‘பில்கணியம்’ என்ற வடநூலைத் தழுவி 1937 ஆம் ஆண்டு கவிஞர் பாரதிதாசனார் எழுதிய குறுங்காவியத்திற்கு அவர் ‘புரட்சிக்கவி’ என்று பெயர் வைத்தார்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் 29-07-1946 இல் நடந்த பாராட்டு விழாவில் அறிஞர் அண்ணா கவிஞரைப் ‘புரட்சிக் கவி’ என்று அழைத்தார். ஐயா தந்தை பெரியார் அவர்கள் ‘புரட்சிக் கவிஞர்’ என்று சொன்னார், பாரதிதாசனாரை.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார், தந்தை பெரியார் வழியில் பகுத்தறிவு, சமத்துவம், சமூக நீதி, தமிழ்-தமிழரின் இனநல மேன்மையென திராவிட சித்தாந்தத்தில் பாடிய பாடல்கள் அவரைப் புரட்சிக் கவிஞர் என்று உலகுக்கு அடையாளம் காட்டிற்று.

3500 ஆண்டுகளாக மதத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்களைத் தட்டி எழுப்பிய திராவிப் புரட்சிக் கவிஞர் நம் பாரதிதாசன் அவர்கள்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை, ஐயா பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வழியில் சமூக நீதிக்கான இயக்கம்.

அதுபோல திராவிட இயக்கக் கவிஞர்களான பொன்னிவளவன், முடியரசன் போன்றோரையும் நினைவில் கொண்டிருக்கிறது.

இக்கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்பவர் பாரதிதாசன் அவர்கள்.

புரட்சிக் கவிஞர் 29-04-1891ஆம் ஆண்டு பிறந்தார்.

21-04-1964ஆம் ஆண்டு மறைந்தார்.

புரட்சிக் கவிஞரை முதன்மைப் படுத்தும் விதமாக கவிஞர் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆம் நாளைப் ‘பேரவை நாள்’ ஆக மேற்கொண்டு அவரின் சிறப்பையும், புகழையும் ஏந்தி வருகிறது, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, ஆண்டுதோறும்.

இந்த ஆண்டு பேரவை நாளான புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளில் “கருஞ்சட்டைத் தமிழர்” மின்னிதழின் இவ்வார இதழ் வெளிவருகிறது என்பது கூடுதல் மகிழ்வைத் தருகிறது.

Pin It