கே: நீங்கள் சிறையிலிருந்து திரும்பிய பின்னர்தான் கட்சி இரண்டாக உடைந்தது...
ப: ம்... நெஞ்சையே பிளந்துச்சு அந்தப் பிளவு.
கே: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் சேர வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
ப: மனசார நெனைக்கிறேன். நெறைய பேர் அப்படி நெனைக்கிறாங்க.
கே: ஆனால், இடதுசாரி இயக்கங்கள் வரலாற்றிலேயே மோசமான பின்னடைவைக் கண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூட இரு கட்சிகளும் சேர்வதற்கான அறிகுறிகளைப் பார்க்க முடியவில்லையே?
ப: காலம் கனியணும்னு நெனைக்கிறேன். ஆனா, அது நிச்சயம் நடக்கும். இடதுசாரி இயக்கங்கள் ஒண்ணா சேரணும். அது இந்தியாவோட தேவை.
இது தமிழகத்தின் முத்த கம்யூனிஸ்டின் குரல். சுதந்திரப் போராட்ட வீரரும் அப்பழுக்கற்ற கம்யூனிஸ்ட் போராளியுமான தோழர் நல்லகண்ணு அவர்கள் டிசம்பர் 26 2014 அன்று பத்திரிகையாளர் சமஸ் அவர்களின் நேர்காணலுக்கு அடுத்து.... ஒரு குரல்.
இடதுசாரி ஒற்றுமையை காப்போம்!
இன்றைய அரசியல் பின்னணியில், உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்த்து முறியடித்திடவும், நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசையும், அதன் அரசமைப்புச்சட்டத்தையும் பாதுகாத்திடவும் இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு, இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
இது கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் துவக்கவுரை.
இது தலைவர்களின் முழக்கம் ஆசி விருப்பம் எண்ணம் எதிர்பார்ப்பு ஆனால் சூழலில் ஒற்றுமைக்கான அதன் தேவைக்கான பொத்தாம் பொதுவான விருப்பக் குரல் அவ்வப்போது எழுகிறதே தவிர ஒலக்கிறதே தவிர அதற்கான தீர்மானகரமான தொரு செயல்வடிவம் எடுக்கவே இல்லை இந்தச் சூழலில்தான் கம்யூனிஸ்ட் கட்சி மாலெ மக்கள் விடுதலை காலத்தி்ன் தேவை கம்யூனிஸ்டுகளின் ஓற்றுமையே என்கிற வரலாற்றுச் தேவைக்கான முன் வைத்து அதன் தன் செயல் திட்டங்களில் முன்னுரிமை கொடுத்து அன்று கோவையில் ஒரு வெற்றிகரமான மாநாட்டை நடத்தி முடித்து ததோடல்லாம் அதன் னதொடர்்சிசயாக தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளின் முன்னணி என்கிற இயக்கமொன்றைக் கட்டமைத்து தமிழ்மண்ணில் களமாடி வருகிற அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இயக்கங்களையும் ஒன்றிணைத்து இலக்கை குறிக்கோளை சாத்தியமாக்க நிறைவேற்ற களமாடுகிறது கம்யூனிஸ்ட் கட்சி மாலெ மக்கள் விடுதலை அதன் பயண வழிததடத்தில் புதிய மனிதனும் பங்கேற்கிறான் இனி எதிர்வரும் ஒவ்வொரு மாத இதழ்களிலும் காலத்தி்ன் தேவை கம்யூனிஸ்டுகளின் ஓற்றுமையே என்கிற பொதுத்தலைப்பில் மார்க்சிய அறிஞர்கள் ஆளுமைகள் தொடர் கட்டுரைகளின் அணிவகுப்பு இடம்பெறும் என்பதற்கான முன்னுரையே இது.
- பாட்டாளி