பக்கத்துத் தெரு
பையனோடு இருந்த
தோழமைப் பழக்கத்தை
கயிறு திரித்து
நெருப்பு வைத்தது
நரம்பில்லா
ஊர் நாக்கு
என்னடி பொம்பள புள்ளைய
வளர்த்து வைச்சிருக்கேயென்று
அம்மாவின் வளர்ப்பையும்
அந்தரங்க உறுப்பையும்
கொச்சைப்படுத்திய
அப்பா
கோபம் தணிக்க
வட்ட பேருந்தின்
வழித்தடத்தைப்போல்
மதுக்கடை வழியாக
பக்கத்து ஊரு
வைப்பாட்டி வீட்டுக்குச் சென்று
மறுபடியும் திரும்புவார்
கண்டிக்க வீடு