Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

இன்னும் எவ்வளவு இழிந்த நிலைக்கு இந்தத் தமிழினம் செல்லும் என்று நினைக்கும் போது மிகுந்த வேதனை உண்டாகின்றது. கல்வி பெற்றால் மூடநம்பிக்கை குறைந்துவிடும், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் மூடநம்பிக்கை குறைந்துவிடும் என்று சீர்திருத்தவாதிகள் நினைத்ததெல்லாம் இன்று கண்முன்னாலேயே பொய்யாகி, ஆற்றோடு போய்க்கொண்டு இருக்கின்றது. மெத்தப் படித்தவனும், பார்ப்பானுக்கு கூழைக் கும்பிடு போடுகின்றான்; கோடிகோடியாக பணம் வைத்திருப்பவனும் பார்ப்பானுக்குக் கூழைக் கும்பிடு போடுகின்றான். எவனுக்கும் தன்மான உணர்வும் இல்லை, சுயமரியாதை உணர்வும் இல்லை, பகுத்தாராய்ந்து பார்க்கும் அறிவும் இல்லை. முட்டாளாய், மானமற்ற பிறவிகளாய் வாழ்வதையே தன்னுடைய வாழ்வின் உயரிய குறிக்கோளாக கருதும் ஈனநிலைக்கு தமிழன் தரம் தாழ்ந்துவிட்டான். மோட்சத்திற்காக பார்ப்பானின் மூத்திரத்தைக்கூட குடிக்க அவன் தயாராக இருக்கின்றான். இது மிகைப்பட்ட கூற்றல்ல, ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே மானங்கெட்டு மகாபுஷ்கரத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார் என்றால், அந்த முதலமைச்சர் எவ்வளவு தற்குறியாய் இருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். கலந்துகொண்டது மட்டுமல்லாமல் கொலைக் குற்றவாளி, அரசியல் தரகன், பொம்பள பொறுக்கி சங்கராச்சாரியிடம் ஆசி வேறு வாங்கியிருக்கின்றார். சாக்கடை, சாக்கடையில் தான் போய்ச்சேரும் என்பதை பழனிசாமி நிரூபித்து இருக்கின்றார்.

edapadi palanisamy in cauvery

பெரியாரின் கொள்கைகளை இம்மி அளவு கூட கடைபிடிக்காத இந்தத் திராவிட அரசியல் கட்சிகள் தங்களுடைய கட்சிகளின் பின்னால் திராவிடம் என்ற சொல்லை சேர்த்துக் கொண்டிருப்பது அரசியல் விபச்சாரத்தனமாகும். எடப்பாடி பழனிசாமி பிஜேபியின் பினாமி என்பது ஊரறிந்த ரகசியம். அதனால் அவர் மகா புஷ்கரத்தில் கலந்துகொண்டாலும், பொறுக்கி பார்ப்பான் சங்கராச்சாரியின் காலை நக்கினாலும் அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. பன்றியின் குணம் மலம் தின்பதுதான் என்று இருந்து கொள்ளலாம். ஆனால் திமுகவைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்வதை என்ன என்று சொல்வது? திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் கலந்துகொண்டு இந்த மானங்கெட்ட தமிழனத்தைக் கேவலப்படுத்தும் பார்ப்பன விழாவை சிறப்பித்து இருக்கின்றார். இத்தனை ஆண்டுகால திமுகவின் திராவிடப் பாரம்பரியம் எந்த லட்சணத்தில் இருக்கின்றது என்பதற்கு இதைவிட வேறு சான்று என்ன இருக்க முடியும்? கேட்டால் தனிமனித சுதந்திரம் என்பார்கள். தன்னுடைய குடும்பத்தையே முற்போக்காக மாற்ற முடியாதவர்கள் நாட்டை முற்போக்காக மாற்றுவார்கள் என்று நம்புவது கேலிக்கூத்தானது.

திமுகவிற்கு ஜால்ரா போடும் பெரியாரியவாதிகள் இதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஆனால் அதைச் செய்வார்களா என்பதே மிகப் பெரிய கேள்விதான். ஓட்டுக்காக எவ்வளவு கீழ்த்தரமான செயலிலும் இந்தத் திராவிட அரசியல் கட்சிகள் இறங்கும் என்பதைத் தொடர்ந்து முற்போக்குவாதிகள் பார்த்துதான் வருகின்றார்கள். இருந்தும் இந்த மானங்கெட்ட கட்சிகளை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது. மாற்று என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் எந்தக் கட்சியும் பெரிய அளவில் இல்லாததால் பேய்க்குப் பிசாசே தேவலாம் என்ற நிலைபாட்டை எடுத்து விடுகின்றார்கள். பார்ப்பானின் காலை நக்காத ஏதாவது ஒரு அரசியல் கட்சி இன்று தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்று பார்த்தோம் என்றால், மருந்துக்குக் கூட இல்லை என்று சொல்லிவிடலாம். ஒரு பக்கம் பெரியாரையும், மார்க்சையும், அம்பேத்கரையும் பேசும் இவர்கள் தான் இன்னொரு பக்கம் பார்ப்பன கோயில்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தங்களின் முற்போக்கு வேடத்திற்குப் பாவ மன்னிப்பு தேடிக்கொள்பவர்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் பார்ப்பானின் மனது நோகக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பவர்கள். இவர்களை எல்லாம் எப்போதும் இயக்கிக்கொண்டு இருப்பது பார்ப்பனியம்தான். ஆனால் தன்னை முற்போக்குவாதியாக காட்டிக் கொள்ள வேண்டுமே , பெரியாரின் பெயரைச் சொல்லி கட்சி நடத்துகின்றோமே என்ற நிர்பந்தம் தான் அவர்களை வெளி உலகிற்காக முற்போக்குவாதியாக வேசம்கட்ட வைக்கின்றது. அப்படி செய்வதை வெட்கம்கெட்டத்தனமாக அவர்கள் ஒருபோதும் நினைப்பதில்லை.

durga stalin in maha pushkaraபார்ப்பன பத்திரிக்கைகளான தமிழ் இந்து, தினமணி, தினமலர் மற்றும் சூத்திரப் பத்திரிக்கைகளான தினகரன், தினத்தந்தி போன்றவை இந்த மகா புஷ்கரம் தொடங்கிய 12 ஆம் தேதியில் இருந்து இன்று வரை அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவமும், ஆதரவும் அவர்கள் இந்தச் தமிழ்ச் சமூகத்தை மானமற்ற, பார்ப்பனியத்துக்கு அடிமைப்பட்ட சமூகமாக மாற்ற வேண்டும் என்பதில் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகின்றார்கள் என்பதைக் காட்டுகின்றது. யாருக்குமே தெரியாத இந்த இழிவான விழாவை இன்று தமிழகமே தெரிந்துகொள்ள வைத்திருக்கின்றார்கள் இந்த விபச்சாரப் பத்திரிக்கைகள்.

இந்த மானங்கெட்ட விழாவை கொண்டாடுவதற்குக் காவிரியில் இருந்து 10000 ஆயிரம் கன அடி தண்ணீர்வேறு திறந்துவிடப்பட்டு இருக்கின்றது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களின் குடிநீர் தேவையையும், விவசாய தேவையையும் பூர்த்திசெய்யும் மேட்டூர் அணையில் இருந்து பார்ப்பனக் கும்பலும், பார்ப்பன அடிவருடிக் கும்பலும் குளித்து கும்மாளம் அடிக்க தண்ணிர் திறந்துவிடப்பட்டது பச்சை அயோக்கியத்தனமான காரியமாகும். தமிழ்நாடு முழுக்க மக்கள் குடி தண்ணீர் இல்லாமல் தினம் தினம் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில், அதைச் சரி செய்யத் துப்பில்லாத இந்த அரசு உச்சிக் குடுமி பார்ப்பான்களின் நம்பிக்கைக்காக தண்ணீர் திறந்துவிட்டிருப்பது, நாளை கோடையில் தண்ணீர் இன்றி மக்கள் சாவதைப் பற்றி எந்த அக்கறையும், கவலையும் இவர்களுக்கு இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.

பன்னிரெண்டு ராசிகளும் பன்னிரெண்டு ஆறுகளில் அதாவது கங்கை, சரஸ்வதி,யமுனா, நர்மதா, கோதாவரி, காவிரி, தாமிரபரணி, கிருஷ்ணா, சிந்து, துங்கபத்திரை, பிரம்மபுத்திரா, ப்ராணஹிதா போன்றவற்றில் வாசம் செய்து, பக்த கேடிகளுக்கு அருள்பாலிக்குமாம். காவிரிக்கு உரித்தான ராசி, துலாம் ராசியாம் அதனால் இங்கே காவிரி புஷ்கரம் கொண்டாடப்படுகின்றதாம். புஷ்கரம் என்ற வார்த்தையே தமிழ் இல்லாதபோது, அது எப்படி தமிழரின் விழாவாக இருக்க முடியும் என்று அதைக் கொண்டாடப் போகும் எந்த ஒரு மானங்கெட்ட தமிழனுக்கும் தெரியவில்லை, அந்த மானங்கெட்ட தமிழனை ஆட்சி செய்பவர்களுக்கும் தெரியவில்லை, அப்படி மானங்கெட்ட ஆட்சியை செய்து கொண்டிருப்பவர்களை ஆட்சியைவிட்டு அகற்றாமல் விடமாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரியவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தாலும் பார்ப்பானை நக்கித்தான் வாழவேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பவர்களுக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம்.

நம்மைப் பொருத்தவரை பார்ப்பனியத்தைத் தமிழ்நாட்டில் எவ்வழியில் ஒருவன் ஆதரித்தாலும் அவன் தமிழ் இனத்திற்கு எதிரியே, துரோகியே. அப்படிப்பட்டவன் எவனாக இருந்தாலும் அவன் எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் அந்த முட்டாள்களை, புல்லுருவிகளை நாம் அம்பலப்படுத்தியே ஆகவேண்டும். அப்படிப்பட்ட இனத் துரோகிகளால் எந்த ஒரு நன்மை ஏற்படுவதாக இருந்தாலும், அப்படிப்பட்ட எந்த நன்மையையும் மானமுள்ள தமிழ் மக்கள் விரும்புவதில்லை. பெரியாரிய இயக்கங்கள் நெஞ்சுரத்தோடு பர்ப்பனியத்துக்குக் காவடி தூக்கும் ஆளும்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும், போலி வேடமிடும் முற்போக்குவாதிகளையும் அம்பலப்படுத்த வேண்டும். எல்லா முற்போக்குவாதிகள் தலையிலும் மிளகாய் அறைத்துவிடலாம் என்று தப்புக்கணக்குப் போடும் பிழைப்புவாதிகளுக்குப் புத்தி புகட்ட வேண்டும். மகா புஷ்கரத்தில் கலந்துகொண்டு பார்ப்பானின் காலைநக்கிய ஒவ்வொரு அரசியல்வாதியும் தமிழினம் என்றுமே மீண்டு முற்போக்காக மாறமுடியாமல் அவர்களைப் பீடித்திருக்கும் பீடைகள் என்பதுதான் ஒவ்வொரு நேர்மையான முற்போக்குவாதியும் உணர வேண்டும்.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 நலங்கிள்ளி 2017-09-23 10:03
கல்வி வந்தால் பார்ப்பனியம் ஒழிந்து விடும் என்றார்கள், ஆனால் ஏன் ஒழியவில்லை என்கிறீர்கள். உண்மைதான். ஆனால் கல்வி வந்தால் மட்டும் போதாது. அது எத்தகைய கல்வி என்பது முக்கியம். அதற்குப் பெரியாரிலிருந்த ு சமூகநீதிப் போராளிகள் பலரும் முன் வைத்த தவறான கல்விக் கொள்கையே காரணம் ஆகும். பார்ப்பனர்களின் எதிர்வகை வர்ண ஒதுக்கீடுக்கு எதிராக நேர்வகை சமூகநீதி இடஒதுக்கீட்டைச் சரியாகவே முன்வைத்த தலைவர்கள் பார்ப்பனிய மெகாலே கல்வித் திட்டத்துக்கு எதிராக தமிழ்த் தேசம் சார்ந்த சனநாயகக் கல்வித் திட்டத்தை முன்வைக்காததே அடிப்படைச் சிக்கல். பார்ப்பான் ஆங்கிலத்தில் படித்து முன்னேறுகிறான், எனவே நீயும் ஆங்கிலத்தைப் படித்து முன்னேறு என்றார் பெரியார். இங்கேதான் நமது சறுக்கலும் தொடங்குகிறது. பார்ப்பானின் கல்வித் திட்டம் நமக்கான அளவுகோலாக எப்படி இருக்க முடியும். பார்ப்பனர்களைக் காப்பியடித்து ஒரு கல்வித் திட்டத்தில் நாம் வளர்ந்ததன் விளைவுதான் நமது இன்றைய சறுக்கலுக்கு அடிப்படைக் காரணம் ஆகும். படைப்பியல் நோக்கிலான ஓர் அறிவியல் கல்வித் திட்டத்தை என்றைக்கும் ஆங்கிலம் வழங்காது. அது தமிழ்வழிக் கல்வியில் மட்டுமே சாத்தியம். அத்தகைய ஒரு கல்வியை நாம் தமிழ்த் தேசத்தில் வளர்த்திருந்தால ், கட்டாயம் எடப்பாடி, துர்கா நடத்தும் கூத்துக்களைப் பார்த்திருக்க வேண்டிய அவலம் நமக்கு ஏற்பட்டிருக்காத ு என்று நான் உறுதியாகக் கூறுவேன்.

இது குறித்து நான் விளக்கி ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே! என்ற நூல் எழுதியுள்ளேன். இந்த நூலில் தமிழகத்தின் கல்வித் திட்டம் எப்படி நம்மைச் சாதிச் சேற்றில் மூழ்கடித்து என விரிவாக விளக்கியுள்ளேன் .
Report to administrator
0 #2 arunachalam 2017-09-23 22:07
"புஷ்கரம் என்ற வார்த்தையே தமிழ் இல்லாத பே ாது அது எப்படி தமிழரின் விழாவாக இருக்க முடியும்"------ ---"கார்கி"என்ற செ ால் தமிழ் இல்லாததால் இவரும் தமிழரல்ல என்று முடிவுசெய்து விடலாமா!?
Report to administrator
0 #3 saravan 2017-09-24 13:22
karki nee christhuva veriyan
Report to administrator
0 #4 SURESH 2017-09-25 08:32
Nalla velai nan athu la kulikkala
Report to administrator
0 #5 Manoharan 2017-09-25 13:03
Both Arunachalam and Saravanan have no stuff to put their counter arguments.That is why they registered their silly comments 9
Report to administrator
0 #6 Manoharan 2017-09-25 14:53
I was born in erstwhile East Thanjavur District (now Nagapattinam,)d istrict only.I am 70 years old.My father and mother were in their 80s when they expired.No one in Mayiladithurai ever heard of Pushkaram or Maharashtra Pushkaram.The attempts to celebrate Maharashtra Pushkaram is definitely to make one section of people to prosperous at the cost of gullible people.It is comparable to Akshaya Thridhiya invented some years back by the jewellery shops.
Report to administrator
0 #7 Manoharan 2017-09-25 22:30
Please read as Maha Pushkaram instead of Mahrashtra Puskaram.And as one section of people to prosper instead of "prosperous"
Report to administrator
+1 #8 Manikandan 2017-09-26 00:04
இவர் யாரை முற்போக்காளர்கள ் என்று சொல்கிறார் என்று தெரியவில்லை... ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களை கார்கியை போல் அவதூறாக பேசினால் அவர் முற்போக்காளரா ? இதே கார்க்கி இஸ்லாமியர்கள் மெக்கா சென்று வழிபடுகிறார்கள் அது பற்றி இது போல் அவதூறாக பேச முடியும்மா ? அப்போது எல்லாம் கார்க்கியின் முற்போக்கு எங்கே சென்றது (கார்கியை போல் தரம் தாழ்ந்து அவர் புத்தி பீ திங்க போனதா என்று நான் பேச போவதில்லை)
Report to administrator
+1 #9 Manikandan 2017-09-26 00:12
தமிழகத்தில் கடவுள் பக்தி என்றும் குறைய போவதில்லை, இவர்கள் (கார்கியை போன்ற மத மாற்ற NGOகள்) எவ்வுளவு முயன்றாலும் அவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கும்...
Report to administrator
+1 #10 Manikandan 2017-09-26 00:13
நல்லவேளை (சைக்கோ) பெரியார், கார்க்கி போன்றவர்கள் எல்லாம் இந்தியாவில் பிறந்தார்கள் இவர்கள் பாக்கிஸ்தான் அல்லது வேறு ஒரு இஸ்லாமிய நாட்டில் அல்லது கிறிஸ்துவ நாடுகளில் பிறந்திருந்தால் அவர்களின் நிலையே வேறாக இருந்திருக்கும் ... கார்கி பெரியார் போன்ற மூடர்களையும் பொறுத்துக்கொள்ள ும் சகிப்பு தன்மைக்காக ஹிந்து மதத்திற்கும் ஹிந்துக்களுக்கு இவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

பெரியார் கார்க்கி பற்றி இப்படி நாகரிகம் இல்லாமல் பேசுவதற்கு காரணம் இருக்கிறது, இவர்கள் மட்டும் ஹிந்து மதத்தையும் ஹிந்து கடவுளையும் அநாகரிகமாக பேசும் போது நான் மட்டும் இவர்களுக்கு ஏன் மதிப்பு கொடுக்க வேண்டும்.
Report to administrator
0 #11 Manoharan 2017-09-26 21:41
Which Hindu God of yourself came and told to invent Mahapushkaram after 144 years?Any record of celebration of the previous Mahapushkaram?H aving tasted victory,these "believers of any trash thing"also plan to celebrate Mahapushkaram in Sep,2018 in Tamirabarani,Ti runelveli.Let this Mannangatti Manikantan go and read some secular magazine to know the scam behind the Kaveri Pushkaram before calling Periyar names.He is not even fit to touch Periyar's feet.
Report to administrator
0 #12 துரை இளமுருகன் 2017-10-01 00:53
மகா புஷ்கரம் என்பது ஒரு மகா ஏமாற்று. இதை பல மடாதிபதிகள் தெளிவாக ஒப்புக் கொண்டார்கள். கடவுள் நம்பிக்கையை எதிர்க்கும் போது எது மிகவும் மோசமானதோ எது சமூகத்தில் பெரும்பாலான மக்க ளுக்கு துன்பம் அளிக்கிறதோ அதுவே முதன்மையாகவும் கடுமையாகவும் தாக்கப்பட வேண்டும்.
Report to administrator

Add comment


Security code
Refresh