வாசிப்பு உலகத்தில் புதியவர்கள் நுழைந்தால்தான், எழுத்து லகத்திற்கு கொண்டாட்டம். அப்போதுதான், இலக்கியம் புத்தாடை அணிய முடியும். - அந்த வகையிலான முன்னேற்றங்கள் சமீப நாட்களில் அதிகரித்திருக் கின்றன. ஒருபக்கம் புத்தகத் திருவிழாக்கள், வாசிப்பை ஒரு கொண்டாட்டமாக்கினால், மற்றொரு புறம் இணையவெளி வலைப்பக்கங்கள் படைப் பாக்கத்தில் ஜனநாயகத்தைப் புகுத்தியிருக்கின்றன.

தமிழ் வலைப்பக்கங்களில் சுமார் 2700 பதிவர்கள் இருப்பதாக தமிழ் வெளி எனும் திரட்டி கூறுகிறது. வலைப்பதிவர்களாக இருக்கும் புதிய தலைமுறை எழுத்தாளர்களிடம் இருந்து இன்றுவரை சுமார் 200 புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான உலகம் தழுவிய தமிழ் வாசகர்கள் இப்பக்கங்களில் அன்றாடம் உலவு கிறார்கள். எங்கோ குவைத்தில் ஒரு கட்டுமானத் தொழிலாளியாக அலைந்துகொண்டிருக்கும் தொழிலாளிக்கும் சற்றுத் தமிழில் இளைப்பாறும் மாய வழியை இணையம் உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது. அவர்கள் கணினியின் துணையுடன் அந்த வீதியில் கூடி விவாதிக்கிறார்கள், வாசிக்கிறார்கள். ஆரோக்கிய மாகவும், அரட்டையாகவும் பேசுகிறார்கள்.

தகவல்தொடர்பு வசதிகளின் ஒரு நீட்சியாகத்தான் இணையம் நமக்கு அறிமுகமானது. ஆனால், கணிப்பொறியுடனே அதிக நேரத்தைச் செலவிட்டுவந்த புதிய தலைமுறை, தனது படைப்பாக்கத்துக் கான தேடலை நிறுத்திவிடவில்லை. முதலில் மின்னஞ்சல்கள் வழியாகவும் பின்னர் குழும அஞ்சல்களாகவும் இணையம் ஒரு ஊடகமாக உருவெடுக்கத் துவங்கியது. வளர்ச்சிப்போக்கில், அவை சமூக வலைப்பக்கங்களாக உருவெடுக்கத் துவங்கின. இன்று பலகோடி மக்களை எல்லைகள் தாண்டி பிணைக்கும் சமூக வலைத்தளங் களும், வலைப்பக்கங்களுமாக அவை வடிவம் கொண்டுள்ளன.

தனியாக அடைத்துவைத் தாலும், மனிதனால் சமூக வாழ்க்கையைத் தவிர்க்க முடியாது என்பதையே மேற்கண்ட வளர்ச்சி காட்டுகிறது. தகவல் தொழில் நுட்ப மாணவர் ஜஸ்டின் ஹால் <http://links.net/> என்ற ஒரு வலைப் பக்கத்தை 1994 ஆம் ஆண்டில் உருவாக்கினார். இதுவே, முதல் வலைப்பக்கமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இணையப் பதிவு என்ற ஆங்கில வார்த்தைகளை இணைத்து (web – log = blog) பிளாக் என்ற சொல் 1999இல் தான் புழக்கத்தில் வந்தது. தனிநபர் வலைப்பக்க வசதியை முதன் முதலில் பைரா லேப்ஸ் என்ற கனடிய நிறுவனம் அறிமுகப் படுத்தியது. இந்த நிறுவனத்தைத் தான் பின்னர் கூகிள் நிறுவனத்தினர் கைப்பற்றினர். (கூகிள் தேடுபொறியை காலப்பொருத்த மானதாக வைத்திருப்பதில் இந்த வலைப்பக்கங்களின் இயக்கம் மிக அத்தியாவசியமானதாக பின்னர் மாறியது). இப்போது பிளாக்கர் தவிர வேர்டு பேட், டைப் பேட், யார்ல் என பல நிறுவனங்களும் தற்போது இலவச வலைத்தள சேவையை வழங்கி வருகின்றன.

ஏற்கனவே சொன்னதைப் போல, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களே இணையப் பக்கங்களை முதலில் பயன்படுத்தத் துவங்கினார்கள். ஆனாலும், யூனிகோட் என்ற தமிழ் எழுத்துரு பயன்பாட்டுக்குக் கிடைத்த பின்னரே, வலைப்பக்கங்கள் அதிக வாசகர்களைத் ஈர்க்கத்துவங்கின. தமிழில் முதல் பதிவு 2003 ஆம் ஆண்டு அக்டோபரில் எழுதப் பட்டிருக்கிறது. அதற்கு முன்னரே நிறையப் பதிவர்கள் இருந் திருந்தாலும், தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தி, தமிழ் மொழியில் முதல் பதிவு எழுதப்பட்டது அன்றே.

ஆனால்,மிகச் சிலநாட்களிலேயே பல்வேறுபட்ட எழுத்தாளர்களும் வலைப்பக்கங் களைக் கைக்கொள்ளத் துவங்கினார்கள். இவை வாசிப்புக்கு ஒரு புதிய எல்லையைக் கொடுத்ததுடன் ஊடகத்தளத்தில் இரண்டு முக்கிய விசயங்களைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.

Pin It