கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

செய்தி : நீலகிரி மாவட்டம், மசினங்குடியில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து விதிகளை மீறிக் கட்டப்பட்ட 27 தங்கும் விடுதிகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவு

பார்வை : இந்த 27 தங்கும் விடுதிகள் கட்ட அனுமதி அளித்து, தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு, சாலை என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இதுநாள் வரை அவ்விடுதிகள் இயங்க அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த நீதிமன்றம்?

கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இதே யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டியுள்ள கஞ்சா சாமியாரின் ஆன்மீக மடத்தை மூட உத்தரவிடுமா இந்த நீதிமன்றம்?

செய்தி : வங்கியில் வாங்கிய 9000 கோடி கடனை ஏமாற்றிவிட்டு  இலண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா இந்திய சிறை மோசமாக உள்ளது என தெரிவித்துள்ளார். இதனால் மல்லையா அடைக்கப்படும் மும்பை சிறையை அனைத்து வசதிகளுடன் சுத்தமாக வைக்கவும்,  அதனை வீடியோ எடுத்து அனுப்பவும் இலண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி  சிபிஐயினர் நல்ல வெளிச்சமான, தனி கழிப்பறையுடன், சுத்தமான படுக்கையுடன் மல்லையா அடைக்கப்படவுள்ள 12ஆம் எண் அறையை வீடியோ எடுத்து இலண்டன் நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.

பார்வை : மோசடி மன்னன் மல்லையாவுக்கு இத்தனை வசதிகள். (இதற்கு அவனை வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ளலாம்) ஆனால், மக்களுக்காகப் போராடி சிறை செல்பவர்களுக்கு கழிப்பறைதான் சிறைச்சாலை, தனிமை கொட்டடி, இருட்டறை, இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள்.

செய்தி : ராமர் கோயில் கட்டப்போவதாகக் கூறி, இந்துக்களின் வாக்குகளை திரட்டுவதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் திட்டம்  தீட்டிவருகிறார். இந்நிலையில், நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விஷ்ணு பெயரில் நகரம் உருவாக்கி, அங்கு விஷ்ணு-வுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டுவோம் என முன்னாள் முதல்வர் அகிலேஷூம் போட்டியில் இறங்கியுள்ளார்.

பார்வை : இதுதான் வட மாநிலங்களில் நடைபெறும் அரசியல். பிற மதத்தினரின் கோயில்களை இடிப்பது. பார்ப்பனிய கடவுள்களின் கோயில்களை கட்டுவது. கட்சி தலைவர்கள் கோயில் கோயிலாக சுற்றுவது. பிற்போக்கு, மூடநம்பிக்கை, சாதிவாதம் இவற்றை வைத்துத்தான் வட மாநிலங்களில் அரசியல் செய்ய முடியும்.

ஆனால், தமிழ்நாடோ இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. கோயிலையும், கடவுள்களையும் வைத்து இங்கு அரசியல் செய்யமுடியாது. இடதுக்கீடு, சமூக சமத்துவம், பெண்விடுதலை போன்ற சமூகநீதிக் கொள்கைகளை பேசுவதும் அதற்காக போராடிய தலைவர்களை போற்றுவதும் தான் தமிழகத்தின் அரசியல். ஏனென்றால், தமிழ்நாடு பார்ப்பனியத்திற்கு நேரெதிரான மண், பார்ப்பனிய எதிர்ப்பின் குறியீடு, பெரியார் பிறந்த மண்!!