துளித்துளியாய் பொழியத்தொடங்குகிறது இரவு! இலையெல்லாம் பனிவாசம்! முற்றத்து உயிர்கள் சேகரித்து கூடடைத்து கதவு சாத்துகிறது இருள். கணுக்கால் வரை உயர்ந்த நீர்ம இரவில் நினைவை கப்பல் செய்து நீந்த விடுகிறேன் அலைக்கழித்துக் கவிழ்த்துவிடுகிறது மௌனத்தின் இசை! நினைவுக்கப்பலில் சவ்வுடாய் பரவுகிறாய் நீ!
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.