தமிழ் நடிகைகள் குறித்த தங்கர்பச்சானின் ‘அரிய’ கருத்து, திருமணத்திற்கு முன்னான பாலுறவு குறித்த குஷ்புவின் கருத்து போன்றவைகளுக்கு அடுத்தபடியாக ஜெயராமின் பேச்சு இப்போது தமிழ் ‘இன உணர்வைக்’ கிளப்பியிருக்கிறது. இன்று காலையில் ஒரு தமிழ்த்தேசிய நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது, ‘ஜெயராமுக்கு மன்னிப்பு, சீமானுக்குக் கைது - இதுதான் திராவிட நீதியா?’ என்று. ஜெய்ராம் பேசிய கருத்துக்காக தமிழகக் காவல்துறை அவரைக் கைது செய்ய முடியாது, ஜெய்ராம் மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் (தொடரப்பட்டிருக்கிறது). ஆனால் நாம் தமிழர் இயக்கம் ஜெய்ராம் வீடு புகுந்து நிகழ்த்திய வன்முறைக்கு நிச்சயம் காவல்துறை கைது நடவடிக்கை எடுத்துத்தானாக வேண்டும். ஆனால் இந்த வித்தியாசங்களைக் கூட உணர முடியாதளவு நிதானத்தை இழந்துள்ளனர் தமிழ்த் தேசியவாதிகள். நிதானம் இழப்பதும் எதார்த்தங்களைப் பரிசீலிக்கத் தவறுவதும் அவர்களுக்கு ஒன்றும் புதியதல்லவே!

'தாக்கரே பெருமகன்' என்று மும்பையில் சீமான் பேசியதற்கு மேலும் அர்த்தத்தின் அடர்த்தியைக் கூட்டியிருக்கின்றனர் அவரது தம்பிமார்கள். ஜெயராமின் கருத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று எதுவுமேயில்லாது எடுத்தவுடனே வீடு புகுந்து அடிப்பது ஒன்றுதான் வழி என்றால் அந்த வன்முறை யார் மீது வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்பதை நாம் உணரவேண்டும். பெரியாரைக் கைவிட்ட சீமான் சிவசேனாவின் வழி நோக்கி அடியெடுத்து வைப்பது கருத்தியல் இயல்புதான்.

நிச்சயமாக இந்த கட்டுரை ஜெயராமின் கருத்துக்களை நியாயப்படுத்தவில்லை; ஆனால் ஜெயராமின் சொற்களுக்குப் பின்னாலிருந்தது வெறுமனே இனவாதத் திமிரல்ல என்பதை அடையாளப்படுத்த முனைகிறது. மேலும் ஜெயராமுக்கு எதிராய்க் குரலுயர்த்தும் இனவாதிகள் மற்றும் ஊடகங்களின் அறிவுநாணயம் மற்றும் அரசியல் யோக்கியதை குறித்துக் கேள்வி எழுப்ப விரும்புகிறது.

ஜெய்ராம் மலையாளச் சேனலில் அளித்த நேர்காணலை வைத்து முதன்முதலாகப் பரபரப்பைக் கிளப்பியது குமுதம்தான். வேலைக்காரிகள் குறித்த ஜோக்குகளையும் படங்களுக்கான கமெண்டில் நடிகைகள் குறித்த அருவெறுப்பான வார்த்தைகளையும் உதிர்க்கும் குமுதத்திற்கு இதுகுறித்து எழுதுவதற்கு ஏதாவது யோக்கியதை உண்டா? குமுதம் திடீரென்று பேசும் இனவாதத்தின் பின்னுள்ள லாபம் என்ன?

ஜெய்ராம் குறித்து முதலில் கண்டனத்தைத் தெரிவித்தவர் வழக்கம் போல், ‘என்ன சார் நடக்குது இங்க?’ தங்கர்பச்சான்தான். ஆனால் இதே தங்கர்பச்சான்தான் ‘நடிகைகள் விபச்சாரிகள்’ என்ற ‘முற்போக்குக் கருத்தை’ச் சொன்னவர். அவர் சொன்னது நவ்யா நாயர் என்னும் மலையாள நடிகை குறித்துத்தான். ‘எம்மினப் பெண்ணை எப்படி வேசி என்று சொல்லலாம்?’ என்று கேரளா அன்று கொதித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? குமுதத்தின் வேலைக்காரி ஜோக்குகளில் அவமானப்படுத்தப்படுபவர்கள் எல்லாம் ‘தமிழ் வேலைக்காரிகள்’தானே? சீமான், பச்சான் மாதிரியான தமிழ்த்தேசிய இயக்குனர்களின் படங்களில் தமிழ்ப்பெண்களுக்கான இடமென்ன? எப்போதாவது பெண்களின் உரிமைகள் குறித்தும் சுயமரியாதை குறித்தும் அங்கீகாரம் குறித்தும் அவர்களின் படங்கள் பேசியிருக்கின்றனவா? ‘என் சேலைக்கு அவிழ்ந்து விழ நேரம் என்னைக்கு?’ என்பதுதானே அதிகபட்சம் இவர்கள் படத்துப் பெண்கள் ஆண்களை நோக்கி கேட்ட கேள்வி?

தமிழ்த்திரைப்படங்கள் தமிழ்ப்பெண்களைச் சித்தரித்தது ஒருபுறமிருக்கட்டும். தமிழ்ச்சினிமா மலையாளப் பெண்களை எப்படி சித்தரித்திருக்கிறது? இடுப்பு வரை முண்டு கட்டிய பாலுணர்வு தீனிப்பண்டங்களாகத்தானே அவர்களைச் சித்தரித்திருக்கிறது. ‘தாராளமா மனசு இருந்தா கேரளான்னு தெரிஞ்சுக்கோ’ (ரன் படப் பாடல்) என்ற வரிகள் மலையாளப் பெண்களை இழிவுபடுத்தவில்லையா? எத்தனை படங்களில் மலையாளப் பெண்களுக்கான கேரக்டர்களில் ஷகீலாவும் மும்தாஜிம் வந்து ‘கவர்ச்சி விருந்து’ படைத்திருக்கிறார்கள்? இதற்குப் பெயர் இனவாதமில்லையா? மலையாள சினிமா எப்படி தமிழர்களையும் தமிழ்ப்பெண்களையும் இழிவாகப் பார்க்கிறதோ அதேபோல்தான் தமிழ்ச் சினிமாவும். ‘மற்றமை’ குறித்த வெறுப்புணர்ச்சியும் இனவாத அடிப்படைவாதமுமே இதற்குக் காரணம்.

அரசியல் தெளிவும் அறிவுநாணயமும் உடைய யாரும் தங்கர்பச்சான், சீமான் வகையறாக்களோடு கைகோர்த்து ஜெயராமை எதிர்க்க முடியாது. இப்படி ஒரு கேள்வியை எழுப்பிப் பார்ப்போம். ‘ஜக்குபாய் திருட்டு விசிடியாக வெளியானதை ஒட்டி நடந்த கண்டனக் கூட்டத்தில்’ கமல்ஹாசன் இப்படிப் பேசினார், "திருட்டு விசிடி மூலம் கிடைக்கும் பணம்தான் மும்பை குண்டுவெடிப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது". ஏன் ‘நாம் தமிழர்’ இயக்கம் முஸ்லீம்களை இழிவுபடுத்தியதைக் கண்டித்து கமல்ஹாசனுக்கு எதிராகப் போராடவில்லை? 'முஸ்லீம்கள் நாம் தமிழர் இல்லை' என்கிறாரா சீமான்?

இப்போது ஜெயராமின் கருத்துக்கு வருவோம். ஜெயராமின் கருத்துக்களில் நிச்சயம் இனவாதம் இருந்தது. ‘கேரளப்பெண்களின் தாராள மனசைச் சொன்ன’ தமிழ் இனவாதத்தைப் போன்றதொரு மலையாள இனவாதம்; மேலும் பெண்களைப் பாலியல் நுகர்வுப்பண்டமாய்ப் பார்க்கும் ஆணாதிக்கத் திமிர்; உழைக்கும் பெண்களை இழிவாய்க் கருதும் வர்க்கத்திமிர் - இவையெல்லாம் சேர்ந்துதான் ஜெயராமின் வார்த்தைகளாக உருமாறின. ஆனால் தமிழினவாதிகள் மற்ற இரண்டு திமிர் குறித்துப் பேசமாட்டார்கள். ஏனென்றால் அந்த திமிர் அவர்களுக்கும் சொந்தமானது. ஜெய்ராம் வேலைக்காரிகளை அவமானப்படுத்தினார் என்றால் ஹேர்டிரஸ்ஸர் என்னும் உழைக்கும் பெண்ணிற்கான பேட்டா பிரச்சினையை முன்வைத்த நடிகையை ‘விபச்சாரி’ என்றவர்தானே தங்கர்பச்சான்?

ஜெய்ராம் வீட்டின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கும் சிவசேனாவின் பாசிச நடவடிக்கைகளுக்கும் இடையேயான ஒப்புமைகள் என்ன? மராட்டியத்தில் சிவசேனாவின் வன்முறைகள் தமிழர்கள், தொழிலாளிகள், முஸ்லீம்கள் என்று தொடர்ந்து விரிந்து இப்போது மராட்டியர் அல்லாதோரான வட இந்திய கூலித் தொழிலாளர்கள் வரை வந்து நின்றிருக்கின்றது. இந்தப் பாசிசத்தின் அடிப்படை, தொடர்ச்சியாக எதிரிகளைக் கட்டமைப்பதும், அவர்களின் மீதான வன்முறையை உணர்ச்சிகரமான வெகுமக்கள் அரசியலாக்குவதும்தான். அதற்கு இடையூறான மாற்றுக்குரல்கள் தமது சொந்தப் பிரிவினரிடம் இருந்து வந்தால் கூட (உதாரணம் சச்சின் டெண்டுல்கர்) அவர்களின் மீதான வன்முறையாகக் கூட மாறக்கூடும்.

இரண்டாவதாக இந்தப் பாசிசத்திற்கு எப்போதும் கருத்தியல் பலம் இருப்பதில்லை. மாறாக உணர்ச்சிவயப்பட்ட சொல்லாடல்களும், வெறுப்பின் அரசியல் மட்டுமே இவற்றின் நடவடிக்கைகளுக்கு பலம் கூட்டும்; மார்க்சியம், பெரியாரியம் மாதிரியான எல்லாவிதக் கருத்தியல் அடிப்படைகளை நீக்கம் செய்த தூய இனவாதத்தை இந்தப் பாசிசம் ‘வெற்றிகரமாக’ முன்வைக்கும். மேலும் பாசிசம் ஒரு சில கருத்தியல் அடிப்படைகள் இருப்பதாக பாவனை செய்தபோதும் கூட, தன் வன்முறைக்கு நியாயம் சேர்க்கும் கூறுகள் தனக்கு முற்றிலும் எதிரான ஒரு தளத்தில் இருப்பதாக நம்பினால் கொஞ்சமும் வெட்கமின்றி அதை உயர்த்திப் பிடிக்கும். பால்தாக்கரே புலிகளை ஆதரித்ததையும், சீமான் பசும்பொன் முத்துராமலிங்கத்தை ஆதரித்ததையும் இங்கு ஒப்பு நோக்கலாம். மேலும் பாசிசத்தின் பிரதான கூறு ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று மனித குலப்போராட்டங்கள் இதுவரை கண்டடைந்த எல்லா வழிமுறைகளையும் புறங்கையால் நிராகரித்துவிட்டு, நேரடி வன்முறைக்கு முன்னுரிமை அளிப்பதுதான். இதுதான் ஜெய்ராம் வீட்டின் மீதும் நிகழ்ந்தது.

ஆனால் இங்கே இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதே நாட்களில் சென்னையில் நடைபெற்ற ‘அனைத்து இந்திய வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கான மாநாட்டில்’ ஜெயராமின் கருத்துக்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டன. ஜெயராமுக்கான கண்டனமும் தெரிவிக்கப்பட்டன. நமது குரல் இந்த கண்டனங்களோடு இணைய வேண்டுமே தவிர, நமது கைகள் உழைத்துச் சோர்ந்த இந்த கரங்களோடு இணைய வேண்டுமே தவிர தங்கர்பச்சான், சீமான் மாதிரியான தமிழ்ப் பாசிஸ்ட்களோடு அல்ல.

- அங்குலிமாலா

Comments

51 comments

51
Guest
மிக சரியான கருத்து
MANI
உங்களா போல் சுரனை கெட்டவர்கள் இருப்பதால் தான் "மல"யாளீகள் இப்படி பேசுகிறாகள்.
vijayaragavan
Useless fellow
gnani
தெளிவான, சரியான கட்டுரை. பாராட்டுகள்.ந்ஜாநி
அன்பன்
கடந்த நாற்பது வருடங்களாக திராவிட இயக்கம் தமிழ் மக்களை மோசடி செய்து விட்டது. தமிழன மிது உண்மையான அக்கறை கொண்டு இங்கு ஆட்சி நடந்திருந்தால் ஈழ மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்திக்க மாட்டார்ர்கள். திராவிடத்தின் பெயரால் கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் இங்கே ஆள்வதால்தான் தமிழன் செத்தாலும் கேட்க நாதியில்லை. திராவிடம் திராவிடம் என்று இவர்கள் ஏமாற்றியது போதும். இனியும் ஏமாற வேண்டாம். சமீபகாலங்களில் இரண்டு விஷயங்களைப் பார்த்தோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் சு.சாமி என்னும் பார்ப்பானை அடித்த போது கருணாநிதியின் திராவிட மனம் பதறிப்போய் அங்கே போராடிக் கொண்டிருந்த தமிழர்களான வ்ழக்கறிஞர்களைப் பந்தாடியது. சுப்ரமணியசாமியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தது. மண்டையை உடைத்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதோ மீண்டும் ஒரு பார்ப்பான் ஜெயராமுக்கு எதிராக போராடியதற்காக சீமான் உள்ளிட்ட தோழர்கள் மீது வழக்கு. ஆமாம் பார்ப்பானுக்கு ஏதாவது ஒன்று ந்டந்தால் அதை திராவிடம் பொறுத்துக் கொள்ளாது என்பதற்கு இந்த இரு நிகழ்வுகளும் சான்று. அதிகாரப் பசி கொண்ட இந்த திராவிட மோசடிப் பேர்வழிகளுக்கு ஐம்பதாயிரம் ஈழ மக்களை நாம் பலி கொடுத்து விட்டோம். இன்று வரை அங்கு நடந்த எம் மக்கள் படுகொலை பற்றி இவர்கள் பேசத் தயங்குகிறார்கள். தமிழர்களே இவர்களை நீங்கள் நம்பினால் இன்று ஈழத் தமிழனுக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கும். ஆமால் திராவிடம் இதுவரை தமிழன் என்ற உணர்வை அழித்தது. இப்போது தமிழர்களையே அழிக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

க்ட்ட்ப்://ந்ந்ந்.னாம்டமிலர்.ஒர்க்/செசொன்ட்_எல்லலன்.ப்க்ப்
சிவக்குமார்
மிக நன்று. இதை நான் வழிமொழிகிறேன். மலையாளப் படங்களில் தமிழை, தமிழர்களை இயல்பாகவே காட்டுகிறார்கள். சில இடங்களில் கிண்டல் இருந்தாலும் அவை இனரீதியானவை இல்லை, பொதுவானதாகவே இருக்கும். ம்லையாளப் பெண்களை மட்டுமல்ல, தமிழ்ப் பெண்கள் , தமிழனின் கறுப்பு நிறத்தையும், மாற்றுத் திறனாளர்களையும் இழிவு படுத்திய தமிழ்த் திரைப்படங்களுக்கு நிகரில்லை. விரைவில்நாம் தமிழர் இயக்கம் அரசியலுக்கு வரவிருப்பதன் முன்னோட்டமே இவை. பார்ப்பன ஃபாசிசத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழகம் விரைவில் தமிழ் ஃபாசிசத்தைக் காணப் போகிறது. குமுதம் , தினகரன்,நக்கீரன் போன்ற இதழ்களுக்கு சீமான், தங்கர் வகை விளம்பரங்கள் தேவையாயிருக்கிறது.
moses prabhu
சீமான் போன்ற அரை ***** என்னைக்கு திருந்த போராங்கலோ?
m.murugesan
கருப்புமிக நன்று. இதை நான் வழிமொழிகிறேன். மலையாளப் படங்களில் தமிழை, தமிழர்களை இயல்பாகவே காட்டுகிறார்கள். சில இடங்களில் கிண்டல் இருந்தாலும் அவை இனரீதியானவை இல்லை, பொதுவானதாகவே இருக்கும். ம்லையாளப் பெண்களை மட்டுமல்ல, தமிழ்ப் பெண்கள் , தமிழனின் கறுப்பு நிறத்தையும், மாற்றுத் திறனாளர்களையும் இழிவு படுத்திய தமிழ்த் திரைப்படங்களுக்கு நிகரில்லை. விரைவில்நாம் தமிழர் இயக்கம் அரசியலுக்கு வரவிருப்பதன் முன்னோட்டமே இவை. பார்ப்பன ஃபாசிசத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழகம் விரைவில் தமிழ் ஃபாசிசத்தைக் காணப் போகிறது. குமுதம் , தினகரன்,நக்கீரன் போன்ற இதழ்களுக்கு சீமான், தங்கர் வகை விளம்பரங்கள் தேவையாயிருக்கிறது.
singam erullapa
கேவலமான கட்டுரை.
durai ilamurugu
எரட்டை இலைக்கு வஆக்கு அளிதல் எரண்டுநாளில் தமிழ் எழம் என்ட்ரு வோட்டுக்கெட்ட சீமாஙளிடம் இருந்து எதைத் தவிர வெறு எதை எதிர்பர்ப்பது?
elagnairu
திருப்பூரில் சிங்கள நாய் மேலாளராக இருந்து.. வடநாட்டிலிருந்து பிழைக்க வந்த தொழிலாளர்களை தூண்டிவிட்டு தமிழின தொழிலாளர்களை உதைத்தபோதும்.. 1.50 இலட்சம் தமிழர்களை சிங்களன் கொன்றபோதும்.. மார்க்சியம் கூறிய இன உரிமை பிரச்சனைகளை மறந்துவிடும் இடதுசாரிகள் தர்மநியாயம் பேசுவார்கள் ... இடையிடையே காட்டிக்கொடுக்கும் கூட்டிக்கொடுக்கும் கருங்காலித்தனத்தையும் செய்வார்கள்.. மாரை ஆட்டி... தொப்புளை காட்டி காமரசம் பரவச்செய்யும் விபச்சாரிகளை வர்க்க அடிப்படை பேசி.. தூக்கி நிறுத்துவார்கள் அவளோடு கூத்தடிக்கும் கூத்தாடிகளை பாராட்டுவார்கள்.
மார்க்சியத்தை தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிடுங்கி முதலாளிகளின் எடுபிடிகளாக இந்துராம் போன்ற பார்ப்பனர்களின் கைக்கூலிகளாக மாற்றிய பெருமை கொண்ட இவர்கள். துரோகி கருணாநிதியை விட கொடுமையானவர்கள்.. தமிழினத்தை சோரம் போகவைத்ததில் கருணாநிதிக்கு முன்மாதிரிகள்... தமிழனின் இன்றைய இழி நிலை ஒழிய தாக்கரேக்கள் போன்ற சீமான் களும்.. பெரியார் போன்ற இனப் போராளிகளும் தேவை.. இந்திய தேசியம் பேசி தமிழனை கேவலப்பட வைக்கும் கட்டுரையாளர் போன்ற முட்டாள்கள் கருங்காலிகளாகவே கருதப்பட வேண்டும்
S.SELVAKUMAR
ஒரு கருத்துக்கு பதில் சொல்ல முடியாத போது தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது சீமான் உள்ளிட்ட ***** குணம். கட்டுரைக்கான எதிர்வினைகள் அந்த குணத்தை நிரூபிக்கிறது. உண்மை இருக்குமானால் பதில் சொல்ல வேண்டும். திட்டுவதில் பயன் இல்ல.
thurogi
நாம் தமிழர் இயக்கத்தின் பதிலடியை கீற்று வாசகர்கள் 60 விழுக்காடு ஆதரித்துள்ளார்கள்...

சில துரோகிகள் எப்பவும் இப்படித்தான் திருத்த முடியாது.

தானும் படுக்க மாட்டார்கள்.........என்ற பழமொழியை போன்று தான் கட்டுரையாளர் உள்ளார்.

கம்யூனிசம் தகர்ந்து போய் நீண்ட நாள் ஆகி விட்டது
Udhayakumar
மிக சரியான கருத்து. பாராட்டுக்கள்.
sathya
மிக சரியன கருத்து
Muralitharan
மிகச் சரியான நேரத்தில், சரியாக எழுதப்பட்ட கட்டுரை. தமிழ் பாசிஸ்டுகளின் பாசிஸம் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், தங்கர், சீமான் போன்றவர்களின் படாவதி படங்களை விமர்சித்தால்கூட அவர்களை ராஜபக்சேவின் கையாள் என்று புழுதிவாரித் துற்றும் அளவுக்கு இருக்கிறது. இம்மாதிரி ஆட்களுக்கு அதிகாரம் கிடைத்தால் முதலில் பாதிக்கப்படபோவது, இவர்களுக்கு எதிராகக் குரலுயர்த்தும் தமிழனாகத்தான் இருக்கும். தமிழில் வெளிவரும் செய்திப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் இவர்களின் ஆதிக்கம். நினைத்தாலே பயமாக இருக்கிறது. திராவிட இயக்கம் நூறு மடங்கு தேவலை என்று சொல்லவைக்கும் அளவில் இருக்கிறது இவர்களது செயல்பாடுகள்.
sathriyan
ஆமாம், சீமானின் தம்பிகள் முதலில் உன்னைபோன்று எழுதுபவர்களை உதைத்து இருக்க வேண்டும்... பிறகுதான் ஜெயராம் போன்றோர்கள் பேசுவதற்கு புது விளக்கம் கொடுப்பவர்கள் திருந்துவார்கள்......
VIJAYAN
இலக்கியத்திலும்,சினிமாவிலும் யதார்த்தத்தை சொல்லும் மலையாளீ நிஜ வாழ்வில் போலியானவன். வெளி மானிலத்தில் அவன் பேசும் சமத்துவமும் சர்வ தேசியமும் அவன் மானிலத்தில் பேசமாட்டான்.
Naan tHAMIZHAN
//நமது குரல் இந்த கண்டனங்களோடு இணையவேண்டுமே தவிர, நமது கைகள் உழைத்துச் சோர்ந்த இந்த கரங்களோடு இணைய வேண்டுமே தவிர தங்கர்பச்சான், சீமான் மாதிரியான தமிழ்ப்பாசிஸ்ட்களோடு அல்ல.//

நச்ச்ச்ச்ச்ச்.....
Ponparappiyan
Thakkare is for Marathees, Seeman is for Tamils. Malayalees, Kannadas and Andras have made Tamil politicians as komalees and rule Tamilnadu for their welfare. Seeman is not a politician, but protector of Tamil race andculture. Kannadas and Andhras are better than these Malayalees. They object the activities of Tamils in their lands, but these Malayalees sitting in Tamils`land give untolerable problems. Recently they supported to kill 1.5lakhs Tamils and went against Supreme court verdict and Tamil implementation in Tamilnadu. Tamils are peace loving people,but Malayalees sometimes test their patience. Mr.Jayaraman`s statement is one among them. The Tamils and the entire peace loving people request the Malayalees not to compel the Tamils to follow the path of Takkares.
shruti
சிமான் ஓரு ஆலு அவரப்பத்தி நிங்கலும் எழுதுகிரிர்களே
appu
உலகம் முழுக்க மொழிவழி தேசியம் இருக்கும்பொழுது தமிழ் தேசியத்தின் மீது ஏன் இத்தனை வன்மம்?
makizhNan
இது காலத்தின் கட்டயாம். உஙகள் கூட்டத்தார்கள் போன்று முகமூடி இட்டு கொண்டு ஏமாற்றுவதை விட சீமான் மேல்....
Manoharan
Hi Angulimala,
Have you got scared about Jayaram house attack?
Or else do u have a plan to criticize tamils in future?
Your article shows that you are eagerly waiting a long period to criticize naam tamils movement.
இளங்கோ அருள்மொழி வர்மன்
சீமான் செய்தது சரியே.
குட்ட குட்ட குனிந்தால் குட்டிகொண்டே இருப்பார்கள்.
திருப்பி அடித்தால் தான் தமிழன் யார் என்று தெரியும்.
இதில் பாசிசம் எதுவும் இல்லை. இன உணர்வு மட்டும் தான் தெரிகிறது. இதுபோல் கட்டுரை எழுதுவதை விடுவிடு. முடிந்தால் நீயும் போய் அடி. வெறும் கண்டனங்களை மட்டும் கூறினால் போதுமா. அதோடு நிறுத்திக்கொண்டால் நாளை எவனுக்கும்
தமிழன் என்றால் கேவலமாக போய்விடும்.
elagnairu
சீமான் செயலை தமிழ் பாசிஸ்ட் எனும் முட்டாள்கள் 1.50 லட்சம் பேர் சிங்கள பாசிசத்தால் செத்த்போது முடியை பிடுங்கிக்கொண்டு இருந்தார்களா.. தமிழன் செய்தால் பாசிசம்.. தமிழன் மீது எந்த நாயாவது பாய்ந்து பிரான்டினால் மெளனம். இந்த கருங்காலிகள் ஒழியும் வரை தமிழன் நிம்மதியாக வாழ முடியாது.. கோவை வரை தொடர் வண்டியில் வரும் மலையாளி இந்தியம் பேசுவான்.. பாலக்காடு நெருங்க..னெருங்க.. மலையாளீயாகி மற்றவர்களை மிரட்டுவான்.. அனுபவித்த தமிழனின் கதையை அங்குலி மாமாக்கள் மறைத்து தேசியம் பேசுவார்கள்..
rajaguru
ஆமாம், சீமானின் தம்பிகள் முதலில் உன்னைபோன்று எழுதுபவர்களை உதைத்து இருக்க வேண்டும்... பிறகுதான் ஜெயராம் போன்றோர்கள் பேசுவதற்கு புது விளக்கம் கொடுப்பவர்கள் திருந்துவார்கள்......
kanthasamy
// குட்ட குனிந்தால் குட்டிகொண்டே இருப்பார்கள்.
திருப்பி அடித்தால் தான் தமிழன் யார் என்று தெரியும்.
இதில் பாசிசம் எதுவும் இல்லை. இன உணர்வு மட்டும் தான் தெரிகிறது. இதுபோல் கட்டுரை எழுதுவதை விடுவிடு. முடிந்தால் நீயும் போய் அடி. வெறும் கண்டனங்களை மட்டும் கூறினால் போதுமா. அதோடு நிறுத்திக்கொண்டால் நாளை எவனுக்கு///
முதலில் குழப்பமே நமது தத்துவமாகிவிடுவதுதான் பெரிய சோகம். நடந்தது என்ன...? செயராம் என்கிற ஒரு சாதாரண மலையாள நடிகன் மலையாள சேனலில் உளறுகிறான். அது பைசா பிரயோசனம் இல்லாத கருத்து. அப்படியும் தமிழர்கள் வாழ்வைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் பேச அவன் என்ன அறிஞனா அல்லது அப்படி அவன் தன்னை நினைத்துக் கொண்டானா என்பது மிக முக்கியம். இலங்கையில் பல தமிழர்கள் மாண்டதைவிட இது பெரிய முக்கியத்துவம் வாய்ந்த விசயமா..? மேலும் தமிழ்ப்படங்களில் விவேக் உட்பட மலையாளிகளை பகடி செய்திருக்கிறார். அப்படியிருக்க அந்த நடிகன் இல்லாத நேரத்தில் அவர் வீட்டுப் பெண்கள் இருந்த நேரத்தில் கலாட்டா செய்தது ஏற்றுக் கொள்ள முடியாத விசயம். இதன் மூலம் தமிழர்கள் நலன் காப்பாற்றப்படும் என்பதை நினைத்தால் விரக்தியாக சிரிக்க வேண்டியிருக்கிறது
சியாமளா
"கருத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி….” பொதுவாகப் பெண் குலத்தையும் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தி குற்றம் புரிந்துள்ளார் ஜெயராம் என்று கொதிப்படைந்து பேசுகிறார்கள் தோழர்கள். வாஸ்தவமான பேச்சு. நியாயமான கோபம்.

தங்கள் கோபத்தையும், கண்டனத்தையும் நானும் ஆமோதிக்கிறேன். ஆனாலொன்று தோழர்களே தங்களது இந்தக் கோபம் இதுவரை ஏன் ஏனைய தமிழ்ப் படங்கள் மீதும் இயக்குனர்கள் மீதும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகர்கள் மீதும் வரவில்லை? எல்லாம் சரியாக நடக்கிறது என்ற எண்ணமா? பெண்களை மிகக் கேவலமாக இழிவு படுத்தாத தமிழ்ப்படம் ஒன்றையாவது கூற முடியுமா உங்களால்? தங்களது ஆணாதிக்க வக்கிரங்களையெல்லாம் அள்ளிக் கொட்டி தமிழ்ச்சினிமா தாராளமாகவே நிர்வாணக் கூத்தாடிக் கொண்டிருப்பதை இதுவரை காலம் நீங்கள் பார்த்ததில்லையா? அதற்கெல்லாம் என்ன கண்டனத்தை இதுவரை தெரிவித்தீர்கள்? பெண்களை இழிவு படுத்துவதாக சீறிப்பாயும் நீங்கள் இதுவரை வெளியான தமிழ்ப் படப் பெட்டிகளையெல்லாம் நடுரோட்டில் இழுத்தப் போட்டுக் கொழுத்த வேண்டாமோ…? சரி, தமிழ்ச் சினிமாவில் மலையாளப் பெண்களை இதுவரை எப்படியெல்லாம் பாலியல் பண்டமாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்…? அவர்கள் பெண்களில்லையா..?

இது ஜெயராமுக்கு வக்காலத்து வாங்குவதற்காக குறிப்பிடவில்லை என்பது உங்களுக்கே தெரியும். தோழர்களின் நியாயங்களும் கோபங்களும் பாரபட்சம் பார்த்து அரங்கேற்றப் படுவதுதான் அபத்தமாயிருக்கிறது.

மணிரெத்தினம், சங்கர் போன்ற பெரிய தலைகளின் படங்கள் மட்டுமென்ன லேசுப் பட்டவையா? இப்படியான பெரிய தலைகள்மீது தங்களது கோபம் வேலை செய்யாதாக்கும்?! வலுத்தவர்களை கண்டும் காணாமல் விட்டுவிட்டு, கேட்க நாதியற்ற, இளைத்த காமடியன்கள் மீதுதான் தங்களது கோபம் சீறிப் பாயுமோ? இது ஒரு வகையில் வக்கற்ற தனம்தான் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

தோழர்களே! தங்களுக்கு மனச்சாட்சி (அப்படியொன்றிருந்தால்) இருக்குமாயின் தங்களது கோபம் வலுத்தவன் இளைத்தவன் என்ற பாகுபாடின்றி வரவேண்டும். (உண்மையிலேயே இது நிகழுமாயின் வாராவாரம் பல்லாயிரம் அடி றீல்கள் தமிழ்நாட்டுத் தெருக்களில் கொழுத்தப் பட்டிருக்க வேண்டும்)

இல்லையேல் காய்கறியின் இன்றைய மார்க்கெட் நிலவரம் பற்றி சீரியஸாகவே பேசுவோம்.

செ‌ன்னை கோய‌ம்பேடு கா‌ய்க‌றி மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இன்று ‌(10/02/2010)வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் கா‌ய்க‌றி விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.08
கேர‌ட் ரூ.15
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.10
ச‌வ்ச‌வ் ரூ.05
நூ‌க்கோ‌ல் ரூ.09
மு‌‌ள்ளங்‌கி ரூ.08
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.07
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.09
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.06, 12
அவரை‌க்கா‌ய் ரூ.10
புடல‌ங்கா‌ய் ரூ.08
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.15
மிளகா‌ய் ரூ.10
குடை ‌மிளகா‌ய் ரூ.10
முரு‌ங்கைகா‌ய் ரூ.40
இ‌‌ஞ்‌சி ரூ.35
தே‌ங்கா‌ய் (ஒன்ரறு) ரூ.08
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.18
சேம்பு ரூ.20
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.12
கோவ‌க்கா‌ய் ரூ.05
சுர‌க்கா‌ய் ரூ.10
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.08
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.08
பூச‌ணி ரூ.04
பெ‌ரிய வெ‌ங்கா‌ய‌ம் ரூ.20
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.15
ப‌ட்டா‌ணி ரூ.30
பா‌க‌யற்கா‌ய் ரூ.10
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒன்ரறு) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.05

-சியாமளா-
வீரததெலுங்கன்...
மலையாளிகள் தமிழ்ச்சிக்களை கேவலமாக திட்டும் போது கிற்று உரிமையாளருக்கு கேவம் வராது. தமிழச்சிகளுக்கு பிறந்த தமிழச்சிகளை மணந்த தமிழர்களின் எதிர்வினை பாசிசமாகத்தான் தெரியும்
[email protected]
எப்படியிருந்தாலும் ஜெயராம் கூறிய கருத்துக்களுக்காக அவரது வீட்டின் மீது தாக்குதல்நடத்தியது மாபெரும் தவறு!.. மக்களில் பெரும்பாலானோர் ஒருவர் மற்றவரின் மொழி,நடை, உடை, பாவனைகளை அன்றாடம் கிண்டல் செய்வதும், அதற்காக மற்றவரை விமர்சிப்பதும் வழக்கத்தில் இருக்கிறநடைமுறை.. அதற்காக பதிலுக்கு விமசிக்கலாமே தவிர சட்டத்தை நாமே கையிலெடுத்துக்கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டால் பிறகு நாடு என்ன ஆகும்?.. வன்முறை கண்டிப்பாக எதற்குமே தீர்வாகாது!.. யார் யார் மீது தாக்குதல் நடத்தினாலும் "கண்டிப்பாக" தாக்குதல்நடத்தியவர் மீதும் , அப்படி வன்முறையைத் தூண்டியவர் மீதும் மிகக்கடுமையானநடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.. அப்படி வன்முறையைத் தூண்டிய காரணத்திற்காக தண்டனை பெற்றவர் மீண்டும் வன்முறையைக் கனவிலும்நினைக்காவண்ணம் மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்...
Ilamukilan
அற்புதமான கட்டுரை

கருத்த தமிழ் பெண்களை, தமிழ் படங்கள் எவ்வாரு சித்தரிக்கின்றன...

ஜெயராம் சொல்லியது கண்டனத்திற்கு உரியது என்பதில் ஐயமில்லை
K.Easwaran
"கருத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி அவளை எப்படி கண்ணடிக்க (சைக் அடிக்க) முடியும்" .

The person who made this statement needs to be punished. The appropriate institutions which had to take action did not take action on the person who made this this statement.
If he would have said that "she is black and therefore I am not interested in her" then it is his personal opinion and personal affair. When he said "கருத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி " it was a slur on more than 70% of the Thamil community. He needs to be punished. He should not be allowed to stay comfortably among the கருத்த தடித்த எருமை போன்ற Thamilarkal. Let him go and live with his people and make that sort of statements. When he used the word எருமை he has shown his inner feelings on his own volition.
Easwaran
எல்லாளன்
வன்முறை கூடாது என்று வேசம் போடுபவர்கள் உங்கள் அம்மாவை தங்கையை மனைவியை கற்பழித்தால் கூட அப்படியே பார்த்துக் கொண்டிருங்கள்

வழக்கு தொடருங்கள்

சரி பாரதிராஜாவின் அலுவலகத்தை உடைத்தவர்கள் ஆதாரம் காவற்துறையிடம் கொடுக்கப்பட்டும் யாரும் கைது செய்யப்படவில்லை ,

சீமானின் காரை கொழுத்தியவர்கள் இது வரை கைது செய்யப்படவில்லை ஏன் என்று கேட்டதுண்டா ????

இது தான் உங்கள் சுயரூபங்களை காட்டுகின்றது மேலும் நீங்கள் ****** ********** என்பதையும்.
Guest
சரியான கருத்து.. பாரட்டுக்கள்..

சீமான், தங்கர் எல்லாரும் முதலில் தமிழ் பெண்களை வைத்து படம் எடுக்கட்டும்...
kopalamani
தமிழர்களை திட்டுவது தவறு இல்லை அனால் அதை எதிர்த்து போராடினால் அது மாபெரும் தவறு என்று சொல்லும் அங்குலி மாலாவின் கருத்து, இனமானமுள்ள எந்த தமிழனாலும் ஏற்றுகொள்ள முடியாது, இதுபோல பேசினால் மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பலாம் என்று நினைத்துகொண்டு எழுதி இருக்கிறார் அவ்வளவுதான், சுருக்கமாக சொல்லப்போனால் இவரது கட்டுரை ஒரு அழுகிப்போன வெங்காயம்!
rajiv
அங்குலி மாலா அவர்களே, மொத்தத்தில் ஒரு கருத்தை புரிந்து கொள்ளமுடிகிறது, ஜெயராமை பக்கத்தில் நிறுத்தி ஒருவேளை இவர் தவறு செய்திருதலும் கூட, உங்களிலில் யாருக்கு யோக்கியதை இருக்கிறது என்று ஒவ்வொருவரையும் நீங்கள் விளசுவதைப் பார்த்தல், அவரது வீட்டில் நடந்த தாக்குதலை கண்டிப்பது மாத்திரம் அல்ல, அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கக் கூடாது என சொல்வது புரிகிறது. அங்குலி மாலா அவர்களே, நீங்கள் சொல்லியிருப்பது உங்களுடைய கருத்து, அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. அதைப் போல், சில கேள்வி உங்களை கேட்க எனக்கு உரிமை இருக்கிறது. சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் தெளிவு ஏற்படும். அதை செய்வீர்களா ? எங்கள் தமிழ் சொந்தங்கள் இன படு கொலையில் லட்சம் பேர் கொல்லப் பட்ட போதும், அதனை தொடர்ந்து இன்னும் போர் கொடுமைளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்ற போதும், எங்கிரு்ந்தீர்கள் மற்றும் இப்போது என்கிருகின்றீர்கள் ? பெரியாறு அணையில் நீர் மட்ட அளவை உயர்த்த உச்சநீதி மன்றம் ஆனையிட்ட போதும் அதை உயர்த்தாமல் தமிழகம் எந்த வகையையிலும் நீர் பெற்று விடக் கூடாது என்று நினைக்கும் கேரளா அரசாங்கத்தை எதிர்த்து எத்தனை முறை தீர்மானம் நிரைறைவேற்றியி௫க்கிறீர்கள் ? சட்டத்தை கையில் எடுத்து ஜெயராமின் வீட்டிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது பாசிசம் என்று சொல்வீர்களானால், உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்குப் பிறகும் நீர் மட்ட அளவை உயர்த்தாத, அதற்கு எதிராக சட்ட திருத்தம் கொண்டுவந்த கேரளா அரசாங்கத்தின் பெயர் என்ன மற்றும் மத்திய அரசு என்று பெயரை வைத்துக் கொண்டு இந்த கொடுமைக்கு எதிராக ஒரு நாளும் பாதிக்கப் பட்ட தமிழ் நாட்டிற்கு ஆதரவாக நில்லாமல் இருப்பதோடு மட்டும் அல்லாமல், பெரும்பான்மையான விவசாயம் தமிழ் நாட்டில் பாதிக்கப் பட்டு விடும் என தெரிந்தும், புதிய அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி வழங்கிய மத்திய அரசின் பெயர் என்வென்று சொல்லாம் "இன ஒதுக்கல் புரியும் பாசிச அரசு" என்று சொல்லலாமா? அப்படி பட்ட பாசிச அரசுக்கு எதிராக எப்படி போராடவேண்டும் என்று கூறுகிறீர்கள் ? அமைதியான முறையில், கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா, உங்கள் கம்முயூனிச தத்துவம் அப்படித்தான் கூறுகிறதா ? தமிழகம் முழுவதும் அதிகமான நிலங்கள், தொழில்களை தொடர்ந்து மலையாளிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை ஒத்துக் கொள்கிறீர்களா, அல்லது கேரளாவை சார்ந்தவர்கள் எடுத்துக் கொள்வதினால் அது உழைப்பாளி வர்க்கத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறீர்களா அல்லது அதை கண்டித்து தீர்மானம் எழுதி கொண்டிருகிறீர்களா ? தமிழ் தேசிய வாதிகள் ஒத்துக் கொள்ள முடியாத நிலையில், ஆதரிக்க முடியாத நிலையில், அனேக நேரத்தில் சிவசேனையின் செயல்கள் மற்றும் வழிமுறைகள் இருப்பது என்பது உண்மைதான், அதே நேரத்தில் அவர்களுக்கு மக்கள் அளிக்க கூடிய அதரவு என்பது தேசிய இன விடுதலைக்கு சார்பான மன நிலை என்று சொன்னால் உங்கள் கருத்து என்ன ? இந்திய மத்திய அரசாங்கத்தில் 53செயலாளர்களில் 19 பேர் மலையாளிகளாக இன்று இருப்பது தற்செயலாக நடந்ததா, அல்லது திறமையின் அடிப்படையில் என்று சொல்வீர்களா அல்லது போராடும் ஒரு அண்டைய தேசிய இனத்தை திட்டமிட்டு முறியடிக்கப் பயன்படும் ஆயுதம் என்றுசொல்வீர்களா ? A.K. Antony, M.K. நாராயணன், விஜய் நம்பியார் மற்றும் Shivshankar மேனன் ஈழ பிரச்சினையில் மிக நேர்மையாக நடந்து கொண்டார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா அல்லது நாங்கள் தான் தவறுதலாக புரிந்து கொண்டு விட்டோமா ? வேறு ஒரு நாட்டில் மலையாளிகள் லட்சக் கணக்கில் கொல்லபட்டால், தமிழன் ஒருவன் பாதுகாப்பு துறை அமைச்சராய் இருந்து நாங்கள் ஒப்பந்ததின்படிதான் அந்த கொல்லுகின்ற நாட்டிற்கு ஆயுதமும், பயிற்ச்சியும் கொடுகின்றோம், மலையாளிகளை கொல்ல அல்ல என்று கூறினால், ஒத்துக் கொண்டு அமைதியாய் இருப்பீர்கள இருபிர்களா ? நீங்கள் சொன்னபடி எல்லாம் நங்கள் மலையாளிகளை இழிவாக காட்டியப் பிறகும், அவர்கள் இன உணர்வு கொண்டு எதிர் தாக்குதல் நடத்தாமல் இருப்பது, அவர்களுடைய பரந்த மனபான்மையினால் அல்ல, சமையல் அறையில் கிடைத்ததை அமுக்கிக் கொண்டிருக்கும் எலி, "திருட்டு எலியே" என கத்திக் கொண்டு வரும் அந்த வீட்டு உரிமையாளரை பார்த்து என்னை ஏன் திருட்டு எலி என அழைத்தாய் எனக் கோபப் படாது, ஆனால் இன்னும் கொஞ்சம் எப்படியும் சாப்பிட முயற்சிக்கும் என்று சொன்னால் உங்களுடைய கருது என்ன? A.K. Antony, M.K. நாராயணன், விசை நம்பியார் and Shivshankar மேனன் மற்றும் எந்த விதத்திலும் தமிழருக்கு நீர் தர கூடாது என நினைக்கும் கேரளா அரசு இவர்கள் அனைவரும் அமைதி வழி செல்பவர்களாக உங்களுக்குத் தெரிகிறார்களா ? நாங்கள் எங்கள் சொந்தத்தை, நிலத்தை, வேலை வாய்ப்பை இழந்து, எங்களை காப்பாற்ற ஒரு இறையன்மை இல்லாத காரணத்தினால், சில நேரங்களில் எங்கள் சோகத்தையும், கோபத்தையும், இயலாமையையும் சற்று விரைவாக வெளி காட்டினால், நாங்கள் பாசிஸ்ட்டாக உங்களுக்கு தெரிகிறோம் என்றால், மீண்டும் ஒரு முறை உற்றுப் பாருங்கள் நீங்கள் உங்களுக்கு எனவாக தெரிகிறீர்கள்?
Ponraj M
அங்குலி மாலா, "கைல கெடச்சே... செத்தநீ.... மவனே". கருத்தா சொல்ற, கருத்து.... **** *********** ******** ******, இப்படித் தான் "உக்காந்து யோசிப்பியா ?"...நீ, செஞசாலும் செயவ....!!! ஏன்னா, அந்தநேரத்தில் 'மானம், ரோசம்' உள்ளவன் கையில என்ன கிடைக்கிதோ அதை எடுத்து, 'தொட்டவனை' உண்டு இல்லைனு பண்ணுவானே தவிர, உன்னை மாதிரி "ஜெயராம்-பேச்சு, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை வ்ரைக" அப்டினு ஸ்கூல் பையன் மாதிரி எழுதிகிட்டு இருக்கமாட்டான்.... இதெல்லாம் ஒரு பொழப்பா ???
kallal Anbalagan
வேற வேலையெ இல்லய்யா. இந்த சாதி தமிழ் தேசியவாதிகளுக்கு. 83-லிருந்து 2009 வரை ஈழப்பிரச்சனய பேசிக்கிட்டிருந்தாங்க. அது இப்ப அடங்கிக் கெடக்கு. அது திரும்ப வர்ர வரைக்கும் பொழுதப் போக்கனுமே. பெரியார் விட்டுப் போன சாதி ஒழிப்ப எடுக்கச் சொல்லுங்க. தெற்க இன்னும் நெறய வேலைய அய்யா விட்டுட்டு போயிருக்காரு. தம்பி சீமான அவரு சொந்த ஊரு பக்கம் போயி அந்தக் களத்துல இறங்கட்டும். அங்குலிமாலா அக்கா தங்கச்சியவா செயரமன் சொன்னா அங்குலிமாலா கோபப்பட. வெங்காயங்க.
durai ilamugu
சீமான் இப்பொது மன்னிப்பு கேதிற மாதிரி இல்ல் அரிக்கை விட்ட்ருக்காரு . இப்ப என்னசெய்விஙக? இப்ப என்ன செய்விஙக?

சீமான்களை தூக்கிபிடிப்ப்தைவிட்டு வெரு வெலை இருந்தால் பொய் பாருஙள். இவர்களுக்கு பத்வி வந்தல் கருனானிதியை விடமோச்மாக நட்ந்துகொள்ளுவார்கள்.
balan
தாக்கரேக்களின் சொத்து விவர்ம் தெரியுமா? அவர்கலின் பாசம் மும்பாஇ மீது அன்று. மும்பாயி நிலதின் மீதுதான். மராட்டியர்கள் சிவசெனா அட்சியின் போது விவசயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொன்டபோது மராட்டுய பாசம் எங்கே போயிற்று> சீமனுக்கும் தமிழ் தேசியர்களுக்கும் நல்ல ஆள் கிடைதார்கள். முன்மாதிரியாக
இளங்கோவன்
நல்ல கருத்துக்கள்தான்
பாசிசம் சூழ வாழும் தமிழர்களிடம் பாசிசப்பாடம் எடுப்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. சீமான் இதை மலினமான அரசியல் நடத்த நிகழ்த்தியிருந்தாலும் ஜெயராம் வீடுபுகுந்து அடித்த நண்பர்கள் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தும் உணர்வோடுதான் செய்திருப்பார்கள். ஈழ அரசியலில் எதிரிகள் யார்யார்? என்று தெரியாத தமிழகத்திற்கு இன்று தனது தேசத்தின் எதிரிகள் விடயத்திலும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. காஷ்மீரிகள் விடுதலை உணர்வை இந்திய எதிர்ப்பாகத்தான் புரிந்துகொண்டு போராடுகிறார்கள். ஆனால், தமிழகத்தில்? இந்தியா எனும் அடக்குமுறை அமைப்பை எதிரிப்பட்டியலில் முதன்மையாக நிறுத்தாதவரை எந்தப் பாசிசப்பாடமும் உணர்ச்சிப்பூர்வ தமிழர்களை ஈர்க்கப்போவதில்லை.
சீமானை விமர்சிக்கும் நாம் சீமானுக்கு கூட்டமாகச் சேரும் தமிழர்களின் அரசியல் பலவீனத்தை எப்படிப் புரிந்து கொள்ளப்போகிறோம்? என்பதுதான் முக்கியமான கேள்வி.
எதிர்காலத்தில் முல்லைப்பெரியாறு பாசனப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கில் விரக்தியுற்று வெளியேறப்போகும் இளைஞர்களுக்கு தமிழ்ப்பாசிசம் குறித்த விரிவான செறிவான பாடம் நடத்த நம்மை நாம் தயார்செய்துகொள்வோம். வேறென்ன சொல்ல?
Paul
இக் கட்டுரை ஒரு வெறி பிடித்த கிருக்கனின் உளரல்.
தமயந்தி கிருஷ்ணன்
அதானே! எங்கே தமிழ், தமிழர் உணர்வு வளந்திட்டதோன்னு நினச்சேன். தமிழ் இனத்தயும், அதன் ஒத்துமையையும் முன்னிருத்தி ஒருத்தன் போராடிடக் கூடாதே ... உங்களப் போன்ற தமிழர் எதிர்ப்பாளர்களெல்லாம் கெளம்பிடுவீங்களே! தமிழர் பாசிசமாம், பாசிசம். நகைப்புதான் வருது. முதல்ல நீங்க தங்கியிருக்ர குகைய விட்டு வெளியேறி உலக யதார்த்தத்தை புரிஞ்சிக முற்படுங்க. சரியா?

அயல் நாட்டிலிருந்து இறக்குமதியான கருத்தாக்கங்களெல்லாம் நம்மை வளப்படுத்து என்ற அவசியமில்லை. மாக்சியம், மனித உரிமையெல்லாம் வாயலவில்தான்; கோட்பாட்டளவில்தான். இதை முதலில் புரிந்துகொள்ளும் பக்குவமும் பரந்த வாசிப்பும் உங்களுக்குத் தேவை.

வாஷிங்டனாக இருக்கட்டும் பாரீ, தெல் அவிவ், புது டில்லியாக இருக்கட்டும் இவ்விடங்களிலுள்ள தலைவர்கள் அனைவருமே சம தர்மம் என்றும், மக்கள் ஆட்சி என்றும், மனித நேயம் என்றும் வாய் கிழியப் பேசலாம், பேசுவர். ஆனால் செயல்பாடு என்று வரும்போது சுயநலமும், நாட்டுப் பற்றும், தேசிய முக்கியத்துவமும்தானே ஒங்குகின்றன!

சில மாதங்களுக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நினைவிலுள்ளது தானே? என்ன செய்யதது உலகம்? சரி, நீர் என்ன செய்தீர்? உம்மைப் போன்ற தமிழ், தமிழர் ஒழிப்புவாதிகள் எந்தச் சுவரின் மீதோ பின்னாலோ நின்று உங்கள் போக்கத்த தனத்தை வெளிப்படுத்தினீர்கள்?

ஏதோ ... உம்மைப் போன்றோரும் திருந்தி வாழும் நாள் விரைவில் வர வேண்டும் என்று வேண்டுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. துயில்பவனை எழுப்பலாம்; நடிப்பவனை? இதற்கிடையில், முடித்தால் தமிழர்களுக்கும் அவர் நலனுக்கும் உபத்திரவம் பன்னாது இருக்கப் பாருங்கள். முடியுமா?
Nagulen
காலம் காலமாய் தமிழ் படங்களில் தமிழர்களை கேவலப்படுத்தியதை விட, மலையாள பெண்களை மிகப் பரந்த மார்புடையவர்கள், செக்ஸ்சிகள் என்றவாறு கூறியது எல்லாம் தமிழ் சினிமாக்களே.. ரஜினி படத்தில் தமிழர்கள் கருப்பு என்று கூறி வெள்ளைச் சாயம் அடித்து பாடலுக்கு ஆடுவதை கட்டியதும் நமது சினிமாதான். முதலில் நாங்கள் எங்களை திருத்தி கொண்டு மற்றவர்களை மதிப்போம். பின்பு எங்களுக்கு உரிய மரியாதையை தானாக வரும்.
A.M. Jawahar
ஒரு செய்தியை மலையாக்கி பரபரப்பு ஏற்படுத்துவது ஊடகங்களின் வேலை என்றாலும் மக்களிடம் எடுபட்டால்தான் பாதிப்புகள் நிகழும், பரபரப்பு தொடரும். - ஆ. மீ. ஜவகர், நாகப்பட்டினம். [email protected]
E. Ramakrishnan
Karuthu Soluvadhu verra. Karri Thuppuvadhu Vera..
Jayaram Kari Thuppi irrukkarru. Adhukku Athirvinaya
Seeman Seithar.
jeyakumar
முதலில்..... ஒழிக்கப்பட வேன்டியவர்கள் உங்களைப்போன்றவர்கள் தான்....
போதும்... இனியும்.... உங்களை போன்றவர்களை நடமாட விட கூடாது
kuppuraj
மேலே கூறிய எதிர்மறையான முட்டாள் தனமான கருத்துக்கள் மனதிற் கொள்ளாமல் தொடர்ந்து எழுதவும்.
[email protected]
இந்த கட்டுரை இந்த ப்ரச்னையை சரியான கோணத்தில் சொல்லியிருக்கிரறது. சீமான் பொன்றவர்களை கவனமாக புறம் தள்ள வேண்டும். ஜெயராம் வார்தைகளில் கவணம் தேவை.
sri varshan
தமிழர் பாசிசமாம் கிணத்து தவளைகளே ஹிந்து நாளிதழ் தவீர பிற நாளிதழ் களையும் படியுகள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.