பாரதிய ஜனதாவின் ஒரு வருட ஆட்சிக்காலம் பற்றிய விமர்சனங்கள், பல்வேறு மக்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மக்களை பிரித்தாளும் அரசியலையே பா.ஜ.க. இந்த ஒரு வருடத்தில் செய்து வந்துள்ளது என்பதை, அவர்களின் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பேச்சுகள் உணர்த்துகின்றன.

modi and rajnath singhஆட்சிக்கு வரும்போது, நாங்கள் காங்கிரஸின் ஆட்சியை விட சிறப்பாக செயல்படுவோம், ஊழலை ஒழிப்போம் என்று வாய்ஜாலம் செய்தவர்கள், கடந்த காலத்தில் மதவாத அரசியலை எவ்வாறு செய்தார்களோ, அதைவிட இப்பொழுது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கூடுதல் தெம்போடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, ராம்சேனா போன்ற அமைப்புகள் நடத்திய கலவரங்கள், கற்பழிப்புகள், வழிபாட்டுத்தலங்கள் இடிப்பு, வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகள் போன்றவைகளை லைசென்ஸ் இல்லாமல் செய்து கொண்டிருந்தார்கள்.

தற்பொழுது பா.ஜ.க. ஆட்சியில் அதற்கான லைசென்ஸை பெற்றுக் கொண்டு முழு உரிமையோடு அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதான், கடந்த காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்பொழுது உள்ள பா.ஜ.க ஆட்சிக்கும் உள்ள வித்தியாசமாகும். மனித உரிமை போராளி அருந்ததி ராய் அவர்கள் கூறும்பொது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளும், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்” என்றார். அதில், எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

தற்பொழுது, இந்துத்துவா அமைப்புகள் முக்கிய தீர்மானமாக எடுத்திருப்பது, பொது சமூகங்களுக்கிடையில் வெறுப்பூட்டும் விதத்தில் பேசி, அதை ஒரு சர்ச்சையாக்கி மக்களை திசை திருப்புவதை அவர்களின் பிரதான நோக்கமாகும் கொண்டுள்ளனர். ஆனால், இவர்களின் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. முஸ்லிம் தலைவர்கள் ஏதாவது பேசினால், அதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்வது சாதாரணமாகிவிட்டது.

இந்த வழக்குகளில் அக்பர்தீன் உவைசி, அஸதுத்தீன் உவைசி போன்றவர்கள் மீது சில நேரங்களில் வழக்குகள் பாய்ந்துள்ளது. அதேநேரத்தில் இதை தொழிலாக கொண்டுள்ள பிரவீண் தொகாடியா, சுப்ரமணியன் சுவாமி, கிரிராஜ் சிங், சாத்வி நிரஞ்சன் ஜோதி, சாத்வி ப்ராச்சி, சாக்ஷி மஹராஜ், யோகி ஆதியநாத், சஞ்சய் ரவுத் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் மீது வழக்குகள் பாய்வதில்லை. சிறைச்சாலைக்கு அனுப்பதில்லை. இதுதான், இந்த பா.ஜ.க. அரசின் ஒரு வருட சாதனையாகும்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா துணை அமைப்புகளின் நோக்கமே, சமூக மக்களை ஒரு அச்சுறுத்தலிலேயே வைக்க வேண்டும் என்பதுதான். அதற்கான முக்கிய தளமாக மீடியாவை நன்கு பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர்களின் அரசு அமைக்கப்பட்டதின் தொடக்கம், அவர்களுக்கு இன்னும் கூடுதல் தைரியத்தோடு செயல்படுத்தி வருகிறார்கள். தினம்தினம் சிறுபான்மை மக்களுக்கெதிரான தீவிரமான மற்றும் தீய சிந்தனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதில், முதல் தொடக்கமாக மோடி சர்க்கார் கையில் எடுத்தது லவ் ஜிஹாத் மற்றும் கர்வாப்சி போன்றவைகள் முக்கியமானதாகும். ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் புனேயில் முஸ்லிம் இளைஞர் முஹ்சின் ஷேக் அநியாயமாக கொலை செய்யப்பட்டõர். ஐ.டி. துறையில் வேலைப் பார்த்து வந்த அவரை, ஹிந்து ஜக்ரன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவருடைய தாடி உட்பட, உடல் உறுப்புக்களை சித்திரவதை செய்து கொலை செய்தனர்.

அதற்கு காரணமாக சமூக வலைதளத்தில் பால்தாக்கரே மற்றும் சிவாஜியை தவறான முறையில் சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டார் என்று கூறினர். அங்கு, தொடங்கிய அவர்களின் ஆட்டம், அடுத்து டெல்லி மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன. இதில் மும்பை, ஆக்ரா மற்றும் உ.பி. போன்ற பகுதிகளும் அடங்கும்.

அதன்பிறகு, வெறுப்பு பேச்சின் தொடக்கமாக சாக்ஷி மகராஜ், “கோட்சே ஒரு தேச பக்தர்” என்றார். அதோடுமட்டுமல்லாமல், “முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனால், ஹிந்துப் பெண்கள் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

அதேப்போன்று, சாத்வி பிராச்சி கூறும்போது, “ஹிந்துப் பெண்கள் எட்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், முஸ்லிம் நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான் மற்றும் ஷல்மான்கான் போன்றவர்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்” என்றார்.

இதில் முன்னணியில் இருப்பது பிரவீண் தொகாடியா, அதிகமானளவில் வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசக்கூடியவராக இருக்கின்றார். இவர் மீது அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா எம்.பி. யோகி அதியநாத் கூறும்போது, லவ் ஜிஹாத் மூலம் ஒரு இந்து பெண் மதமாற்றப்படும் போது, நாம் 100 முஸ்லிம் பெண்களை ஹிந்துக்களாக மதம் மாற்ற வேண்டும் என்றார். இந்த ‘லவ் ஜிஹாத்’ என்ற கோஷத்தை கீழ்மட்டத் தலைவர்களும், மேல்மட்டத் தலைவர்களும் தொடர்ந்து சமூகத்தில் பேசிக் கொண்டே வந்தனர்.

யோகி அதியநாத் இன்னொரு விதையையும் விதைத்தார். மசூதிகள் அனைத்தையுமே முஸ்லிம்கள் மதமாற்றத்திற்கான தளமாக பயன்படுத்துகின்றனர். அதனால், இந்த மதத்தின் புனித இடங்களில் முஸ்லிம்களை அனுமதிக்கக்கூடாது என்றார்.

மோடி அரசின் இரண்டு மத்திய அமைச்சர்களõன சாத்வி நிரஞ்சன் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோர், மிகவும் முகம் சுழிக்கக்கூடிய மற்றும் மனித இனத்தையே பழிக்கும் விதமாக கருத்துக்களை பேசினார்கள்.

நிரஞ்சன் ஜோதி கூறும்போது, ஹிந்துக்கள் அல்லாதவர்கள் அனைவரும் முறை தவறி பிறந்தவர்கள். தவறானவர்கள் என்று குறிப்பிட்டார்.

கிரிராஜ் சிங் கூறும்போது, முஸ்லிம் அல்லாதவர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும். மோடி அரசு அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

இதில், சோனியா காந்தியின் இனம் சம்பந்தமாகவும் கூறினார். கேரளாவில் கேஸரி பத்திரிகையில் கோபால் கிருஷ்ணன் என்பவர், கோட்சே தவறாக காந்தியை கொன்று விட்டார். அவர் நேருவை சுட்டிருக்க வேண்டும் என்று எழுதினார்.

பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, இறைவனை வணங்கக்கூடிய இடம் கோயில் மட்டம்தான். மசூதிகள் மற்றும் சர்ச்சுகள் வராது. அது, எப்படி வேண்டுமானாலும் இடித்து தள்ளலாம் என்று ஒரு மோசமான அறிக்கையை வெளியிட்டார்.

அதேப்போன்று, பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்றார்.

இந்த பேச்சுக்கள் எல்லாம் இந்த வருடம் அவர்களின் வாய்களில் இருந்து வந்தவைகளில், நாம் கோடிட்டு காட்டும் சில உதாரணங்கள்தான். சிறுபான்மை சமூக மக்களை அச்சத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அறிவுக்கு எட்டாதவிதத்தில் அவர்கள் வெளியிட்டு கொண்டே போகலாம். ஆனால், இவர்களின் வாய்ஜாலங்கள் அடங்கவில்லை.

அவர்களுடைய பேச்சுக்கள் அனைத்துமே மக்களை ஒன்றிணைய விடாமல், பிரித்தாளும் அரசியலையே இவர்கள் செய்து வருகின்றனர். ஒரு பொது அறிவு என்பதே இல்லாமல் நடந்து கொள்கின்றனர். இதனால், இவர்களின் அரசியல் லாபம் பூர்த்தியாகின்றது அதுதான் காரணம்.

மோடி ஒரு வருடம் நாங்கள் ஆட்சியில்8 இருந்தாலும், முப்பது வருடத்திற்கான வேலைகளை செய்து விட்டோம் என்கின்றார். ஆம்! உண்மைதான் “இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும், தங்களுடைய ஆட்களை நியமித்து அனைத்து துறைகளிலும் இவர்கள் நியமித்த அதிகாரிகள் இவர்களுக்காக செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சமீபத்தில்கூட “சென்ஸார் போர்டில்” உள்ளவர்களை எல்லாம் மாற்றிவிட்டு இவர்களுக்கு வேண்டியவர்களை நியமித்தனர். இன்னும் இவர்களுடைய ஆட்சியில் மாறாமல் இருப்பது குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மட்டும்தான். அதையும் வரும் நாட்களில் மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இப்படி, ஒரு வருட ஆட்சியின் செயல்பாடுகளை கூறிக்கொண்டே போகலாம். இன்னும் நான்கு ஆண்டுகள் எப்படி போகின்றது என்று தெரியவில்லை.

இவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். மோடி வளர்ச்சி என்ற பிம்பம் கரைந்து கொண்டே வருகின்றது. மோடி அவர்களின் வெளிநாட்டுப் பயணம் முடிவில்லாமல் சென்று கொண்டேயிருக்கின்றது. இதற்கு பின்பும் ஆர்.எஸ்.எஸ்.தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ்.தான் எல்லாமே. அவர்களைக் கொண்டு தான் எல்லா துறைகளுமே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதை மக்கள் புரிய வேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டிற்கு எதிரான வெளிநாட்டு சதிகளைப் புரிய முடியும்.

- நெல்லை சலீம்

Pin It