தாய்லாந்தில் உள்ள பள்ளிகளில் மிகவும் சுத்தமான, முறையாக பராமரிக்கப்பட்ட கழிப்பறைகளைக் காணலாம். அத்தகைய கழிப்பறைகளைக் கொண்டுள்ளதற்காக கல்வித்துறையும், அரசும் மிகவும் பெருமைப்பட்டுக் கொள் கின்றன. தற்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார்கள். அரவாணிகளுக்கு தனி கழிப்பறையை உருவாக்கியுள்ளார்கள். கழிப்பறையின் வெளியில் ஆண், பெண் என்று எழுதி படங்களைப் போடுவதுபோல அரவாணிகளுக்கென தனிப் படத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்கள். இரு கழிப்பறைகளையும் உபயோகிக்க முடியாமல் இருந்த மாணவர்கள் நிம்மதியாக பெருமூச்சு விடுகிறார்கள்.

(நன்றி : மாற்று மருத்துவம் அக்டோபர் 2008)

Pin It