அதே சமயம்

உட்கிரமம் சிலவற்றில்

உள்ளடு இரட்டைக் குவளை

 

நின்றுபோன இடத்தில் தண்ணீர்

தெளிக்கப்படுகிறது தீட்டென

 

பறையடிக்க மறுத்தால்

வெட்டப்படுவதோ-

கட்டைவிரல் காணிக்கையாக

 

அனுமதி மறுப்பு

ஆலத்துள் நுழைய

 

உயர்திணைகளில் தாழ்த்தப்பட்டோராய்

இனங்காணப்படுவது

அழுகைகளாலல்ல-

அரசு வழங்கும் சலுகைகளால்.

 

-      சி. கண்ணன், சென்னை-26.

Pin It