பிரிட்டன் தன்னுள் பல்வேறு நாடுகளின் மக்களை, மதத்தை, மொழியை, கலாச்சாரத்தை உள் வாங்கிக் கொண்டுள்ளது. அப்படி என்றால் ஹிந்து மதத்தையும் உள் வாங்கி உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. ஆமாம், ஹிந்து மதத்தையும் தன்னுள்ளே வைத்துள்ளது. அப்படி யானால், ஹிந்து மதத்தின் சாரமான ‘வர்ணாஸ்ரம’ தர்மத்தையும், ‘ஸனாதன’ தர்மத்தையும் தன் உள்ளே வைத்துள்ளதா? ஆமாம்.

ஹிந்து மதம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் ‘வர்ணாஸ்ரம’ தர்மமும், ‘ஸனாதன’ தர்மமும் உள்ளது. முதலாவதாக தமிழர்கள் தங்களை ஹிந்துக்களாக நம்புகிறார்கள். தமிழர்கள் தங்களை ஹிந்துக்கள் என்று நம்பும் அறியாமையே பெரிதும் நிலவுகிறது. ஹிந்து எனும் வார்த்தை தமிழும் இல்லை. ஹிந்து எனும் மதம் தமிழரின் மதமும் இல்லை.

ஆனாலும் தமிழர்கள் தங்களை ஹிந்துக்கள் என்று நம்புவதற்கு மிக முக்கிய காரணம் பிரிட்டி ஷாரே. பிரிட்டிஷார் தாங்கள் ஆண்ட இந்தியா, இலங்கை எனும் நிலப் பகுதியில் சைவ மதம், வைணவ மதம் ஆகிய அனைத்தையும் ஒரே கூட்டாக ‘ஹிந்து’ மதம் என்று அரசாங்கப் பதிவில் குறிப்பிட்டு விட்டார்கள். இந்த ‘ஹிந்து’ எனும் சொல் ‘வர்ணாஸ்ரம’ பிரியர்களுக்கும், ‘ஸனாதன’ பிரியர்களுக்கும் நல்லதொரு முகமூடியாக வாய்த்து விட்டது.

பணம் வேண்டிய போதும், தன் சமூக உயர்வு வேண்டிய போதும் எல்லோரையும் ஒருங்கிணைத்து ‘ஹிந்து’ என்று வேசம் கட்ட வசதியாக இருக்கிறது. சமூக உயர்வு என்று குறிப்பிடுவது, தமிழர் தன் இல்லத்தில் நடத்தும் அனைத்து வாழ்வியல் நிகழ்ச்சியிலும் பார்ப்பனரையே வைத்து நடத்து கின்றனர். (எ.கா: திருமணம், திதி, புதுமனை குடி புகுதல் மற்ற சடங்கு சம்பிரதாயம் எதுவானாலும்.)

இலண்டனில் நிறைய ஹிந்துக் கோயில்கள் இருக்கின்றன. அவற்றின் பணப்புழக்கத்தை மட்டும் பார்த்தாலே எவ்வளவு அறியாமை மற்றும் மூட நம்பிக்கை, தமிழர் மத்தியில் உழல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். எந்த ஒன்றையும் அளவிட முடிந்தால்தான் அதில் எது சரி? தவறு எது? என்பதை மதிப்பிட இயலும். கீழே லண்டனில் உள்ள 18 கோவில்களின் வருவாய் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

flow chart temples 600

Reference: http://beta.charitycommission.gov.uk/

மேலே குறிப்பிட்டுள்ள சில இலண்டன் ஹிந்து கோவில்களின் மொத்த வருமானம் மட்டுமே £ 25.89 Million கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 250 கோடி ரூபாய். வெறும் 18 கோவில்களில், அதுவும் இலண்டனில் மட்டும்.

இவ்வளவு வருவாயையும் ‘வர்ணாஸ்ரம’ தர்மத்தின் படிநிலையில் உயர் ஜாதியாய் இருக்கும் பிராமணர்கள் மட்டுமே அளித்திருப்பார்கள் என்று நம்ப இயலாது. மாறாக இந்த பெரும் வருவாயை, பெரும் தொகையை ‘வர்ணாஸ்ரம’ அடுக்கில் கீழ் நிலையில் உள்ள சூத்திரர்களும் பஞ்சமர்களுமே அளித்திருப்பார்கள் என்று உறுதியாக கூற முடியும்.

நம் கேள்வி எல்லாம் இவ்வளவு பணம் செலவு செய்யும் எந்த சூத்திரரும், எந்தப் பஞ்சமரும் தான் ஏன் கீழ் ஜாதி? என்று என்றாவது எண்ணி இருப்பார் களா? எந்தப் பெண்ணாவது மாதத்தில் மூன்று நாட்கள் தான் ஏன் கோவிலுக்குப் போகக் கூடாது என்று எண்ணி இருப்பார்களா? என்றால் இதுவரை யில் இல்லை என்றே சொல்லலாம். எப்போது இந்த எண்ணம் வரும்? சுயமரியாதை உணர்வு ஓங்கும் போது வரும். தன்மானம் தழைத்தோங்கினால் வளரும். 

அது மட்டுமா, எந்த ஹிந்துக் கோயிலிலும்   உயர் ஜாதி பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக இருக்க முடிகிறது. எந்த ஹிந்துக் கோயிலிலும் சூத்திரரோ அல்லது பஞ்சமரோ அர்ச்சகராக பணி  ஆற்ற முடியாது. காரணம் ? ஹிந்து மதத்தின் ‘வர்ணாஸ்ரமம்’ மற்றும் ‘ஸனாதனம்’

அது என்ன வர்ணாஸ்ரமம்’?

‘வர்ணாஸ்ரமம்’ என்றால் ஹிந்து மத அடுக்கில் நான்கு படி நிலைகள் இருக்கின்றன

1. பிராமணர்,  2.சத்திரியர், 3.வைசியர், 4.சூத்திரர் இதற்கு அடுத்து வரும் பஞ்சமர்கள் அவர்ண்ஸ்தர்கள்  ஆவர்.

அது என்ன ஸனாதனம்’?

‘ஸனாதனம்’ என்றால் நிலையானது. ஜாதி என்பது பிறப்பால் நிலையானது.

பணத்தையும் கொடுத்து, தன்மானத்தையும் இழந்து, பகுத்தறிவையும் இழந்து, பொருள் இழந்து, நேரம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை இழந்து நிற்கும் ஒரு இனமாகத்தான் லண்டனில் தமிழர்கள் இருக்கிறார்கள்.

அதற்காக சுயமரியாதைக்காரர்கள், பகுத்தறி வாளர்கள், முற்போக்காளர்கள் தமிழ் இனத்தில் இல்லவே இல்லை என்று கூற முடியாது.  இருக்கிறார்கள்! மிக மிகச் சொற்பமாக.  அரிதினும் அரிதாக.

தமிழர்கள் பொருளாதாரத்தில் மேலோங் கியும், தன்மானத்துடனும், பகுத்தறிவுடனும் வாழ வேண்டும் என்று யார்தான் விரும்ப மாட்டார்கள்? எது எப்படியோ? பிரிட்டன் அரசாங்கத்தை ஒரு வகையில் பாராட்டலாம். சமீபத்தில் ‘பிரிட்டனில் ஜாதியும் சமத்துவச் சட்டமும்’ எனும் முன்னெடுப் பை எடுத்து வருகிறார்கள்.

அதாவது ‘ஜாதி’ என்பதை பிரிட்டனில் சமத்துவச் சட்டத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? அதற்கு உரிய ஆதாரங்கள் என்ன என்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு வாக்கெடுப்பை இதற்கு முன்னர் 2010-இல் நிகழ்த்தி இருக்கிறது பிரிட்டன் பாராளுமன்றம். அப்போது ஜாதியை சமத்துவச் சட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று முடிவெடுத் துள்ளார்கள். அதாவது, ஜாதியை சமத்துவச் சட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று 307 பேர் வாக்களித்துள்ளார்கள். ஜாதியை சமத்துவச் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று 243 பேர் வாக் களித்துள்ளார்கள். Reference : http://www.tamilsolidarity.org/british-mps-refuse-to-outlaw-caste-discrimination/

243 எம்.பி க்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று வாக்களித்து இருப்பது சாதாரண எண்ணிக்கை இல்லை. மிகப் பெரிய எண்ணிக்கை. இன்னும் 30 பேர் கூடுதலாக மனிதநேயத்துடன் சிந்தித்து வாக்களித்தால் போதும்.

இப்போது மீண்டும் ஒரு கலந்தாய்வை  பிரிட்டன் பாராளுமன்றம் முன்னெடுக்கிறது. பிரிட்டன் பாராளுமன்றத்தின் குறிப்பை வாசிக் கையில் அவர்கள் ஆதாரங்களை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நாம் வைக்கும் ஆதாரம் இதுதான்.

எல்லா ஹிந்துக் கோவில்களும் தங்களைத் தொண்டு நிறுவனமாக அரசாங்கத்திடம் பதிவு செய்துள்ளார்கள். அந்த ஹிந்துக் கோயில்களின் வருமானமும் அரசாங்கத்திடம் அதிகாரப் பூர்வமாக உள்ளது. பொது வெளியிலும் உள்ளது. இவ்வளவு பணத்தையும் சொத்தையும் ‘கடவுள்’ கொடுத் திருப்பார் என்று அரசாங்கமும் நம்பாது. எம்.பி.க் களும் நம்பமாட்டார்கள் என்று நம்பலாம். இவ்வளவு பணத்தையும் சொத்தையும் கொடுத்த ஹிந்து மக்களில், மேல் ஜாதியான பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அர்ச்சகர் வேலைக்கு ஆள் எடுக்கும் போதும் பிராமணர்களாக இருக்க வேண்டும் என்று தெளிவாக விண்ணப்பம் வெளி யிடுவது இதனை உறுதிப்படுத்துகிறது. Reference : http://www.venkateswara.org.uk/Vacancies

வெகு சொற்பமான பார்ப்பனர்கள் அர்ச்சக ராகவும், மிக அதிகமான பார்ப்பனர் அல்லாத ஹிந்துக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் அர்ச்சகர் ஆக முடியாத சூழல் பொதுமக்கள் நிதி ஆதாரத்தில் நடைபெறும் நிறுவனத்தில் இருப்பது எதைக் காட்டுகிறது? இவையே அரசாங்கத்தின் முன் உள்ள ஆதாரம். பார்க்கலாம், பிரிட்டன் பாராளுமன்றம் மனிதத்தின் பக்கமா? ஜாதியின் பக்கமா? என்று காலம் பதில் சொல்லும்.

Pin It