மனிதர்களால் செய்யப்படும் அனைத்துத் தொழில்களும் தனித்து நின்று செயல்படுவதில்லை; அனைத்துத் தொழிலும் குறைந்தது இரண்டு பேர்களையாவது கொண்டே செயல்படுகின்றன. விவசாயம் என்றால், உழவர், பராமரிப்பவர், விதைப்பவர், அறுவடை செய்பவர், பாதுகாப்பவர், வியாபாரி எனப் பலரின் கூட்டுழைப்பால்தான் செயல்படுகின்றது. மீன் பிடித்தல் என் றாலும், முத்துக்குளித்தல் என்றாலும் பலருடைய உழைப்பு தேவைப்படுகின்றது.

அனைத்து நிறுவனங்களும் முதல் போட்டவரால் மட்டும் இயங்கவில்லை. முதலாளி முதல் போட்டால் தொழிலாளிகள் உடல் உழைப்பை அளிக்கின்றனர். முதல் போட்டு விட்டால் அனைத்தும் தானாக இயங்குவதில்லை; பலரின் கூட்டுழைப்பால்தான் நிறுவனங்கள் இலாபம் காண்கின்றன. தொழிலாளிகளும் நிறுவனத்தில் தானும் ஒரு இலாபப் பங்கு தாரர் என்பதை உணர்ந்து உழைத்தால், கூடுதல் வருவாய் கிடைக்கும். கிடைத்த இலாபத்தை முதலாளிகளும் தொழிலாளிகளின் நலன் கருதிப் பகிர்ந்து கொடுத்தால் நிறுவனமும் பல வளர்ச்சிகளை அடையும். தந்தை பெரியார் 1900 லேயே அப்படிச் செய்தார்.

இலாபத்தை முதலாளி மட்டும் எடுத்துக் கொண்டால் குறுகிய காலத்தில் தொழில் நலிந்துவிடும். சில முதலாளிகள் தொழிலாளிகளின் ஏழ்மையைத் தவறாகப் பயன் படுத்துகின்றனர். இதனால் தொழிலாளிகளின் உழைப்பும் ஈடுபாடுடன் செயல்படாமல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இலாபத்தைப் பகிர்ந்து கொடுக்கும் அனைத்து நிறுவனங் களும் நன்கு வளர்ச்சி கண்டுள்ளன.

தற்பொழுது தமிழகத்தில் உழைக்காமல் செயல்படும் தொழில் அரசியல் மட்டுமே. ஒரு சில அரசியல்வாதிகளைத் தவிர அனைத்து அரசியல் வாதிகளும் மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தேர்தல் காலங்களில் சில இலட்சங்கள் செலவு செய்தால் பிறகு, கோடிக்கணக்கில் கொள் ளையடிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் ஈடுபடுகின்றனர்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் நம்முடன் சேர்ந்து வாழும் நபரே தேர்தலில் பெரிய அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்வதாகக் கூறி வருவர். அதில் கொள்ளையடிப்பவர்களே அதிகம். இந்தத் தேர்தலில் மக்களுக்கு நலன் செய்பவரை மட்டும் கட்சி பார்க்காமல், நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுங்கள். நல்லவர்களைத் தேர்ந் தெடுக்கும் அனைவரும் அறிவாளிகளே. மற்றவர்கள் அனை வரும் அறிவிலிகளே.

அரசியலில் இப்பொழுதெல்லாம் அதிக அளவில் பொறுக்கி களும் ரவுடிகளும் கொள்ளையர்களும் பெரிய பெரிய கட்சி களில் இணைந்து பாதுகாப்புடன் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இவர்களை வாக்காளர்களால் மட்டுமே ஒழிக்க முடியும்.

அனைத்தும் கூட்டுழைப்பாலேதான் செயல்படுகின்றன. கட்சிக்குத் தலைவர் மட்டும் இருந்தால் இயங்காது; நல்ல தொண்டர்களும் வேண்டும்; தொழிலுக்குத் தொழிலாளி களும் வேண்டும்.

வெற்றிக்கு, கூட்டுழைப்பு தேவை! தேவை!!

Pin It