பா.ஜ.க. பார்ப்பான் எச். ராஜாவின் நரகல் பேச்சு

(பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக உள்ள எச்.ராஜா எனும் பார்ப்பான், சென்னை - எம்.ஜி.ஆர். நகரில் பேசிய ‘நரகல்’ பேச்சின் ஒரு பகுதியை மட்டும் இங்கு வெளியிடுகிறோம். பெரியார் திராவிடர் கழகத்தின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு காவல்துறை, இந்து முன்னணியின் எதிர்ப்பினால் அனுமதி மறுத்தது. எனவே ஊர்வலம் இல்லாமல் கழக சார்பில் நாத்திகர் விழாவை ஜூன் 14 ஆம் தேதி பொதுக்கூட்டமாக நடத்தியது. அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர் சிலரை காவல்துறை தடுத்து வைத்து, கழகக் கூட்டம் முடிந்தவுடன் விடுதலை செய்தது.

இதைத் தொடர்ந்து, கழகம் நாத்திகர் விழா, மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுக்கு பாராட்டு விழா நடத்திய அதே இடத்தில் அதற்கு அடுத்த வாரத்தில் ஜூன் 26 ஆம் தேதி பா.ஜ.கவினர் கூட்டம் போட்டு அதில் எச். ராஜா என்ற பார்ப்பானை சிறப்புப் பேச்சாளராக பேச அழைத்திருந்தனர். சுமார் 50 பேர் திரண்டிருந்த அந்த “மாபெரும்” கூட்டத்தில் - எச். ராஜா தனது பார்ப்பனப் பண்பாட்டின்படி பேசிய பேச்சு இது.)

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் முதல்வர் கலைஞர், தமிழர் தலைவர் பெரியார் பற்றியெல்லாம், இந்த பார்ப்பன ஆசாமி தமிழகம் முழுதும் இதே போல்தான் பேசி வருகிறான். காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனாலும் பார்ப்பனர் கொழுப்பு - எப்படி வளர்ந்து நிற்கிறது என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும் என்பதற்காக ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்ட அந்த ‘நரகல்’ பேச்சின், ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.

மத உணர்வை புண்படுத்தின தி.க. நாய்களை அல்லவா அடித்து வண்டியில் ஏற்றியிருக்கணும். பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் கழுகுகள். ஒரு சமூக விரோத கலாச்சார விரோத, பண்பாட்டு விரோத, இந்து விரோத கருணாநிதியின் கீழ் போலீஸ் இருந்தால் அப்படி தானே இருக்கும். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. ஒரு மோசமான முதலமைச்சர், அதனாலே மோசமான காவல்துறை. ஆனால் காவல்துறை எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அடுத்து ஆட்சி மாற்றம் வந்தால் இவர்கள் மாறிவிடுவார்கள். பல்டி அடிப்பதில் முதலில் இருப்பவர்கள் அதிகாரிகள் தான்.

பெண்டாட்டி கழுத்திலே கட்டின தாலி, நெற்றியிலே வைச்சிருக்கிற பொட்டிலே நம்பிக்கை இருந்துன்னா போலீஸ்காரங்க அன்னைக்கு தி.க. காரனை ரோட்டிலே விட்டு அடித்திருக்க வேண்டாமா. உன் பெண்டாட்டி வைக்கிற பூ மேலேயும், பொட்டு மேலேயும், ஒவ்வொரு கோயிலிலேயே கும்பிடுறதையும் அவன் செயல்படுத்த மறுக்கிறான். அதனாலே தானே நடந்தது. போகட்டும் மானங் கெட்டவர்கள். 6 மாதம் தானே பார்த்துக் கொள்வோம்.

கருணாநிதியை திரும்ப கம்பி எண்ண வைக்கலே இந்த பி.ஜே.பி. சர்க்கார் பார்த்துக் கொள்ளங்க என்கிறேன் நான். எத்தனை ஊழல் நடந்திருக்கிறது இந்த ரெண்டு வருசத்திலே. தி.மு.க.ன்னா மின்சார தட்டுப்பாடு, ரேசன் அரிசி கடத்தல், ஊழல் இது தானே இலக்கணம். எங்களுக்கு என்ன கேசா மாட்டாது? இந்த ஆளை உள்ளே வைக்க. சைக்கிள் பேர ஊழல் ஒன்னு போதும். ஏன்னா தமிழ்நாடு அரசு சைக்கிள் கொடுக்கிறதுக்கு எந்த கம்பெனியில் வாங்கிச்சோ, அதே கம்பெனியில் தான் மத்திய பிரதேச அரசும் வாங்கிச்சு. ரூ.150 கம்மி ரேட்டுல. ஒரு சைக்கிளுக்கு ரூ.150-ன்னா எத்தனை லட்சம் சைக்கிள், எத்தனை கோடி ரூபான்னு கணக்கு போட்டுக்குங்க. டி.வி. பேர ஊழலைவிட இது பெரிய ஊழல். நிரந்தரமா தள்ளிடலாம்.

போலீசை வெச்செல்லாம் உள்ளே வைச்சிடலாம்னு இந்துக்களை மிரட்டக் கூடாது. இந்து விரோதி கருணாநிதி. கேடு கெட்ட ஆட்சியின் கீழே இவ்வளவு தெனாவட்டா, கொழுப்பா, திமிரா, இந்துக்களுக்கு எதிரா நடவடிக்கை எடுக்கற. இந்து மதத்தைப் பற்றி எப்படி பேசுவே, ஏய்யா உங்களுக்கு கருவிலே குற்றம் என்கிறேன் நான். கருணாநிதிக்கு கருவிலே குற்றம்.

தந்தை பெரியாருன்னு சொல்றாங்க, அந்த தந்தை பெரியார் எப்படிப்பட்ட நபர் தெரியுமா? அவ்வளவு கேவலமானவன் பகுத்தறிவாதியா? சீர்திருத்தவாதியா? கேடு கெட்ட ஜென்மங்கள், சமூக விரோத சக்திகள், மிக மோசமான இழிந்த ஜென்மங்கள் ஈ.வெ.ரா. அதன் பாரம்பரியத்தில் வந்த அத்தனை தி.க.காரனும். யார் இந்த ஈ.வெ.ரா. என்ன பெரிய பகுத்தறிவு பகலவனா? பேசிக் அறிவே இல்லாத ஆள். வெள்ளைக்காரன் கைக் கூலி, தேசத் துரோகி, அன்னியனின் அடிவருடி. ஈ.வெ.ராவைப் பற்றி முழுக்க தெரிஞ்சிக்குனுமுன்னு சொன்னா தமிழர் தலைவர் ஈ.வெ.ரா.ன்னு, முதல்ல ஈ.வெ.ரா. தமிழனேயில்ல.

கன்னட நாய்க்கரு. தமிழர் தலைவரன்னு சாமி சிதம்பரனாருன்னு ஈ.வெ.ராவினுடைய சிஷ்ய பிள்ளை எழுதிய வரிகளை சொல்றேன். இந்த புழுத்த ஜென்மங்களை வீதிகளில் நடமாடவிடுறதே தப்பு, இந்த நாட்ல பெண்களுக்கு ஆபத்து. பெண்களின் மானத்துக்கு ஆபத்து. தி.க.காரனை, தி.மு.க. காரனையெல்லா ரோடுல நடமாடவிடுறது தப்பு. தி ஆன்ட்டி சோசியல் எலிமென்ட். ஈ.வெ.ரா. புத்தகத்தை கையிலே வைச்சிக்கிட்டு ஒவ்வொரு தி.க. காரனையும் உதைச்சி சேதுவா இருக்கட்டும், ராமனா இருக்கட்டும், அவனை இல்ல உள்ளே தள்ளனும். பிஜே.பி.காரனை எதுக்கு தள்றது.

ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இருந்த காலத்திலே இந்து சொரணை இல்லாமல் இருந்தான். ஆனா இப்ப அப்படி இல்ல. அப்போ நாங்கள் எல்லாம் தலை எடுக்கல. அதனால என்னடா பேடித்தனம், அராஜகம் என்கிறேன். முதலில் போலீசிலே அனுமதி மறுத்தாங்க. பின்பு கொடுத்தாங்க. கருணாநிதி என்ன கொடுக்க சொன்னாரா? கருணாநிதியே சொன்னாலும் காவல்துறையே கேட்கக் கூடாது என்கிறேன் நான். இந்த நாட்டிலே எந்த மதத்தையும் புண்படுத்தக் கூடாது என அரசியல் சட்டத்தில் இருக்கு. எப்படி அனுமதி கொடுத்தது காவல் துறை.

பெரியார் பெயரை தமிழ்நாட்டில் சொல்லுவதே தப்புடா, தேச துரோகிடா. அவன் வெள்ளைக்காரன் கைக்கூலி. 1947 இல் சுதந்திர நாளை, துக்க நாள்னு சொல்லி, சுதந்திர தினத்தில் கருப்புக்கொடி ஏற்றச் சொன்ன தேச துரோகி. கேவலமானவனில்ல. அவன் பேரை சொல்பவனெல்லாம் தேச துரோகி. தாயை வீதியிலே விக்றவனுக்கும், ஈ.வெ.ராவுக்கும் என்னடா வித்தியாசம்? மானம் கெட்டவனுக்கு விழாவா, சிலையா? ஈவ்டீசிங்கில் போயிடுவீங்க. ஜாக்கிரதையா இருங்க. நடக்கும் தமிழ்நாட்டுலே. இந்தியாவிலே 200 வருஷம் வெள்ளைக்காரன் அடிமைதனத்தை ஏற்று இருந்தவன் தானே கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்தியனுக்கு சொரணை வரும். அப்படி அப்படி ஊட்டி வளர்க்கனும், கொஞ்சம் காலம் இன்னும் 10 வருஷம்.

என்ன அராஜகம்? எவன்டா பெரியார் இந்த நாட்டுக்கு பெரிய வழிகாட்டியா? யாரு விலை மாதர்களோடு காவேரி ஆற்றங்கரையில் கும்மாளம் அடிக்கிறான், பெண்களைப் பற்றி ஈ.வெ.ராவுக்கு என்னய்யா ஒபினீயன் இருக்கு? பெண்களைப் பற்றி சொல்றான் ஈ.வெ.ரா., பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. விருப்பப்பட்ட ஓட்டலிலே விருப்பப்பட்ட பணியாரம் சாப்பிடுவதுபோல விருப்பப்பட்டவனோடு பெண்கள் இருக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய தமிழின துரோகித் தெரியுமா இந்த ஈ.வெ.ரா.? கண்ணகியை சொல்றாரு, கண்ணகியைப் போல மிக மோசமான கற்பில்லாதவள் கிடையாதாம். மார்பகத்தை தூக்கி எறிந்தாளாம். மதுரை பற்றி எரிந்ததாம். கண்ணகி மார்பு என்ன பாஸ்பரஸ் உருண்டையா? கேட்டானா, இல்லையாய்யா. இப்படி கேட்ட மானங்கெட்டவன் தமிழர் தலைவரா? தமிழின துரோகி இல்ல ஈ.வெ.ரா. தமிழை காட்டுமிராண்டி மொழின்னு சொன்ன ஈ.வெ.ரா.வின் பேரை சொல்றவன் நாக்கை அறுத்தாலும் தப்பு உண்டா இந்த நாட்டுல. நான் சொல்ல மாட்டேன். மக்கள் கோபப்பட்டு நாக்கை அறுத்துட்டா, நான் பொறுப்பல்ல.

பெரியார் தி.க.வா, பெரியாரே வீணா போனவன் அவனுக்கு ஒரு கழகமா? தமிழின துரோகி, சிலப்பதிகாரத்தை எதிர்த்தவன், மிக மோசமான பின்னணி இருக்குற நீங்க இந்து மதத்தைப் பற்றி பேசறதா நான் கேக்குறேன். உலகம் பூரா சிலுவையில் அடிச்சிகறானடா இந்த பகுத்தறிவுவாதிகளை தீ மிதிச்சா மட்டும் போதாது. பெரியார் தி.க. தலைவன் யாரு கொளத்தூர் மணியா? அவனைக் கொண்டு வந்து சிலுவையில் அடிப்போம் என்கிறேன் நான். பகுத்தறிவை காட்டிடுவோம் என்கிறேன் நான். என்னடா மானங்கெட்ட பயலுங்களா.

இந்துக்கள் சொரணை கெட்டு இருக்கிறதனாலே தானே இந்த மானங்கெட்ட பயல்கள் பண்றான். இது வீர பாரம்பரியம். நரபலி கொடுத்து மகா பாரதத்தில் வெற்றி பெற்ற வீரபாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

பாரத நாட்டைச் சேர்ந்த பண்பாட்டு கலாச்சாரத்துக்கு சொந்தமான இந்துக்கள் நாம். இன்றைக்கு இந்த தி.க. காலிகள், பெண் பொறுக்கிகள் ஈ.வெ.ரா.வைப் போன்ற மோசமானவன் பேரைச் சொல்லி இவ்வளவு பேர் திரியறதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கோமே நாம. ஏன், நம்ம சாமிங்ககிட்ட ஆயுதத்தைக் கொடுத்துவிட்டு, நாம நாசமா போயிட்டோமா? அய்யனார் கையிலே ஆயுதம், காளி கையிலே சூலம் எல்லாத்தையும் கொடுத்துட்டு நம்ம கையிலே ஒண்ணுமே இல்லையே? இனிமே இந்து மதத்துக்கு எதிரா ஒரு பயலும் பேசக் கூடாது என முடிவு எடுக்கனும், நாம இங்கே. அந்த நேரம் வரும்.

இராம ஜென்ம பூமி இந்து மக்களிடையே மத எண்ண உணர்வுகளை அசைத்துக் கொடுத்தது. அது இப்ப நடக்கும். திராவிட இயக்கத்தின் சரித்திரம் கடந்தகாலமாகிவிடும். தோழர்களே நாம் ஒன்றை முடிவு செய்வோம். எந்த இந்து விரோதியும் இந்த மண்ணிலே செயல்படவிடக் கூடாது.

இவ்வாறு அந்த ஆசாமி ஆணவத்தோடு பேசியுள்ளார்.

Pin It