சிந்தின வியர்வை
கழித்த சிறுநீர்
களைப்பாறி படுத்துருண்ட
வயல்வெளி
கைக்கால் கழுவின தண்ணீரென
வேலைத் தளத்தில்
இவையனைத்தும் சிறிதேனும்
மொத்தமாய்க் கலந்திருக்கு
உங்கள் அகோரப் பசியின்
ஆகார உணவில்...
நீங்கள்
எங்களைத் தீண்ட வேண்டாம்...
சிந்தின வியர்வை
கழித்த சிறுநீர்
களைப்பாறி படுத்துருண்ட
வயல்வெளி
கைக்கால் கழுவின தண்ணீரென
வேலைத் தளத்தில்
இவையனைத்தும் சிறிதேனும்
மொத்தமாய்க் கலந்திருக்கு
உங்கள் அகோரப் பசியின்
ஆகார உணவில்...
நீங்கள்
எங்களைத் தீண்ட வேண்டாம்...