1) உலகவங்கியில் பணியாற்றிய இமானுவேல் ஜிமெனெஸ் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டு பொருளாதார நிபுணர் 1986-இல் வளரும் நாடுகளில் கல்வி மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசுகள் அளிக்கும் மானியங்கள் குறித்துThe public subsidization of education and health in developing countries : a review of equity and efficiency என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார்.
2) அந்த ஆய்வின் அடிப்படையில் உலகவங்கி, தனக்குக் கட்டுப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்தது. அதனால், உயர் கல்வி மற்றும் உடல்நலத் துறையில் தனியாரின் ஆதிக்கம் உயர்ந்தது. இத் துறைகளின் அரசு மானியங்கள் அதிரடியாகக் குறைக்கப்பட்டன. கல்வி, மருத்துவக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டன. 1991 க்குப் பிறகு இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் பெருகின.
3) உலக வர்த்தகக் கழகம், 1995 ஆம் ஆண்டு கல்வி, நல்வாழ்வு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சேவைத் துறைகளை வணிகப் பொருளாக வரையறை செய்து GATS என்ற பெயரில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியது. அதற்கு இந்தியாவும் கட்டுப்பட்டது.
4) உலக வங்கி, காட் ஒப்பந்தங்களைச் செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருந்தவர் நேற்றுவரை வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நிர்மலா சீதாராமன். திறமையாக நீட்டைச் செயல்படுத்தி, உலக எஜமானர்களுக்கும், தனது பார்ப்பன இனத்திற்கும் செய்த சேவைக்குப் பலனாக, இன்று அவர் பாதுகாப்புத்துறை கேபினட் அமைச்சராக உயர்ந்துள்ளார்.
5) அகில உலக அளவில் மருத்துவக்கல்வியை நிர்வகிப்பது World Medical Association அதன் தலைவராக இருப்பவர் குஜராத்தைச் சேர்ந்த பார்ப்பனர் கேதான் தேசாய்.2010-இல் இவர் இந்திய மருத்துவக் கழகத்திற்குத் தலைவராக இருந்தார். பா.ஜ.க. பிரதமர் மோடியின் பரிந்துரையால் உலக மருத்துவக் கழகத்திற்குத் தலைவரானார்.
6) உலக வங்கி, காட் ஒப்பந்தம், அந்த ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன், கேதான் தேசாய் போன்ற பார்ப்பனர்கள், பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்ட மோடி அரசு. மோடி அரசுக்குக் கட்டுப்பட்ட தமிழ்நாட்டு அரசாங்கம் என அனைவரும் டாக்டர் அனிதா அவர்களின் படுகொலைக்கும் இனி நடக்கப் போகும் பல இழப்புகளுக்கும் அடிப்படைக் காரணங்கள்.
7) உலக மருத்துவக் கழகத் தலைவரான கேதான் தேசாய், 2010-இல் இந்திய மருத்துவக் கழகத் தலைவராக இருந்தபோது, ஊழல் செய்து சி.பி.ஐ. யால் கைது செய்யப் பட்டார். கைது செய்யப்படும் போது 1800 கோடி ரூபாய் பணமும், 1500 கிலோ தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கொள்ளைக்கான வாய்ப்பைக் கொடுத்தது, மருத்துவ மாணவர் அனுமதி, மருத்துவக் கல்லூரி அனுமதி என்ற இரண்டும் தான்.
8) வெறும் பத்தாயிரம் ரூபாய்க்குள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நாம் இடம் பெற்று வந்தோம். தனியார் கல்லூரிகள் மறைமுகமாக 1 கோடி வரை நன்கொடை பெற்று மாணவர்களை அனுமதித்து வந்தன. இன்று வெளிப்படையாகவே 1 கோடி வரை நன்கொடை பெறுவதற்கு நீட் வழிவகுத்துள்ளது.
9) அகில உலக அளவில், மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல் என்றால் அது, பி.ஜே.பி அரசால் நடத்தப்பட்ட ‘வியாபம்’ ஊழல்தான். மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கூட்டணி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த இந்த ஊழல் குறித்த விசாரணைகளில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
10) சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நீட் தேர்வுக்கான தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாதென விதி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அனைத்து முன்னணி நாளேடுகளிலும் முதல் பக்கத்திலேயே நீட் தேர்வுத் தனிப்பயிற்சிக்கான முழுப்பக்க விளம்பரங்கள் வெளிவருகின்றன. சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இதுவரை அதைக் கண்டு கொள்ளவில்லை. பள்ளிப்படிப்போடு சேர்ந்து நீட் தேர்வுப் பயிற்சிக்கு ரூ 1 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் முதலாளிகள் முதல் உலக அளவிலான முதலாளிகள் வரை அனைவருக்கும் கொள்ளைக்கான கதவைத் திறந்து விட்டிருப்பதே நீட்.
11) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் Bureau of Planning, Monitoring and Statistics ன் 2014 ஆம் ஆண்டு அறிக்கைப்படி இந்தியா முழுவதும் 32 வகையான கல்வித்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு கல்விமுறையும் அந்தந்த தேசிய இனங்களின் வரலாற்றையும், அடையாளங் களையும் அடிப்படையாகக் கொண்டவை. அனைத்து தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்துவிட்டு, ஒற்றைப் பார்ப்பன அடையாளத்தை, ஆரியப் பண்பாட்டைத் திணிக்கும் ஆதிக்க முயற்சி தான் சி.பி.எஸ்.இ. என்ற கல்வி முறையில் மட்டுமே நடத்தப்படும் நீட் தேர்வு.
12) முதலில் இந்தியைத் திணித்தார்கள். மெல்ல மெல்ல சமஸ்கிருதத்தை நுழைத்து விட்டார்கள். அதுபோல, முதற்கட்டமாக சி.பி.எஸ்.இ. முறை நுழைக்கப்படும். அது வெற்றி பெற்ற பிறகு அவை முற்றிலும் பார்ப்பன வேதக் கல்விமுறை திணிக்கப்படும். இப்போதே அதற்கான அடிப்படைப் பணிகள் முடிந்து விட்டன.
13) மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் இயங்கும் மகரிஷி சண்டிபாணி ராஷ்ட்ரிய வேத வித்யா ப்ரதிஸ்தான் (MSRVVP ) என்ற அமைப்பிடம் இந்த வேதக்கல்விமுறை (Ved Vidya - Vedic education board) ஒப்படைக்கப் பட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாக இது இயங்கும். தேவி ப்ரசாத் திரிபாதி என்ற பார்ப்பனர் இதன் செயலாளர்.
14) இந்த MSRVVP 1987 முதல் ஒரு தனியார் கல்வி நிறுவனம் போல இயங்கி வந்தது. இதுவரை இந்தியா முழுவதும் 450 பாரம்பரிய வேதக்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கி, வேதக்கல்வியைப் பரப்பி வந்தது. மோடி அரசு உருவான பிறகு மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருதன்னாட்சி பெற்ற நிறுவனமாகவே இயங்குகிறது.
15) கல்வி, மத்திய அரசின் பட்டியலில் இருந்து, மாநிலப் பட்டியலுக்கு உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும். இல்லையேல், மருத்துவக் கல்வி மட்டுமல்ல, பொறியியல், கலை, அறிவியல், சட்டம், பொருளாதாரம் போன்ற அனைத்துக் கல்விகளும் நமக்கு எட்டாக்கனியாகிவிடும். நம் காலத்திலேயே சி.பி.எஸ்.இ. யும் நீக்கப்பட்டு வேதக் கல்வி முறை நடைமுறைக்கு வந்துவிடும்.
16) இந்த ஆண்டு வெளியிடப்பட்ட‘நீட்’ படி தரவரிசைப் பட்டியலில், வெளி மாநில மாணவர்கள் 1,458 பேர் இடம்பெற்றனர்; தமிழ்நாட்டில் அரசு மற்றும் நிர்வாக இடங்களே மொத்தம் 4731 தான். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 189 கேரள மாணவர்கள் கேரள மாநிலத் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருக்கின்றனர். தமிழ்நாட்டுத் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருக்கின்றனர்.
17) நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்த வெளி மாநில மாணவர்கள் 1,269 பேர். இதில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் 188 பேர். தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் 149 பேர். வேறுபல மாநிலத்தவர் 932 பேர். இவர்கள் பெரும்பாலும் போலி இருப்பிடச் சான்று கொடுத்தே தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
18) நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் தான் வடிவமைக்கப்படும் என்றது நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. அமைப்பு. ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சி.பி.எஸ்.இ. யில் படித்தால் கூட மருத்துவராகிவிடக் கூடாது என்ற பார்ப்பன ஆதிக்க எண்ணத்தில், தமிழ்நாட்டுக்கு மட்டும் தனியான, கடினமான கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டது.
19) நீட் எழுதும் மாணவர்களுக்குரிய பதிவு எண்கள், இந்தியா முழுதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக 9 இலக்க எண்களாக இருந்தன. தமிழ்நாட்டு மாணவர்களைத் தனியாக அடையாளம் கண்டு வடிகட்டுவதற்கு வசதியாக தமிழ்நாட்டுக்கு மட்டும் 8 இலக்க எண்களாக இருக்கிறது.
20) இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி இடங்களும் நீட் தேர்வின் ஒற்றைச்சாளர முறையின் கீழ் வந்து விடும் என்றது நீட் தேர்வு அமைப்பு. ஆனால் புதுடெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் போன்ற மருத்துவக்கல்லூரிகளின் இடங்கள் நீட் டுக்குள் வரவே இல்லை.
21) தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்களின் போராட்டங்கள் - திராவிட இயக்கங்களின் ஆட்சிகளினால், எளியவருக்கும் மருத்துவக் கல்வி சாத்தியமானது. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக, பிற்படுத்தப்பட்டோர், அதில் உள்பிரிவாக இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அதில் உள்பிரிவாக அருந்ததியினர் என அனைத்துப் பிரிவு சமுதாயத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் இன்று மருத்துவக் கல்லூரியில் படித்து, சிறப்பான மருத்துவர்களாகப் பணியாற்றுகின்றனர்.
22) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் கல்வி உரிமையைப் பறிக்கவும் - அப்பன் தொழிலையே பிள்ளை பார்க்க வேண்டும் என்ற குலக்கல்வி முறையை மீண்டும் நிலைநிறுத்தவும் - பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளையர்களால் உருவாக்கப்பட்ட சூழ்ச்சி வலைதான் ‘நீட்’ தேர்வு.
கல்வியை மாநிலங்களின் உரிமையாக்குவோம்! நீட்டை நிரந்தரமாக நிறுத்துவோம்!
NEET எதிர்ப்பு மாணவர்கள்