அவன் ஆழங்கால் படவில்லை
எனச் சொல்லி
கைகளிலும் கால்களிலும் கற்களைக்கட்டி
இடுப்பில் கயிற்றினைக்கட்டி
பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்லி
தள்ளி விட்டார்கள்
கைகளையும் கால்களையும் அசைக்கமுடியாமல்
மூச்சு முட்ட ஆழ்ந்து செல்கிறான்
மேலே வா எனச் சொல்பவர்களின்
ஒலியும் அவன் காதில் விழவில்லை
ஆழ்ந்து சென்று விட்டான்
இனி பிணமானாலும்
மேலே வர மாட்டான்
ஆழங்கால் பட்டவன்
மண்டை கனத்தால் மூழ்கிவிட்டான்
எனச் சொல்லி
கைப்பற்றியிருந்த கயிற்றையும்
விட்டு விட்டார்கள்...
- கி.இராம்கணேஷ்