பு அவர்களை மயக்க நிலையிருந்து எழுப்பி பேசுகிறார். கட்டியின் பக்கத்தில் இருக்கும் மூளைத் திசுக்களை தொட்டபடி பேச்சுக் கொடுப்பார். தொடும்போது அதன் காரணமாக அவர்களது பேச்சில் அல்லது உடல் அங்க அசைவுகளில் ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் அந்த இடத்தை சிதைக்காமல் கட்டியை அறுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்கிறார். இப்படி நோயளரின் மூளையை மேப் செய்து சாதக பாதகங்களை தீர்மானித்துக்கொண்ட பிறகு கட்டியில் கத்தியை வைக்கிறார். கேட்பதற்கே வியப்பாக இருக்கிறது அல்லவா!
உடலின் எல்லா பாகங்களின் வலி முதலான உணர்வுகளை அறியும் மூளைக்கு தனது வலியை அறிய முடியாது என்பதால் பிரபு இப்படி துணிச்சலாக காரியம் ஆற்றுகிறார்.
மூளை ஆப்பரேஷன் நடுவில் பேச்சுக் கொடுக்கும்போது நோயாளிகள் தெளிவாகவே பேசுகிறார்கள். வீடு, வேலை, பொழுதுபோக்கு, அரசியல் என்று சகல விஷயங்களையும் அவர்கள் சர்வ சாதாரணமாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் பேசி விபரீதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிந்து கொண்டபிறகே கத்தியை வீசுகிறார்.
இந்த சாகசமான வேலைக்கு மயக்க மருந்தாளரின் உதவி மிகவும் அவசியம். பூசணிக்காயில் உண்டியல் ஓட்டை போடுவது போல மண்டையை வெட்டித் திறந்து மூளையை அடையும் வரை ஒருவருக்கு மயக்க மருந்து தேவை. அதன் பிறகு மூளையை வெட்டும்போது மயக்கம் அவசியமில்லை!
- முனைவர் க.மணி (
- நினைவு வலுப்பெற மூக்கில் ஸ்ப்ரே
- உயிரி கார்பன்
- கார்பன் டை ஆக்சைடில் இருந்து எரிபொருள்
- நின்றொளிரும் விந்தை
- 2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்
- மர எண்ணெயில் கார்கள் ஓடப் போகின்றன
- வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக் கருவி
- ஆர்டரின் பேரில் உடல் உறுப்புகள்
- பளபளக்கும் நிக்கல் - டங்ஸ்டன்
- செயற்கையாக ஓர் உயிரினம்
- உலோக ரப்பர்
- கட்டுச்சோறை கெடாமல் பாதுகாக்க...
- இரைச்சலில் இருந்து பாதுகாக்கும் கருவி
- சிறிய ரோபோ... பெரிய உதவி..
- மனம் என்பது என்ன?
- பயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள்
- நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?
- வண்ண விளக்குகளின் ரகசியம்
- இசை மருத்துவம்
- பழங்கள் பழுப்பதும் பூக்கள் உதிர்வதும் ஏன்?