2004- டிசம்பரில் சுனாமி வந்தது. தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பிணமானார்கள். அந்த இயற்கை அனர்த்தம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் அதன் பிறகு தமிழக கடலோராங்களை ஆழிப்பேரலைகள் தாக்கவில்லை; மக்களை அடித்துச் செல்லவும் இல்லை. ஆனால் ஓவ்வொரு மாதமும் வதந்தி வருகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதறியடித்து மக்கள் ஓடுகிறார்கள். வதந்திகள் அவர்களை கடலோரங்களை விட்டு துரத்துகிறது. இவை வதந்தி என்று மக்களால் ஓடாமல் இருக்கவா முடியும் அல்லது இன்னொரு ஆழிப்பேரலை வராது, அது வெறும் வதந்திதான் என்று நாம் உத்திரவாதம் தான் கொடுக்க முடியுமா?

வன்னி மீதான போர் தீவிரப்படுத்தப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய அரசின் துணையோடு இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த மார்ச் மாதவாக்கில் நண்பர்கள் ஒரு மெயிலை எல்லோருக்கும் தட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். புலி எதிர்ப்பாளர்கள், சி.பி.எம் கட்சியைச் சார்ந்த தோழர்கள் இந்த மெயில்களை பெரும் கொண்டாட்டத்தோடு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனுப்பிய அந்த மெயில் அப்படியே எனக்கும் ஃபார்வேர்ட் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் இராணுவ, அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட அந்த கோப்பை அப்படியே பி.டி.எப்ஃ, எம்.எம்.எஸ் பைலாக மாற்றி (இதை ஏன் சொல்கிறேன் என்றால் மெயிலைத் திறந்த உடன் அது நம் கணிப்பொறி திரையில் ஒரு மினி சினிமா மாதிரி வந்து வந்து மறையும்) அனுப்பியிருந்தார்கள். அந்த புகைப்படத் தொகுப்பு நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்.


பிரபாகரன் அவரது உறவுகளோடு அமர்ந்து உண்டு கொண்டிருப்பார். ஈழக் குழந்தைகளோ கையில் தட்டேந்தி உணவுக்காக நின்று கொண்டிருக்கும். (அதவாது பிரபாகரன் உணவருந்துகிற படம் பழையது. குழந்தை தட்டோடு நிற்பது இறுதிப் போரின் போது எடுக்கப்பட்டது) பிரபாகரன் நீச்சல் குளத்தில் அவரது மகனோடு நிற்பார். ஈழக் குழந்தைகளோ அம்மணக் குண்டிகளாய் குளத்தில் குளிக்கிறார்கள். துவாரகா பட்டம் பெறுகிற மாதிரி ஒரு படம், ஈழத்து மாணவிகளோ கையில் துப்பாக்கியோடு நிற்கிற படங்கள். இப்படியான ஒரு மெயில் பலரது மனதையும் மனக்கிலேசத்துக்கு ஆளாக்கியிருக்கக் கூடும். புலிகளின் அழிவைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் இந்த மெயிலைக் கொண்டாடியும் புலிகளைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் வேதனைப்பட்டும் இது குறித்து பேசிக் கொண்டார்கள். நான் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மொபைலில் வருகிற எஸ்,எம்.எஸ்களே ஒரு கட்டுரையைத் தீர்மானிக்கும் என்றால் நாம் ஏன் இது குறித்து எழுதக் கூடாது என்றுதான் இப்போது இதை எழுதுகிறேன்.

பிரபாகரன் குளித்த நீச்சல் குளம் சென்னை பாண்டிபஜாரில் பிளாட்பார்ம் கடையில் ரூபாய் நூற்றி ஐம்பது ரூபாயில் தொடங்கிக் கிடைக்கிறது. ஆயிரம் ரூபாய் செலவு செய்கிற திராணி உங்களுக்கு இருந்தால் ஒரு மினி நீச்சல் குளத்தை நம் வீட்டுக்குள்ளேயே அமைத்துக் கொள்ளலாம். சொந்த வீடு இல்லாதவர்கள் கள்ளத்தனமாக வீட்டு உரிமையாளர் ஊரில் இல்லாத போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் என் குழந்தைக்கு ஒரு சின்ன நீச்சல் குளம் வாங்கியிருக்கிறேன். அதாவது நமது எதிர்கருத்து நண்பர்களின் அளவுகோலின்படி நான் பிரபாகரனுக்கு நிகரான ஒரு ஆடம்பரவாதி (பிரபாகரனின் மகள் துவாரகா மாலதி படையணியில் போரிட்டு களத்தில் மடிந்த பெண் போராளி என்பது உபரியான தகவல். தவிரவும் சார்ல்ஸ் ஆண்டனி ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் முடித்தவர், துவாரகா டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதெல்லாம் நமது ஊடகங்களின் கட்டுக்கதை.) சரி பிரபாகரனை ஆடம்பரவாதியாக சித்தரித்து இவர்கள் அனுப்பியது போன்ற ஒரு மெயிலையோ புகைப்படத் தொகுப்பையோ உலகின் வேறு எந்த தலைவருக்குமே உருவாக்க முடியாதா, என்ன? பிடல் காஸ்ட்ரோவுக்கோ, ஜோதிபாசுவுக்கோ, காந்திக்கோ உருவாக்கி விட முடியாதா? ஜோதிபாசு காரில் போவது போன்று ஒரு படம், ஏழைப்பாட்டாளி ஒருவர் பொட்டல்வெளியில் செருப்பில்லாமல் நடந்து போவது போன்று ஓரு படம்; அவருக்கு நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் மெத்தப்படித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்று ஒரு படம்; ஏழைத் தொழிலாளி முறையான சிகிச்சையின்றி இறந்தது மாதிரியான ஒரு படம்; அனுப்ப முடியாதா என்ன?

போர்க்காலத்தில் இன்னும் என்னென்ன வதந்திகளை எல்லாம் இவர்கள் பரப்பினார்கள்? ‘பிரபாகரன் போர்ப் பகுதியில் இல்லை; மக்களை பலிகடவாக்கி விட்டு அவர் தூர தேசத்துக்கு தப்பி விட்டார்’’ என்றார்கள். அதுவும் பொய்யென்று ஆன பிறகு இப்போது சொல்கிறார்கள், “புலிகள் மக்களை மணல் மூட்டைகளாக்கி விட்டார்கள். மக்களைக் கொன்றது அவர்கள்தான்”. அதற்காக வாக்குமூலங்களை உருவாக்கும் முயற்சிகளில் இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ வதந்திகள்!! எல்லாவற்றையும் வதந்திகள் என்று விட்டு முடியுமா அல்லது புலிகள் பற்றிச் சொல்லப்படுகிற கதைகளில் ஒரு பாதி உண்மை என்று என்று எடுத்துக் கொள்வதா என்கிற தேடுதல் கூட இல்லாமல் - படுகொலை நிகழ்த்திய பௌத்த சிங்களப் பேரினவாத அரசு குறித்து மௌனம் சாதித்து விட்டு, நாம் இனப்படுகொலைக்காக பேசும்போதெல்லாம் இவர்கள் புலிப்பாசிசம் என்றும் வன்னிப் புலிகள் என்றும் இனப்படுகொலைக்காக ஒலிக்கும் குரல்களை பலவீனப்படுத்துகிறார்கள். வதந்திகள் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எல்லாமே வதந்திகள் என்று ஒதுக்குவதன் மூலம் நாம் ஒதுக்கித் தள்ள நினைப்பது தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும்தான். நல்ல காலம் அதை தமிழகத்தில் யாரும் வெளியிடவில்லை. தமிழகத்தில் அது வெளியிடப்பட்டிருந்தால் புலிப் பிரச்சாரம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள்.

நான் பெரிதும் மதிக்கக் கூடிய பேராசிரியர் அ.மார்க்ஸ் ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும் என்று ஒரு கட்டுரையை புதுவிசை இதழில் எழுதியிருந்ததையிட்டுதான் என் கருத்தை நான் பதிவு செய்ய நேர்ந்தது. எஸ்.எம்.எஸ். வதந்திகள் குறித்து எழுதியதில் இந்திய வீரர்கள் ஈழ மக்களைக் கொல்கிறார்கள்; இராணுவ மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதெல்லாம் வதந்திகள் என்று சொல்கிறார் மார்க்ஸ். உண்மையில் இதெல்லாம் வதந்திகள் மட்டும்தானா? இந்திய வீரர்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றதில்லையா? ஆயுதங்களும் படைகளும் அனுப்பவில்லையா? சார்க் மாநாட்டுக்கு இந்தியத் தலைவர்கள் சென்றபோது இந்திய இராணுவம் கொழும்பு நகரத்தையே தங்களின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லையா? புலிகளின்  ஆயுதக் கப்பல்களை வழிமறித்து இந்தியக் கடற்படை தாக்கியழிக்கவில்லையா? தமிழகம் வழியாக இராணுவ டாங்கிகளும், வெடிப்பொருட்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த இந்தியா அனுப்பவில்லையா? அவைகள் மதுரை செக்போஸ்டில் சிக்கி இந்திய அழுத்தம் காரணமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படவில்லையா? ஈரோடு வழியாக சரக்கு ரயில்களில் டாங்கிகள் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கொழும்பு செல்லவில்லையா?

இப்படி எவ்வளவோ கேட்க முடியும். எல்லாமே வதந்திகளல்ல. எல்லாமே உண்மைகளும் அல்ல. எளிய மக்களின் உணர்ச்சிப் பெருக்கில் உண்மையும் பொய்யும் கலந்தே கதைகள் உலவுகின்றன. அதிலுள்ள ஒரு பொய்யை எடுத்து அல்லது சில பொய்களை எடுத்து பல நூறு உண்மைகளை வதந்திகள் என்று நிறுவ முயல்வது ஏன்? இப்போது வெளிவந்திருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும் வதந்தி என்று கழித்துக் கட்ட நினைப்பதன் அரசியல் சிந்தனை என்ன? (தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடீயோ ஆதாரங்களை சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதர் போலியானது (வதந்தி) என்றிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் புலி எதிர்ப்பின் பெயரால் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் பெரும்பலானவர்களும் இந்த வீடீயோவை அப்படியே உல்டாவாக்கி கொல்வது புலிகள் என்றும் கொல்லப்படுவது தமிழ் மக்கள் என்றும் மாற்றிப் பேசுகிறார்கள்)

மற்றபடி மார்க்ஸ் இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கும் தமிழக எழுத்தாளர்கள் குறித்த எபிசோட் ஒரு காமெடி பீஸ்தான். இந்த காமெடி பீஸை “யார் மனமும் புண்படாமல் போராடிய” கவிஞர்களின் ஒப்பாரிப் போராட்டத்தில் இருந்து நாம் கண்டு வருகிறோம். மற்றபடி ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர அஞ்சி நடுங்கி சந்தர்ப்பவாத அரசியலுக்குள் வாழும் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள்தான் இந்த தமிழ் எழுத்தாளர்கள் என்பதைத் தாண்டி இவர்கள் மீது என்ன கருத்துச் சொல்ல முடியும்? ஈழம் குறித்து ஆதரித்தோ எதிர்த்தோ எழுதாத சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலைகள் குறித்துப் பேசுகிற நம்மைப் பார்த்து 'படுகொலைகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்' என்கிறார்கள்.

ஐம்பதாயிரத்துக்கும் மேலதிகமாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு, முகாம்களில் இன்றும் கடத்திக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்காக நியாயம் கேட்டால் படுகொலைகளைக் கொண்டாடாதீர்கள் என்று நம்மை கொலைகளைக் கொண்டாடுபவர்களாக சித்தரிக்கிறார்கள். இலங்கையின் பௌத்த மரபை பாசிசம் என்றால் அது அம்பேத்கருக்கு செய்கிற துரோகம் என்று அடுத்த அஸ்திரத்தை வீசுகிறார்கள். இலங்கையிலும், பர்மாவிலும் கடைபிடிக்கப்படுகிற பௌத்த தேரவாத மரபு பௌத்தத்தின் இறுக்கமான பாசிசத் தூய்மைத் தன்மை கொண்டது என்று நமது பௌத்த நண்பர்கள் சொல்கிறார்கள். இது குறித்து தனியே எழுத விரும்புவதால் இதில் இத்தோடு விடுவோம்.

பரவிக்கிடக்கும் சமணக்காட்டை அழிக்க எட்டாயிரம் சமணர்களை உயிரோடு கழுவேற்றினார்கள் சைவர்கள் அல்லது பார்ப்பனர்கள். வரலாறு அதை பதிவு செய்திருக்கிறது. பதிவு செய்து நியாயம் கேட்டவன் அந்த எட்டாயிரம் படுகொலைகளை கொண்டாடவா செய்தான் அல்லது அம்பேத்கர்தான் இனப்படுகொலை செய்யச் சொன்னாரா? பாசிசத்தை எவன் செய்தால் என்ன அது உலகு தழுவிய இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கிறிஸ்தவ பாசிசமாக இருந்தால் என்ன? பார்ப்பன இந்து மத வெறிப்பாசிசமாக இருந்தால் என்ன? தலிபான்களின் அடிப்படைவாத பாசிசமாக இருந்தால் என்ன? தேரவாத பௌத்த பாசிசமாக இருந்தால் என்ன? பாசிசத்தை அதன் பேரில் அழைத்து விட்டுப் போக வேண்டியதுதனே?

சுசீந்திரன், ஷோபாசக்தி, ஆதவன் தீட்சண்யா, சுகன் ஆகியோரைத் தொடர்ந்து மார்க்சின் இந்தக் கட்டுரையும் இங்குள்ள புலி ஆதரவாளர்களோடு ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் ஒன்றாக இணைத்து எல்லோருக்கும் ஒரே புலி முத்திரை குத்தி முடக்கும் கட்டுரைதான். இங்குள்ள புலிஆதரவாளர்களைச் சாடுகிற நோக்கில் போகிற போக்கில் அகிலன் கதிர்காமரை இடதுசாரி பாரம்பரியம் உள்ளவராக சித்தரிக்கிறார். சுசீந்திரன், சுகன், ஷோபாசக்தியை ‘புலிகளை விமர்சிக்கிறவர்கள்’ என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார். நான் சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கி விட்டதாக எழுதியதாக பதிவு செய்கிறார். நாகார்ஜூனனும், வளர்மதியும் புலிகளை ஆதரித்தார்களோ இல்லையோ நான் புலிகளை ஆதரித்தேன். ஆதரித்து விட்டு இன்றைக்கு இல்லை அய்யய்யோ எனக்குத் தெரியாதே என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகியிருக்கிறான். எனக்கு அந்தத் தேவைகள் இல்லை. சகோதரப் படுகொலைகள், ஜனநாயக மறுப்பு, ஒழுக்கக் கொலைகள், அரசியல் அற்ற தன்மை என்று புலிகள் செய்த எல்லா தவறுகள் மீதும் விமர்சனம் கொண்டே நான் ஆதரித்து வந்திருக்கிறேன். மற்றபடி மூன்று லட்சம் சிவிலியன்களை அவர்கள் பிணையக் கைதிகளாக்கினார்கள், மக்களை மணல் மூடைகளாக்கினார்கள் என்பதெல்லாம் எஸ்.,எம்.எஸ் வதந்திகளைப் போல பாதி வதந்திகள்தான். இது குறித்து வாக்குமூலம் என்கிற போர்க்கால வாக்குமூலங்களை பதிவு செய்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது வரும் போது ஈழத்தில் என்ன நடந்தது  என்பது வெளிப்படும் என்பதால் அது குறித்தும் பேசுவதைத் தவிர்க்கிறேன்.

மற்றபடி இலங்கை அரசிடம் பணம் வாங்கியது தொடர்பாக நான் கூசாமல் சொன்ன குற்றச்சாட்டு குறித்து,

அகிலன் கதிர்காமரை இடது சாரி பாரம்பரியம் உள்ளவராக பேரா.அ.மார்க்சுக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிந்து சந்தர்ப்பவாத அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த அகிலன் கதிர்காமர் இன்று ஒரு என்.ஜீ.ஓ. ஆகவே அவர் மனித உரிமை சக்திகளுடன் தொடர்பில் இருப்பது ஆச்சரியம் தரும் செய்தியல்ல. சிறிலங்கா டெமாக்கரெட்டிக் பாரம் என்னும் தன்னார்வக்குழுவை கனடாவை மையமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறார் அகிலன் கதிர்காமர். சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கினார் என்பது ஒரு குற்றச்சாட்டு. மார்க்சுக்குத் தெரியும் என நினைக்கிறேன். போருக்குப் பிந்தைய இலங்கை அரசின் நிதி இரண்டு விஷயங்களுக்காக அதிகமாக செலவிடப்படுகிறது. ஒன்று இராணுவத்துக்கு இன்னொன்று புலத்திலும், தமிழகத்திலும் நிலவும் புலி ஆதரவை சிதைக்கும் ராஜதந்திர நடவடிக்கைக்கு. இதற்காக அவர்கள் தன்னார்வக் குழுக்களையே சார்ந்திருக்கிறார்கள். அதாவது ஒரு பக்கம் முகாம்களுக்குள் தன்னார்வக்குழுக்களை அனுமதிக்காமல் தடுத்து விட்டு இலங்கைக்கு வெளியே தன்னார்வக் குழுக்களை வைத்து ஈழம், புலி ஆதரவு, எதிர்ப்பியங்களை நசுக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது இலங்கை அரசு.

அந்த வகையில்தான் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஜெர்மன் சுசீந்திரனால் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கு நிதி உதவி செய்தது ஒரு தன்னார்வக்குழு. இந்த தன்னார்வக் குழுவின் நிதி வாசல் இலங்கை அரசு. சுமார் அறுபது லட்சம் ரூபாய் இந்தக் கருத்தரங்கிற்காக செலவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து இந்த கருத்தரங்கிற்கு சிலர் சென்று வந்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மார்க்ஸின் நண்பர்களான சுசீந்திரன், இடதுசாரிகள் என்றும் பெண்ணியவாதிகள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்னும் ராஜேஸ்பாலா, நோயல் நடேசன் போன்றோர்  இலங்கை அரசின் பணத்தில் இங்கு வந்து சென்றார்கள். இந்தக் கருத்தரங்கு திருவனந்தபுரத்தில் நடந்தபோது ஷோபாசக்தி சென்னையில் இருந்தார். அவர் சென்று வந்தாரா என்பது நமக்குத் தெரியாது.

தவிரவும் இலங்கையின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் துறைதான் அகதிகள் மறுவாழ்வு, புனர்வாழ்வு போன்ற பணிகளில் சிலதைச் செய்கிறது. இந்த அமைச்சகத்திற்கு தமிழகத்திலிருந்தே 70% பொருட்கள் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்படுகின்றன. அப்படியான ஏஜென்சிகளை நடத்துகிறவர்கள் யார் என்று உங்களுக்கு (மார்க்சுக்குத்) தெரியுமா? அப்படித் தெரியாவிட்டால் (உங்கள் நண்பர்களிடம் யாரிடம் கேட்டாலும் தெரியும்) கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்ல வருவது இதுதான். இன்றைய தேதியில் புலி எதிர்ப்பு என்பது முதலீடில்லா வருமானம் ஈட்டக் கூடியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதாயங்கள் கிடைக்கும் சூழல் இருக்கிறது. குரூப் நிதிகள், தனிநபர் நிதிகள் என தேவைக்கு ஏற்ற மாதிரி பரிமாறப்படுகிறது. உண்மையில் நீங்கள் இதை கண்டிக்க வேண்டும் என நினைத்திருந்தால் சுகன் பாடிய தேசிய கீதம் குறித்து கருத்துச் சொல்லியிருக்க வேண்டும், சுசீந்திரனின் புது விசை நேர்காணல் குறித்தும், அகிலன் கதிர்காமர் குறித்தும் உங்கள் நண்பர்களிடம் அல்ல வேறு ஆட்களிடம் விசாரித்து எழுதியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை திட்டி விட்டு அதோடு சேர்த்து எலலாவற்றையும் ஊத்தி மூடுவது நியாயம் ஆகாது. இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துவது சிரமமான காரியமா என்ன? நானும் எழுதியிருக்கிறேன்.

Noel Nadesan (Australia)
Dr.Rajasingham Narendran (Middle East)
Mrs. Rajeswari Balasubramaniam (U.K)
Manoranjan Selliah (Canada)
Rajaratnam Sivanathan (Australia)

இவர்கள் எல்லாம் தன்னார்வக்குழுவினர்தான். இலங்கை அரசிற்கும் புலத்தில் உள்ள தமிழர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் பணி செய்வதுதான் இவர்களின் நோக்கம். அதற்காக இவர்கள் புலத்தில் ஈழம் என்கிற கருத்தை கைவிடச் சொல்கிறார்கள். இலங்கை அரசிடமோ கோடி கோடியாக நிதிகளைப் பெற்று செயல்படுகிறார்கள். இது தொடர்பாக ‘லிட்டில் எய்ட்’ என்ற நிறுவனத்தை இவர்கள் துவக்கியிருக்கிறார்கள். நண்பர்கள் முடிந்தால் Recent visit to sri lanka: summary report by tamil expats  என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையைப் படிக்கவும். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59396. இவர்கள் எந்த அளவுக்கு புலிகளை விட கீழ்த்தரமானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோவையும் முடிந்தால் பாருங்கள். http://littleaid.org.uk/little-aid-ambepusse-project-latest-video. எண்ணிப் பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ள மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்து உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அந்த முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார்களாம் இந்த தன்னார்வக்குழுவினர். துள்ளாத மனமும் துள்ளும் என்னும் இயக்குநர் எழில் அவர்களின் திரைப்படத்தில் உள்ள ‘‘தொடு தொடு எனவே வானவில் என்னை’’ என்கிற பாடலைத்தான் அந்த சிறுவ சிறுமிகள் பாடுகிறார்கள் என்பதை நாம் சிரமப்பட்டே புரிந்து கொள்ள முடியும். காரணம் துரோகக் குழுக்களுள் உள்ள சில இளைஞர்களை வைத்து அந்த சிறுவர்களை மனரீதியாக அச்சுறுத்தி இந்தப் பாடல் பாடப்படுவதை நீங்கள் சூழ நிலவும் இராணுவச் சீருடைகளைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். தற்போது, கைதட்டச் சொன்னால் கைதட்டும் பிணங்கள்தான் வன்னி மக்கள். பாடச் சொன்னால் பாடுகிறார்கள். இது சலிப்பைப் போக்கிக் கொள்வதற்கான வழி என்கிறார்கள் இந்த தன்னார்வக்குழுக்கள்.

இந்த தன்னார்வக்குழுக்கள் முகாம்களுக்குச் சென்று வந்து ‘‘மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயமானதே’’ என்று கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இதோ அந்தக் கேவலத்தை நீங்களும் கொஞ்சம் படியுங்கள். http://inioru.com/?p=4837&cpage=1#comment-2454

கிழக்கு முஸ்லீம்கள்

புலிகள் முஸ்லீம்களை துரத்தி விட்டதிலிருந்து துவங்கிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு. இந்த மன வேறுபாட்டை ஊட்டி வளர்த்தது இலங்கை அரசு. புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் வாழ்வதற்கான உரிமையை இலங்கை இராணுவம் மறுத்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளேயே இருக்கிறது. அது போல கிழக்கு தன்னார்வக்குழுக்களின் இறுகிய பிடிக்குள் சிக்கியிருக்கிறது. எதிர்ப்பியக்கங்களற்ற இஸ்லாமிய சந்தர்ப்பவாத தலைமை இலங்கை அரசோடு அதிகாரத்தைப் பகிர்ந்திருக்கிறது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு தமிழர் அரசியல் பலவீனமடைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்களின் குரல் வலுப்பெறுகிற சூழலை இலங்கையில் இன்று நாம் காண்கிறோம். இது நல்ல விஷயம்தான். ஆனால் இஸ்லாமியத் தலைமைகள் இலங்கை அரசோடு சேர்ந்தியங்குவதன் மூலம் கிழக்கு முஸ்லீம்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள். இப்போதே கிழக்கில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கருணாவை வைத்து துவங்கிவிட்டது சிங்கள அரசு. தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய இஸ்லாமியத் தலைவர்களும், சில சிந்தனையாளர்களும் மிகவும் நாசூக்காக ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அது ஒட்டு மொத்த இலங்கையில் சிங்களர்களுக்கு அடுத்தபடியான பெரும்பான்மை இனம் முஸ்லீம்கள்தான் என்று.

யுத்தம், இடப்பெயர்வு, படுகொலைகள் என தமிழினத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்கள் தமிழர்களை விட பெரும்பான்மையாகி விட்டார்கள் என்பதுதான் இவர்கள் தற்காலத்தில் வைக்கும் சிந்தனை. காஷ்மீரிலும், மத்தியக் கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் வதைபடும் இஸ்லாமிய மக்கள் மீது ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் தனித்த அக்கறையும் ஆதரவும் எனக்கு உண்டு. இஸ்லாமிய மக்களின் உள்ளூர் எதிரியான இந்துப் பாசிசத்தை எதிர்ப்பதோடு உலக அளவிலான கிறிஸ்தவ பயங்கரவாதத்தையும் நான் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். மக்கள் படுகொலைகளை ஒரு நல்வாய்ப்பாக யார் பயன்படுத்தினாலும் அது தவறு. மரபுகளும், பெரும்பான்மை வாதங்களும் தகர்க்கப்பட வேண்டும். அது இந்து, இஸ்லாமிய, தமிழன் என எதன் பெயரில் வந்தாலும் வன்முறையே. அந்த வகையில் கிழக்கு முஸ்லீம்களின் பிரச்சனைகள் பிரத்தியேகமாக அணுகப்பட வேண்டியவை. சைவத்தாலும், வைணத்தாலும் கறைபட்ட தமிழ் தேசியம் இன்னும் மீச்சம் மீதியிருப்பதில் ஏதேனும் செய்ய விரும்பினால் சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும் உள்ளடக்கிய அரசியல் செயல்படாகாவே அது இருக்க வேண்டும். மற்றபடி தன்னார்வக்குழுக்களில் பணி செய்யும் நண்பர்கள் தங்களின் நிதி அரசியலுக்காக வடக்கு, கிழக்கு முரணை கூர்மையடைய வைப்பது வேதனையளிக்கிறது.

பொதுவாக நியாயமான விமர்சனங்களை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதினால் உடனே இவன் மார்க்சை துரோகி என்கிறான். அவர் என்.ஜி.ஓக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பேசுவதாக எழுதுகிறான் என இதையும் திரித்து கதை கட்டாதீர்கள். என்னளவில் மார்க்சின் மனித உரிமைச் செயல்படுகளின் மீது நான் மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறேன். புலிகளை எதிர்ப்பதாலேயே ஒருவர் ஜனநாயகவாதியாகி ஆகிவிட முடியாது. ஜனநாயகம் என்பது மக்களின் உண்மையான விடுதலை பற்றிப் பேசுவதுதான் என்கிற அளவில்தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். ஏனென்றால் இவர்கள் “வெறுப்புக்கு எதிராகப் பேச” இந்து ‘ராமை’ப் பயன்படுத்துவார்கள். தமிழ் தேசியவாதிகளையும், ஈழ ஆதரவாளர்களையும் திட்ட மார்க்சைப் பயன்படுத்துவார்கள்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் இங்குள்ள ஈழ ஆதரவளர்கள் குறித்த புரிதல் இல்லாமல் இக்கட்டுரையை எழுதியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் புலிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகாலப் போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.

அது போல ஈழம் சாத்தியமில்லை என்பதோ ஈழம் என்கிற கருத்து முடிந்து விட்டது என்பதையோ நான் நம்பவில்லை. கடந்த காலத் தவறுகளில் இருந்து புதிய இயக்கங்களை ஈழ மக்கள் கண்டடைவதன் மூலம் பேரினவாதிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்குப் பதிலாக தன்னார்வக் குழுக்களை ஈழத்திற்குள் அனுமதித்தால் இப்போதல்ல எப்போதுமே ஈழத் தமிழர்கள் எழுந்திருக்க முடியாது. அவர்கள் எழ வேண்டும் என்பதே என் ஆசை. ஏனென்றால் பௌத்த பாசிச இலங்கை அரசின் நிலப்பரப்பினுள் சிங்கள மக்களோடு தமிழ் மக்கள் சேர்ந்துவாழும் சாத்தியங்கள் இல்லை. சுதந்திரத் தமிழீழம் ஒன்றே தீர்வு அல்லது பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை என்போம் அதை.

கடைசியாக,

கீற்று குறித்த கட்டுரையில் மார்க்ஸ் இப்படியான ஒரு வாக்கியத்தை புது விசை கட்டுரையில் பயன்படுத்துகிறார். “இவர்கள் பிற பொதுப் பிரச்சனைகளில் பொதுமக்களின் பொது அறிவு மட்டத்தைக் கூட எட்ட மாட்டார்கள். இவர்கள் நடத்துகிற இணையத்தளங்களில் எந்தவித அபத்தத்தையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம்’’ என்கிறார். அகிலன் கதிர்காமர் மாதிரியான இடது சாரி பாரம்பரியம் அன்றி, கருவாட்டுக்கூடை தலையில் தூக்கிச் சுமந்து முதல் தலைமுறையாக வெளியில் வந்திருக்கும் முதல் தலைமுறை எங்களுடையது. உண்மையிலேயே மரபுகளின் வன்முறை குறித்து நான் மார்க்சிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். இந்த வரிகள் அவரிடமிருந்து வந்ததாக நான் நினைக்கவில்லை.

- டி.அருள் எழிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

33 comments

33
தமிழன்
ஈழம், இலங்கை என்று பேசக்கூடிய எத்தனை பேருக்கு திரு. எழிலன் மேற்குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் குறைந்தபட்சம் அரைகுறையாகவோ அல்லது முழுமையாகவோ தெரியும் என்பது எனக்குத் தெரியவில்லை. முழுமையாகத் தெரிந்தவர்கள் இக்கட்டுரையின் வார்த்தைகளில்துள்ள உண்மையை உணர்ந்தவர்களாக இருப்பர். அரைவேக்காட்டுப் பேர்வழிகள்தான் எஸ்.எஸ்.எம்.களை நம்பி பொய் புரட்டுச் செய்திகளை மேலும் பரப்புகிறார்கள். "ராம்... ராம்..." என்று புலம்புகிறார்கள். திரு. எழிலன் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அர்த்தமுள்ளவை. ஈழத் தமிழர்கள் மீள எழுவார்கள். ஒன்பது முறை விழுந்தவர்கள் தான் ஈழத் தமிழர்கள். இதைச் சொல்லி பலர் சிரிக்கட்டும். ஆனால் ஒன்பது முறையும் மீள எழுந்தவன் ஈழத் தமிழன் என்கிற உண்மையை விரைவில் புரிந்து கொள்வார்கள். அதுவரை பணம் பெற்று பிண வாழ்க்கை நடத்தும் கைக்கூலிகள் பேசுவதை எல்லாம் பேசட்டும். நீங்கள் தொடர்ந்து நெஞ்சை சுடும் உண்மைகளை எழுதுங்கள் திரு. எழிலன்.
- தமிழன்
வளர்மதி
அ. மார்க்சின் கட்டுரைக்கு பதில் எழுத நானும் யோசித்திருந்தேன். முடியவில்லை. அவ்வளவு வலுவாக இரவு 12.30 மணிவரை எஸ் எம் எஸ் களை வாசித்து ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார். எனது கட்டுரைகளை வாசிக்காமலேயே ”நண்பர் ஒருவர் மோசமான கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது என்று ஃபோனில் சொன்னார்” என்ற வலுவான ஆதாரத்தை வைத்து எழுதியவருக்கு எப்படி பதில் சொல்ல இயலும்!!!

ஒரு கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை மறுக்க முனையும் ஒரு நபர் முதலில் அதை வாசிக்க வேண்டும். அதிலும் அறிவுஜீவிப் பட்டம் கட்டிக் கொள்பவர்களுக்கு இது அடிப்படை அறம். தனக்கு அந்த அறம் (இந்தச் சொல்லும் ‘புளித்துப்' போய்விட்டது) கூட இல்லை என்பதை “மாமேதை” அ. மார்க்ஸ் நிரூபித்திருக்கிறார்.

நாகார்ஜுனனின் ஒரு கட்டுரையைக்கூட வாசிக்காமல் அவர் மீதும் புலி ஆதரவாளர் முத்திரை.

மொத்தத்தில் அது ஒரு காமெடி பீஸ் என்பதற்கு மேலாக அவரது கட்டுரையில் ஒன்றும் இல்லை. அதனாலேயே தற்சமயம் எனது நேரத்தை அதற்குப் பதில் சொல்வதில் வீணடிக்க வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கிறேன்.

என்றாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு முக்கிய புள்ளிக்கு அழுத்தம் தரும் பொருட்டு ஒரு விடயம்:

//தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய இஸ்லாமியத் தலைவர்களும், சில சிந்தனையாளர்களும் மிகவும் நாசூக்காக ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அது ஒட்டு மொத்த இலங்கையில் சிங்களர்களுக்கு அடுத்தபடியான பெரும்பான்மை இனம் முஸ்லீம்கள்தான் என்று.//

என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதை அ. மார்க்சும் மிகநுட்பமாகச் செய்கிறார்.

அ. மார்க்சின் கட்டுரையில் வரும் குறிப்பு இது:

//குறைந்த பட்சமான சில அடிப்படைத் தகவல்கள் - எடுத்துகாட்டாக இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7.5 சதமுள்ள தமிழ் முஸ்லிம்கள் தம்மைத் தனித் தேசிய இனமாகக் கருதக் கூடிய நிலை உள்ளது- என்பது போன்றவற்றைக் கூட நம் எழுத்தாள நண்பர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.//

எந்தப் பாதகமும் இல்லாத, ஒரு சாதாரணமான புள்ளிவிபரம் கட்டுரையின் போக்கில் சொல்லப்பட்டிருக்கிறது என்று பலர் நினைக்கலாம்.

ஆனால், 2001 மக்கள்தொகைக் கணக்கின்படி, இலங்கையின் மக்கட்தொகை பின்வருமாறு : Sinhalese 73.8%, Sri Lankan Moors (இஸ்லாமியர்கள்) 7.2%, Indian Tamil (மலையகத் தமிழர்கள்) 4.6%, Sri Lankan Tamil 3.9%, other 0.5%, unspecified 10%. (பார்க்க: http://sri-lanka.saarctourism.org/people-of-sri-lanka.html)

அதாவது, மிகநுட்பமாக இலங்கையில் இஸ்லாமியர்கள் இரண்டாவது பெரிய தேசிய இனம் என்பதை போகிற போக்கில் குறிப்பிட்டுச் செல்கிறார்.

தமிழகத்தில் சிறுபான்மையினருக்கான அரசியலில் தீவிரமாக முனைந்திருப்பவராகத் தம்மை முன்னிறுத்திக் கொள்ளும் அ. மார்க்ஸ் இதன் காரணமாகவே - அதாவது இங்கு அந்த அரசியலில் இருந்து தனிமைப்பட்டு விடாமல் இருப்பதற்காகவே ஈழத்தில் இஸ்லாமியர்களின் பிரச்சினையைப் பேசுகிறார் என்று சொன்னால் உடனே அதை அவதூறு என்று யாராவது சொல்லிவிடக்கூடும்.

அதனால், அ. மார்சின் ‘லொஜிக்' படியே கேட்போம். இன்றைய நிலைமையில் சிங்கள அரசாங்கம் தமிழர்களை நாட்டை விட்டுத்துரத்தியும் குவியல் குவியலாகக் கொன்றுபோட்டும் இஸ்லாமியர்களைவிடச் சிறுபான்மையினராக அவர்களை ஆக்கிவிட்டிருக்கிறது.

எங்கு போனாலும், எந்தப் பிரச்சினை ஆனாலும், சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கும் அ. மார்க்ஸ் இப்போது என்ன செய்யவேண்டும்?
sugan kanagasabai
தோழமையுடன் அருள்! எழிலன்!
பகவான் புத்தரின் கருணையும் அன்பும் நம் எல்லோர்மேலும் கவிவதாக!
அய்கப் அரங்கில் நான் இலங்கை தேசிய கீதத்தை மட்டுமா பாடினேன்!
காசி ஆனந்தனின் கவிதையைப் பாடினேன்,
சேரன் கவிதையைப் பாடினேன்,

ஈழம் எங்கள் நாடடா!
இன்பமான வீடடா!
நீள நீலக் கடலிலே
நிமிர்ந்து நிற்கும் தீவடா!!!!

என்பதைப்பாடினேன்
ஈழத்தில் தமிழ் அரசியலின் சாதிய முகம் குறித்துப்பேசினேன்!
ஒரு அகதியின் நிலையில் நின்று யுத்தத்தின் முப்பதாண்டு கொடூரம் நமக்கு ஏற்படுத்திய எவ்வகையிலேனும் இனி ஈடுசெய்யவியலாத இழப்பையும் அழிவையும் குறித்துப்பேசினேன்!
நீங்கள் அந்தக்கூட்டத்திற்கு வந்தீர்களா?
வந்திருந்தால் உங்களது தேசிய கீதம் பற்றிய 'கொமன்ற்' வந்திராது.கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான் என்று நம்மூரிலும் சொல்வதுண்டு.
அக் கருத்தரங்கில் ஈழத்து கவிதைகளின் அரசியல் போக்கு பற்றியே எனது உரையை அமைத்துக்கொண்டேன்!
ஈழத்துக்கவிதைகளுடன் எனக்கு சிறுவயதில் எப்படிப் பரிச்சயம் ஏற்பட்டது என்பதில் தொடங்கியது எனது உரை!
காசியானந்தன் சேரன் கவிதைகளுக்கு முன்னர் இலங்கையில் தமிழில் தேசியகீதம் நமது உறவினர் முறையான (பெரியப்பா முறை)முது தமிழ்ப்புலவர் மு.நல்லதம்பி அவர்கள் இயற்றியதைக் குறிப்பிட்டேன்.
நம் ஊரில் எல்லோருக்குமே இலங்கை தேசிய கீதம் அத்துப்படியானது.
அத்தோடு அவரது' மணித்தாய் நாடும் மரதன் ஓட்டமும்' நூலும்.
அப்படியாக கவிதைகளுடன் பரிச்சயம் என்ற அளவில் அதையும் குறிப்பிட்டேன்!
அது நம் எல்லோருடைய பாடப்புத்தகத்திலும் இருக்கும்.
அதை நீங்கள் ஆயிரம் கருணாக்களுக்குச் சமம் என என்னை துரோகி லிஸ்டில் சேர்த்ததை எண்ணி உங்கள் மேல் பரிதாபம் படத்தான் முடிந்தது.
ஆயிரம் கருணாக்களுக்குச் சமம் என்பதற்காகவே நான் ஆயிரம் முறை இலங்கை தேசிய கீதத்தைப் பாடுவேன்!
இந்த நிமிடம்வரை நான் என்னை இலங்கையனாகவே உணர்ந்து கொள்கிறேன்.
நம் சிறீ லங்கா தாயே!!
நமோ!! நமோ!! நமோ ! !! தாயே!!!
நல் எழில் பொழில் சீரணி
நலங்கள் யாவும் நிறைவான் மணிலங்கா!!!
ஞாலம் புகழம் வளர் மலை கடல் நதி என
நறும் சோலை கொள் லங்கா!!!

உங்களுக்கு இலங்கையின் அரசியல் சமூக நிலைமைகளில் பரிச்சயமின்மையையே "நான் ஆயிரம் கருணாக்களுக்குச்சமம்" என்ற உங்கள்
வார்த்தை சுட்டுகிறது.
கேணல் கருணா மட்டும் அந்த நிலைப்பாட்டை எடுக்காதிருந்தால்
இன்று ஏற்பட்டுள்ளதைவிட பேரழிவு ஏற்பட்டிருக்கும்,
மேலும் ஒருவருடம் யுத்தம் நீடித்திருக்கும் ,
இன்று வன்னியைப்போலவே கிழக்கு மாகாணமும் மாறியிருக்கும் என்பதையெல்லாம் நீங்கள் இலங்கையில் நின்று வாழ்ந்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்,
நம் எல்லோரையும் விட அவருக்குதான் தன்பலமும் எதிரிபலமும் தெரிந்திருந்தது.
சும்மா ஒரு உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம்!
எரித்திரியாவில் நின்ற புலிகளின் பத்து சிறிய ரக தாக்குதல் விமானங்களையும்
கொண்டு கொழும்பில் குண்டுபோட்டால் அரசு போடும் குண்டுகளுக்கு தமிழர்களில் மிஞ்சுபவர் யாவர்,?
அவர் கடைசிவரை தலைமையை சமாதானத்திற்காய் வலியுறுத்திப் பார்த்தார்!
பிரபாகரனா கொக்கா!!
தனது சமூகத்தை அவர் பாதுகாத்துக் கொண்டார்!
அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம்.
கி.ராஜநாராயணின் கதை ஒன்றில் வருமே எருக்கம் விளாறுக்கும் நான் இழப்பமாப் போனேனே!! என்று அப்படி.
கிளர்ச்சித் தலைவன் இராணுவத்தளபதி முன்னணிப் போராளி!!
இப்படியான தரத்திலிருந்து ஜனநாயக அரசியலுக்கு வந்து தேசிய அரசியலில் தேசியக்கட்சியில் தலைவர்களில் ஒருவராவதான நிலை உலக அரசியலுக்குப் புதிய படிப்பினையும் முன்னுதாரணமும் !!
வாழ்க நீ அம்மான்!
வரலாறு உன்னை விடுதலை செய்யும்!!
இருக்கட்டும் !வரலாறு வெற்றிடங்களை விடுவதில்லை!!
எனது மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மான்!!

எனது தீராநதி ஓகஸ்ட் மாதப் பேட்டியில் சொல்லியிருப்பேன் இப்படி;

தீராநதி;
தனி ஈழக்கோரிக்கையை வன்மையாக மறுதலிக்கிறீர்கள் அதைப்பற்றி...

சுகன்;
தனி ஈழக்கோரிக்கையைப்போல அபத்தமான அரசியல் கோரிக்கையை உலக அரசியலில் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.அறுபதாண்டுகளாக வெள்ளாளர்களின் அரச எதிர்ப்பின் யோக்கியதைகளை அற்பத்தனம் என்ற வார்த்தையால் மட்டுமே சுட்டிக்காட்டலாம்.
தேசியம் சுயநிர்ணய உரிமை பிரிவினை இவற்றிற்கு இலங்கையில் எந்தப் பொருளுமில்லை.அது மிகவும் ஆரோக்கியமானது.
பல்லினங்களும் சேர்ந்துவாழும் இலங்கையில் ஐக்கியம் மட்டுமே எல்லோருடைய வாழ்க்கைக்கான உத்தரவாதத்தையும் வழங்க முடியும்....

அய்கப் அரங்கில் தேசியகீதத்தைப் பாடி எனது உரையை நான் தொடங்கவில்லை.
போருக்கு எதிராக பகவான் புத்தரைப்போல் சமாதானத்தைப் பேசியவரை வரலாற்ரில் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்றுதான் எனது பேச்சைத் தொடங்கினேன்.
தேசியகீதம் எல்லாவற்றையும் போலவே ஒருவிடயமாக வந்துபோனது அவ்வளவுதான்!
அதற்காக நீங்கள் இவ்வளவு அதிர்ச்சியடையத் தேவையில்லை.
இதற்கே அதிர்ச்சியடைந்தால் எப்படி தோழர்?
யாதும் ஊரே யாவரும் கேளிர்!!
என்பதும் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதும் நமது மரபுதானே!
ஒருதளத்தில் அமைப்பு வடிவங்களையே கேள்விக்குள்ளாக்கும் அதிகாரத்திற்கெதிரான அனார்க்கிஸ்டுகள்தானே நாம் எல்லோரும்!!
என்ன தோழர் நான் சொல்வது புரிகிறதா!!
எனது ஈழத்தமிழ் காரணமாக நான் பேசுவது சிலவேளைகளில் சரியாக புரிந்துகொள்ளப்பட முடியாமல்போகவும் வாய்ப்புண்டு அல்லவா?

உங்கள் முன்முடிபுகளை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என நான் கேட்கமாட்டேன்!அது உங்களுக்கு அங்கீகாரத்தை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும்வரை! துரோகியாக்குவதுவரை.
இப்படியும் மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளாதவரை!

வாங்கிற காசுக்கு ரொம்பத்தான் கூவுறான் கொய்யாலை
**************************************************

தோழர் நான் பரிஸுக்குவந்து 23 வருடமாகிறது.
அனேகமாக வேலைக்குப் போகாத வருடங்கள் குறைவு.
நான் ஒரு வேர்க்ககோலிக்! சேமிப்பது சொத்து சேர்ப்பது இன்றுவரை ஒவ்வாததாகவே இருக்கிறது. அதனாலே ஆன்மிகரீதியான பலம் எனக்கு எப்போதும் இருக்கிறது.
அதை பெளத்தத்தில் தம்மம் என்றும் சொல்வதுண்டு.
சுனாமிக்கு சேர்த்த மில்லியன் கணக்கான பணத்தை சுவிஸ் வங்கியில் போடும், வருடம் ஒன்றிற்கு 3பில்லியன் டொலர் வருமானம் உள்ள, பணக்காற இயக்கத்தின் ஆதரவாளனும் இல்லை.
சமாதானச் சூழ்நிலையைக் குழப்புவதற்கு மகிந்தவைக் கொண்டுவருவதற்கு 80 கோடி வாங்கும் பேரத்திலும் நான் பங்குபெறவில்லை.
நினைவு தெரிந்த நாளிலிருந்தே பொதுவுடமை அரசியல்தான்.சிவத்தப்புத்தகம்தான்,
எம்மையெல்லாம் நம்பி மகிந்த காசுதருவார், தூதரகம் காசுதரும் என்று நீங்கள் நம்பினால் உங்களைப்போலை பாமரர் உலகத்திலை கிடையாது.

சும்மா சிரித்துவிட்டுப்போற விடயமில்லைத் தோழர் இது!
நமக்கும் சுயமரியாதை ஒன்று இருக்குமில்லையா?
'வாங்குற காசுக்கு ரொம்பத்தான் கூவுறான் கொய்யாலை' என்றால் அதுக்கு என்ன அர்த்தம் தோழர்?
mprajan
புதுவிசை கட்டுரையைத் தாமதமாகத்தான் படிக்க நேர்ந்தது. என்னடா கிரகம் இது, இப்படி நிறைய பேர் லூசு பிடிச்சு அலையத் தொடங்கிவிட்டான்கள் என்றுதான் தோன்றியது. மதுரையில் உதிர்த்த மாணிக்கப் பரல்களைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்தே, புதுவிசை, ஆதவன் தீட்சண்யா மீதிருந்த மரியாதையெல்லாம் காற்றோடு போய்விட்டது. அ. மார்க்ஸின் காமெடிகளோ எல்லையில்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன. இனிமேல் அவர் தன்னுடைய பெயரை தலைப்பெழுத்துக்கும் பெயருக்கும் இடையே புள்ளியில்லாமல் எழுதத் தொடங்கலாம்.
Dr. V. Pandian
நேற்று எனக்கு தோழர் ஒருவர் குறள் ஒன்று மின்னஞ்சல் செய்திருந்தார்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்.

இதன் பொருள்: ஒருவனை நாம் தலைவனாக தேர்ந்தெடுக்கும் போது அவன் அறவழி கொண்டவனா, பொருளாசை கொண்டவனா, பெண்ணின்பத்திற்கு அடிமையாகக் கூடியவனா, பொது நன்மைக்காக உயிர்கொடுக்க அஞ்சுபவனா என்ற நான்கு துறைகளிலும் ஆய்ந்தபின் தான் தேர்வு செய்ய வேண்டும்.

எப்பேர்பட்ட உண்மை!

தலைவனின் தனி வாழ்க்கை வேறு, பொது வாழ்க்கை வேறு என்று வாதிடுவதெல்லாம் அறிவீனம்!

ஒரு தலைவனின் தனிவாழ்க்கை அவனது பொது வாழக்கையையும், அதன் மூலமாக கோடானுகோடி மக்களின் வாழ்வியலையும் பாதிக்கிறது.

பிரபாகரன் என்ற தூய மாவீரன் தனது மன்னையும், மக்களையும் நேசித்து, உயிருக்கஞ்சாமல் சயனைடு குப்பியோடு வாழ்நாளெல்லாம் காட்டிலே வாழந்து, தன்னையும் தனது மகனையும் தனது மக்களின் விடுதலைக்காக அற்பனித்து, ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து, நேர்மையான போர் முறையைக் கையாண்டு, தான் வள்ளுவனின் உண்மைப் பேரன் என்று நிறுவினார்.

தினம் பத்து பொய், பித்தலாட்டம் செய்பவர்கள் இங்கு "வாழும் வள்ளுவர்" பட்டம் சூட்டிக் கொள்கின்றனர்.

காலம் அனைவரது முகமூடியையும் கிழித்துக் காட்டும்!
முரளி
கட்டுரையாளர் இன்னும் கொஞ்சம் தெளிவாகஎழுதி இருக்கலாம்.குழப்பமாக இருக்கிறது.

இந்து தீவிவாத்தோடு ஒப்பிட்டு எல்லாத் தீவிரவாதாமும் ஒன்னுதான் சொல்றது....இவருடைய மதஉணர்வை காட்டுது.

ரொம்ப டம் புடுச்சி எழுதி இருக்கிறார்.

புலிகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று எழுதும்
இந்தத் தொனி புலி ஆதராவளர்களிடம் ஏதொ ஒரு வகையில் இவர் லாபம் அடைபவர் என்று படிப்பவர்களுக்கு சொல்லத் தோன்றுவதுமாதிரி இருக்கிறது கட்டுரை.

மார்க்சை இன்னும் நல்லமுறையில் அம்பலப்படுத்தியிருக்கலாம்.... நான் பெரிதும் மதிக்கும் மார்க்ஸ் என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.......
மார்க்ஸ் என்னமோ இப்போதுதான் புலிகளை எதிர்ப்பதுமாதி்ரி....அவரின் வேலையே பல ஆண்டுகளாக புலிகளை எதிப்பதுதான்....
தான் மதிக்கும் மார்க்ஸ் தவறு செய்யும்போது தட்டிக் கேட்கிற கட்டுரையாளர்.....புலிகள் தவறு செய்யும் போது தட்டிக் கேட்பாரா? கேட்டாரா?
கேட்டால் ........

மார்சை பற்றிய கட்டுரையாளரின் மதிப்பீடு பக்கவான சந்தர்ப்பவாதமாக இருக்கிறது....
தேன்கனி
அ.மார்க்ஸ் குறிப்பிட்டது சரிதான். துறைசார் அறிவுபடைத்தவர்கள் பொதுப்பிரச்சினைகளில் பொதுமக்களின் அறிவு மட்டத்தைக் கூட எட்டுவதில்லை. குறிப்பாக மாணவர்களுக்குப் போதிக்கும் ஆசிரியர்களிடம் பாடப்புத்தகத்தைத் தாண்டி ஏதாவது பேசச்சொன்னால், அவர்களது பொதுஅறிவு பல்லிளித்து விடும். காரணம் என்னவென்றால் இவர்கள் யாராவது எழுதிவைத்ததை மாணவர்களுக்கு ஒப்பித்தே பழக்கப்பட்டவர்கள். பொதுப்பிரச்சினைகளிலும் யாரோ எழுதி வைத்ததைப் படித்து அதை மற்றவர் முன்பு வாந்தி எடுப்பார்கள். அதிலும் அ.மார்க்ஸ் போன்ற அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் ஒருநாள் சாப்பிட்டதை ஆயுள் முழுவதுக்கும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இராசபக்சே நல்லவராகவும், பிரபாகரன் பாசிஸ்டாகவும் தெரிகிறார். அது சரி, நக்குகிற மாட்டுக்கு செக்கு எது, சிவலிங்கம் எது என்று தெரியவா போகிறது?
sangar rajan
தோழர் சுகன் விலாவாரியாக "விளாசித்தள்ளுமாப்பில" . எல்லாவற்றையும் விட்டுவிடலாம். ஒரு சின்ன விடயம்: கருணா கருணா.. கொழும்ப்பில் தமிழர்களைக் கடத்தி ...... கொள்ளையடித்து.... அப்போதெல்லாம் தமிழர்கள் ... கருணா அழித்த அழிப்பில் மாண்டு போனவர்கள்..கைகால் இழந்தவர்கள்.. எல்லாமே கப்பம் கேட்டுத்தான் நடந்தது. இந்தப் பணத்தை வைத்து பாரிஸ், லண்டன், ஜேர்மனி, கொழும்பில் வாங்கிய சொத்துக்களிலும் உங்களுக்குப் பங்கோ சுகன்?
sugan kanagasabai
தோழர் சங்கர் ராஜன்!

'காவடியைத்தூக்கித் தோளில் வைத்தால் ஆடித்தான் இறக்கவேண்டும்' என்று அறிதிலையோ!!!
Rajakumaran
சரியாகச் சொன்னீர்கள் தேன்கனி! அ.மார்க்ஸ் ஏதாவது பேசுகிறார் என்றால் அதை ஏதாவது ஒரு புத்தகத்தில் இருந்து மனப்பாடம் செய்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். சோவியத் வீழ்ந்தவுடன் இவர் எழுதிய கட்டுரைகள் எல்லாம், வலதுசார்பு எழுத்தாளர்கள் எழுதியதன் மறுபதிப்புதான். இத்தகைய எழுத்துக்களுக்கு ம.க.இ.க. தோழர்கள் மறுப்பு தெரிவித்து எழுதிய கட்டுரைகளைப் படித்தால் அ.மார்க்ஸ் மாதிரியான 'ஜெராக்ஸ்' எழுத்தாளர்களின் லட்சணம் தெரியும். இப்போது எதைப் படித்தார் என்று தெரியவில்லை, சாதி ஒழிப்பையும், மதச்சார்பின்மையையும் காந்தியின் கோவணத்தில் தேடிக் கொண்டிருக்கிறார். ஒரு விஷயத்தைப் படித்து, அதை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வது என்ற அடிப்படை இவருக்கு இருப்பது மாதிரி தெரியவில்லை. ஷோபா சக்தி, சுகன் மாதிரியான‌ புலிக்காய்ச்சல் பிடித்தவர்கள் உளறுவதை அப்படியே டிட்டோ செய்துவருகிறார். ராஜபக்சேவை நிகழ்கால புத்தர் என்று சுகன் சொல்லிவிட்டார் என வைத்துக்கொள்வோம். அதற்கு அடுத்த வாரமே, ராஜபக்சேவுக்கும் புத்தருக்கு உள்ள பொருத்தங்கள் என்று அ.மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதுவார். அவருக்கு பிரபாகரன் என்ற பெயர்தான் கசக்குமே தவிர, ராஜபக்சே அல்ல.
வளர்மதி
//கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான்//

இது அ. மார்க்சுக்கும் உங்களுக்கும் மட்டும் பொருந்தாது. அப்படித்தானே சுகன்?
தமிழ்நிலா
கருணா குறித்த சுகனின் கருத்து புல்லரிக்க வைக்கிறது. இவர் சொல்வது சரியென்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். அதன்படி கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுடன் சண்டைக்குப் போகாமல் இருந்திருந்தால், ஏராளமான உயிர்ச்சேதங்களைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், என்ன செய்வது? எட்டப்பனுக்கு இருந்த அறிவு அவருக்கு இல்லையே! கட்டபொம்மன் மட்டுமல்ல, (சுகனின் தத்துவ விலாசத்தின்படி) சே குவேரா, மாவோ, திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், ஜான்சி ராணி என ஒரு பெரிய கூட்டமே எட்டப்பன், கருணா வழியில் நில்லாமல், எதிரிகளுடன் போராடி தனது மக்களை பலி கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், சுகன் ஒன்று மட்டும் புரியவில்லை. கட்டபொம்மனைத்தான் வரலாறு தூக்கி வைத்து கொண்டாடுகிறது; எட்டப்பனை இன்றைக்கு வரைக்கும் விடுதலை செய்யவேயில்லை. சந்தர்ப்பவாதத்திற்கும், துரோகத்திற்கும் உரியவனாகிவிட்ட கருணாவுக்கும் அதே கதிதான் ஏற்படப்போகிறது!

இந்த லட்சணத்தில் 'வாழ்க நீ எம்மான்' வாழ்த்து வேறு! வாங்குன காசுக்கு இவன் ரொம்பத்தான் கூவுறாண்டா கொய்யால!
Dr. V. Pandian
mprajan!
//
அ. மார்க்ஸின் காமெடிகளோ எல்லையில்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன. இனிமேல் அவர் தன்னுடைய பெயரை தலைப்பெழுத்துக்கும் பெயருக்கும் இடையே புள்ளியில்லாமல் எழுதத் தொடங்கலாம்
//

இதை பல மாதங்களுக்கு முன்பே கீற்றில் கருத்து எழுதி அன்றிலிருந்தே அவரை அமார்க்ஸ் என்றே அழைத்து வருகிறேன். அப்படி மற்றவர்களும் அழைத்தால் தான் அவருக்கு உரிய மரியாதையாக இருக்கும்.

மா. லெ. குழுக்கள் எல்லாம் வெட்டிப் பேச்சுக் குழுக்கள்! இவர்கள் எழுதுவதைப் படிப்பதென்பது நேர விரயம்! இவர்கள் இனம் வள்ளுவன் காலத்திலும் வாழ்ந்தது. வள்ளுவன் இவர்களைக் கடியவே ஒரு குறள் படைத்துள்ளார்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க
நன்றி பயவா வினை
Dr. V. Pandian
கிளிநொச்சி வீழ்ந்த உடனேயே புலிகள் மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும், என்று "மாற்றானுக்காக" மலினமாக இறங்க வேண்டாம் எழிலன். 25 வருட கொரில்லா போர் செய்து, படிப்படியாக மரபுவழி ராணுவமாக வளர்ந்து, பலப் போர் வெற்றிகளை ஈட்டி, புலிகளின் பலத்தால் அமைதி ஒப்பந்தம் ஏந்தி, ஆறு வருட காலம், தான் போரில் வென்ற தனது மன்னை ஆண்ட பின்பு, மீண்டும் கொரில்லா யுத்தத்திற்கு மாறுவது இயல்பான காரியமல்ல. புலிகள் தங்களது ராணுவ பலத்தையும் இழக்கவில்லை.

ஆக, நாம் சாட வேண்டியது இந்தியா என்ற அயோக்கிய தேசத்தைத் தான். இந்த ஈவு இறக்கமில்லாத உலகைத்தான்.

ஈழத்தின் இன்றய நிலை, இந்தியாவும், உலகமும் அழிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டன என்பதின் ஒரு அடையாளம் தான்
பாலா
தமிழ் நிலா ரொம்ப சரியாக சொன்னீர்கள்..,
கடைசிவரை தன் இனத்திற்காக போராடிய பிரபாகரன் இவர்களுக்கு கெட்டவன்.. ஆனால் காட்டிக்கொடுத்து கொலைசெய்த கருணா.. அம்மான் ஆகிவிட்டார்.. ராஜபக்சே புத்தர் ஆகிவிட்டார்...
stalinguru
தமிழக சிற்றிதழ் பரப்பில் சில மாதங்கள் முன்புவரை இருந்த புலிகளை தவிர்த்துவிட்டே ஈழ அரசியல் பேசவேண்டும் என்கிற போக்கும்,புலிகளின் போராட்ட முறையில் நிகழ்ந்த தவறுகளுக்கும் ஒரு விதத்தில் காரணியாக அமைந்த,சிங்கள அரச பயங்கரவாதம் உருவாக்கிய சூழலை விமர்சிப்பதை தவிர்க்கும் போக்கும் மறைந்து வெளிப்படையாகவே இன்று புலிகள் மீது அவதூறுகளை பரப்புவதன் மூலம்,சர்வதேச நாடுகள் குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கம் இழைத்த குற்றங்களை மூடி மறைத்து பாதுகாக்கும் நிலை தோன்றி இருக்கிறது.

ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிய புறநிலை மதிப்பீடுகளையோ நேர்மையான விமர்சனங்களையோ கொண்டிராத நபர்களின் நேர்காணல்களை தமிழக சிற்றிதழ்கள் தொடர்சியாக வெளியிட்டு வருவதைப் பார்க்கையில் நம்மால் இந்த முடிவுக்குத்தான் வந்து சேர முடிகிறது.அந்த வகையில் இம்மாத தீராநதி இதழ் சுகனை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது.

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய கேள்விக்கு எல்லோரும் தமிழர்கள் என்று சொல்வது எவ்வாறு படு அபத்தமோ,அவ்வாறே இன்று எல்லோருக்குமான அரசியல் தீர்வு என்பதும்.மகிந்த எவற்றை முன் வைக்கிறாரோ அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு போவதுதான் மதி என்றும்,இயல்பு வாழ்க்கை அபிவிருத்தி இதுவே இன்றைய அரசியலின் பிரதான சவால் என்றும் கிழக்கு மாகாணம் யுத்தத்தின் பிடியிலிருந்து தன்னை புத்திசாலித்தனமாக விடுவித்துக்கொண்டிருப்பதாகவும்
தனது மக்களைக் காக்க சரணடையும் மன்னனை பற்றிய சூழ்நிலை ஒன்றை லா.சா.ரா தனது சிறுகதை ஒன்றில் ஆழமாக சொல்லியிருப்பதாகவும் சுகன் அளிக்கும் பதிலில் இருந்து பலவிடயங்களை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.வரிசையாக அந்த விடயங்களை பரிசீலிப்போம்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மே மாதம் இருபதாம் தேதியோடு மகிந்த நிறைவு செய்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகி விட்டது.மகிந்த எந்த தீர்வுத் திட்டத்தையும் முன்வைத்ததாக தெரியவில்லை.அறுபது ஆண்டுகளாக சிங்கள் ஆளும் வர்க்கங்கள் முன்வைத்ததாகவோ அல்லது நடைமுறைப் படுத்தியதாகவோ எந்த ஒரு தீர்வையும் சுட்டிக்காட்ட இயலாத நிலைதான் இன்று வரை தொடர்கிறது.தவம் இயற்றி மகிந்தவிடம் வரம் பெறுகிற வாய்பை தனக்கானதாக மட்டும் சுகன் வைத்துக்கொள்வதில் நமக்கு ஆட்சேபனைகள் இல்லை. எல்லோரையும் அப்படி செய்ய சொல்கிற வேலையை மட்டும் அவர் நிறுத்திக்கொண்டால் நல்லது.

அமெரிக்கா,இந்தியா,சீனா,பாகிஸ்தான்,ஜப்பான்,ரஸ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வணிக சூறையாடலுக்கும், ராணுவ மேலாதிக்க நடவடிகைகளுக்கும் ஈழ மண்ணை திறந்துவிட்டு மகிந்த கொடுக்கப்போகும் இயல்பு வாழ்க்கை பற்றியும் அபிவிருத்தி பற்றியும் முதலாளித்துவ அடிவருடிகளின் மகிழ்சியை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் என்கிற இடதுசாரிக் கண்ணோட்டம் கொண்ட அமைப்பை சாதிய நோக்கில் புலிகள் அழித்ததாக சரடு விடும்,கம்யூனிஸ காதலரான சுகனுக்கு மகிந்தவின் ஏகாதிபத்திய ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள் மகிழ்சியை கொடுப்பதன் மர்மம்தான் புரிந்துகொள்ள இயலாததாக இருக்கிறது.

அந்த மர்மத்துக்கான பதிலை,மேலும் சில பத்திகளின் பின் ஏகாதிபத்தியத்தின் குறியீடான செல்போன் விளம்பரத்தை கண்டு ஒரு ஈழக்கவிஞன் கொள்ளும் நியாயமான கோபத்தை அந்த கவிஞன் போருக்காகவும், செம்மணிக்காகவும் ஏங்குவதாக கூறி தான் ஒரு அப்பட்டமான ஏகாதிபத்திய அடிவருடிதான் என்று அவரே தந்துவிடுகிறார்.

கிழக்கு மாகாணம் யுத்தத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டிருப்பதாக கூறும் சுகனுக்கு,இந்திய மற்றும் பிற நாடுகளின் வணிக நிறுவனங்கள்,மற்றும் தமிழர் தாயகபரப்பின் தொடர்ச்சியை சிதைக்கும் நோக்கில்
சிங்கள் அரசால் கொண்டுவரப்படும் திட்டங்களின் முற்றுகையில் கிழக்கு மாகாணம் கொண்டு வரப்பட்டிருப்பது மட்டும் தெரியாமல் போனது ஏனோ?

இடதுசாரிய,தலித்திய,மனித உரிமை முகமூடிகளுடன் புலி எதிர்ப்பில் ஈடுபட்டிக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ் ஷோபசக்தி குழுவினை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் செலக்டிவ் அம்னீசியா நாம் அறிந்த விடயம் என்பதால் மற்ற விடயங்களை பரிசீலிக்கலாம்.

ஆயுதங்களை கைவிட்டு புலிகள் சரணடந்திருந்தால் இவ்வளவு மக்களை படுகொலை செய்து புலிகளை பணிய வைக்கும் நிலைக்கு ஏகாதிபத்திய நாடுகளும், ராஜபக்ஸேவும் இறங்கியிருக்க மாட்டார்கள் என்று வன்மத்தை சுகன் வார்த்தைகளாக்கி இருப்பதைத்தான் மக்களைக் காக்க சரணடைந்த மன்னன் பற்றிய அவரது கருத்து காட்டுகிறது.

1995 ஆம் ஆண்டு முதல் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த சாதிய ஒடுக்குதல் நிகழ்வை சுட்டிக்காட்டியதன் மூலம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சாதிய ஒதுக்கலுக்கு எதிராக புலிகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருந்தார்கள் என்பதை நமக்கு மறைமுகமாகவேனும் உணர்த்தியதற்காக சுகனுக்கு நன்றிகளை உரித்தாக்குவோம்.

ஒரு மூன்றாம் உலக நாட்டில் ஜாதி ஒழிப்பு பற்றி ஒரு தேசிய விடுதலை அமைப்பின் திட்டமென்பது,அமைப்பில் சாதியத்தை முற்றாக நிராகரிப்பது,சாதியத்துக்கு எதிரான கருத்தியல் பரப்பலை சமூகத்தில் மேற்கொள்வது, நீண்டகால பொருளாதார நிர்மாண திட்டங்களை மேற்கொண்டு நிலபிரபுத்துவ உறவுகளை ஒழிப்பதன் மூலம் சாதிய நிலவுதலுக்கான வெளியை ஒழிப்பது ஆகியவைகளாகத்தான் இருக்க முடியும்.

அந்த வகையில் புலிகள் சாதி,மத,தாலி மறுப்புத் திருமணங்களை அமைப்புக்குள்ளும் சமூகத்திலும் நடத்திவைத்தும் ஊக்குவித்து வந்திருக்கிறார்கள், கருத்துப் பரப்பலை மேற்கொள்வதில் புலிகள் தீவிரமாக ஈடுபடவில்லை என்பதும் அதில் போதாமைகள் நிலவின என்கிற குற்றசாட்டை ஒப்புக்கொள்ளலாம்.

தேசப்பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நோக்கத்திலேயே கடைசிவரை புலிகள் போராடிக் கொண்டிருந்தார்கள் என்பது மிக தெளிவாக இன்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது. இது சாதிய ஒதுக்கலுக்கு எதிரான விடயங்களில் பொருளாதாரக் கட்டுமானம் செலுத்தும் பாத்திரம் பற்றிய புரிதல் புலிகளுக்கு இருந்ததையே காட்டுகிறது. கட்டளையிட்டோ,சட்டங்கள் இயற்றியோ உடனடியாக தீர்த்துவிடமுடியாத சாதிய ஒழிப்பில், சாத்தியமான ஒரு திட்டம் இத்தகைய கூறுகளையே கொண்டிருக்க முடியும்.

அந்த வகையில் புலிகள் சரியான திசையில் சென்றதையும் தனி ஈழம் தலித்துகளுக்கான சிறையாக மாற முடியும் என்பது போன்ற கற்பனாவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக செயல்ரீதியான பதிலை அவர்கள் வழங்கிக்
கொண்டிருந்தார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

மாறாக கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட சாதி எதிர்ப்பு போராட்டங்கள் ஈழ விடுதலைப் போராலும் புலிகளாலும் முடக்கப்பட்டதாக கூறும் சுகன் முன்வைக்கும் சாதி ஒழிப்பு திட்டம் என்பது எவ்வாறு இருக்க முடியும் என்பதை அவரது வார்த்தைகளில் இருந்தே நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மூன்றாம் உலக நாடுகளின் சாதிய நிலபிரபுத்துவ அமைப்பை பேணிக்காப்பதன் மூலம் தங்கள் பொருளாதார சுரண்டலை பாதுகாத்துக்கொள்ளும் ஏகாதிபத்திய நாடுகளின் திட்டங்களுக்கு வால் பிடிக்கும் மகிந்த அமல்படுத்தப்போகும் அபிவிருத்தி திட்டங்கள் மூலம் சாதிய ஒழிப்பை முன்னெடுக்க முனையும் சுகனின் திட்டம் புல்லரிப்பை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற அப்பட்டமான ஒட்டுண்ணி அரசியல் ஒன்றும் நமக்கு புதியதல்ல,ஏகாதிபத்தியத்தை முதன்மை பகை இலக்காக நிறுத்தாத பெரியார்,அம்பேத்கரின் மிக சிறிய பகுதியை மட்டுமே முன்நிறுத்தி அவர்களின் வர்க்க, தேசிய சார்பு கருத்துக்களை பின்னுக்கு தள்ளி, அப்பட்டமான காலனித்துவ முகமூடியான காந்தியோடு அவர்களை இணைத்து வைப்பதன் மூலம் நவகாலனித்துவ சுரண்டலுக்கு தத்துவார்த்த தளத்தில் வேலை செய்யும் அ.மார்க்ஸின் இலங்கை பிரதிநிதியான சுகனிடம் இது எதிர்பார்க்க கூடிய விடயம்தான.

மலைய மக்களை தமிழ் தேசிய அரசியலுக்கு கொண்டுவர புலிகள் மலையகத்தில் குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியதாக அவதூறு செய்யும் சுகனுக்கு கலவரம் என்கிற பெயரில் சிங்கள பேரினவாதிகள் மலையகத்தில் நிகழ்த்திய படுகொலைகள் தெரியாமல் போவது,தமிழக அகதிகள் முகாமின் அவலத்தை பேசும் அவருக்கு மூன்று இலட்சம் மக்கள் கைதிகளாக அடைக்கப்பட்டிரும் ஈழத்தின் முகாம்களும் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற மனித உரிமை மீறல்களும் பேசப்பட கூடாத விசயமாக இருப்பது எல்லாம் காட்டுவது ஒன்றைத்தான்.

நாம் வாசித்துக்கொண்டிருந்த நேர்காணல் ஒரு தமிழனுடையதோ, தலித்தினுடையதோ ஒரு சாரசரி சிங்களனுடையதோ கூட அல்ல மாறாக, தங்கள் சுயநல வாழ்வுக்காக ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை அடகு வைத்துக்கொண்டு அதன் காரணமாக சிங்கள உழைக்கும் மக்களிடம் ஏற்படும் கோபத்தை தமிழர்கள் மேல் திருப்பிவிட்டு ரத்தப்பலியெடுத்த ராஜபக்ஸேயின் சகோதரனுடையது என்ற முடிவுக்கே வர முடிகிறது.

தமிழக மீனவர்களும் கட்சதீவு மீட்பர்களும் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏன் வலியுறுத்தவில்லை என்று கேள்வி கேட்கும் சுகனிடம் போர் நின்று இரண்டு மாதங்கள் ஆகியும் இப்பொழுதும் ஏன் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்கிற கேள்விக்கு என்ன பதில் இருக்கும்?

மனித நாகரிகம் தோற்றுப்போகும் இடம் தமிழக,ஈழ அகதிகள் முகாம்கள் மட்டுமல்ல,அடிப்படை நேர்மையும் குறைந்தபட்ச மனிதத்துவமும் கூட இல்லாத சுகன் போன்றவர்களிடமே அது மிக மோசமாக தோற்றுப் போகிறது.
kanthan
இந்தக் கட்டுரையையும் விவாதத்தையும் தற்செயலாகப் பார்க்க நேர்ந்ததில் ஒரு சந்தேகம் சுகன் என்பது இந்தப் பாரீசில் வாழும் சுகனா? சந்தேகம் எழக் காரணம் அவர்ர் ஒரு வேர்க் பிர்க் என்று சொல்கிறாரே? இங்கு வந்த நாளிலிருந்து அவர் வேலைசெய்து யாமறியோம் பராபரமே!
அத்தோடு சுகன் ஒரு மாதிரி என்பது கூட அவர் நண்பன் என்ற வகையில் எனக்குத் தெரியும். சரி போக இவர் மாதிரியான அப்பாவிகளிடம் பேட்டி எடுத்து பத்திரிகைகளில் போடுவதா என்னே காமடி இது?
Pukazenthi
எந்த வரலாற்றிலும் இல்லாத பொய்ச் செய்தியை தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார் இந்த கட்டுரையாளர்!

"பரவிக்கிடக்கும் சமணக்காட்டை அழிக்க எட்டாயிரம் சமணர்களை உயிரோடு கழுவேற்றினார்கள் சைவர்கள் அல்லது பார்ப்பனர்கள். வரலாறு அதை பதிவு செய்திருக்கிறது" என்று அப்பாட்டமான பொய்ப் பழியை தமிழர்களின் மேல் போட்டு, தமிழகம் தன் மார்க்கத்துக்கு மாறவில்லையே என்ற வயிற்று எரிச்சல் பட்டு விஷம் கக்குகிறார்.

இந்த கட்டுரையாளர் ஈழத்திலே தமிழருக்கு இழைக்கப் படும் கொடுமைகளை வைத்து , மறைமுகமாக தன்னுடைய மதப் பிரச்சாரத்தை நடத்துகிறார்!.

வெறுப்பு கருத்துக்களைப் பரப்பி எழுத்துப் பாசிசம் செய்து வருகிறார் இந்த கட்டுரையாளர்!

இவ்வளவையும் தொடர்ந்து செய்து வரும் இவர் "இஸ்லாமிய மக்களின் உள்ளூர் எதிரியான இந்துப் பாசிசத்தை எதிர்ப்பதோடு உலக அளவிலான கிறிஸ்தவ பயங்கரவாதத்தையும் நான் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன்" என்று கண் துடைப்பு நாடகம் நடத்தி தன்னை "ரொம்ப நல்லவன்" போலக் காட்டிக் கொள்கிறார்.

ஈழத் தமிழர்களின் துயரத்தை கேடயமாக வைத்து, தன் சொந்த கால்ப்புனர்ச்சியை , காண்டு வெறியை வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட சிலரும் உண்டு இத்தரணியில்.
Dr. V. Pandian
புகழேந்தியின் கலக்கம் தேவையற்றது. சமனர்களைக் கழுவேற்றியதில்லாமல், அமனர்கள் எனப்படும் ஆயிரம் ஆசீவகத்தினரை யானையின் காலால் இடறிக் கொன்றதாகவும் வரலாறுள்ளது. சமனர்கள் எனப்படும் மேல்தட்டு, வணிக வர்க்கம், பிறகு பாரப்பனீயத்தோடு சமரசம் செய்துகொண்டதால் அது பிழைத்தது. ஆனால், அடித்தட்டு மக்களின் தமிழ் ஆன்மீகமான ஆசீவகம், பௌத்தம் போல, முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்பது தான் வரலாறு.

பேராசிரியர் நெடுஞ்செழியன், பேராசிரியர் குணா போன்றோரின் ஆய்வுகளைப் படித்தால் விளங்கும்.
Nanthisvaran
சுகன் என்ற ஒரு கோமாளியின் பேட்டி வந்ததை அறிந்தேன். இனித்தான் வாசிக்கவேண்டும். ஆனால் புகலிடத்தில் இக் கோமாளியின் உள்ளும் புறமும்மான எல்லா தில்லு முல்லுகளையும் அறிந்தவர்களுக்கு இப் பேட்டி கேலிக்குரியதாக மிக கீழான நகைச்சுவையாக தென்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் பணத்தால் எந்த சுயவிளம்பர அரசியலை செய்ய முடியும் என்பதற்கு சுகனின் பேட்டி இன்னொரு உதாரணம். தங்களை பத்திரிகையாளர்களாக காட்டிக் கொண்டு பணத்திற்கும் தண்ணிக்கும் விலைபோகும் ஒரு குறிப்பிட்ட நபர்கள் இருக்கும்வரை சுகன் சோபாசக்தி சுசீந்திரன் போன்றவர்களுக்கு லாபம்தான்.
இதில் மனவருத்தற்திற்குரிய விடயம் என்னவென்றால் அமார்க்ஸின் விழ்சிசதான். பலவருடங்களுக்கு முன் தரமான நிறப்பிரிகை இதழ்லோடு ஆளுமையான நண்பர்கள் கொண்டிருந்த அமார்க்ஸின் விழ்ச்சி இறுதியில் கோமாளிகளோடும் இலங்கை அரசின் தேர்ந்த கைக்கூலிகளோடும் கைகோர்க்கவேண்டிய பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுதான். இவரோடு தற்சமயம் அணி சேர்ந்துள்ள நபர்களை பட்டியலிட்டு பாருங்கள்.
அமார்க்ஸ் எப்போதெல்லாம் எதற்று எதிராக எழுதுகின்றாரோ அதனூடே கூட்டுச் சேரும் சோகமே இதுவரை நடந்துள்ளது.
இவரோடு இப்போது அணிசேர்ந்த நபர்களும் அவ்வாறே உள்ளது என்பது இனிமேல் அமார்க்ஸ் திருந்துவதற்கு சாத்தியமில்லை என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.
viyasan
புலி எதிர்ப்பில் புகழடைந்தவர்களும், புலி எதிர்ப்பால் இலாபமடைந்தவ்ர்களும், புலிகளை அழித்து விட்டதாக அவர்களது எசமானர்கள் மாதக்கணக்கில் விழாக்கள் கொண்டாடிய பின்பும் புலி எதிர்ப்பு புராணம் பாடுவதன் நோக்கம் தங்களது எசமான விசுவாசத்தைக் காட்டுவதற்காகத் தான்.

இவர்கள் உண்மையில் தமிழர்களாக இருந்தால் அல்லது ஈழத்தமிழினத்தின் நலன்களின் அக்கறையுள்ளவர்களாக இருந்தால், இன்று முள்ளுக்கம்பிகளுக்குப் பின்னால் முழி பிதுங்கிக் கொண்டு நிற்கும் ஈழத்தமிழ்ச் சகோதரர்களுக்காகக் குரல் கொடுத்திருப்பார்கள் அது தான் இன்று உலகத்தமிழர்களின் முன்னாலுள்ள முக்கியமான பிரச்சனை. ஆனால் இந்த புலி எதிர்ப்பாளர்கள் முகாம்களில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களை பற்றிப் பேசுவதற்குபதிலாக இன்னும் தொடர்ந்து புலி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதற்குக் காரணம், தமிழர்களை அடைத்து வைத்திருப்பவர்கள் இந்த புலி எதிர்ப்பாளர்களின் எசமானர்களும், கங்காணிகளும் தான்.

ஈழத்தமிழர்களின் பிணங்களின் மீது நின்று இலங்கையின் தேசகீதம் பாடும் இழிபிறப்புகளும் ஈழத்தமிழர்கள் மத்தியில் இன்னும் இருப்பது தான் ஈழத்தமிழனின் சாபக்கேடு.
மகி தம்பி பிரபாவின் தம்பி
கேணல் கருணா மட்டும் அந்த நிலைப்பாட்டை எடுக்காதிருந்தால்
இன்று ஏற்பட்டுள்ளதைவிட பேரழிவு ஏற்பட்டிருக்கும்,
மேலும் ஒருவருடம் யுத்தம் நீடித்திருக்கும் .//

என்ன இவரு நம்ம ஊரு ஜோசியகாரரா ...
இலங்கை அரசியல் நிலைமைகளை பற்றி தோழர் .சுகன் சொன்ன விஷயங்கள் அப்படியே புல் அரிக்கிறது ....அநியாயமாக ஒரு விடுதலை போராட்டத்தை தன சுய லாபத்திற்க்காக எதிரியிடம் காட்டியும் ,கூட்டியும் கொடுத்து நசுக்கிய கருணா இவர்களுக்கு எம் மான் ஆகிவிட்டார் என்னும் போதே தெரிகிறது ....இவர்களது யோக்கியதை ....நண்பா சுகன் போய் மகிந்தவை புகழ்ந்து பாட்டு பாடு எதாவது பரிசு கிடைக்கும் .......
ஆனால் உங்களுக்கு புலிகளையும் ,புலிகளின் தலைமையையும் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை ,அவர்கள் அடித்தவனின் காலை நக்கி அவனிடம் சமாதானம் பேசுபவர்கள் இல்லை ...திருப்பி தன் மூச்சு உள்ள மட்டும் எதிர்த்து அடிப்பவர்கள் ....

எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் .....அன்று ஈழத்தில் உங்களுக்கும் இடம் உண்டு ,ஆனால் உங்கள் புத்தியை சரிசெய்துகொண்டு வாருங்கள்
sugan kanagasabai
தோழர் மகி,
நலம்தானே!
வீட்டில் எல்லோரும் நலமா,
கடைசியாக என்ன படம் பார்த்தீர்கள்,கந்தசாமி பார்த்தாச்சா?

இதை உண்மையாகத்தான் கேட் கிறேன்!
சினிமாக்கண்ணோட்டத்தில் ஈழப்போராட்டத்தையும் பார்ர்க்கும் மனநிலை ஒருசிலரைத்தவிர அனேகமாக தமிழ்நாட்டுச் சகோதரர்கள் அனைவருக்கும் உண்டு.
நீங்கள் அப்படி இல்லை என்ற அறிதலில் மட்டுமே பதில் சொல்லுகிறேன்!

கேணல் கருணா அந்த நிலைப்பாட்டிற்கு வருவதற்கு கருணாவின் மனவிருப்பு மட்டுமே காரணமல்ல!
அவர் அப்படி வரும்போது30 வயதிற்குக் குறைந்த 35,000 விதவைகள் ,பார்ப்பவரில் பாதிப்பேர் அங்கவீனர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் அவர் பிரதேசமான கிழக்குமாகாணத்தில் இருந்தார்கள்.
அநாதரவாக விடப்பட்ட பிரதேசம் அது.
அவருக்கு வேறு வழி இருந்திராது.
வடமாகாண யாழ்ப்பாணத்திலுருந்து அனேகமாக பாதிப்பேர் மேற்குலகிற்கு வந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் அவர் சமாதானப் பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு இவற்றிற்கு புலிகளின் பொறூப்பாளர் மட்டுமல்ல கிழக்கு மாகாணம் முழுமைக்கும் பதில் சொல்லவேண்டியவராயிருந்தார்.
எது நடக்க இருந்ததோ அது நடந்தது!
இந்த நிலையைப் புரிந்துகொள்ள கீழே படியுங்கள்!;

இலங்கைப் பயணம் - ஜுலை 2009

வன்னியில் தமிழ் மக்களுக்கு புலிகள் என்ன செய்தார்கள்?: அகதியாகியுள்ளவர்களின் அவலக்கதை

ஆஸ்திரேலியாவிலிருந்து நடேசன்

கொழும்பிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு வாகனமொன்;றில் புறப்பட்டுச்சென்றோம். அனுராதபுரம் கடக்கும்வரை எங்கள் பிரயாணம் சுமுகமாக இருந்தது. வழியில் எதுவித இராணுவ செக்கிங்கும் இல்லை. தம்புள்ளையில் நாங்கள் காலை உணவை சாப்பிட்டோம் மதவாச்சியை அடையும் முன்பே வழியெங்கும் இராணுவத்தினரை காணமுடிந்தது. அவர்கள் எமது வாகனத்தை நிறுத்தி விசாரிக்க ; ஆரம்பித்ததும்,
.எங்கள் பாஸ்போட்டை தயாராக வைத்திருக்கத ்தொடங்கினோம். கொழும்பில் ஒவ்வொரு பயணத்தின் போதும் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இராணுவபொலிஸாரால் தடுத்து விசாரிக்கப்பட்டோம் ஆரம்பத்தில் சற்று எரிச்சல் மனத்துக்குள் ஏற்பட்டாலும் பின்பு அவர்கள் தங்களில் கடமையை சரியாக செய்வதைப்பார்த்து மதிப்பு வந்தது. மிகவும் மரியாதையாகவும் தொழில் முறையாகவும் நடந்து கொண்டார்கள்.

மதவாச்சியில் நான் மூன்று வருடங்கள் முன்பு வாழ்ந்திருக்கின்றேன்;. இப்பொழுது அந்தப் பகுதி முற்றாக அடையாளம் மாறிவிட்டது. பெரும்பாலான பிரதேசம் இராணுவமயமாகிவிட்டது. அந்தப்பாதையால் வந்த சகல வாகனங்களும் சோதனைக்காக நிறுத்தப்பட்டு, பயணிகளுடன் அவர்களின் உடைமைகளும் கீழே இறக்கப்பட்டு பரிசோதித்து மீண்டும் ஏற்றினார்கள்.

இந்தச் சோதனைக்கு நாங்களும் எங்கள் வாகனமும் இலக்காகினோம். வெளிநாட்டு அமைச்சின் வாகனமாக இருந்தபோதிலும் எங்கள் வாகனத்துக்கு எந்த சலுகையும் இல்லை. சாதாரண மக்கள்போலத்தான் நாங்களும் நடத்தப்பட்டோம்.

எங்கள் வாகனத்தின் உள்பகுதி மட்டும்ல்லாது, அது ஒரு கிடங்குக்கு மேல் செலுத்தப்பட்டு செசியின் கீழ்பகுதியும் பரிசோதிக்ப்பட்டது. கமராவை எடுத்துச் செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள அதிகாரியை தொடர்பு கொண்டபோது எங்களுக்கு கமராவை எடுத்து செல்ல அனுமதி கிடைத்தாலும் படங்கள் எடுக்கக்கூடாது என்ற உறுதி மொழி எங்களிடம் இருந்து பெறப்பட்டது
மதவாச்சியில் பரிசோதனைகள் முடிவதற்கு ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஆகி மதியமாகிவிட்டது. மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி பிரயாணம் செய்யுபோது நூறுமீட்டர்களுக்கு சில இராணுவத்தினர் பாதையின் இருமருங்கும் முள்பற்றைகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். இந்த இந்தவீதியில் 80-83 ஆண்டுகளில் நடு இரவை கடந்த பின்பும் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறேன்.
ஒருநாள்; போட்டார் சைக்கிளை ஓட்டமுடியாமல் தள்ளிக்கொண்டு சென்றதும் நினைவுக்கு வந்தது.

நடந்த போர் மிகவும் உக்கிரமானது. இரண்டு பகுதியினரும் வாழ்வா சாவா எனும் நிலையில் யாராவது ஒருபகுதி அழிந்தால்தான் போர் முடியும் என்ற நிலையில் போராடி இருக்கிறார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகள் தரப்பில் சிறுவர்கள் இணைக்கப்பட்டது போல் இலங்கை இராணுவத்திலும் பல மீசை முளைக்காத சிறுவர்கள் பலர் இருப்பதாக எனக்குத் தென்பட்டது. இவர்களுக்கு வயது பதினெட்டாக
இருக்கலாம் ஆனால் பச்சைப்பாலகர்போல் எனது கண்ணுக்கு தெரிந்தார்கள். உலக சரித்திரத்தில் இழப்பை மட்டுமே நிகரலாபமாக பெற்றது மட்டுமல்ல முழு சிங்கள மக்களையும் இராணுவ மயப்படுத்திய போரை நடத்தியதற்கு இலங்கைத்தமிழர் பெருமை கொள்ளமுடியும் என்ற எண்ணம் ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

வவனியாவில் இடைத்தங்கல் முகாம்களுக்கு செல்வதற்கு முன்பாக இந்த முகாம்;களின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பவரான பிரிகேடியர் இலக்ஸ்மண் பெரேராவை தேடிச்சென்றோம். இவரிடம் பலகேள்விகளை கேட்பதற்கு தயாரகவும் இருந்தோம். நாங்கள் கொழும்பில் நிற்கும் போது சுமார் 35 பேர் மூளைக்காய்ச்சலினால் முகம்களில் இறந்திருப்பதாக ஒரு அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் மூலம்
கேள்விப்பட்டிருந்தோம். இதுசம்பந்தமாக முகாம்களில் வேலை செய்யும் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுடனும் தொடர்பு கொண்டதுடன் அமைச்சர் ஒருவரிடமும் இதைப் பற்றி விசாரித்திருந்தோம். அத்தோடு இங்கிலாந்து பத்திரிகை ஒன்றில் 1500 பேர் இறந்தார்கள் என்ற சேதியும் எமது மனதில் குடைந்து கொண்டிருந்த விடயமாகும். முகாம் பொறுப்பதிகாரி முகாம்களில் நடந்த
இறப்புகள் பதிந்த பதிவு பத்தகத்தை எடுத்து காண்பித்து இதுவரையில் முகாம்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 800 க்கும் குறைவாக இருக்கிறது என்று கூறினார். இவரது கூற்று எமக்கு ஆறுதல் தந்தாலும் இதே விடயத்தை நாங்கள் சந்தித்த வவுனியா அரசாங்க அதிபரிடமும் அதே வேளையில் முகம்களில் வேலை செய்யும் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் விசாரித்து உறுதிப்படுத்தினேம்.

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் பல நிறுவனங்கள் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் மூலம் வேலை செய்கின்றன.. இப்படிப்பட்ட 54 உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் இங்கு வேலை செய்கின்றன. வுவனியாவிலும் மற்றும் சுற்றுப் பகுதியிலும் உள்ள உறவினர்கள் இங்கு வந்து பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகாம்களில்
விரும்பத்தகாத விடயங்களை அரசாங்கம் எளிதில் மறைக்கமுடியாது.

நாங்கள் அங்கிருந்து வவுனியா கச்சேரிக்குச் சென்று அரசாங்க அதிபரான திருமதி சார்ள்ஸ் அவர்களைச் சந்தித்தோம். இதற்கு முன்பும் அவுஸ்திரேலியாவில் இருந்து அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன். இந்தப் பெண்மணி மிகவும் மரியாதைக்குரியவராகவும் தோற்றம் அளித்தார். ஏழு நாளும் வேலைசெய்யும் இவரது வார்த்தைகள் தங்கு தடையின்றியும் தன்னம்பிக்கையாகவும் வெளிவந்தன.

சொந்த நாட்டைவிட்டு ஓடி பல பொய்களை உரைத்து வாழ்வும் வசதிகளையும் பெற்ற பின்பு தாங்கள்தான் தமிழ் ஈழத்தின் தாய்க்;குலம் எனக் கூறி வருடத்துக்கு சிலதடவை மஞ்சள்சேலை கட்டும் பலரையும் பார்த்திருக்கின்றேன். அத்துடன் இரவு நேர வானொலிகளில் விடுதலை வீராவேச வசனங்களை அள்ளித் தெளித்துவிட்டு குறட்டை விட்டு தூங்கி விடுபவர்களையும் அறிந்துள்ளேன்.

புலம்பெயர் சூழலில் இப்படியான தாய்க்குலங்கள் நிறைந்த சமூகத்தில், நெருக்கடியான காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் துணிவாகவும் மிகத்திறமையாகவும் பணியாற்றும் திருமதி சார்ள்ஸ் போன்றவர்களே எமது சமுதாயத்தில் கௌரவிக்கப்படவேண்டியவர்கள்.

போர் நடந்து கொண்டிருக்கும் போது பல தடவை ஐக்கிய நாட்டு தொண்டு நிறுவனங்களை சந்தித்து பெருந்தொகையான மக்கள் அகதிகளாக வருவார்கள் அதற்கு ஆயத்தமாக முகாம்களை தயார் படுத்த வேண்டும் என தாங்கள் கேட்டதாகவும் ஆனால் அவை அதைச் செய்யவில்லை. போர் இப்படி சடுதியாக முடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை என திருமதி சார்ள்ஸ் கூறினார்

அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வவுனியா கலாச்சார நிலையத்துக்கு சந்திக்கச் சென்ற போது வழி எங்கும் அவர் தேர்தல் சுவரொட்டிகளில் அவர் காட்சி தந்தார். மதியம் இரண்டு மணியாகியதால் அமைச்சரின் அலுவலகத்தில் மதிய உணவு தரப்பட்டது. மீன் குழம்பும் சோறும் அந்தநேரப் பசிக்கு அருமையாக இருந்தது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நானும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே அறிமுகமானவர்கள். சாதாரண மிருகவைத்தியராக இந்தியாவுக்கு இலங்கைநெருக்கடியிலிருந்து தப்பி இந்தியாவில் தமிழகம் சென்ற என்னை தமிழர் நல மருத்துவ நிதியத்தின் செயலாளராக 84 இல் பிரேரித்ததன் மூலம் என்னை தமிழர் அரசியலில் ஞானஸ்த்தானம் செய்து வைத்தவர் டக்ளஸ் தேவானந்தா..

மதிய உணவை உட்கொண்டவாறே நாங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் “ இந்தத் தேர்தலை அரசாங்கம் வைத்திருக்கக் கூடாது. இது மிகவும் விரைவில் வந்துவிட்டது. மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து முகாம்களில் இருக்கும்போது நீங்கள் ஒரே ஒரு தமிழ் அமைச்சர் அமைச்சர் மட்டும்தான் உள்ளே சென்று மக்களைப் பார்த்து அவர்களின் குறைநிறைகளைப் பற்றி அரசாங்கத்துடன் பேசும்
வாய்ப்புள்ளவர்;. தேர்தல் பிரசாரத்தில் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நீங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் இடம் பெயர்ந்த மக்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்” என்றோம். தமிழர்கள் மத்தியில் அரசியல்தலைமை ஏற்படுத்த இந்தத் தேர்தல் வாய்ப்பளிக்கும் என்பது அவரதும் அவர் சார்ந்தவர்களதும் பதிலாக இருந்தது.

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கி பிரயாணம் செய்தபோது வழியெங்கும் இராணுவத்தினர் தொடராக துப்பாக்கிகளுடன் நின்றார்கள். சிங்கள இனத்தின்; முழுச் சக்தியும் இந்தப்போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான ஒரு இராணுவ தயார் நிலைக்கு கொண்டு வருவதற்கு விடுதலை பலிகளின் பன்முகத்தன்மையான தாக்குதல்கள் வழிவகுத்துள்ளது. இப்பொழுது விடுதலைப்புலிகள் காற்றில்
நீராவி போல் மறைந்து விட்டார்கள் ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் யுத்தம் இல்லாத நாட்டில் உள்ள இராணுவமாக மீண்டும் திரும்புவது பாரிய சவாலாக இருக்கும்.

இந்தப்பிரதேசம் கிடுகால் வேயப்பட்ட கொட்டில்களும் பிளாஸ்ரிக் கூடாரங்களும் நிறைந்த வெளியாக மன்னார்- மதவாச்சி வீதியின் இருமருங்கும் காட்சியளித்தது. மனிதர்கள் ஆங்காங்கு கூட்டமாக வெட்டாமல் விடப்பட்ட மரங்களின் கீழ் நின்றார்கள். சிறுவர்கள் விளையாடிக் கொண்டு நிற்பது எனது கண்களுக்குதெரிந்தது. எண்பதுகளில் சென்னையில் நான் பார்த்த சேரிகளை நினைவுக்கு
கொண்டுவந்தது. இங்கு பிளாஸ்ரிக் கூடாரங்களும் கொட்டில்களுக்கு முன்பாக உள்ள திறந்த வெளியும் வித்தியாசமாக இருந்தது.

செட்டிகுளத்தைச் சுற்றிய பிரதேசம் மிகவும் அடர்ந்த காடுகளைக் கொண்டது. மதவாச்சியில் வேலை செய்த காலத்தில் சிங்கள நண்பர்களோடு பன்றி வேட்டைக்கு வரும்போது இந்த காடுகளுக்குள் பல இடங்களில் நிமிர்ந்தபடி நடந்துசெல்ல முடியாது. மரக்கிளைகளை வெட்டாமல் செல்வதாயின் தவழ்ந்தபடிதான் செல்ல வேண்டும்.

இந்தக் காடுகள்தான் இலங்கை அரசுடன் போராட ஆரம்பித்த தமிழ் இளைஞர்கள் 70 களில் கரந்துறைந்த பிரதேசம். இங்குதான் இன்ஸ்பெக்டர் பஸ்ரியாம்பிள்ளையும் அவரது சில சகாக்களும் கொலை செய்யப்பட்டனர். இதேபிரதேசத்தில் தமிழ் மக்களை அகதிகளாக வைத்திருப்பது என்பது முப்பத்தைந்து வருடங்களுக்குப்பின்னர், ஒரு முரண்நகையான விடயம் என்பது தெரியவில்லையா?

கடைசிப்போரில் முள்ளிவாய்க்கால்; பகுதியில் இருந்து உயிர் தப்பி வந்தவர்கள் தங்கியிருந்த முகாமைப் பார்க்க வேண்டும்; என நாங்கள் கேட்டுக்கொண்டோம் .அவர்களைப் பார்க்கச் செல்லும் வழியில் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட கதிர்காமர் முகாமுக்குச் சென்றோம்.

டொக்டர் நரேந்திரன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், செல்லையா மனேரஞ்சன் ஆகிய மூவரும் இந்த ஆண்டு (2009) ஏப்பிரல் முதல் வாரத்தில் இந்த முகாமுக்குச் சென்றிருந்தார்கள். இந்த முகாம் பலவசதிகளைக் கொண்டதாக ஒரு கிராமம் போல் காட்சி அளித்தது. இராணுவத்தினர் இங்கும் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

நாங்கள் அங்கே சென்றதும் எங்களைச் சுற்றி மக்கள் கூடினார்கள். மக்களுடன் பேசுவதற்காக ஆரம்பித்ததும் ஆறுபேர் தொடர்ச்சியாக தங்களுக்கு நடந்தவிடயங்களைப் பற்றி கூறத்தொடங்கினார்கள். இவர்களது சகல குற்றச்சாட்டுகளும் விடுதலைப்புலிகளுக்குஎதிராகவே இருந்தன. இவர்கள் குரல்களில் இருந்த ஆவேசம் அழுகை ஆத்திரம் என்பன இவர்கள் இராணுவத்தால் இப்படி விடுதலைப்புலிகளின்
மீது குற்றம் கூறும்படி பழக்கப்பட்டவர்களாக எனக்கு தோன்றவில்லை. மேலும் இவர்கள் கூறிய சம்பவங்கள் சிலவற்றிற்கு நடந்த நாட்கள் கிழமை எனக் குறிப்பிட்டார்கள்.

இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளில்; சில:-

அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் நடேசனும் கடற்படைக்கு பொறுப்பான சூசையும் இளவயதான பிள்ளைகளைப் பிடிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல பெற்றேர்கள் இதற்கு மறுத்த போது அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். சில பெற்றோர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஓரு தகப்பன் சொன்னார்:- தனது படித்த மகளுக்கு வங்கியொன்றில் கொடுக்கப்பட இருந்த வேலை விடுதலைப்புலிகளின்
வற்புறுத்தலின் பேரில் இறுதி நேரத்தில் அவர்கள் சார்ந்த ஒருவருக்கு கொடுக்கப்பட்டதாம் தனது பதினாறு வயது மகனை இயக்கத்துக்கு அழைத்து சென்று தேவிபுரத்தில் இரண்டு நாள் வைத்திருந்து விட்டு ஏதோ காரணத்திற்காகப் புலிகள் சுட்டுக்கொன்றதாகவும் கண்ணீர் சொரிய அந்தத்தந்தை சொன்னார்.

கிளிநொச்சி அருகேயுள்ள தர்மபுரத்திலிருந்து விடுதலைப்புலிகள் பின் வங்கும் போது அங்குள்ள தங்களின் உணவுக் குதத்தை எரியூட்டினார்கள். இதே வேளையில் மக்கள் உணவற்றிருந்தார்கள். இச்சம்பவத்தின்போது மக்கள் உணவை மீட்பதற்காகப்; போராடியபோது சிலர் அந்த நெருப்பில் எரிந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆட்சேர்ப்புக்குப் பயந்த பல பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகள், பக்குவப்பட்டதும் திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள்;. இதனால் பல குழந்தைகள் குழந்தைகளை பெற்றிருப்பதை காணமுடிந்தது..

சில இளம் பெண்கள் திருமணமாகி கர்ப்பவதியாகியிருப்பின் தங்கள் இயக்கத்தில் சேர்ப்பதற்காக புலிகளே கிளிநொச்சி வைத்தியசாலையில் கர்ப்பச்சிதைவை செய்திருக்கிறார்கள். இப்படிகருச்சிதைவின்போது இறந்தயுவதிகளை வீராங்கனைகளாக வீர மரணம் அடைந்ததாக பெற்றோரிடம் பொய் சொல்லி சடலத்தை கொண்டுவந்து கொடுப்பார்களாம்.

சாமத்தியப்பட்ட பெண்பிள்ளைகளை வீட்டின் பின்னால் கூடுபோல் கட்டி அதற்குள் வைப்பது யாழ்ப்பாண தமிழ்மரபு. அந்த கூட்டுக்குள் புகுந்த புதுக்குடியிருப்பு அரசியல் துறை பொறுப்பாளர் இளம் பரிதியின் ஆட்களினால் ஒரு சிறுமி பக்குவப்பட்டு ஏழே நாளில் இயக்கத்திற்கு கடத்தி செல்லப்பட்டதாக ஒருவர் சொன்னார்.

வலைஞர்மடத்தில் உள்ள தேவாலயத்தில் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக கத்தோலிக்க மத குருமாரிடம் பொறுப்பு கொடுத்;திருந்தவர்கள் சொன்னது:-. மார்ச் மாதம் இருபத்தினான்காம் திகதி விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் இளம்பரிதியின் ஆட்கள் வந்து அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரை தள்ளி விழுத்திவிட்டு அவரை பயமுறுத்தி பிள்ளைகளை பலாத்காரமாக கடத்திச் சென்று விட்டனர்;.
இளம்பரிதிக்கு தகவல் கொடுத்து வரவழைத்தது மற்றைய பாதிரிமார்கள்தான் என்பது எங்களுக்குத் தெரியும்.

இந்த சம்பவத்தின் பின்பு இந்தத் தேவாலயம் பீரங்கியால் தாக்கப்பட்டது
விடுதலைப்புலிகளின் வரிக்கொடுமை தாங்க முடியாதது. கத்தரிக்காய் தேங்காய் எல்லாவற்றிற்கும் 10 வீதம் வரி போடுவார்கள். நாங்கள் பத்தாயிரம ரூபாய்க்கு ரைப்ரையிட்டர் வாங்கியபோது 1000 ரூபாய்; வரி போட்டார்கள்.

விடுதலைப்புலிகளிடம் இருந்து பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க நிலத்தில் கிடங்குகளை கிண்டி அவர்;களை உள்ளே இறக்கி விடுவோம். புலி;கள் பிள்ளை பிடிக்க வரும்போது அதன் மேல் இருந்து விடுவோம். சிலவேளையில் அதிக நேரம் விடுதலைப்புலிகள் நின்று விசாரித்ததனால் சுவாசிக்க முடியாமல் பிள்ளைகள் இறந்துவிட்ட கொடுமையும் நடந்திருக்கிறது.

இந்தக்காம்பில் இருப்பவர்களின் மற்றுமொரு குற்றச்சாட்டு, லண்டன் ஐ பி சி பற்றியது. இந்த வானெலி யுத்தகாலத்தில் மட்டுமல்ல யுத்தம் முடிந்த பின்பும் பொய்ப்பிரசாரங்களைச் செய்து மக்களை குழப்புவதாக எங்களிடம் கூறினார்கள்.

இந்தக்காம்பை சேர்ந்தவர்கள் தேக ஆரோக்கியமாகவும் இருந்ததுடன் அரசாங்கத்துக்கு நன்றி கூறியதும் வியப்பானது. ஒருவர் தான் வரும்போது உடுத்த உடையோடு வந்ததாகவும்., இ;ப்பொழுது ஐந்து சோடி உடைகளுடன் இருப்பதாகவும் சொன்னார்.

நாங்கள் வலயம் 5 என்ற முகாமுக்கு சென்றோம். இந்த முகாம் இறுதியாக போர ;நடந்த இடத்தில் இருந்த மக்களை கொண்டுள்ளது. இந்த முகாமிற்கு நாங்கள் சென்ற போது மக்கள் எண்ணிக்கை கணக்கீடு நடந்து கொண்டிருந்தது. பலரை வெளியே காண முடியவில்லை. அந்த முகாமில் உள்ள சிறிய ஆஸ்பத்திரிக்கு எங்களால் சென்று பார்க்க முடிந்தது. அங்கே இருந்த மருந்துகளும் வைத்திய வசதிகளும் திருப்திகரமாக
இருந்ததை அவதானிக்க முடிந்தது. கடும்நோயால் வருந்தும் பெண்ணொருத்தியை வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் அவதானித்தோம். அங்கு தன்னார்வமாக நோயாளர்ளை கவனித்துவரும் பெண் தனக்கு எது வித உபகார சம்பளமும் தருவதில்லை என எங்களிடம் குறைபட்டுக் கொண்டாள்.

இந்த முகாமில் தண்ணீர் பிரச்சினை பொதுவாகத் தெரியவில்லை. பலர் குழாய்க்கிணறுகளில் இருந்து வரும் தண்ணீரை வாளிகளில் எடுத்து குளிப்பதையும் பலர் வரிசையாக குடங்களுடன் தண்ணீருக்கு காத்து நிற்பதையும் பார்த்தேன்.

;இங்கு குழந்தைகள் பெண்கள் மெலிந்து ஆரோக்கியம் குன்றிய நிலையில் இருந்தார்கள். ஒரு சிறுவனது கையை பிடித்து பார்த்தபோது சிரங்குப்புண் இருப்பது தெரிந்தது. இதைப்பற்றி விசாரித்தபோது எங்களோடு வந்த இராணுவ அதிகாரி, “ இது மட்டுமல்ல பொக்கிளிப்பான் செங்கமாரி போன்ற நோய்களோடு நடக்க முடியாமல்தான் இந்த மக்கள் எங்களிடம் வந்தார்கள். அவர்கள் இருந்த நிலையை நீந்கள் அந்த
நேரத்தில் பாத்திருக்க வேண்டும்” என பதில் கொடுத்தார்.

அச்சமயம்; ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த டொக்டர் நரேந்திரன் ‘இதைக் கேளுங்கள்’ எனக் கூறி என்னை அழைத்தார்.

மெலிந்து வாடிபோய் இருந்த முப்பது வயதிற்கும் கீழ் உள்ள ஓரு பெண் ஆறு மாத குழந்தையை தூக்கி வைத்திருந்தாள். எத்தனை குழந்தைகள் என்ற கேள்விக்;கு ஆறு குழந்தைகள். அது மட்டுமல்ல எனது சகோதரியும் கணவரும இறந்து விட்டதால் அவர்களின் நாலு பிள்ளைகளை நான் வளர்க்கிறேன் என்றாள்

இந்தப் பெண் முகாமில் இருந்து வெளியேறும்போது இவளது குடும்பத்தின் நிலை என்ன என்ற கேள்வி எனது மனதில் எழுந்தது.

இந்த முகாமின் ஒருபகுதியில் பெரிய குடிசைகள் தொடர்ச்சியாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் குடிசைகளுக்கு சிறிது தூரத்தில் கழிப்பறைகளும் மற்றைய முகாம் கழிப்பறைகளிலும் பார்க்க பெரிதாக இருந்தன. அவற்றின் கதவுகள் திறந்தபடி இருந்ததால் அவைகள் மிக சுத்தமாக இருப்பது தெரிந்தது.

இதைப்பற்றி நாங்கள் கேட்ட போது இது பிராமணர் வசிக்கும் குடிசைகள். இவை அவர்களுக்கான கழிப்பறைகள் என்றார் பிரி;கேடியர் லக்ஸ்மண் பெரேரா.

அவர்களது குடிசைகளை நோக்கிச் சென்ற போது குடிசைகளுக்கு அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களிடம், எங்களுடன் வந்திருந்த சிவநாதன், “நீங்கள் ஏன் கடைசிவரையும் அங்கே நின்றீர்கள்?”- என்று கேட்டபோது, “நாங்கள் அதுக்குள் அகப்பட்டுக் கொண்டோம்” என்றார்கள். அத்துடன் தங்கள் மத்தியில்; பலாத்காரமாக குழந்தைகளை இயக்கத்திற்கு சேர்க்கும் செயல்களில் புலிகள் ஈடுபடவில்லை
என்றும் கூறினார்கள்; புலிகள் மட்டுமல்ல இலங்கை இராணுவமும் பிராமண சமூகத்தினரை கௌரவமாக நடத்தியிருப்;பதை அறியமுடிந்தது..

84 -87 இடைப்பட்டகாலத்தில் இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மத்தியில் சுமார் மூன்று வருடங்கள் வேலை செய்துள்ளேன். இருநாறுக்கு மேற்பட்ட அகதி முகாங்களுக்கு பல தடவைகள் சென்றிருக்கிறேன். அப்பொழுது என் மனதில் உற்சாகம் இருந்தது. பல மைல் தூரங்கள் அகதி முகாங்களுக்கு மதிய வெய்யிலில் நடந்து சென்றிருக்கின்றேன். அந்த முகாம்;கள் மக்கள் சில நாட்கள்
மட்டும் தங்குவதற்காக தமிழ் நாட்டு கரையோரங்களில் அமைக்கப்பட்ட புயல் பாதுகாப்பு மண்டபங்கள். அவையோடு ஒப்பிடும் போது இவை எவ்வளவோ தரமானவை.

உற்சாகத்துடன் ஓடி ஓடி வேலை செய்ய முடிந்தது. ஆனால் வவுனியா- செட்டிகுளம் இடைத்தங்கல் அகதி முகாம்களை பார்த்துவிட்டு திரும்பும்போது மனதில் கனதியான சோகம்தான் நிறைந்திருந்தது. இந்த முகாங்களுக்கு மீண்டும் வருவது என்பது என்னால் முடியாத காரியமாக இருக்கும்.

ஏன்?

ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தை இளம்பராயத்தில் பார்த்த எனக்கு இப்போது அந்த செட்டிகுளப் பிரதேசம் போரட்டத்தின் ஈமக்கிரியைகள் நடைபெறும் பிரதேசமாக தெரிவதனாலா?

அல்லது. எமது மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் துர்ப்பாக்கிய நிலையா?

குரங்கின் கையில் சிக்கிய பூமாலையாக ஈழ விடுதலைப் போரட்டம் போய் விட்டதாலா?எனது நெஞ்சில் முள்ளாக உருத்திய கேள்விகளுக்கு விடை கிடைக்கவி;ல்லை. கனத்த இதயத்துடன் கொழும்பு நோக்கி புறப்படும்போது, சமூகத்தில் கேள்விகள் கேட்காது முட்டாளாக அந்த சமூகத்தின் போக்கில் செல்வதில் வரும் சுகத்தை தவறவிடுகிறேன் என்ற சுயபச்;சாதாபம் சிறிதாக நெஞ்சின் ஓரத்தில் குமிழிவிடுவது
தெரிந்தது.

நன்றி; உதயம்
aaruran
இந்த சுகன் கனகசபை என்பவரை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போன்றது தான் உவரும், உவரிட உதயம் பத்திரிகையின் கட்டுரையும். இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, சுகனும் இலங்கை அரசின் கங்காணிகளில் ஒருவர் தான்.

இந்த 21ம் நூற்றாண்டுத் தமிழ்க்கங்காணிகளுக்கு வேலை தமிழ்த்தேசியத்தைக் கொச்சைப்படுத்துவதும், விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை இழிவு படுத்துவதும், இலங்கை அரசுக்கு ஆள்பிடித்துக் கொடுப்பதும், மகிந்தாவைப்புகழ்வதும் தான். சோற்றுக்காக தமிழினத்தை மகிந்தவின் அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் சிலரால் நடத்தப்ப்டுவது தான் இந்த உதயம் பத்திரிகை(இணையத்தளம்).

இலங்கை அரசு, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கோ, நடுநிலையான மனிதவுரிமையாளர்களுக்கோ அல்லது அமெரிக்காவுக்குக் கூட தமிழர்களை அடைத்திருக்கும் முகாம்களைப் பார்வையிட அனுமதிப்பதில்லை, ஆனால் இந்த ஐந்து தமிழ்க்கங்காணிகளுக்கும் Noel Nadesan (Australia) , Dr.Rajasingham Narendran (Middle East), Mrs. Rajeswari Balasubramaniam (U.K) , Manoranjan Selliah (Canada), Rajaratnam Sivanathan (Australia) இலங்கை முழுவதும் சிங்கள அரசின் பாதுகாப்புடன், பணத்துடனும் பயணம் செய்யவும், முகாம்களுக்குப் போய் அங்கு அல்லல் படும் தமிழர்களைக் கண்குளிரப் பார்க்கவும் இலங்கை அரசு அனுமதியளித்தது.

இதெல்லாம் சிங்கள அரசின் பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான், அவர்களும் இலங்கை அரசின் உத்தரவின்படி அரசுக்குச் சார்பாக ஜூலை 2009 இல் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். கீழேயுள்ள இணைப்பைப் பார்க்கவும்.

இவர்களைப் போன்ற தமிழ்க்கங்காணிகளைத் தவிர, எந்த உணர்ச்சியுள்ள தமிழனும், அகதி முகாம்களில் முள்ளுக்கம்பிகளுக்குப் பின்னால் எந்தவித சுதந்திரமும் இல்லாமல் முழிபிதுங்கிக் கொண்டிருக்கும் தமிழ்க்குழந்தைகளைப் பார்த்து விட்டு வந்து, மகிந்தவைப் புகழ மாட்டார்கள். எத்தனையோ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த வெள்ளையர்களுக்கிருக்கும் கண்ணியமும், இரக்கமும், மனிதாபிமானமும் கூட இவர்களிடம் இல்லை. அந்த வெளிநாட்டுத் தொண்டர்களில் பலரும் தமிழர்கள் முகாம்களில் படும் கொடுமைகளைக் கண்டு, மனம் நொந்து வெளியிடும் அறிக்கைகளும், எதிர்ப்புப் போராட்டங்களும், அத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களும் இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் கெட்ட பெயரைத் தோற்றுவிப்பதைத் தவிர்ப்பதற்காகத் தான், இலங்கை அரசு இவர்களைப் போன்ற தமிழ்க்கங்காணிகளைத் தேர்ந்தெடுத்து புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை நலிவு படுத்தப் பயன்படுத்துகிறது.

அப்படியான தமிழ்க்கங்காணிகளில் ஒருவரால் நடத்தப்படுவது தான் இந்த உதயம் பத்திரிகை. அதில் இலங்கை அரசின் அழைப்பின் பேரில், இலங்கை அரசின் பாதுகாப்புடன் இலங்கை சென்ற இந்தக் காட்டிக் கொடுக்கும் கங்காணிகளின் உளறலைத் தான், சிறீலங்காவின் தேசியகீதத்தைக் கனவிலும் நனவிலும் பாடும் கனகசபையினால் இங்கு பதியப்பட்டுள்ளது. இந்த உளறலை, இவர்களின் புலி எதிர்ப்புப் பிரச்சாரத்துக்காக, கடைசி வரை பிரபாகரனுடன் இருந்த வன்னித்தமிழர்கள் கூறியதாகப் பல கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். முகாமிலுள்ள தமிழர்களிடம் வன்னியில் உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டறிய சந்தர்ப்பமே கிடையாது என்ற துணிவில் தான் இவர்கள் எதை வேண்டுமானாலும் துணிவாகக் கூறுகிறார்கள். இவையெல்லாம் உண்மையா அல்லது பொய்யா என்று விசாரிக்க இலங்கை அரசு அனுமதிக்காது என்பது இந்தப் புலம்பெயர்ந்த கங்காணிகளுக்கும் அவர்களின் எடுபிடிகளுக்கும் நன்றாகத் தெரியும், அதனால் எப்படியும் கதை விடலாம் தானே.

முகாம்களில் முள்ளுக்கம்பிகளுக்குப் பின்னால் முனகிக் கொண்டிருக்கும் தமிழர்கள், ஒவ்வொரு நாளும் வானில் கடத்தப்படும் மகன்களைப் பற்றியோ, தமது பெண்பிள்ளைகளைச் சிங்களவர்கள் தம் கண் முன்னாலேயே கூட்டிக் கொண்டு போகும் கொடுமையைப் பற்றியோ அல்லது உண்ண உணவில்லாமல் செத்துக் கொண்டிருக்கும் தமிழ்க்குழந்தைகளைப் பற்றி எல்லாம் சொல்லியழாமல், ஆஸ்திரேலிய நடேசனிடம் விடுதலைப் புலிகளை மட்டும் தான் குறைகூறினார்கள் என்பதை எந்த மானமுள்ள ஈழத்தமிழனும் நம்ப மாட்டான். மகிந்தவையும் சிங்கள இராணுவக் கொடுமையைத் தமிழர்கள் சொல்லியழுதாலும் இந்த கங்காணிகள் வெளியில் சொல்லவா போகிறார்கள். அப்படிச் செய்தால் அடுத்த முறை இலங்கைச் சுற்றுப்பயணத்துக்கு அதோ கதி தான்.

விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும், அல்லது அவர்கள் எடுத்த தீர்மானங்கள் அனைத்துமே சரியானதென எந்த உண்மையான ஈழத்தமிழனும் நியாயப்படுத்த மாட்டான், அதே வேளையில் சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து பணத்துக்கும் சலுகைகளுக்காகவும், விடுதலைக்காக எழுந்து வீழ்ந்து மடிந்தவர்களை எல்லாம் இழிவுபடுத்தவும் மாட்டான். அப்படிச் செய்பவர்கள் எல்லாம் ஈழத்தமிழினத்தின் ஈனப்பிறப்புகள் என்பது தான் என்னுடைய கருத்தாகும்.

Mr. Robert Blake, the Assistant secretary to the South and South East Asia, இலங்கை அரசின் முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் படும் கொடுமைகளை நினைத்துக் கவலைப்படுகிறார். இலங்கை அரசு உரியவசதிகளைச் செய்து கொடுப்பதைப் பொறுத்து தான் அமெரிக்காவின் நிதியுதவிகள் அமையும், முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு எல்லாவற்றுக்கும் மேலாக நடமாடும் சுதந்திரம் தேவை என்றெல்லாம் கருத்துத் தெரிவிக்கும் போது, இந்த ஐந்து தமிழ்க்கங்காணிகளும் என்ன சொல்கிறார்கள் என்றால் "We saw REMARKABLE IMPROVEMENTS in the IDP camps,". சுகன் கனகசபையினதும் அவரது சகபாடிகளின் முகத்திரையைக் கிழித்தெறிய இது ஒன்றே போதும்.

(Our recent visit to Sri Lanka (July’2009) was intended to see the developments in the IDP camps subsequent to our last visit (March’2009) and evaluate the situation in the country following the defeat of the LTTE. We met with senior government ministers and officials, Buddhist prelates, the Chief Minister of the Eastern Province and United Nations officials. The government provided us the opportunity to visit the IDP camps in Chettikulam, the rehabilitation centre at Ambepussa and the northern and eastern provinces.

We saw REMARKABLE IMPROVEMENTS in the IDP camps, though conditions cannot be described as perfect. The United Nations agencies insist these camps be of a temporary nature and this dictate the housing and other infra-structure facilities be such. However, it was observed the housing and toilets constructed by the Sri Lankan authorities were more durable and climate friendly than those constructed by the UN agencies

\http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59396)

http://www.slhcaust.org/news/7-latest/282-dialogue-with-the-sri-lankan-diaspora.html

http://www.island.lk/2009/07/15/news2.html
sampath
கேரளா திருவனந்தபுரத்தில் சிறீலங்கா அரச ஆதரவாளர்களினால் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு நிதிவழங்கியது சேர்மனியில் உள்ள ஒரு என்.ஜீ.ஓ வாம். இதற்கு பின்புலமாக சிறீலங்கா அரசு இருந்ததாம். இக் கூட்டத்திற்கு இலங்கையிலிருந்து சுமார் 50பேர் கலந்துகொண்டதாக தெரிகிறது. இவர்களுக்கு விமானப்போக்குவரத்து வசதிக்குரிய பணம் தங்குமிட கோட்டல் வசதி உணவு எல்லாத்திற்கும் தாராளமாக பணம் செலவு செய்யப்படதாம். தமிழ் நாட்டிலிருந்தும் பலர் கலந்துகொண்டதாக அறியக்கிடைக்கிறது. யார் யார் கலந்துகொண்டவர்கள் என்பது மிக இரகசியமாக உள்ளது. கூட்டம் தமிழ் நாட்டில் நடக்க இருந்ததாகவும் பின்னர் தமிழ்நாட்டிலிருக்கும் சிறீலங்கா பேரினவாத அரசுக்கு எதிரான சக்திகளால் கூட்டம் குழப்படும் சாத்தியம் இருந்ததால் திருவனந்தபுரத்திற்கு இரகசியமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. கூட்டத்தில் என்ன கதைக்கப்ட்டது என்பதெல்லாம் மிக இரகசியமாகவே உள்ளது. கலந்தகொண்டவர்கள் எவரும் வாய்திறக்க காணவில்லை. தமிழ் நாட்டில் இருந்து கலந்துகொண்டவர்கள் எவர்கள் என்பதும் இரகசியமாகவே உள்ளது. தமிழ்நாடடில் இலங்கைத் தூதுவராக இருந்த அம்சாவின் சிபார்சில் சிலர் தமிழ் நாடடிலிருந்து கலந்துகொண்டதாகவும் தெரிகிறது.
Kamaraj
//தமிழ்நாட்டில் பணத்தால் எந்த சுயவிளம்பர அரசியலை செய்ய முடியும் என்பதற்கு சுகனின் பேட்டி இன்னொரு உதாரணம். தங்களை பத்திரிகையாளர்களாக காட்டிக் கொண்டு பணத்திற்கும் தண்ணிக்கும் விலைபோகும் ஒரு குறிப்பிட்ட நபர்கள் இருக்கும்வரை சுகன் சோபாசக்தி சுசீந்திரன் போன்றவர்களுக்கு லாபம்தான்.//Nanthisvaran

ஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!
__________________________________________

தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.

அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம். ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால், புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.

தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.

இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.

தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.

ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ” எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்‘ என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.

எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில் கொண்டு வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.

ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.

எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.

நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும் ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.

தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்

பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.

இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.

-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009
stalinguru
வன்னியில் நடந்தது என்ன?

வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம் என்று பிரபாகரனே
சொல்வது போல நிகழ்சிகள் அமைந்துவிட்டதாகக் கூறி தனது
அவதூறுகளும் தர்க்க முரண்பாடுகளும் கொண்ட வன்னியில்
என்ன நடந்தது என்கிற கட்டுரையை நிறைவு செய்திருக்கிறது
இம்மாத காலச்சுவடு இதழ்.சரியாகவே சொல்லியிருக்கிறார்
பிரபாகரன் என்றே நமக்கும் தோன்றுகிறது.வென்றவர்கள்
எழுதுகிற சரித்திரத்தில் உண்மைகள் இருக்காது என்பதை
மிகத் தெளிவாக புரிய வைத்திருக்கிறது காலச்சுவடு.

நடைபெற்ற போரில் இருதரப்பும் செய்த செயல்களைப் பற்றிய
உண்மைகள் சிங்கள அரசின் திறந்தவெளிச் சிறைசாலைகளில்
அடைக்கப்பட்டிருக்கும் மக்களிடமே தேங்கிக் கிடக்கின்றன,
இது வரையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை
படுகொலை செய்து,ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை நாட்டை
விட்டு வெளியேற வைத்திருக்கும்,தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்களையே மிக சாதாரணமாக சுட்டுக்
கொல்லும் அரசின் சிறைகளில் இருக்கும் மக்கள் வெள்ளை
வேன் பற்றிய பயம் இல்லாமல் இருப்பது அசாத்தியமானது.

உண்மைகளை அந்த மக்களிடம் இருந்து பெறுவது இன்றைய
சூழலில் எந்த விதத்திலும் சாத்தியமில்லாத நிலையில்
சிங்கள் அரசின் போர்க்குற்றங்களை பூசி மெழுகி முகாமில்
இருந்து எழுதப்பட்டதாக காலச்சுவடு வெளியிட்டிருக்கிற
கடிதம் கேலிக்குறியதாக இருக்கிறது.நாம் அறிந்தவரை
புலிகளை ஆதரித்து கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள்
தடுப்பு முகாம்களில் ஒட்டபட்ட தகவல்கள்தான் வருகின்றன.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள்,சிங்கள அரசின் மூலம்
நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நியாயம் வழங்கப்படுவது எந்த
விதத்திலும் சாத்தியமற்றதாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில்
உலக தமிழர்களின் மனதில் புலிகளை பற்றிய அவதூறுகளை
பரப்புவதன் மூலம் புலிகள் விதைத்துச் சென்றுள்ள விடுதலை
வேட்கையை ஒழிக்கும் முயற்சியில் ஊடகங்கள் இறங்குவது
மிக இயல்பான ஒன்றுதான்.அந்த வகையிலேயே காலச்சுவடு
தனது வேலையை செய்திருக்கிறது.அந்த நீண்ட கட்டுரையில்
காணப்படும் தர்க்க முரண்பாடுகளை மட்டும் நாம் வெளிக்
கொண்டு வர முயலலாம்.

விடுதலைப்புலிகளிடமிருந்து பிரதேசங்களை பகுதி பகுதியாக
கைப்பற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக,இந்தியாவின்
மின் திட்டத்துக்கு தேவையான சம்பூர் பகுதியை ஆக்கிரமிக்கும்
நோக்கில் போரை துவக்கியதே சிங்கள ராணுவம்தான் என்கிற
உண்மையை மறைத்து விடுதலைப்புலிகளே முதலில் போரைத்
துவக்கியதாக அப்பட்டமான பொய்யை மிக இயல்பாக கூறியே
தனது பத்தியை ஆரம்பித்திருக்கிறார் முகாமில் இருப்பதாகக்
கூறப்படும் அந்த முகமில்லாத பத்தியாளர்.

புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதை அப்போது
வன்னியில் இருந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழுவும்,
ஐ.நா உள்ளிட்டசர்வதேச நிறுவனங்களும் கண்டு
கொள்ளாததால் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பை
தீவிரப்படுத்தியதாகவும்,ஆனால் மக்கள் தாமாகவே வந்து
இணைகின்றனர் என்று முரண்பட்ட தகவவல்களை
புலிகள் பரப்பியதாகவும் அடுத்த குற்றசாட்டு.போர்நிறுத்தக்
காலத்தில் புலிகளுக்கு எதிராக சிங்கள அரசின் கரங்களை
வலிமைபடுத்தும் விதமாக,அமெரிக்கா தலைமையில்
முன்னெடுக்கபட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிற
முழக்கத்தின் கீழ் புலிகளை தடைசெய்த மேற்குலக நாடுகள்,
புலிகளைமேலும் அரசியல்ரீதியாக தனிமைப்படுத்த இந்த
கட்டாய ஆட்சேர்ப்பு விவகாரத்தை ஏன் பயன்படுத்திக்
கொள்ளாமல் இருந்தார்கள் என்பது குறித்து பத்தியாளர்
என்ன பதிலை வைத்திருக்கிறார்.?

சிங்கள படையினரின் தாக்குதல் உத்திகளால் புலிகள் திணற
ஆரம்பித்ததாக கூறுகிற பத்தியாளரின் உற்சாகம் நமக்கு
புரிந்தாலும்,சிங்கள அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த
தமிழர்களில் புத்திளம் பருவத்தினரில் இருந்து இளைஞர்கள்
வரை இருபதாயிரம் பேரை சிங்கள ராணுவம் கடத்திசென்று
கொலை செய்ததான தகவல்கள் தான் பெரும்பாலும் நமக்கு
கிடைக்கின்றன,மேலும் ஒரு பதினைந்தாயிரம் பேர் சரணடைந்து
தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அரசே
அறிவித்திருக்கிறது.நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட போராளிகளை
களமுனைக்கு அனுப்பாமல் புதிதாக இணைக்கபட்டவர்களை
போருக்கு அனுப்பி புலிகள் பலிகொடுத்தார்கள் என்கிற
பத்தியாளரின் அடுத்த குற்றசாட்டும் காலாவதியாகிவிடுகிறது.

ஆயுதம் ஏந்தாத இளைஞர்களையும் இளம்பெண்களையும்
ஆயிரக் கணக்கில் பிடித்துச் சென்று சிங்கள ராணுவம்
படுகொலை செய்த செயலை மூடி மறைத்து அந்த
உயிரிழப்புகளை புலிகளின் போர் முனைச் சாவுகளாக
சித்தரிப்பதன் மூலம் சிங்கள ராணுவத்தை பாதுகாக்கும்
பத்தியாளரின் நோக்கம்தான் இந்த நீண்ட கட்டுரை
முழுவதும் இழையோடுகிறது.

புலிகளின் ஆயுதங்களை மௌனித்து சரணடையும் முடிவுக்கு
புதிதாக படையணிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின்
உயிர்களும் முக்கிய காரணமாக அமைந்தன என்பதை மிக
சுலபமாக மறைத்துவிட்டு புலிகள் மீது அவதூறுகளை அடுக்கிக்
கொண்டு செல்லும் அந்த முகமிலி புலிகளுக்கும் மக்களுக்கும்
மோதல்கள் நிகழ்ந்ததாக கூறுவது நம்பதகுந்ததாக இல்லை.

சிங்கள படையினர் நெருங்க நெருங்க மக்களிடம் அச்சத்தை
பரப்பும் விதமாக புலிகள் பரப்புரையை துவக்கியதாகவும்
சிங்கள் வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட போரிட்டு
மடிவதே மேல்,உயிரினும் மேலானது நாடு,எங்கள் குலத்தமிழ்
பெண்களே உங்கள் கற்பு சிங்களுக்கென்ன பரிசா என்றெல்லாம்
கூறி மக்கள் மத்தியில் கலவரத்தை புலிகள் கிளப்பியதாகவும்
எழுதும் பத்தியாளருக்கு இந்த கூற்றுகள் எல்லாம் புலிகளால்
புனையப்பட்ட பொய்கள் என்று தோன்றுகிறதா?

சிங்கள படைகள் கடந்த முப்பதாண்டுகளாக தமிழ் மக்களை
கொன்று வருவதும்,தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு
உட்ப்படுத்தி வருவதும் உலகத்துக்கே தெரிந்த விடயங்கள்.
தமிழ் இளைஞர்கள் கடலுக்கு பெண்கள் உங்களுக்கு என்று
சிங்கள ராணுவத்திடம் கோத்தபையா ராஜபக்ஸேவே
அறிவித்தது கூட புலிகளால் பரப்பட்ட பொய் என்று
சொல்லாமல் விட்டாரே நம் முகமிலி அதற்காக
சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்

மாவீரர்கள் குடும்பங்கள் என்று பாராமல் ஆள்பிடிப்பில் புலிகள்
இறங்கியதை அடுத்து மக்கள் புலிகளை ஏசத்தொடங்கியதாக
அடுத்த குற்றச்சாட்டு,பிரபாகரனின் மகனும்,மகளும் கூட
அவ்வாறுதான் பிடிக்கப்பட்டார்களா தெரியவில்லை.தங்கள்
மக்களுக்காக மேலும் மேலும் இழக்க மாவீரர் குடும்பங்கள்
முன்வந்ததையே நிகழ்வுகள் காட்டுகிறது.

புதுக்குடியிருப்பை சிங்கள ராணுவம் நெருங்க ஆரம்பித்த
உடன் மக்களை புலிகள் கவசமாக பயன்படுத்தியதாக அடுத்த
குற்றசாட்டு,இது போன்ற குற்ற்ச்சாட்டை சுமத்துகிறவர்களுக்கு
நாம் முன்வைக்க வேண்டிய கேள்வி ஒன்றும் உள்ளது.1995
ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை நோக்கி சிங்கள ராணுவம்
முன்னேற ஆரம்பித்தபோது ஐந்து இலட்சம் மக்கள்
புலிகளோடு இடம் பெயர்ந்தார்களே அவர்களையும் புலிகள்
பணயக் கைதிகளாக கூட்டிச் சென்றார்கள் என்று சொல்லப்
போகிறீர்களா?

இந்திய ஆங்கில தொலைக்காட்சிகளில் கிளிநொச்சியில் போர்
உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட காட்சிகளில் புலிகள்
சீருடைகள் இல்லாமலேயே காணப்பட்டார்கள்,மேலும் சில
பதிவுகளில் சீருடையில் இருந்த நபர்கள் மக்களைத் தடுத்து
திருப்பி அனுப்புவதையும் காண முடிந்தது.இதன் மூலம் புலிகள்
பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை தனது கேடயமாக
சிங்கள ராணுவம் பயன்படுத்த துவங்கியது என்கிற முடிவுக்கு
வருவதில் பெரிய சிரமங்கள் இல்லை.

புலிகள் பகுதிகளில் இருந்து கடைசிவரை மக்கள் உயிரைக்
காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த டாக்டர்கள் இந்த
கட்டுரையை நபருக்கு பொய்யர்களாக தெரிவது
ஆச்சரியமில்லை என்பதால் அதை தவிர்த்துவிட்டு
அவரின் மற்ற முரண்பாடுகளை அலச முயலலாம்.

வெளியேறும் குறுகிய தொகையினரான மக்களை மனித
கேடயங்களாக சிங்கள ராணுவம் பயன்படுத்துவதையும்,
கணக்கு வழக்கின்றி மக்களை கொல்லத்துவங்கியதையும்
அடுத்தே மாவீரர்கள் குடும்பங்களையும் தங்கள்
ஆதரவாளர்களையும் தவிர்த்த மக்களை இலட்சக்கணக்கில்
புலிகள் வெளியேற்றினர் என்கிற முடிவுக்கு வர முடிகிறது.

300 போர் வீரர்கள் என்கிற ஆங்கில திரைப்படத்தின்
தமிழாக்கத்தை தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு
போட்டுக் காண்பித்து தனது முடிவு இப்படி இருக்கும்
என்று பிரபாகரன் சொல்லியதாக கூறுகிறார் நம் முகமிலி.
புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களிடயே நிகழ்ந்த
ஒரு விசயத்தை இந்த நபர் எப்படி அறிந்தார் என்கிற
கேள்வி எழுகிறது.

மக்களை சந்திக்க தயாராக இல்லாத பிரபாகரன் தனது
இயக்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்தை போட்டுக்
காட்டி தனது முடிவை கூறியதை பக்கத்தில் இருந்து
பார்த்தது போல கூறுவது ஒரு சராசரி நபருக்கு எவ்வாறு
சாத்தியமானது என்கிற கேள்விக்கு கிடைகும் பதில்
போதும் பிரபாகரன் மக்களோடு கொண்டிருந்த
உறவுகளைக் காட்ட.

சிங்கள ராணுவத்தின் மிகமோசமான புதுக்குடியிருப்பு
மருத்துவமணை மீதான தாக்குதலை புலிகள் மீது சிங்கள
ராணுவம் நடத்திய எதிர்த்தாக்குதல் என்று சொல்லும்
ஈனத்தனமான செயலையும் எந்த கூச்ச நாச்சமுமில்லலாமல்
செய்யும் முகமிலி அமெரிக்காவால் வழங்கப்பட்ட உளவு
விமானம் புலிகள் புதுக்குடியிருப்பு பகுதிகளில் நிலை
கொண்டிருந்ததை பதிவு செய்த காட்சிகளை வெளியிட்டு
தனது தரப்பை அரசு நியாயப்படுத்திக்கொள்வதை எது
தடுத்தது என்கிற கேள்விக்கு பதில் அளிப்பாரா?

சிங்கள அரசுக்கு எதிராக கண்டனக் குரல்களை மேற்குலகம்
எழுப்ப ஆரம்பித்த காலத்தில் மருத்துவமணையை தங்கள்
தளமாக புலிகள் பயன்படுத்துவது பற்றிய காட்சிபதிவுகள்
சிங்கள் அரசுக்கு கொடுக்கும் அரசியல்ரீதியான பலன்கள்
அபரிமிதமாக இருக்க வாய்ப்பிருந்தும் ஏன் சிங்கள அரசு
அது போன்ற செயலில் ஈடுபடவில்லை என்கிற
கேள்விக்கு இந்த பத்தியாளரின் பதில் என்ன?

மக்களின் மரணங்கள் அதிகரித்தால் மட்டுமே இந்தியாவும்
ஐ.நா சபையும் தலையிட்டு ஏதாவது நடவடிக்கை
எடுப்பார்கள் என்று கருதி சிங்கள ராணுவத்தை கோபமூட்டும்
வகையில் தாக்குதல் நடத்தியதோடு புலிகள் தாங்களும்
மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்ததாக அடுத்த
குற்றச்சாட்டு.அமைதிப்படை என்கிற பெயரில் சென்று
ஆறாயிரம் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த இந்திய அரசு
மக்களின் உயிரிழப்புகளை கருத்தில் எடுத்து தான்
நடத்திய யுத்தத்தை நிறுத்திக்கொள்ளும் என்று புலிகள்
அல்ல ஒரு சராசரி அரசியல் விழிப்புணர்வு உள்ள மனிதன்
கூட கருத மாட்டான் என்பதை மிக வசதியாக மறந்து
போவது இந்த முகமிலிக்கு மட்டுமே சாத்தியம்.

பாதுகாப்பு வளையம் என்று அறிவித்துவிட்டு அந்த
பகுதிக்கு வந்த மக்களை இலக்கு வைத்தே பெருமளவில்
தாக்குதல்நடத்தி தனது இனபடுகொலையை தீவிரப்படுத்தியது
சிங்களஅரசு என்பதை வசதியாக மறந்துவிடுகிற நம்
முகமிலிக்கு மக்களை புலிகள் பணயக் கைதிகளாக
வைத்திருந்ததாக தோன்றாமல் போனால்தான் ஆச்சரியம்.

மக்களின் உளச்சோர்வையும் பேரவலத்தையும் நீக்கும் விதமாக
புலிகளின் முன்னனித் தளபதிகள்,பிரிகேடியர் தீபன்,
ஆதவன்,விதுசா,துர்க்கா,மணிவண்ணன்,கேனல்
சேரலாதன்,கேனல் ராகேஸ் உட்பட பலருடன் புலிகள்
முன்னெடுத்த தீவிர எதிர்த்தாக்குதல் புலிகளின் வரலாற்றில்
பெரும் தோல்வியாகி பிரபாகரனை நிலையகுலைய வைத்தாக
கூறும் முகமிலி வசதியாக மறைத்துவிட்ட விசயத்தை நாம்
கவனிக்க வேண்டிஉள்ளது.

ஆனையிறவில் தங்கள் முற்றுகைக்குள் இருந்த இருபது
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினரை
கொன்றொழிக்கிற வாய்ப்பு இருந்தும் உச்சபச்ச
மனிதாபிமானத்துடன் அவர்களை உயிரோடு வெளியேற
அனுமதித்தன் மூலம் தங்கள் அறவுணர்வையும் மனித
உயிர்களுக்கு மதிப்பளிக்கும் மாண்பையும் வெளிப்படுத்திய
புலிகளுக்கு எதிராக,இந்தியாவால் கையளிக்கப்பட்ட ரசாயன
ஆயுதங்களை பயன்படுத்தியே சிங்கள ராணுவம் எந்த
போரியல் அறமும் இல்லாமல் அந்த வெற்றியை பெற்றது
என்பது நம் முகமிலிக்கு மறந்து போனதில் ஆச்சரியமில்லை.

மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை தனது கட்டுரையின் போக்கில்
வெளிப்படுத்திச் செல்லும் முகமிலி சொல்லியிருக்கும் கருத்து
ஒன்று நம்மை புல்லரிக்க வைக்கிறது.புலிகளின் ஜனனாயக
உள்ளடக்கமற்ற போராட்டத்தின் காரணமாகவே புலிகளை
மேற்குலக நாடுகள் அங்கீகரிக்கவில்லையாம்,ஈராக்,
ஆப்கானிஸ்தான் என்று ஈவு இரக்கமற்ற படுகொலைளை
நடத்திக்கொண்டிருக்கும் மேற்குலக நாடுகள் புலிகளின்
ஜனனாயக மறுப்பின் காரணமாகவே தலையிடவில்லை என்று
முகமிலி சொல்வதை கேட்கையில் எதைக்கொண்டு சிரிப்பது
என்று தெரியவில்லை.

தமிழகத்தில் முத்துக்குமாருக்கு பிறகும்,போர் உச்சடைந்தபோது
ஐரோப்பிய நாடுகளிலும்,அரசியல்வாதிகளில் தங்கி இராமல்
மக்கள் போராட்டங்களை கட்டமைப்பதிலேயே புலிகளும்
ஈழ ஆதரவாளர்களும் இறங்கினார்கள் என்பது வழக்கம்
போலவே நம் முகமிலிக்கு மறந்து போய்விட்டது நமக்கு
வியப்பைக் கொடுக்கவில்லை.

இந்த நீண்ட கட்டுரையின் நோக்கமாக சில விசயங்களை
தொகுத்து சொல்லலாம்.

முதலாவது கடந்த இரண்டு தாசாப்தங்களாக மூன்றாந்தர
அரசியல் தலைவர்களையே கண்டிருந்த உலகத்தமிழர்கள்
மத்தியில் வீரத்தையும் அறத்தையும் நேர்மையையும்
கொண்டிருந்த ஒரு தலைமையும் அவரின் அமைப்பும்
மக்கள் மனங்களில் விதைத்துச் சென்ற பெருமித
உணர்வுகளை களைவது.

அரசியலற்ற ராணுவ அமைப்பாக புலிகளை சித்தரிப்பதன்
மூலம் புலிகள் முன்னெடுத்த ஏகாதிபத்திய எதிர்ப்புபோரை
சிறுமைபடுத்துவது புலிகளின் பின்னடைவைக் காட்டி
தேசிய இன விடுதலைக் கோரிகைகளுக்கான
போராட்டங்களின் நியாயத்தை நிராகரிப்பது.

சிங்கள ராணுவம் நிகழ்த்திய ஆயுதமற்ற இளைஞர்கள்,
இளம் பெண்கள்,மற்றும் மக்களின் படுகொலைகளை
மூடி மறைப்பது.

ஐரோப்பிய நாடுகள்,இந்தியா,அமெரிக்கா,பாகிஸ்தான்,
சீனா,ஜப்பான், ரஸ்யா, என்று தங்களுக்குள்
முரண்பாடுகள் கொண்ட நாடுகளாக சித்தரிக்கப்பட்டவைகள்
அணைத்தும் அணிசேர்ந்து நிகழ்த்திய இனபடுகொலையின்
கோரத்தை புலிகளின் அரசியல் ரீதியான சில தவறுகள் மீது
சுமத்துவதன் மூலம் இந்த முதலாளித்துவ நாடுகளின் குற்றம்
பேசுபொருளாவதை தடுப்பது ஆகியவைகளே

ஒரு நேர்மையான அரசியல் விமர்சனத்துக்கு உதாரணமாக
இன ஒடுக்கலும் விடுதலைப்போராட்டமும் என்கிற நூலில்
தோழர் இமயவரம்பனின் வார்த்தைகளைக் கிழே தருகிறேன்.

இன்று வடக்கில் நடக்கும் யுத்தத்தின் தன்மை பற்றிய
ஒரு தெளிவான நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே
அதன்இரு தரப்பினரதும் செயல்பாடுகளையும்
நிலைப்பாடுகளையும்நாம் விமர்சிக்க முடியும்.ஜனனாயகம்.
மனித உரிமைகள் கோட்பாடுகளை ஒரு யுத்த சூழலில்
எவ்வாறு கையாளுவது என்ற கேள்வி நம் முன் உள்ளது.
ஒருவர் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை ஏற்பதும்
ஏற்காததும் தேசிய இனபிரச்சனைபற்றி அவரது மதிப்பீடு
சார்ந்த ஒன்றாக இருக்கலாம்.விடுதலைபுலிகளின்
நிலைப்பாட்டை ஏற்கும் எவரும் அவர்களை விமர்சிக்கக்
கூடாது என்ற கருத்து நியாயமற்றது.அது போலவே,
எவரும் விடுதலைப்புலிகளது அரசியலை நிராகரிப்பதால்
அவர்களைமுற்றாகவே நிராகரிக்கும் கண்ணோட்டமும்
நியாயமற்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் யதார்த்தமான சூழ்நிலையை
நாம்கருத்திற் கொள்ள வேண்டும்,அரச பயங்கரவாதத்தையும்
அதற்கெதிரான போராட்டம் உருவாக்கும் பயங்கரவாதத்தையும்
ஒரே விதமாக கணிப்பதன் ஆபத்தை நாம் உணர வேண்டும்.

தேசிய இனபிரச்சனைக்கு நியாயமான தீர்வை முன்வைப்பதில்
அரசாங்கத்தின் பொறுப்பு அதிகமானது என்பதை நாம்
நினைவிற் கொள்ள வேண்டும்.இதன் பின்னனியிலேயே
விடுதலை புலிகளது ஜனனாயக,மனித உரிமை மீறல்களையும்
அரசாங்கத்தின் மனித மீறல்களையும் நாம் ஒப்பிட
வேண்டியுள்ளது.வன்முறை அரசியல் தற்கொலை படைகள்,
அரசியற் கொலைகள் போன்றவற்றை அவை நிகழும் சூழலுக்கு
அப்பால் வைத்து மதிப்பிடும் மனிதாபிமானிகள் அவற்றை
சாத்தியமாக்கியது மட்டுமின்றி அவசியமாக்கியதுமான ஒரு
தேசிய அரசியல் நெருக்கடியையும் அதன் காரண
கர்த்தாக்களையும் மறந்து விடுகின்றனர்.

எந்த வித அடிப்படை நேர்மையும் இல்லாத,தர்க்க
முரண்பாடுகளால் நிரம்பியிருக்கும் இந்த கட்டுரை
காலச்சுவடின் பார்ப்பனியத்தை நாம் மீண்டும்
புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பை நமக்கு
அளித்திருக்கிறது.

இந்த கட்டுரையில் இருக்கும் தர்க்க முரண்களையும்,
முதலாளித்துவ உலகை நக்கிப் பிழைக்கும் அவல
வாழ்வில் நாடுகள்,இனங்கள்,தேசம்,தேசியங்கள்
கடந்து இணைந்து நிற்கிற மனித விரோத
கும்பல்களையும் அடையாளம் காண்கிற வேளையில்
அவர்களை எதிர்த்து நின்று வெல்வோம் என்பதிலும்
நம்பிக்கை கொள்வோம்.
த.வெ.சு.அருள்
"மற்றபடி ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர அஞ்சி நடுங்கி சந்தர்ப்பவாத அரசியலுக்குள் வாழும் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள்தான் இந்த தமிழ் எழுத்தாளர்கள் என்பதைத் தாண்டி இவர்கள் மீது என்ன கருத்துச் சொல்ல முடியும்?"

மறுக்க முடியாத உண்மை

த.வெ.சு.அருள்
Mohan
Dear Editor

Who are you man to advice us about the politic in Sri Lanka?

Were you born in Sri Lanka?

I know my politic and my democracy, please do not try to teach your koovam politic for Sri Lankan. Our struggle began with Indian who provided us arms simply for their own interest to disable the Sri Lankan economy. Do you know, how much the Indian investors earn from Sri Lanka during the last 3 decades?

Please shut up und keep your mouth. If you are interesting in politics, then please teach the politic for your politically uneducated guys.

best regards
proudly
Sri Lankan
sri jyo
the future tamil geneneration slap every tamilians ,because we are use less fellows we are saw many tamilians killed what happend? nothing previous parliment electon we are puting vote for rs 500 dmk and rs500 for congress
it s not a end
my brother praba come and re start the war against sl army and father x congress party and nehru family mk narayanan
Elangaivendan
பிரபாகரன் தனி மனிதனாக ஒரு நாட்டையே கட்டி எழுப்பியவன். சதியிலும் நம்பிக்கைத் துரோகத்திலும் வீழமட்டான். ஈழம் விடியும் வேளையில், அனைத்துப் பேச்சுக்களும் மறைந்து போகும்.
"பகவான் புத்தரின் கருணையும் அன்பும் நம் எல்லோர் மேலும் கவிவதாக!" என்று ஆரம்பிக்கும் ஒருவனிடம் எப்படி ஐயா நீங்கள், பிரபாகரனை ஆதரிக்கும் ஒரு போக்கைனை எதிர் பார்க்கிறீர்கள்.
நடேசனும் அதே வகை, புறந்தளுங்கள் இவர்களின் பேச்சுக்களை. ஒவ்வொர் காலத்திலும் ஒரு கோடரிக் காம்பு முளைக்கத்தான் செய்யும்.

சீனவுக்கும் பாகிச்தானுக்கும் இலங்கையை ஆதரிக்க சில காரணங்கள் இருக்கலாம். நாம் ஈழத்தை/புலிகளை ஆதரிக்க நம் முடி முதல் அடி வரை பலப் பல காரணங்கள் இருக்கு.

கட்டுரையளர் எழிலன் ஒரு கிருத்துவர் என்பது அவரின் எழுத்துகளில் இருந்து விளங்குகிறது.
சார்பின்மையக எழுதப்பாருங்கள் நண்பரே.
Malcom X Farook
இங்கு அதிகமாக பேசப்படுவது எல்லாம் யாரெல்லாம் எட்டப்பர்கள் யாரெல்லாம் கட்டபொம்மன்கள் என்று. ஆக மொத்தம் செத்து அழிந்து கொண்டிருப்பது எம் தமிழினம்.
ஆக்கப்பூர்வமான விசயங்களை விவாதித்து நம் தமிழினத்துக்கான வாழ்வுரிமைய ஓர் குரலிள் போராடி பெறுவதற்க்கு வாய்ப்புகளே இல்லையா?.. இன்னும் எத்துனை நாட்களுக்குதான் புலிகள் எதிர்ப்பு, புலிகள் ஆதரவு பல்லவிகள்?.

எல்லாக் காலக்கட்டத்திலும் மிதவாதம், தீவிரவாததிற்க்கு இடையேயான வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது, அது இருக்கும் வரைக்கும் பிரித்தாளும் சதிகாரர்களுக்கெல்லாம் கொண்டாட்டம் தான்.
ஒருவரைப்பற்றியான காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டுக்களால் அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் அவரின் மனவேதனையும் நாம் உணர்ந்து நம் கருத்துக்களை பதிவு செய்யவேண்டும்

நமது ஒவ்வொரு வார்த்தை நேர விரயங்களும் நம் சொந்தங்களின் விடுதலைக்கான, வாழ்வுரிமைகளுக்கானதாக இருக்கடும்
marthandan
Marx nowadays thinks that he is the only saviour of Muslim Community. Marx now prises Mahatma Gandhhi who once declared that he was a staunch hindu and always believes ' Four Varnam'/ But most of the Indians think that he was a secularist. Like that now Marx thinks that he is the sole representative of human right.
We know that he is not at all behaving as a Tamilian, but at the same time he is being used by Rajapakse elements to degrade the Eelam War as a senseless episode I never expect Mr.Marx to such a
great fall. Certainly he has fallen from the top. History of tamils would never forgive him.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.