இவர்கள், அடிக்கடி நம் கண்ணில் படுகிறார்கள். அனைத்து இடங்களுக்கும் இவர்கள் வருகிறார்கள். இவர்களை சிலர் கேலியும், கிண்டலும், செய்கிறார்கள்; பதிலுக்கு இவர்களும் நம்மை அசத்துகிறார்கள். இவர்கள் என்பவர்கள் யார் ? நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும், நம் சமகால, சமமனிதர்கள்தான் ‘இவர்கள்’ என்றும் அலிகள். ஆணா, பெண்ணா, என்ற கேள்விக்கு, இவர்கள் ஆணுமற்ற, பெண்ணுமற்றவர்கள் என்பதும் சமயங்களில் சரியாக இருக்கும். இவர்களில் அப்படி என்ன அதிசயமும், அற்புதமும் இருக்கிறது ? இருக்கிறதே; இதோ கீழே படியுங்கள்.

நம் உடலின் அடிப்படையும், ஆதாரமும் செல்கள்தான். செல்களின் கூட்டத்தை திசுக்கள் என்கிறோம். செல்லுக்குள்தான் குரோமோசோம்களும் மரபு அணுக்களும் இருக்கின்றன. இப்படி மறைந்திருக்கும் மர்மத்தில்தான் மறுக்க முடியாத, மனித மகிமைகள் உள்ளன. ஒருவரின் தனிப்பட்ட திறமைக்கு, பாட, ஆட, நடிக்க, ஓட, எழுத, காதலிக்க, காதல் வயப்பட்ட என்று அனைத்திற்கும் காரணம் குரோசோம்களும், மரபு அணுக்களும் தான் (ஜீன் - Gene) என்கிறோம். உயிரை இயங்கச் செய்யும் பல்வேறு காரணிகள் உள்ளடக்கியதுதான் இந்த செல் என்னும் இயற்கையின், இனிமையான படைப்பு.

கருவாகும் செல்

enunchபெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் குறிப்பிட்ட சில நாட்களில் ஆணின் உயிரணுவுக்காக கருமுட்டை காத்திருக்கும். அந்த நாட்களில் உறவு கொள்ளும்போது உயிரணுவும், கருமுட்டையும் இணைந்து முதல் செல் உருவாகிறது. அந்த செல் பலமடங்கு பெருகி, கருவாக உருவாகிறது. இதுதான் கரு ‘உரு’வாதலின் ரகசியம்.

குரோசோம்கள் பற்றி

23 ஜோடி குரோசோம்கள் இருக்கின்றன. ஆண் உயிரணுவில் 23 குரோசோம்களும், பெண்கருமுட்டையில் 23 குரோசோம்களும் சேர்ந்துதான் 23 ஜோடி குரோசோம்களாகின்றன. வயிற்றில் இருக்கும் கரு, ஆணா, (அ) பெண்ணா என்று நிர்ணயிப்பதற்கு ஒரு ஜோடி குரோசோம் இருக்கிறது. இதற்கு ‘செக்ஸ் குரோசோம்’ என்று பெயர்.

கருவின் செக்ஸ் குரோசோம் XY என்றால் அது ஆணாகவும், XX என்றால் அது பெண்ணாகவும் பிறக்கும். முறையாக நடந்து கொண்டிருக்கும் போது இதில் எந்தவித இடைஞ்சலும் இல்லை. இயற்கையின் இயல்பில், இப்படி இருப்பதில், இந்த மகத்தான பணியில் மிகவும் அரிதாக தவறுகள் ஏற்படும். இந்த தவறால் பிறப்பவர்கள்தான். தவறி பிறந்த ‘அவர்கள்’ இந்த தவறுதலுக்கு மருத்துவம் தந்த பெயர் ‘மியூட்டேஷன்’ (Mutation) என்று தான் சொல்வோம். இதனால் XX ஆகவும் இல்லாமல், XY ஆகவும் இல்லாமல், XXY அல்லது XYY போன்ற தவறான ஜோடிகளாக அமைந்து விடுகின்றது.

ஒரு உடலில் இரு உறுப்பு:

ஒரு சில குழந்தைகளுக்கு ஆணின் உட்பாலுறுப்பும், பெண்ணின் உட்பாலுறுப்பும், ஆக ஒரு உடலிலேயே இருபாலின், உறுப்புகள் இருக்கும். இப்படிப்பட்ட பிறவிகளுக்கு ட்ரூ ஹெர்ம பிராடைட்டுகள் – True Hermaphorodite என்று பெயர். ஆனால் இப்படி பிறப்பது அரிது.

உள்ளே, வெளியே

ஒரு சில சமயங்களில் பெண்ணுக்கு உண்டான XX குரோசோம்களில் ஒரு குறையும் இருக்காது. ஆனால் நமக்கு ‘ஹலோ’ சொல்லும் ஹார்மோன்கள் அல்வா கொடுத்து குறைபாடுகளை உண்டாக்குகின்றன. அதாவது ஹார்மோன்களில் குறைபாடுகளால், அப்பெண்ணுக்கு உரிய உட்பாலுறுப்பும் ஆணுக்குரிய வெளிப்பாலுறுப்பும் அமைந்து விடுவது உண்டு. இந்த குறை ஆணுக்கும், பெண்ணுக்கும் அதாவது இருவருக்கும் ஆணுக்கு ஏற்பட்டால் Male Pseudo Hermaphroditism என்றும் பெண்ணுக்கு ஏற்பட்டால் Female Pseudo Hermaphroditism என்றும் சொல்கிறார்கள். மேலே விளக்கிய இரு வகையைச் சேர்ந்தவர்களே, இவ்வுலகில் அவர்களாகிய அலிகள். லட்சத்தில், பத்து லட்சத்தில் ஒருவருக்கு தான் இக்குறை ஏற்படும் என்றாலும், திருவிழாக் கூட்டம் போல தீர்ந்து போகாத அவர்கள் கூட்டம், நம்மை திக்குமுக்காடச் செய்கிறதே என்று வியக்கிறீர்களா? இதோ வித்தியாசமான, விவரமான விளக்கம். இவ்விளக்கத்தில் உருபவர்களும் இந்த அலிகளின் கூட்டத்தில் அடக்கம்.

‘டிரான்ஸ் வெஸ்டைட்ஸ்’ : (Trans Vestites)

குழப்பமான குழப்பத்தில், இவர்கள் மனதால் குழம்பிய மன நோயாளிகள்; தங்கள் எதிர்பாலினர் போலவே ஆடை, அணி கலன்கள், நடை, உடை, பாவனைகள் மற்றும் பலவற்றை அணிந்து பார்ப்பதில், அவர்களுக்கு அப்படியொரு, அலாதி இன்பம்.

உணர்வுகளின் உந்துதல் :
;
இவர்களை Trans sexuals என்கிறார்கள். இவர்களுக்கு தங்களின் பாலினை உணர்ந்து கொள்வதிலேயே, அப்படியொரு ஆட்டம் காணாத குழப்பமிருக்கும். ஆடை, அணிகலன்களில் மட்டுமில்லாமல், உடல் அளவிலும் எதிர்பாலினர் போல மாற வேண்டும் என்கிற உணர்வுகளின் உந்துதல் தொடர்ந்து உறுத்திக் கொண்டேயிருக்கும். உறுத்தலை, உதறித்தள்ள முடியாத மனதால் ஊனமுற்ற இவர்கள், உணர்வுகளுக்கு அடிபணிந்து ஆபரேஷன் செய்துகொண்டு, ஆள்மாறாட்டம் செய்வார்கள்.

கற்பனைக் காரணம்:

யூனக்குகள் (Eunuchs) என்ற வகையைச் சேர்ந்த ஆண்கள், வயதுக்கு வரும் முன்னே தங்களின் பாலுறுப்புகளை வெட்டி விடுவார்கள். அதனால் வயதுக்கு வந்ததும் பின்வரும் ஆண்மை தன்மை வராமல், மென்மையான ‘பெண்மை’ மிகுதியாக இருக்கும். வெட்டி விடுவதற்கான காரணத்தைக் கேட்டால் கடவுளையும், மதத்தையும் இன்னும் சில காரியத்தையும் செய்வார்கள். வெட்டுதல் வேடிக்கை. இதில் சோதனையோ, வேதனையோ, அவர்களுக்கு இல்லை.

ஒரு இனத்தில், இரு சேர்க்கை :

ஒரினச் சேர்க்கை உடைய சிலரும் இந்தக் கூட்டத்தில் சமயங்களில் சேர்ந்து கொள்வார்கள். இவர்கள் எல்லோரையும் உள்ளடக்கிய கூட்டத்தில் உள்ளவர்கள் தான் அலிகள். ஆக இது பெருங்கூட்டமாகவே இருக்கிறது.

பாலியல் தொழில் :

இவர்களில் பெரும்பாலானோர் இன்றைக்கும் கூட, வட இந்தியாவில் ‘கடவுளின் குழந்தைகள்’ என்று நம்பப்பட்டு பலர் தங்கள் குழந்தைகளுக்கு இவர்களிடம்ஆசி வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள், இன்றைக்கு பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் பரவ இவர்கள் முக்கிய காரணமாக கருதப்படுவார்கள். இவர்களிடம் சென்று வரும் நோயாளிகளின் மூலம் எய்ட்ஸ் நோய்க்கான காரணங்கள் அதிகரித்துள்ளன, என்று ஆதாரபூர்வமான அறிக்கைகள் சொல்கின்றன.

ஆண் - பெண் கலப்பு

ஆண் குழந்தை பெண் தன்மையுடனும், பெண்குழந்தை ஆண் தன்மையுடனும் பிறப்பதனை மருத்துவதில் Intersex disease என்கிறார்கள். இந்த ஆண், பெண் கலப்பைத் தடுப்பது சாத்தியமா ?

கர்ப்பிணிகள், குழந்தையை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடக் கூடாது. மாதவிடாமல் தள்ளிப் போடுவதற்கும், கரு கலைப்பிற்காகவும், கண்ட மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. அடிக்கடி எக்ஸ் - ரே எடுக்கக் கூடாது. கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமல் மருந்துகளை சுயமாக சாப்பிடக் கூடாது. சிலவகை மாத்திரைகளில் ஆண் ஹார்மோன் சக்தி உள்ளதால், கருவில் பெண் குழந்தைகள் உருவாகும் நிலையில் தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிறக்கும் பெண்குழந்தை ஆண் குறிகளுடன் பிறக்கவும் வாய்ப்பு உண்டு.

உறவை உதறுங்கள் :

திருமணத்தில் மட்டும் உறவுமுறை திருமணத்தை உதறித் தள்ளுங்கள் ஏனெனில் சமயங்களில் உடலில் உள்ள அட்ரீனல் சுரப்பியல் கோளாறு ஏற்பட்டு, கருவின் பாலுறுப்புகள் சரியாக வளர்வதற்கான ஹார்மோன் உற்பத்தியில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பிறவியிலேயே இப்படி இருந்தால், இதற்கு Congenital Adrenal Hyperplasia என்று பெயர்.

சிகிச்சை பயனளிக்குமா:

ஆண் - பெண் கலப்பு கோளாறுகளுடன் குழந்தை பிறந்தால் ஹார்மோன், குரோசோம் கோளாறை கண்டுபிடிக்க - அதாவது ஹார்மோன் அளவு,. குரோமோசோம்களின் எண்ணிக்கை, வடிவமைப்பு ஆகியவற்றை கண்டுபிடிக்க சோதனை செய்ய வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இச்சோதனைகள் செய்ய வேண்டும். அல்டரா சவுண்ட் சோதனையும் செய்வார்கள். பிறகு அறுவை சிகிச்சை செய்து, கோளாறுள்ள பாலுறுப்புகளை சரி செய்து பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். அதேதாய் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பம் அடையும் போது, கர்ப்ப காலத்திலேயே அனைத்து சோதனைகளும் செய்து, தேவையானால் ஹார்மோன் ஊசிகளை செலுத்தி இரண்டாவது குழந்தை கோளாறுடன் பிறப்பதைத் தடுக்க முடியும். ஆரம்ப நிலையிலேயே பெற்றோரும், மற்றோரும், மருத்துவரும் குழந்தைகளின் பால் உறுப்புகளை கவனித்தால், கோளாறிருந்தால் எளிதாக உடன் சரிசெய்யலாம். குழந்தைப் பருவத்தில் பார்க்கத் தவறி, பெரிய வயதில் கண்டுபிடித்தால் கூட ஒரு பெண்ணுக்கு, ஆண் தன்மையை அகற்றி, பூரண பெண்ணாக வாழும் வகையில், வழி செய்ய மருத்துவம் இருக்கிறது. ஒருவருக்கு எதிர் பாலுறுப்புகளோ (அ) அறிகுறியோ (அ) மனநிலை மாற்றாமோ இருந்தால் மருத்துவரிடம் மறைக்காமல், தயங்காமல் வெட்கமின்றி, அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக்க வேண்டும். வெளிச்சம் வெல்லும்.

சிகிச்சை பெறாவிட்டால்

உள் பாலுறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதாலும், பல்வேறு காரணங்களால் பலர் சிதைந்து போகிறார்கள். இப்படி சிதைந்த மனிதர்களே சீர்தூக்கி நிறுத்த, சிறப்பான மருத்துவம் உள்ளது என்பதனை அவர்கள் அறிய வேண்டும்.

ஆண் - பெண் கலப்புத்தன்மை கொண்டவர்கள் விளையாட்டுகளில் கலந்து கொள்ள முடியாது. தேசிய போட்டிகளில் வீரர்களாகட்டும், வீராங்கனைகளாகட்டும் இருவருமே மரபியல் மருத்துவரிடம் குரோமோசோம் சோதனை செய்துக் கொண்டு சான்றிதழ் பெற வேண்டும். நன்றாக இருந்தால் விளையாடலாம். இல்லை எனில் விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடி விட்டு இருக்கும்.

(நன்றி : மாற்று மருத்துவம் அக்டோபர் 2008)