கல்வி எனும் சொல் கல் என்னும் வேர்ச் சொல்லில் பிறந்தது. கற்க படுவதால் கல்வியானது. கூடவே எதைக் கற்க வேண்டும்? ஏன் கற்க வேண்டும்? என்ற கேள்வியும் தோன்றுகிறது. அறியாதவற்றை அறிந்துகொள்வதற்கும், கேள்வி கேட்க தூண்டுவதற்கும், கற்பதால் வாழ்க்கை மாறும், எண்ணங்கள் மேம்படும், உயர்வு தாழ்வு என்ற எண்ணம் அடியோடு அற்றுப்போகும், இவை எல்லாம் தோன்றுவதால் சமுதாயம் மேம்படும், ஒற்றுமை உருவாகும், ஒற்றுமையால் நாடு வளர்ச்சி அடையும், நாடு வளர்ச்சி அடைந்தால் தான் உண்மையான வளர்ச்சி. உலக நாடுகளில் மத்தியில் பெருமையும், தலை நிமிர்வும் ஏற்படும். இதுதான் உண்மையான கல்வியின் நோக்கம். அதனால் தான் அனைவரையும் கல்வி கற்க அறிவுறுத்தப்படுகிறது. நன்மையைத் தீமையை பகுத்துப் பார்ப்பது கல்வியின் இன்றியமையாத தேவையாகும்.

savitribai phuleகல்வியின் சிறப்பை எண்ணற்ற பல அறிஞர் பெருமக்கள் எழுதியும், பேசியும் வந்துள்ளனர். அவர்களுள் வள்ளுவர், கல்வியின் அவசியத்தைப் பற்றியும், கற்பதின் அவசியத்தைப் பற்றியும் பொருட்பாலில் தொடர்ந்து கல்வி, கல்லாமை கேள்வி, உள்ளிட்ட மூன்று அதிகாரங்களில் கல்வியின் சிறப்பை வலியுறுத்துகிறார்.

அதி வீர ராம பாண்டியன், வெற்றிவேற்கை நூலில் "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

"நெஞ்சத்து கல்வி அழகே அழகு" கல்வி கற்பது அழகானது என்று நாலடியார் வலியுறுத்துகிறது. இப்படிப்பட்ட நிலையில் கல்வியின் சிறப்பு பற்றி வலியுறுத்தப்படும் வரலாற்றில் ஒரு பெண் கல்வி கற்பதற்காக பாடசாலைக்கு சென்ற போது பெண்கள் படிக்கக்கூடாது என்று சொல்லி விரட்டி அடிக்கப்பட்டு உள்ளார். படித்த ஒரே காரணத்திற்காக குடும்பத்தை விட்டு விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டு உள்ளார். தான் மட்டும் படித்தால் போதாது, தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டுமென்ற மனப்பான்மைக் கொண்டவர். மாணவர்களிடம் கற்பிக்க செல்லும்பொழுது மலத்தையும், சாக்கடை தண்ணீரையும், சாணத்தையும் வாரி வீசி அவமானப்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வெளியே வந்தவர் தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அந்தப் பெண்மணி நாடு போற்றும் நல்லோர் நங்கை அன்னை சாவிதிரி பாய்.

அன்னை சாவிதிரி பாயின் முழக்கமிது. "கல்வி ஒன்றே பெண்களை விடுதலை செய்யும்". அவர் பற்ற வைத்த தீ இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவியிருக்கிறது. தீப்பந்தத்தை எப்படிப் பிடித்தாலும் அது மேல்நோக்கி தான் எரியும் என்பதைப் போல, பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படித்து ஆண்களைவிட மேம்பட்டவர்களாக உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அது எந்தத் துறையாக இருந்தாலும் குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சிகளும் பெண்கள் மிக அழுத்தமாக தங்கள் பாதத்தை பதித்து வருகிறார்கள். இந்தியாவில் கல்பனா சாவ்லா (இறந்துவிட்டார்), அதேபோன்று இந்திய வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்காவின் சுனிதா வில்லியம் உள்ளிட்டவர்கள் சாட்சி. இவை எல்லாவற்றுக்கும் சாவிதிரி பாய் ஒரு காரணம்.

சமகாலத்தில் சாவித்திரிபாய் என்ற ஒற்றைச் சொல் பெண்களின் விடுதலைக்கான முழக்கமாக திகழ்கிறது. பெண்கள் விடுதலை அடைய வேண்டுமென்றால் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதை ஓங்கி ஒலித்தவர். மட்டுமல்ல தன் வாழ்க்கையிலும் அதை சாதித்துக் காட்டியவர்.

இந்திய திருநாட்டின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டுமென்று விரும்பினார். அதன் பொருட்டு கொண்டாடி மகிழ்கிறோம். ஆசிரியர் தினத்தின் போது வைக்கப்படும் விமர்சனம் இது. டாக்டர் ராதாகிருஷ்ணன் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோன்று தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணி செய்தவர். படைப்பாளி, படிப்பாளி, அறிவாளி மறுப்பதற்கு இல்லை. ஆனால் கல்விக்காக அவர் செய்தது என்ன? அன்றைக்கு கல்வித்துறையில் இருந்த பழமை வாதத்தை ஒழித்தாரா?, கல்வியில் புதிய மாற்றத்தை கொண்டு வந்தாரா?அல்லது புதிய தலைமுறைக்கு வேறு எந்த வகையிலாவது கூறினாரா என்ற கேள்விகள் எழத் தொடங்கி இருக்கின்றன. தான் பேராசிரியராக இருந்த ஒரே காரணத்தால் தன்னுடைய பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட சொன்ன காரணத்தால் மட்டும் எதன் அடிப்படையில் ஆசிரியர் தினத்தை கொண்டாட முடியும்?. இந்த கேள்வி உண்மையான கல்வியின் பயனாக பார்க்கவியலும். இந்த சிந்தனையை தூண்டுவதற்கு தான் கல்விமிக மிக அவசியமாகிறது.

அந்த வகையில் செப்டம்பர் 5ஆம் தேதியின் போதும் உண்மையான ஆசிரியர் தினம் என்றால் அது சாவித்திரிபாய் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்கின்ற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெண்கள் கல்வி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டு வராக அறியப்படுகிறார்.

சாவித்திரிபாய் ஒரு சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், கவிஞர், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர், பெண்களுக்கான முதல் பள்ளியை நிறுவியவர், இப்படி அவருக்கு பல முகங்கள் உண்டு. அவர் 1830 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3ஆம் நாள் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள பைதான் கிராமத்தில் கண்டோஜி நெவாஸ் மற்றும் லட்சுமி இணையருக்கு இளைய மகளாக பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் மூவர்.

அவருடைய குடும்பம் மற்ற ஒரு சராசரி இந்து குடும்பம் போலவே இருந்தது. அதன் பொருட்டு எந்த மாற்றமும் இல்லாமல் பால்ய விவாகத்தின் அடிப்படையில் ஒன்பது வயதானபோது 13 வயது நிரம்பிய ஜோதி ராவ் புலேவிற்கு திருமணம் செய்து வைத்தனர்.

மாற்றம் என்ற சொல்லைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்றத்துக்குட்படுத்த வேண்டும் என்ற மார்க்சின் தத்துவம் இன்றளவும் வலுப்பெற்று வருகிறது. அது சாவிதிரிபாய் பூலே வின் வாழ்க்கையிலும் மிக அற்புதமான மாற்றங்கானத் தொடங்கியது.

அன்புமிக்க கணவரால் கல்வியின் சிறப்பை ஓர் அகப்பை அல்லி நுகரச் செய்தார். அதன்பிறகு கல்வியை அவரை பற்றிக்கொண்டதா? அல்லது அவர் கல்வியைப் பற்றிக் கொண்டாரா? என்று தெரியாத அளவிற்கு கல்வியின் விழுதைப் பிடித்து கொண்டு வேரைக் கண்டடைந்தார்.

திருமணத்தின்போது சாவித்திரி பாய்க்கு கல்வியறிவு இல்லை. ஜோதிராவ் புலே தான் திருமணத்திற்கு பிறகு எழுதவும் படிக்கவும் கற்றுத் தந்தார். அப்பொழுது சகுனாபாய் ஷிர்சாகர் என்ற உறவுக்கார பெண்ணுடன், இணைந்து படித்தனர்.

பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம். அதிலும் குறிப்பாக ஒரு புராதன இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் எவரும் சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் அது குலத்துக்கு இழுக்கு. குறிப்பாக பெண்கள் பாட புத்தகத்தை தொடுவது தீட்டு என்றெண்ணி இருந்த காலம். அதனால்தான் பாரதியார் பெண் கல்வியை வலியுறுத்திய ஏட்டையும் பெண்கள் தொடுவது தீட்டு என்றும் இருந்தவர் மாய்ந்துவிட்டார் தன்னுடைய கோபத்தின் உச்சம் தான் அந்த கவிதை. பெண்களின் பிறப்பு அவமானமாக கருதப்பட்ட காலங்களில் மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற கவிமணியும் பெண்களின் பிறப்பு ஏழு ஏழு தலைமுறைக்கு முன் செய்த புண்ணியம் என்று முற்போக்கு சிந்தனையைப் பதிவு செய்துள்ளார்.

இந்தச் சூழலில்தான் பெண்களை அன்று பிற்போக்கு தனமாக பார்க்கப்பட்டது ஜோதிராவ் புலே தன் மனைவியுடன் பேசுவதற்கு கிடைக்கும் நேரங்களில் கல்வியைப் போதித்து வந்தார். இந்த ஆர்வமிகுதியால் பாடசாலைக்கு சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஜோதிராவிடம் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு சாவித்திரியின் மேலதிக கல்வியை உறவின் நண்பர்களான சகாரம் யஸ்வந்த் பரஞ்ச்பே மற்றும் கேசவ் ஷிவ்ரம் நாவல்கள் ஆகியோரின் பொறுப்பாக இருந்தது.

முதலாவது அகமது நகரில் உள்ள ஒரு அமெரிக்க மிஷனரி, சிந்தியா ஃபராரால் நடத்தப்பட்ட நிறுவனத்தில் கல்வி பயின்றார். இரண்டாவதாக புனேவில் உள்ள சாதாரண பள்ளியில் பயின்று பயிற்சி பெற்றார். அவர் பயின்ற பிறகும், பயிற்சியின் அடிப்படையிலும் சாவித்திரிபாய் முதல் இந்திய பெண் ஆசிரியர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.

சாவித்திரிபாய் தனது ஆசிரியர் படிப்பை முடித்த பிறகு புனேவிலுள்ள மஹர்வாடாவில் பெண்களுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கினார். புலே, தனது குடும்ப உறுப்பினரின் பெண்ணுக்கு முன்பு கல்வி போதித்த சகுனாபாய் ஷிர்சாகரும், சாவிதிரி பாயும், புலேவுமாக இணைந்து பிடேவாடாவில் தங்கள் சொந்தப் பள்ளியை தொடங்கினார். இம் மூவரும் கல்வியில் பயனையும், சிறப்பையும் உணர்ந்ததால் தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற தத்துவ மொழிக்கேற்ப விருப்பப்பட்டு மாணவர்களுக்கு போதித்து வந்தனர்.

அதனால் பாடதிட்டத்தில் புதிய முயற்சியைத் தொடங்கினர். அறிவியல், கணிதம், மற்றும் சமூகவியல் பாடங்களில் மேற்கத்திய பாடத்திட்டத்தை போல பயன்படுத்தத் தொடங்கினர்.

1851 ஆம் ஆண்டில் இறுதியில் சாவித்திரிபாய், ஜோதிராவ் புலே பெண்களுக்காக மூன்று வெவ்வேறு பள்ளிகளை நடத்தி வந்தனர். இம்மூன்று பள்ளிகளிலும் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 150. இந்த எண்ணிக்கை அன்றையச் சூழலில் பெரிய சாதனை என்று கூறவேண்டும். கல்வி மறுக்கப்பட்ட நிலையில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் பள்ளிக்கு வருவது சவாலானது.

பாட திட்டத்தில் கொண்டுவந்த மாற்றத்தைப் பற்றி ஆசிரியர் திவ்யா கந்துகூரி, "அரசுப்பள்ளிகளில் பயன்படுத்தப்படும் முறைகளை விட, புலே பயன்படுத்திய கல்வியின் முறை சிறந்ததாக கருதப்பட்டது என்று நம்புகிறார்கள். இந்த நெற்பயிரின் விளைவாக, அரசுப் பள்ளிகளில் சேரும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட புலேவின் பள்ளிகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது".

கலாச்சாரக் காவலர்கள் இன்று மட்டுமல்ல அவர்கள் ஏக காலத்திற்கும் ஆதிக்கம் செலுத்தியே வந்துள்ளனர். புலேவின் வெற்றியானது பழமைவாத கருத்துக்களுடன் உள்ளூர் சமூகத்திலிருந்து அதிக எதிர்ப்பை உருவாக்கியது. அதை கந்துகூரி பின்வருமாறு பதிவு செய்கிறார். "சாவித்திரிபாய் தனது பள்ளிக்கு கூடுதல் புடவையை எடுத்துக் கொண்டு அடிக்கடி செல்வார். ஏனெனில் அவர் தனது பழமைவாத எதிர்பார் கற்கள் சாணம் மற்றும் வாய் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் தாக்கப் படுவார். சாவித்திரிபாய் மற்றும் ஜோதிராவ் புலே ஆகியோரின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். இருப்பினும் 1839இல் ஜோதிகாவின் தந்தை, மனுதர்மம் மற்றும் அதன் வாயிலாக பெறப்பட்ட பிராமணிய நூல்களின் படி, அவர்கள் செய்யும் ஆசிரியர் வேலை பாவமாக கருதப்பட்டதால் இருவரையும் தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறும்படி கூறிவிட்டார்".

ஒரு கதவு அடைக்கப் படும் போது, மற்றொரு கதவு திறக்கப்படும் என்பதைப் போல, அந்த வீட்டை விட்டு வெளியேறிய போது ஜோதிராவின் நண்பர்களில் ஒருவரான உஸ்மான் ஷேக்கின் குடும்பத்துடன் குடியேறினார். அங்குதான் சாவித்திரி பாயின் நெருங்கிய தோழியாகவும் சக ஊழியராகவும் பாத்திமா பேகம் ஷேக்கை சந்தித்தார். இவர்தான் முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. 1849இல் ஷேக்கின் வீட்டில் பாத்திமா மற்றும் சாவித்திரிபாய் இணைந்து ஒரு பள்ளியைத் தொடங்கினார்.

1910களில் சாவித்திரிபாய் புலேவும், ஜோதிராவ் புலேவும் இணைந்து இரண்டு கல்வி அறக்கட்டளை நிறுவினர். ஒன்று நேற்றில் ஆண்கள் பள்ளி புனே மற்றொன்று மஹர்ஸ் யாங்க்ஸ் மற்றும் எடசெட்ராஸ் கல்வியை ஊக்குவிக்கும் சங்கம். இந்த இரண்டு அரக்கட்டளை களும் தொடக்கத்தில் இவ்விருவரும் நடத்தி வந்தாலும் பின்னாளில் சாவித்திரிபாய் பாத்திமா ஷேக் ஆகியோரும் இணைந்து வழிநடத்தினார்.

பல இன்னல்களுக்கு பிறகு, அவர்களின் உழைப்பும், தியாகங்களும் வெற்றியைத் தேடித்தந்தது. அப்பொழுது ஜோதிராவ் புலே அவர்கள் 1853 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் கிருத்துவ மிஷனரி பத்திரிக்கையான ஞானோதயாவிற்கு அளித்த பேட்டியில் சாவித்திரிபாய் மற்றும் அவரது பணியை பற்றி சுருக்கமாக கூறினார். " தாயினால் குழந்தைகளுக்கு ஏற்படும் முன்னேற்றம் மிகவும் முக்கியமானது. மற்றும் நல்லது என்று எனக்குத் தோன்றியது. எனவே என் நாட்டின் மகிழ்ச்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பாக பெண்களின் நிலை குறித்து கவனம் செலுத்தி, நாடு முன்னேற வேண்டுமானால் அவர்களுக்கு அறிவு புகட்ட எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த எண்ணத்தில் தான் முதலில் பெண்களுக்கான பணியைத் தொடங்கினேன். ஆனால் நான் பெண் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பது என் சாதி சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. என் சொந்தத் தந்தை எங்களை வீட்டைவிட்டு துரத்திவிட்டார். பள்ளிக்கு இடம் கொடுக்க யாரும் தயாராக இல்லை. மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை. ஆனால் லகூஜி ராக் ரவுத் மங் மற்றும் ஆன்மா மஹர் ஆகியோர் தங்கள் ஜாதி சகோதரர்களின் கல்வி கற்பதன் நன்மைகள் பற்றி நம்ப வைத்தார்." 

(தொடரும்…)

- பேரா. எ.பாவலன்

Pin It