தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப் பொங்கல்

1. ப.வடுகபாளையம், பல்லடம், திருப்பூர்

இங்கு சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் சமத்துவப் பொங்கல் என்ற பெயரில் முன்னெடுத்தனர். சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்குச் சொந்தமான அண்ணன்மார் கோயில் முன்பு நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்ச்சி சமத்துவப் பொங்கல் என்ற பெயரில் நடை பெற்றாலும் மற்ற எந்தச் சமூக மக்களும் இவ்விழாவில் கலந்து கொள்வதில்லை. கொண்டாடு வதும் இல்லை.

2. சாமிக்கவுண்டம்பாளையம், பல்லடம், திருப்பூர்

கவுண்டர் - சக்கிலியர் சமூகங்கள் வசிக்கும் ஊராக இருந்தாலும், இங்கு சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள். அந்தச் சக்கிலியர் சமூகம் வசிக்கும் பகுதியில் நிகழ்ச்சிகள் நடத்தி சக்கிலியர் மட்டுமே கொண்டாடினர்.

pongal 5363. J.K.J காலனி, பல்லடம், திருப்பூர்

பல்லடம் இந்து முன்னணியைச் சார்ந்த இளைஞர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். இதில் பெரும்பாலும் குறவர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களும் இதர தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும் இருந்தனர். இவ்விழா சேரியில் நடந்தது.

4. சுக்கம்பாளையம், பல்லடம், திருப்பூர்

சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் விழாவை முன்னெடுத்துக் கொண்டாடினர். சக்கிலியர் சமூகம் வசிக்கும் இடத்தில் மேடை அமைத்து, கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாடினர். அங்கே வசிக்கும் மற்ற சமூகத்தைச் சார்ந்த யாரும் கலந்து கொள்வது இல்லை. அங்கு உள்ள கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த இருவரைத் தலைமை ஏற்க வைத்து நடத்தச் செய்தனர்.

5. நாதேகவுண்டம் பாளையம், பொங்கலூர், திருப்பூர்

சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் நடத்தினர். இவ்விழாவும் சேரிப்பகுதியில் தான் நடந்தது. மற்ற எந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கலந்து கொள்ளவில்லை. இந்த ஊரில் இன்றும் மிகக் கொடிய முறையில் தீண்டாமை நடைமுறையில் உள்ளது.

6. தெற்குப்பாளையம், பல்லடம், திருப்பூர்

காலனியில் சக்கிலியர் சமூக ‘தென்றல் இளைஞர்கள் நற்பணி மன்றம்’ சார்பாக நடத்தப்பட்டது இங்கு உள்ள வேறு எந்தச் சமூக மக்களும் இந்தப் பொங்கல் விழாவில் கலந்துகொள்வது இல்லை.

7. வெங்கிட்டாபுரம், பல்லடம், திருப்பூர்

இந்து முன்னணியைச் சார்ந்த சக்கிலிய இளைஞர்கள் கொண்டாடினர். ஆனால் இளைஞர்கள் என்கிற பெயரில் கொண்டாடினர். இது சேரிப்பகுதியில் தான் நடந்தது. மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளுவதில்லை.

8. ஜோத்தியம்பட்டி (குண்டடம்) தாராபுரம், திருப்பூர்

சக்கிலியர் சமூகம் வசிக்கும் பகுதியில் சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்த மக்கள் கொண்டாடினர். வேறு எந்த சமூகத்தைச் சார்ந்த மக்களும் இப்பொங்கல் விழாவில் கலந்துகொள்வதுமில்லை கொண்டாடுவதுமில்லை.

9. செங்கோடம்பாளையம் (குண்டடம்), தாராபுரம், திருப்பூர்

இங்கு சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் பொங்கல் விழா கொண்டாடினர். சக்கிலியர் வசிக்கும் பகுதியில்தான் கொண்டாடப் பட்டது. மற்ற எந்தச் சமுதாயத்தைச் சார்ந்த மக்களும் கலந்துகொள்வதுமில்லை கொண்டாடுவதுமில்லை.

10. ராவத்தூர், சூலூர், கோவை

இருகூர் பஞ்சாயத்து ராவத்தூர் கிராமம் கலைஞர் நகர், சக்கிலியர் சமூக இளைஞர்களால் கொண்டாடப்பட்டது. சக்கிலியர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில்தான் நடந்தது. மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள்.

11. இருகூர், சூலூர், கோவை

இருகூர் ஏ.ஜி புதூர் பகுதியில் மதுரைவீரன் நண்பர்கள் என்ற பெயரில் 8 ஆம் ஆண்டாக அங்குள்ள சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பொங்கல் கொண்டாடினர். இதுவும் சக்கிலியர் வசிக்கும் பகுதியில்தான் நடந்து.

12. புலியகுளம், கோவை

புலியகுளம் மாரியம்மன் கோவில் பகுதியில் ‘தேவேந்திரகுல வேளாளர் பஞ்சாயத்து சபை’ சார்பாக ‘இந்திர விழா’ என்கிற பெயரில் கொண்டாடப்பட்டது. பள்ளர் சமூகம் மட்டுமே இதைக் கொண்டாடினர்.

13. பாப்பம்பட்டி, சூலூர், கோவை

அயோத்திபுரம் பகுதியில் கவுண்டர் சமூதாயத்தைச் சார்ந்தவர்கள் தனியாக பொங்கல் கொண்டாடுவார்கள். மற்ற சமூகத்தை சார்ந்தவர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் தனிப்பொங்கல்

1. சூலூர் (காங்கேயம் பாளையம்), கோவை

காங்கேயம் பாளையம் பெரிய பிள்ளையார் கோவில் வீதியில் ‘விவேகானந்தர் நற்பணி மன்றம்’ சார்பாக காங்கேயம்பாளையம் காவிப்படை என்கிற பெயரில் 4 ஆம் ஆண்டு பொங்கல் விழா பிற்படுத்தப்பட்ட மக்களால் கொண்டாடப்பட்டது.

2. வரதராஜபுரம், சிங்காநல்லூர், கோவை

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF)  வரதராஜபுரம்மேடு கிளை சார்பாக 20 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழா பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பாகக் கொண்டாடப்பட்டது.

3. இலட்சுமி மில்ஸ், பல்லடம், திருப்பூர்

இங்கு பல்வேறு பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடினர். இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்துகொள்ள அனுமதிப் பதில்லை.  

4. செம்மிபாளையம், பல்லடம், திருப்பூர்

கவுண்டர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் கொண்டாடினர். கவுண்டர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தான் நடந்தது. இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்.

5. அனுப்பட்டி, பல்லடம், திருப்பூர்

கவுண்டர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் கொண்டாடினர். கவுண்டர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தான் பொங்கல் விழா நடந்தது. இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை.

6. கோடாங்கிபாளையம், பல்லடம், திருப்பூர்

பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அருகருகே வசிக்கின்றனர். இங்கு பொங்கல் விழா 24 வருடமாக கொண்டாடினாலும் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்துகொள்வதில்லை. முதன்மையாக முன்னின்று நடத்துவது கவுண்டர் சமூதாயத்தைச் சார்ந்தவர்கள்.

ஒரே ஊரில் இரட்டைப் பொங்கல்:  

1) சூலூர், கோவை

சக்கிலியர் சமூகம் வசிக்கும் கிழக்கு அங்காளம்மன் கோவில் வீதியில் காந்தி நற்பணி மன்றம் சார்பாகக் கொண்டாடப்பட்டது. வேறு எந்தச் சமூகமும் கலந்துகொள்ள மாட்டார்கள்.

மதியழகன் நகர் முதல் வீதி மற்றும் இரண்டாம் வீதியில் வசிக்கும் பள்ளர் - பறையர் சமூக மக்கள் இணைந்து பொங்கல் விழா கொண்டாடினர்.

இங்கு மூன்றாம் வீதியில் வசிக்கும் சக்கிலியரை இணைத்துக்கொள்ள மாட்டார்கள். சக்கிலியர் சமூகம் கலந்துகொண்டால் பிரச்சனைகள் நடக்கும் என்பதால் அவர்கள் கலந்துகொள்ளுவதில்லை. சக்கிலியர் தனியாக பொங்கல் விழா நடத்தி கொண்டாடுவார்கள் இந்த முறை சக்கிலியர் சமூகம் கொண்டாடவில்லை.

பொங்காளியம்மன் கோவில் வீதியில் தேவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் தனியாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவார்கள் இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்.

2) காளிவேலாம்பட்டி, பல்லடம், திருப்பூர்

15 ஆம் தேதி DYFI சார்பாக சக்கிலியர் மக்கள் மட்டுமே நடத்தி கொண்டாடினர். 16 ஆம் தேதி கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவர்களும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் இணைந்து கொண்டாடினர். காந்தி நகர் பகுதியில் இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் தனியாகக் கொண்டாடினர்.

3) மாணிக்காபுரம், பல்லடம், திருப்பூர்

15 ஆம் தேதி சக்கிலியர் சமூக மக்களைத் திட்டமிட்டே தவிர்த்து பொதுவழியை மறைத்து யாரும் வர முடியாதபடி அங்குள்ள கவுண்டர் சமுதாயத்தினர் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். அதற்கு அடுத்த நாள் 16 ஆம் தேதி அங்குள்ள சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் தனியாக, பொங்கல் விழா கொண்டாடினர்.

4) கண்ணம்பாளையம், சூலூர், கோவை

இங்கு AIYF சார்பில் மூன்று விதமாகப் பொங்கல் விளையாட்டு விழா கொண்டாடப்படுகிறது. அங்குள்ள CPI கட்சிப் பிரமுகர்கள் மூன்று இடத்திலும் சென்று சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள்.

ஒன்று, 6 வது வார்டு அம்பேதகர் நகர் சக்கிலியர் சமூகத் தனிப்பொங்கல்.

இரண்டு,  மருதம் நகர் மற்றும் வ.உ.சி நகர் ஆகிய இரண்டு பகுதிகளிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சார்பாகக் கொண்டாடுவார்கள்.

மூன்று, K.V.R. நகர் கவுண்டர் சமுதாயத்தின்  தனிப் பொங்கல்..

திண்டுக்கல் மாவட்டம்: ஆத்தூர் ஒன்றியம்

ஆத்தூர்:

பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் கள்ளர், நாயக்கர், வன்னியர் (இந்து) வசிக்கும் பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மட்டும் இணைந்து பிற்படுத்தப்பட்டோர் பொங்கல் நடத்தப்படுகிறது. விளையாட்டு விழாவோடு சேர்த்து இரண்டு நாட்கள் நடத்துகின்றனர்.

தலித் மக்களின் காலனிப்பகுதிகளில் பறையர் சமுதாயம் தனியாகவும், அருந்ததியினர் தனியாகவும் என காலனிக்குள்ளேயே இரட்டைப் பொங்கலை நடத்துகின்றனர். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் யாரோடும் இல்லாமல், பள்ளர் சமுதாயம் தனியாக ஒரு பொங்கலை நடத்துகிறது.  

கிறிஸ்துவ மதத்தில் மாட்டுப்பொங்கலுக்கு அடுத்தநாளை அந்தோணியார் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய நாளில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் தனியாகவும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் (பறையர்) தனியாகவும் வழிபடுகின்றார்கள். விழாவாக இல்லாமல் பொங்கல் மட்டும் வைத்து கால்நடைகளை ஓட்டிவந்து மந்திரித்துச் செல்வார்கள். முஸ்லீம்கள் பொங்கல் விழா நடத்துவது இல்லை.

அக்கரைப்பட்டி:  இந்து வெள்ளாளர், கள்ளர், அருந்ததியர், பள்ளர் சமூகத்தினர் தனித்தனியாக பொங்கல் விளையாட்டு விழா   நடத்துகின்றனர்.

பாறைப்பட்டி: பிற்படுத்தப்பட்ட சமுதாயம் (கள்ளர்) தனியாகவும், தாழ்த்தப்பட்ட (பள்ளர்) சமுதாயம் தனியாகவும் பொங்கல் விளையாட்டுப் போட்டியினை நடத்துகின்றனர்.

ஒட்டன்சத்திரம் ஒன்றியம்

சாலைப்புதூர்: செட்டியார், ஒக்கலிகர், பிள்ளைமார், பள்ளர்கள் ஆகிய ஜாதியினர் இணைந்து தனிப்பொங்கல், சக்கிலியர் மட்டும் தனிப் பொங்கல்

அரங்கநாதபுரம்: கொங்குக் கவுண்டர் தனிப்பொங்கல்

லெக்கையன் கோட்டை: நாயக்கர் தனிப் பொங்கல், சக்கிலியர் தனிப்பொங்கல்

புதுச்சத்திரம்: கொங்குக் கவுண்டர் தனிப்பொங்கல், காலனியில் சக்கிலியர் தனிப்பொங்கல்

எட்டமநாயக்கன்பட்டி: நாயக்கர் தனிப்பொங்கல், சக்கிலியர் தனிப்பொங்கல்

புதுஅத்திக்கோம்பை: ஒக்கலிகர் மற்றும் கொங்குக் கவுண்டர் இணைந்து தனிப்பொங்கல், சக்கிலியர் தனிப்பொங்கல்

கொல்லபட்டி: தேவர், நாயக்கர், பிள்ளைமார் இணைந்து தனிப்பொங்கல், சக்கிலியர் தனிப்பொங்கல்

அத்திக்கோம்பை: வேட்டுவக்கவுண்டர் தனிப் பொங்கல், பிள்ளைமார் தனிப்பொங்கல், பறையர் தனிப்பொங்கல், சக்கிலியர் தனிப்பொங்கல்

கே.கே.நகர்-ஒட்டன்சத்திரம்: பிள்ளைமார் தனிப் பொங்கல், சக்கிலியர் தனிப்பொங்கல்

நாகனம்பட்டி: ஒக்கலிகர் தனிப்பொங்கல், நாடார் தனிப்பொங்கல், கொங்குக் கவுண்டர் தனிப் பொங்கல், சக்கிலியர் தனிப்பொங்கல்

காந்திநகர்-ஒட்டன்சத்திரம்: தேவர்களும், குறவர் களும் இணைந்து தனிப்பொங்கல், சக்கிலியர் தனிப்பொங்கல்

திடீர்நகர்: தேவர் தனிப்பொங்கல், சக்கிலியர் தனிப்பொங்கல்

தங்கச்சியம்மாபட்டி: பறையர் தனிப்பொங்கல், பள்ளர் தனிப்பொங்கல், சக்கிலியர் தனிப்பொங்கல், போயர் தனிப்பொங்கல், கொங்குக் கவுண்டர் தனிப்பொங்கல் இந்த ஊரில் அரசு சார்பில் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாக கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது.

கொசவபட்டி: கொங்குக் கவுண்டர் தனிப்பொங்கல், சக்கிலியர் தனிப்பொங்கல்,

அம்பிளிக்கை: சக்கிலியர் தனிப்பொங்கல், பறையர் தனிப்பொங்கல், கொங்குக்கவுண்டர் தனிப் பொங்கல்.

சிந்தலப்பட்டி: சக்கிலியர் தனிப்பொங்கல், கொங்குக் கவுண்டர் தனிப்பொங்கல்..

Pin It