கடந்த  ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக  இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரியது  தமிழ்நாடு மின்சார வாரியம். ஆனால் கடந்த தொடர்ச்சியான ஆண்டுகளில் மின்சார வாரியம் அதன் பயன் நோக்கிலிருந்து விலகி மக்களுக்கானது மின்சாரம் என்னும் சொல் அல்லது சிந்தனை மறக்கப்பட்டு தனியார் நோக்கில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதற்கு நேரடிக் காரணங் கள் பல இருந்தாலும் அதில் மிக முக்கியமான காரணமாக அரசியல் இருந்து வருகிறது.  இதைப் புரிந்து கொள்ள முதலில் மின் வாரியம் குறித்து சில வளக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது-.

தகவல் தொழில்நுட்ப வளர்ச் சிக்கு முன்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு நிலையான வருவாயுடன் பணிப்பாதுகாப்பும் வழங்கி வந்த, வந்துகொண்டு இருக்கிற அரசுத் துறை நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியம் திகழ்கிறது. மற்ற அரசு நிறுவனங்களை விடவும்.  இந்நிறு வனத்தில் அதிக அளவு பொறியாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். இது அல்லாது மூன்றாம் நிலை, நான்காம் நிலைப் பணியாளர்கள் ஊழியர்கள் அதிகமாகப் பணியாற்றி வரும் நிறுவனமும் இதுவே. இதன் தற்போ தையத் தலைவர் திரு சி. பி. சிங் .

தமிழ்நாடு மின்சார வாரியம் மூன்று பணிகளை மேற்கொண்டு வரு கிறது. முதலாவதாக உற்பத்தி [Generation] இரண்டாவதாக கடத்துதல் [Transmission] மூன்றாவதாக விநி யோகம் [Distribution].

தமிழ்நாடு மின்சார வாரியம் தனக்கென்று சொந்தமாக பல்வேறு வழிமுறைகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்கின்றது. அவை முறையே, 1. அனல் மின் நிலையம், 2. புனல் மின் நிலையம் (நீர் மின்சக்தி) 3. எரிவாயு பயன்படுத்தி உற்பத்தி, 4. காற்றாலை மூலமாக உற்பத்தி ஆகியன.

அனல், புனல் எரிவாயு, காற் றலை இவை எல்லாமே சுழலும் சக்தியை [Kinetic Energy] பெறுவதற் கான ஒரு வழிமுறை. இந்த சுழலும் சக்தியைப் பயன்படுத்தி மிகப் பெரிய மின் ஆக்கியை [Generator] சுழலச் செய்து அதன் மூலம் மின்சாரம் உற் பத்தி செய்யப்படுகிறது.

இப்படி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உயர் அழுத்த மின்சாரமாக மாற்றப்பட்டு இந்தியா முழுவதும் பின்னப்பட்ட பொதுவான தொகுப் பில் இணைக்கப்பட்டிருக்கும்.   உற் பத்தி  நடைபெறும் இடத்திலேயே இதற்கான ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும். இப்படித் தொகுப்பில்  இணைக்கப்பட்டுள்ள  உயர் அழுத்த மின்சாரத்தை எடுத்து துணை மின்நிலையங்கள்[Sub-Stations] அமைத்து அதன் மூலம் மீண்டும் அழுத்தம் [Voltage] குறைக்கப்பட்டு அடுத்த நிலையில் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வேலை தொடர் கண் காணிப்பில் 24 மணி நேரமும் இடைவிடாது செயல்பட்டு கொண்டு இருக்கும். தொகுப்பு எனக் கூறப்படும Gridஇல் மின்சாரத்தின் அலை வேகம் 50 Hrz +1 என்ற அளவில் தொடர்ச்சியாக பராமரிக் கப்பட்டு வரும். இது நேரடியாக நாம் பயன்படுத்தும் மின்சாதனத்தின் இயங்கும் தன்மையில் தொடர்பு டையது. எனவே இதை முக்கியமான ஒன்றாக கருதவேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் Grid மின்சாரம் நகரும் திசையையும் தீர்மானிக்கிறது. மின்சாரம் சில குறிபிட்ட நேரங்களில் அதிகமான அளவு ஒரு மாநிலத்தை நோக்கி நகரும் போது அதை வைத்து மத்திய மாநில நிறுவனங்கள் பிடுங்கும் இழப்பீட்டுத் தொகையும்   [Over Drawyal] ஒரு கொள்ளையாகும்

இனி மின் உற்பத்தி வகைகளைப் பார்ப்போம்.

1.அனல் மின் உற்பத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் முறையே வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல் மின் நிலையம் அமைத்து மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இவ் உற்பத்தி நிலையத்தில் நீரை ஆவியாக்க நிலக்கரி எரிபொருளாகப் பயன்படுத் தப்பட்டு வருகிறது. இவ் நிலக்கரி கால இடைவெளி இன்றி ஒரிசாவில் இருந்து கொண்டுவரப்பட்டு தமிழ்நாட்டில் இரயில்கள் மூலமாக எடுத்ச் செல்லப் பட்டு பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு எரிபொருளை சார்ந்து இந்த உற்பத்தி நடைபெற்று வருகிறது.  இவ்வுற்பத்தி மறைமுகமாக மைய அரசைச் சார்ந்து உள்ளது.

மேலும் எரிபொருளைப் பகிர் வதில் மைய அரசு மாற்றம் செய்வதன் மூலம் உற்பத்தியை பாதிப்படையச் செய்யலாம்.. ஏனெனில் கொண்டு வரப்படும் நிலக்கரி அதிக அளவு அதிக நாட்களுக்கு, தோராயமாக ஒரு மாதத் திற்கு மேல் தேக்கி வைத்து பயன் படுத்துவது என்பது   இயலாது. அவ் வாறு தேக்கி வைத்து பயன் படுத்துவது நிலக்கரியை தானாகவே எரிந்து போகவும் செய்து விடும் என்பதால் அவ்வாறு தேக்கி வைக்க இயலாது. எனவே நிலக்கரி தொடர்ச்சியாக  பயன்பட்டுக் கொண்டேஇருக்க வேண்டும். இவ்வாறு அனல் மின் நிலையத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தொடச் சியாக எல்லா பருவகாலங்களிலும் நடை பெற்று வருவதால் இவ்வுற்பத்தி தீணீsமீ [Base Load Generation] எனப்படும் அடிப்படை உற்பத்தி யாகத் திகழ்கின்றது.

2.நீர் மின் உற்பத்தி இம்முறை யின் கீழ் சுமார் 2,100 MW அளவு திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தா லும், இவை முழுவதுமாக நீரின் இருப் பைச் சார்ந்து இருப்பதனால் இதில் 50% - 60% அளவு உற்பத்தியே நாம் பெறுகிறோம். இந்த நீருக்கும்  சேர்த்தே நாம் கர்நாடகத்திடமும், கேரளாவி டமும் கையேந்துகிறோம் என்பதை  நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

3. எரிவாயு உற்பத்தி: மின்வாரியம் எரிவாயுவைப் பயன் படுத்தி 500 MW அளவுக்கு மின் உற்பத்தி நிலையங்களை அமைத்திருந் தாலும் குறைவான அளவே உற்பத்தி யில் ஈடுபட்டு வருகின்றது. இவ்வகை உற்பத்தியில் உற்பத்தி செலவு மிக அதிகம். அதனால் தான். தான் செலவிடும் 1 யூனிட் உற்பத்தி செலவை விட அதிக அளவு பணம் கொடுத்து ரூபாய் ஒன்பது வரை வாங்குவது வேடிக்கையிலும் வேடிக்கை. இப்படி அதிக அளவு விலையை கொள்முதல் செய்யக் கொடுப்பதாலேயே மின் வாரியத்தில் தற்போதைய நிதி நெருக் கடி உருவாகியுள்ளதாக பொறியாளர் கள் கூறுகின்றனர்.

4.காற்றாலை உற்பத்தி :காற்றாலை உற்பத்தியில் முழுக்க தனியார் ஆதிக்கமே உள்ளது.தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மின் வாரியம் வாங்கி விநியோகிக்கின்றது. உற்பத்திச் செலவு மிக மிகக் குறைவு. ஆனால் எல்லாக் காலங்களிலும் உற்பத்தி செய்வது என்பது கடினம். இருந்தா லும் தனியார் முதலாளிகள் கொழுத்த லாபம் கானும் உற்பத்தியாக இது உள்ளது. 4,800 MW உற்பத்தி அளவு ஆலைகள் அமைக்கப்பட்டு இருந் தாலும் இதில் பாதி அளவு  உற் பத்தி கூட எல்லாக் காலங்களிலும் கிடை யாது.

5.மத்தியதொகுப்பு: நெய்வேலி அனல் மின்நிலையம் மற்றும் கல்பாக்கம் அணு மின்நிலையம் ஆகிய மத்திய நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழக பங்காக 2,500  MW நமக்கு ஒதுக்கப்டு கின்றது. இதையும் வாரியம் வாங்கி நுகர்வோருக்கு அளிக்கின்றது. மீத உற்பத்தி மத்தியத் தொகுப்பு வழியாக மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. மத்திய அரசு நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 30% ஆக உள்ள நிலையில் மீத உற்பத்தி மத்திய தொகுப்பு என்ற பெயரில், கொண்டு செல்லப்படுகிறது.  ஒரே இடத்தில் நிலக்கரியை எடுத்து (நெய்வேலி) அங்கேயே அதை மின் உற்பத்திக்கு பயன்படுத்தி குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்து மத்தி தொகுப்பு என்ற பெயரில் எடுத்து செல்வது ஒரு வித நூதன மோசடி

அரசு, பிள்ளை பெருமாள், நி.வி.ஸி போன்ற தனியார் உற்பத்தியாளரிடம் உற்பத்தி செலவைவிட அதிக அளவு ரூ 5 முதல் ரூ 9 வரை கொடுத்து மின்சாரம் வாங்குவதோடு மட்டு மல்லாமல், வாங்காது போகும் தனியார் நிறுவனங்களுக்கு மின் வாரியம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மோசடியான ஒப்பந்தத்தாலும், அப்படி ஒப்பந்தம் போட்ட ஆட்சியாளர்களும் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட வழசெய்ததோடு மட்டும் அல்லாமல், வாரியத்தில் தற்போது ஏற்பட்டி ருக்கும் பணியாளர், பொறியாளர் பற்றாக்குறை புதிய பணியாளர்களை, பொறியாளர்களை, பட்டயப் பொறியாளர்களை தேர்தெடுக்கும் தேவையை அதிகரித்துள்ளது.

மின்வாரியமே இதை ஒட்டி பணியாட்களை தெரிவும் செய்கின் றது. அப்படி தேர்தெடுப்பவர்களில் அதிகமானோர் மூன்று முதல் ஐந்து லட்சம் வரை கையூட்டு கொடுத்து பணியிடங்களைப் பெறுவதாகக் கூறுகின்றனர்.. இது அவ்வாறு புதிதாக பணியில் சேர்ந்த நபர்களிடம் ஒட்ட பழகினால் மட்மே அவர்களின் வாயில் இருந்து வரும் செய்திகளாகும். இது நிர்வாக அளவில் வேகமாக சீரழிவு நடைபெறுவதை சுட்டுகின்றது.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக வாரியத்தின் வருவாய் இழப்பாக.5 10,000 கோடிக்கு மேல் சென்று கொண்டிருப்பதாக செய்தி களும் வருகின்றது. இன்னொரு பக்கம் மின்சார சட்டம் 2003 ஐபயன்படுத்தி ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தன் பிடியை இறுக்குகின்றது. இழந்து விடுவதற்கு அச்சாரம் போடப்பட் டுள்ளது.

மேலும் புதியதாக உருவாகும் அனல் மின் நிலையங்கள் நேரடியாக தேசிய அனல் மின் கழகம் கண் காணிப் பில் இயங்க போகின்றது. இதனால் தமிழ்நாட்டில் படித்து பட்டம்பெற்றவர்களின் வேலை வாய்ப்பை, மற்ற மானிலத்தவரும் பங்கு போடுவது உறுதி. ஏற்கனவே தமிழர் அல்லாத பிற மொழி பேசும் நபர்களின் எண்ணிக்கையும் கனிசமாக உள்ளனிலையில், இதனால் தமிழ் நாடும். மின் வாரியமும் பாதிப்பை அடையபோவது என்பது தவிர்க்க இயலாது

இதன் நேரடி விளைவாக அடக்கிவைக்கப்பட்டு இருக்கும் மின்கட்டன உயர்வு வெளிப்படும் போது மின்வாரியத்தின் தற்போதைய குழப்ப நிலைமை வெளி உலகத்திற்கு தெரியவர ஆரம்பிக்கும்

Pin It