பா.ஜ.கவின் தொங்குதசையாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவில் நிறைவேற்றப்பட்ட சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம்.

இந்த ‘மகாபிரபு’ அப்போது கேட்டார் இக்குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் நாட்டில் யாராவது பாதிக்கப் பட்டார்களா? என்று.

இன்று சொல்கிறார் கூட்டணி தர்மத்திற்காக ஆதரித்தார்களாம்.

எது முக்கியம்? கூட்டணி தர்மமா, நாட்டு நலன், மக்கள் நலனா? முதுகெலும்பில்லா மண்புழுவால் எழுந்து நிற்க முடியாது. என்னதான் சிறுபான்மை, சிறுபான்மை என்று முதலைக் கண்ணீர் வடித்தாலும் பழனிச்சாமியின் நாடகம் ‘ஸ்வாஹா’தான்.

இன்னும் ஏழு நாள்களில் சிஏஏ வை நடைமுறைப் படுத்துவோம் என்கிறார் ஒன்றிய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர். அமித்ஷா சொல்கிறார் இந்தச் சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று. என்ன காரணம்?

முஸ்லீம்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தின் மூலம் பிரிவினைவாத மத அரசியலை முன்வைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்யப் போகிறார்களாம்.

இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. மக்களும், தலைவர்களும், நாடும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய தேர்தல் களம், இது.

தமிழ்நாட்டின் முதலைமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்று தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்லி விட்டார்.

வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் எட்டப்பர்களையும், வடநாட்டில் பாசிசப் போலிக் காவிகளையும் துடைத்தெறிந்தால் ஒழிய, மக்களுக்கு வேறு ‘விமோசனமே’ இல்லை!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It