குறிப்பு: இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள தமிழ் இலக்கியச் சான்றுகள் அருணனின் “தமிழரின் தத்துவ மரபு” (முதல் பகுதி) என்ற நூலிலிருந்து ஏறக்குறைய / அப்படியே எடுத் தாளப்பட்டுள்ளன.

மாட்டுக் கறியை மூலதனமாக வைத்து கசாப்புக் கடை அரசியலை நடத்தி வருகின்றன ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள். தாத்ரி படுகொலை, ஜம்முவில் மாடுகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநர்கள் கொலை என முஸ்லீம்களுக்கு எதிரான மதவெறி தாக்கு தல்களுக்கு “கோ மாதாவை” பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். இந்துக்களின் உணர்வை “பசுவதை” புண்படுத்துவதாகவும் “பாரத”ப் பாரம்பரியத்திற்கு எதிரானதெனவும் முழங்கி முஸ்லீம்களுக்கெதிராகவும் தலித்துகளுக்கெதி ராகவும் பகைமை உணர்வைப் பரப்பி வருகின்றனர். நாடு முழுக்க பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர வேண்டுமென பெருங்கூச்சல் போட்டு வருகின்றனர்.

உண்மையில், ஆர்.எஸ்.எஸ். தூக்கிப் பிடிக்கும் பிராமணிய சக்திகளால் எல்லாக் காலத்திலும் மாட்டுக்கறி மறுக்கப்பட்டதா? இவர்களின் புனித நூலான வேதம் மாட்டுக்கறியைத் தடை செய் துள்ளதா? இதற்கு தெட்டத் தெளிவான பதில், “இல்லை.” என்பதுதான். ஆம், வரலாறு காட்டும் உண்மை இதுதான்.

வேத வேள்வியும் மாட்டுக் கறியும்

கால்நடை மேய்ப்பு இனக் குழுக்களாக இந்தியா வுக்குள் வந்த ஆரிய குலங்கள் (வேதத்தின் படைப் பாளர்கள்) மாடு உள்ளிட்ட புலால் உணவை விரும்பி உண்பவர்களாகவே இருந்தன. வேதங் களில் பல பிராமண “ரிஷிகள்” மாட்டுக் கறியின் பெருமையைப் பேசியதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகள் உள்ளன. வேத பார்ப்பனியம் வேள்வி களை (யாகங்களை) தனது அடிப்படையாகக் கொண்டது. பழங்குடி மக்களின் சடங்கான தீயில் விலங்குகளை இட்டுப் பகிர்ந்துண்ணுவது, பின்னர் வேள்வி என்ற பெயரில் பார்ப்பன பூசாரிகள் தமது பங்காக விலங்குகளையும் இதர உணவுப் பொருட்களையும் பெறும் சடங்காக மாறியது. பழங்குடி மக்களின் உபரியைச் சுரண்டும் ஒரு வழிமுறையாகின வேள்விகள். இந்த வேள்வி களில் தேவர்களுக்கு பலியிடுவதாக சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள் மாடு, ஆடு, குதிரை போன்ற விலங்குகளை தீயிலிட்டுச் சுட்டுத் தின்றனர். வேதங்களில் மாட்டு இறைச்சியின் சுவையை சிலாகித்துப் பாடும் பாடல்கள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பனியக் கும்பல்கள் இந்த வரலாற்று உண்மையை மறைத்து விட்டுத் தான், கோமாதாவை வைத்து போலி அரசியலை நடத்துகின்றன. இந்த உண்மையை வெளியிட்ட பல வட இந்திய வரலாற்று ஆய்வா ளர்களையும் கூட இவர்கள் மிரட்டுகின்றனர்.

வேதம்-வேள்விகளை எதிர்த்து எழுந்த சமண-பௌத்த மதங்கள்

அக்காலத்தில் வேத பார்ப்பனியத்தின் வேள் விகளையும் வருணாசிரமக் கொள்கையையும் (பிராமண, சத்திரிய, வைசிய இரு பிறப்பாளர்கள் சூத்திரர்களை ஒடுக்கிய) கடுமையாக எதிர்த்தவை சமண - பவுத்த மதங்களே. விவசாயத்திற்கு முக்கிய கருவிகளாயிருந்த விலங்குகள் வேள்விகளில் அழிக்கப்படுவதை எதிர்த்ததன் மூலம் சமண மும் பவுத்தமும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவின. இவ்விரு மதங்களும் சில வேறுபாடுகளுடன் புலால் உணவை மறுத்து கொல்லாமையைப் பேசின. கொல்லாமை, கள்ளுண்ணாமை, துறவு ஆகியன சமண-பவுத்த மத போதகர்களால் கடைபிடிக்கப்பட்டு மக்களிடையே நற்குணங் களாக பெயர் பெற்றன.

வேத பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய பௌத்தமும் சமணமும் ஒரு சில நூற்றாண்டுக் காலத்திற்கு இந்தியாவின் பெரும் பகுதியில் ஆதிக்க மதங்களாக விளங்கின. மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றன. அதே சமயம், ஆள்வோரின் (அரசர்கள்) ஆதரவு பெற்ற மதங் களாகவும் விளங்கின. வேத மதமும் பார்ப்பனி யமும் இவற்றிற்குக் கீழான நிலைக்குத் தள்ளப் பட்டன. அசோகனால் புகழ்பெற்ற மௌரியப் பேரரசும் ஹர்ஷப் பேரரசும் புத்தமத சார்பு அரசுகளாக இருந்தன. தெற்கிலோ சங்கம் மருவிய காலம் முதல் பக்தி இயக்கக் காலகட்டம் வரை சமணமே ஆதிக்க மதமாக விளங்கியது. மொத்தத்தில், வேத பார்ப்பனியம் இக்காலத்தில் இரண்டாம் நிலையிலேயே இருந்து வந்தது.

சாதிய நிலவுடைமை சமூகத்துடன் அரியணை ஏறிய புதிய பார்ப்பனியம்

வேத மதத்தின் தொடர்ச்சியென கூறிக் கொண்ட புதிய பார்ப்பனியம் சாதி அடிப்படையிலான நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சியுடன்தான் ஆதிக்கத்துக்கு வந்தது. ஆனால் இச்சமயத்தில் இது பழைய வேள்வி அடிப்படையிலான வேத மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு புதிய வடிவை எடுத்திருந்தது. பார்ப்பனர்களை முதன்மையா கவும் தீண்டத்தகாதவர்கள் என்று கூறி ஒடுக்கப் பட்ட மக்களை அடிமையாகவும் பெரும் எண்ணிக்கையிலான சூத்திர சாதிகளை கடைசி யாகவும் கொண்ட சாதியமைப்பை நியாயப் படுத்தும் புதிய வருணாசிரம தத்துவத்தையும் தீட்டு, தூய்மை கோட்பாட்டையும் இந்த புதிய பார்ப்பனியம் தனது உள்ளடக்கமாகக் கொண் டிருந்தது. வடக்கில் பார்ப்பனர் சாதி இதர இரு பிறப்பாளர்களான சத்திரிய, வைசிய சாதிகள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தன. தெற்கிலோ, விரல்விட்டு எண்ணக்கூடிய பார்ப் பனரல்லாத சாதிகளைத் தவிர்த்த அனைவருமே சூத்திரர்களாகத்தான் கருதப்பட்டனர். கிராம அளவில் தொழில் அடிப்படையில் சாதிகளை ஒழுங்குபடுத்திய பார்ப்பனிய சாதியம் இந்தி யாவின் நிலவுடைமை அமைப்பின் அடிப் படையில் அமைந்தது. இக்காலத்தில், பார்ப்பனிய சாதி முறையில் ஏற்றுக் கொண்ட மற்றும் வேத-உறைவிடங்களை பின்பற்றுவதாக கூறிக் கொண்ட சைவ-வைணவ மதங்கள் வன்முறை மூலமாக சமண-பவுத்த மதங்களை வீழ்த்தின. தமிழகத்தில் கழுவேற்றங்களும் அனல்-புனல் வாதங்களும் சமண-பவுத்த மதங்களை சுவடு கூட தெரியாத அளவுக்குத் துடைத்தெறிந்தன. சமண-பவுத்த பள்ளிகளும் யாழிகளும் தகர்க்கப் பட்டு சிவ-திருமால் கோவில்களாயின. பக்தி இயக்கம் இந்த மாற்றங்களை நிறைவேற்றும் கருவியாகச் செயல்பட்டது.

இக்காலகட்டத்தில்தான் பார்ப்பனியம் மாட்டை தெய்வமாக்கியது. இது நிலவுடை மையின் விவசாய முறையுடன் பொருந்தியது. முன்னர் அவர்களின் வேள்வி நெருப்பில் சுட்டுத் தின்னப்பட்ட மாடுகளுக்கு இப்போது பார்ப்பனர்கள் தெய்வ அந்தஸ்தை வழங்கினர். மறுபுறம், சமண-பவுத்த துறவிகளின் புலால் மறுப்பை தந்திரமாகத் திருடி பார்ப்பனர்கள் தம்மையும் புனிதர்களாக்கிக் கொண்டனர். மக்களால் உயர் பண்பாக கருதப்பட்ட சமணர்-பௌத்தரின் புலால் உண்ணாமைக் கொள்கை யைப் பயன்படுத்தி, பிறப்பால் உயர்ந்தவர் பார்ப்பனர் என்ற கற்பிதத்தை மேலும் உறுதிப் படுத்திக் கொண்டனர். தமது புனித விலங்கான மாட்டை உண்பவர்களை சமூகத்தின் கீழான நிலையினராகக் காட்டினர். இதர விலங்குகளின் இறைச்சியை உண்டோர் இடைநிலை சாதிகளில் இருந்தனர். இவர்களும் பார்ப்பனியக் கருத்தாக் கத்தின்படி மாட்டுக்கறி தின்பதை தீட்டாகவே கருதினர். பார்ப்பனியம் தனது சாதியமைப்புக்கு ஏற்ப உணவின் அடிப்படையில் புலால் உண்ணா தவர், மாட்டுக்கறி தவிர்த்த புலால் உண்பவர் மற்றும் மாட்டுக்கறி தின்பவர் என்ற ஒரு கருத் தியல்ரீதியான படிநிலையை உருவாக்கியது. சமண மதத்தில் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்கக் கூடாதென்ற ஒரு உயர் ஒழுக்கமாகக் கருதப் பட்ட கொல்லாமை, புதிய பார்ப்பனியத்தால் மனிதர்களை பிறப்படிப்படையில் பிரிக்கும் மனிதநேயமற்ற சாதிய முறையின் தீட்டுக்களில் ஒன்றாகச் சிறுமைப்படுத்தப்பட்டது.

மாட்டைக் (பசுவை) கொல்வது ஒரு மிகப் பெரிய குற்றமாக பார்ப்பனிய சட்டத்தால் கருதப்பட்டது. பெரும்பான்மை மக்களான சூத்திரர்-தாழ்த்தப்பட்டோரையும் சமூகத்தின் பாதியான பெண்களையும் கொல்வதை ஒரு சாதாரண விசயமாகக் கருதிய ஒரு சம்பிரதாயம் மாட்டைக் கொல்வதை பெருங்குற்றமாகக் கருதியது. இது அதன் கோட்பாட்டு மோசடியை வெளிப்படுத்துகிறது. அனைத்து உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது என்ற சமணக் கோட்பாட் டோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பார்ப்பனிய அகிம்சையின் மோசடிப் பண்பு தெளிவாக வெளிப்படும். இங்கு இன்னொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டும். பார்ப்பனர்கள் கொலையே செய்தாலும் கூட அவர்களுக்கு மரணதண்டனை யைத் தரக்கூடாது என்ற பார்ப்பனியச் சட்டத் தையும் இணைத்துப் பார்த்தால் இவர்களுடைய அகிம்சையின் அயோக்கியத்தனம் நமக்குப்புரிய வரும். உண்மையில், புதிய பார்ப்பனியத்தின் புலாலுண்ணாமையும் பசுவதைத் தடையும் சாதிய ஒழுங்கைப் பராமரிக்கும் தீட்டு என்பதற்கு மேல் வேறொன்றுமில்லை. அதில் மனித நேயமோ உயிர்களிடம் அன்பு செலுத்தும் அறமோ துளியும் இல்லை.

நிலவுடைமை சமூகமும் பார்ப்பனிய சாதிய முறையும் நீண்ட காலமாக நீடித்து வருவதன் விளைவாக சூத்திரர்கள் மற்றும் இரு பிறப்பா ளர்கள் இடையே மாட்டுக்கறி உண்பது இழிவானது என்ற கருத்து ஆழமாக நீடித்து வருகிறது. மறு புறம், சாதிமுறையில் கீழே தள்ளப்பட்ட தாழ்த் தப்பட்ட மக்களில் பெரும்பான்மையினரும் பல பழங்குடிகளும் மாட்டுக்கறியைத் தமது உணவாகக் கொள்வது தொடர்ந்து இருந்து வருகிறது. பார்ப்பனிய கோட்பாட்டை ஏற்காத கிறித்தவர்களும் முஸ்லிம்களும் கூட மாட்டுக் கறியை தமது உணவாக உட்கொள்ளுகின்றனர். இன்றைய சூழலில் நகர்ப்புறங்களின் பெரும் பான்மை அடித்தட்டு மக்களுடைய உணவாக மாட்டுக்கறி உள்ளது.

நாம் ஆர்.எஸ்.எஸ்-மற்றும் பார்ப்பனிய கும்பலின் “மாட்டுக்கறி” அரசியலின் நோக்கத் தைப் பார்க்கும் முன்னர் வேத பார்ப்பனர்கள் மாட்டுக்கறி தின்றதற்கான தமிழ் இலக்கிய ஆதாரங்களை சிறிது பார்ப்போம்.

வேதியர்கள் மாட்டுக்கறி தின்றதைக் காட்டும் சில இலக்கிய ஆதாரங்கள் நாம் வேத காலப் பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்பதை நிரூபிக்க வேதங்களைப் புரட்ட வேண்டிய அவசியமில்லை. பண்டையத் தமிழ் இலக்கியங்களே அவற்றிற்கு சாட்சியாக உள்ளன. அவற்றில் சில காட்சிகளை மட்டும் காண்போம். சமண காப்பியமான நீலகேசி வேதப் பார்ப்பனர்களைப் பார்த்து இப்படிக் கேட்கிறது.

“வசுக்கல் வருத்திரர் மீத்ரரொரு

இவர் முதலாம் பிறர்க்கும்

பசுக்களோடு எருமைகள் குதிரைகள்

புலியோடு நாய் முதள

இசு கழிந்தன பல கொலைகளும்

இரங்கலிர் கொன்று அவரை

அசிப்பவர் போன்ற நீர் ஆயினும்

அருவினையா நமக்கே”

இதன் பொருள், “வசுக்கள் உருத்திரர், பீதிரர் ஆகியோருக்காக என்று சொல்லிக் கொண்டு வேள்வியில் சிறிதும் இரக்கமின்றி பசு, எருமை, குதிரை, புலி மற்றும் நாய் போன்ற விலங்குகளைக் கொலை செய்கிறீர்கள். அந்த தேவர்களுக்கு ஊட்டுவது போல நடித்து நீங்களே புசிப்பீர். எனவே, இந்தத் தீவினை உங்களையே சாரும்.”

இது வடநாட்டில் மட்டுமல்லாமல் அன்றைய தமிழகத்திலும் வேத பார்ப்பனர்கள் வேள்வி என்ற பெயரில் மாடு உள்ளிட்ட பல விலங்கு களைக் கொன்று தின்றதையே காட்டுகிறது.

அதே நீலகேசி அந்த வேள்விகளையே கீழ் வருமாறு வேள்விக்குள்ளாக்குகிறது.

“நண்பரை நுதலியும் மனசுவரை

நுதலியும் அமிர்தோடு நடந்த

உண்பார்க்கு அல்லது அவர்களுக்கு

ஆம் என உரைக்குரல் யார்

பண்பீலீ தேவதை நுதலில்

கொலையினில் பல் வினைதான்

உண்பல வகையினின் அடைந்தவை

விளையுங்கள் உன் நமக்கு என்றான்”

“தன் நண்பன் நீடுழி வாழவேண்டும் என்று ஒருவன் அமிர்தம் உண்டான். இன்னொருவனோ தனது எதிரி அழிந்து போகட்டும் என நஞ்சு அருந்தினான். இந்த இரண்டின் பலனும் உண்ட வர்களுக்குத்தானே போகும். அந்த நண்பர் களுக்குப் போகும் என யார் சொல்வார்கள். அவ்வாறே தேவர்களுக்காக செய்யப்பட்ட கொலையாள் என்று சொன்னாலும் அதன் தீவினைப் பயன் உங்களையே சேரும்.” என வேதவாதியைப் பார்த்து நீலகேசி சொல்கிறான்.

இதிலிருந்து வேள்விகள் ஏமாற்று வேலை என்பதையும் அவை வேதியர்களின் மாமிச இச்சைக்கான பெரிய அரும்புகழாகவே விளங்கின என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது நீலகேசி.

இன்னொரு இடத்தில் நீலகேசி வேதத்தைத் தாக்கித் தகர்க்கையில்,

“.......................................

கொலை மண்ணும் மருவுதலின்

ஐயம்இல் தீக்கதி செலுத்துவது”

என்று வேதத்தை சாடுகிறான். இங்கே வேள்விக் கொலைகளையே தனது சாரமாகக் கொண்டிருந்த வேத பார்ப் பனியத்தை நீலகேசி சரியாகவே தோலுரித்துக் காட்டியுள்ளது. மாட்டுக்கறி வெறியை அம்பலப் படுத்துகிறது. அக்கதை இதோ...

வாரணாசியில் அபஞ்சிகன் என்ற மறை ஓம்பாளன் இருந்தான். அவனுடைய மனையாளின் பெயர் பார்ப்பினி சாலி. அவள் ஒழுக்கம் தவறி நடந்துவிட்ட காரணத்தால் அந்தப் பாவம் போக்க “குமரி ஆடிய வருவாள்.” வரும் வழியில் குழந்தை பிறந்து விடுகிறது. எனினும் “ஈன்ற குழந்தைக்கு இரங்கலாகி” மறைவான தொரு இடத்தில் அதை விட்டு விட்டுச் சென்று விடுகிறாள்.

பசியால் குழந்தை அழுததைக் கேட்டு “ஓர் ஆ(பசு) வந்து அணைத்து” ஆதரவு தந்தது. நாக்கால் நக்கிக் கொடுத்து பாலும் கொடுத்தது. இப்படி அந்தக் குழந்தை புத்திரன் ஆனது. அப்போது அவ்வழியே வந்த இளம்பூதி என்கிற “மறை ஓம்பாளனும்” அவனது மனையாளும் குழந்தை யைக் கண்டு அதை எடுத்துக் கொள்கிறார்கள். “ஆ மகன் அல்லன் என் மகன் என்றே” கொஞ்சுகிறான் அவன்.

இளம்பூதியின் இல்லத்தில் குழந்தை வளர்கிறான். உபநயனத்திற்கு முன்னரே அவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறான். சிறுவன் ஒரு நாள் அந்த ஊரிலுள்ள இன்னொரு அந்தணர் வீட்டிற்குச் செல்கிறான். அங்கே அவன் கண்ட காட்சியை மணிமேகலை விளக்குகிறது.

“ஆங்கு புலைசூழ் வேள்வியில்

வெரூஉம் பகை அஞ்சி வெய் தமர்த்துப் புலம்பிக்

கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அங்கு

அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு நெஞ்சு நடுச்சூழல் நெடுங்கண் நீர் உருத்து”

இதற்கு பொ.வே. சோமசுந்தரனார் கொடுத் துள்ள விளக்கவுரையை அப்படியே தருவோம்-

“அவ்விடத்தே அப்பார்ப்பனர்கள் தாம் மறுநாள் ஊன் தின்பதற்கு ஏதுவாக வேள்வி செய்ததாக ஒரு சூழ்ச்சி செய்து நிகழ்த்தும் வேள்விக் களத்திலே கொன்று திண்பதற்காக நிறமிக்க மலர் மாலைக் கொம்பின் கண் சுற்றப்பட்டு தன்னைக் கொல்பவரும்; தான் பெரிதும் அஞ்சி உய்திக் காணாமல் வெய்தாக பெரு மூச்செறிந்து வருந்தி கொலைத் தொழிலை மிகுதியாகச் செய்கின்ற வேடரின் வில்லிற்கு அஞ்சி ஓடிப் போய் அவர் விரித்த வலையில் அகப்பட்டுக் கொண்ட மான்போல அஞ்சி அவரால் கட்டப் பட்ட வேள்வித்தூண் மருங்கே நின்று அம்மா! அம்மா! என இடையறாது கதறி அழைக்கின்ற ஓர் ஆவினது துன்ப நிலையைக் கண்டு தனது நெஞ்சம் நடுங்கி நெடிய தன் கண்ணால் துன்பக் கண்ணீர் சொரிந்து.”

அந்தக் காலத்தில் தமிழகத்தின் வேதியர்களும் வேள்வியில் பசுவைக் கொன்றார்கள். பசுவின் மாமிசத்தை உண்பதற்காகவே பசுவைக் கொன்றார்கள் என்பது தெளிவாகிறது. புத்த சமயம் இதைக் கண்டு கொந்தளித்தது. தனது எதிர்ப்பை அந்தச் சிறுவன் மூலம் இலக்கிய மாக்குகிறார் சாத்தனார். அன்று இரவு அந்தப் பசுவை அவிழ்த்துக் கொண்டு ஊரை விட்டுக் கிளம்பிவிடுகிறான். அந்தணர்கள் விசயம் அறிந்து அவனையும் பசுவையும் வளைத்துக் கொள்கிறார்கள். “புலைச் சிறுமகனே போக்கப் பகுதி என அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப” என்பது நடக்கிறது. அதாவது மரணத் திலிருந்து பசுவை காப்பாற்றியவனை “புலைச் சிறுமகனே” என்று திட்டியிருக்கிறார்கள். கோல் கொண்டு அடித்திருக்கிறார்கள். அடிபட்டாலும் பசுவைக் காப்பாற்றிய மனநிறைவோடு “நோவன செய்யுமின்” என அச்சிறுவன் அந்தணர்களுக்கு புத்தி சொல்லுகிறான். அவர்களுக்கு கோபம் வருகிறது. தங்களின் வேள்வியை இகழ்ந்ததன் மூலம் புனித வேதத்தையே இகழ்ந்துவிட்டதாகக் குமுறு கிறார்கள். “அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனன்” என்கிறார்கள்.

இதிலிருந்து மாடுகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்லும் வேள்வி முறையையே தங்களது வேத உட்பொருளாக வேதியர்கள் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.

சுருக்கமாகச் சொல்வதனில், வேதியர்கள் வேள்வி என்ற பெயா¤ல் மாடு உள்ளிட்ட விலங்கு களைக் கொன்று தின்றுள்ளனர். இந்த வேள்வி களே வேதத்தின் உட்பொருள் எனக் கருதி உள்ளனர். இதை பண்டைத் தமிழ் இலக்கியத்தின் சில காட் சிகள் நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளன.

ஒரு பாசிச ஆட்சியைக் கட்டியமைப்பதன் பகுதியே ஆர்.எஸ்.எஸ்-இன் மாட்டுக்கறி அரசியல்.

ஒரு புறம் வரலாற்றாசிரியனாகப் பார்க்கையில் வேத பார்ப்பனீயமானது மாட்டுக்கறி உண்பதை தடை செய்யவில்லை என்பதோடு வேள்விகளில் பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்பதை நாம் கண்டோம். அதே போல், ஆர்.எஸ்.எஸ்-ஆல் இந்துச் சமூகம் என்றழைக்கப்படும் மக்களின் பகுதியாக உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாட்டுக்கறியை உணவாகக் கொண்டுள்ளனர். இத்தகையதொரு சூழ்நிலை யில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ கும்பல் மாட்டுக் கறியை வைத்து நடத்தும் வெறுப்பு அரசியலின் நோக்கம் என்ன? பார்ப்பனீய சாதியம் மக்க ளிடையே ஊட்டி வளர்த்துள்ள மாட்டின் புனித மதிப்பீடுகளைப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லீம் களுக்கெதிரான மதவெறியை தூண்டுவதுதான் இவர்களின் நோக்கம். முஸ்லீம் எதிர்ப்பை ஒரு மையப் புள்ளியாகக் கொண்ட இந்துத்துவ பாசிச கருத்தியலை பெரும் எண்ணிக்கையிலான மக்களிடம் வேரூன்ற வைக்க முயற்சிக்கின்றனர். உலக ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்கள் தலைமேல் சுமத்த விரும்பும் ஆளும் வர்க்கங்கள் ஒரு அப்பட்டமான பாசிச (சர்வாதிகார) ஆட்சியை நிறுவ விரும்பி

பாரத் மாதா கீ!! ஜெய்!!

பாரத் மாதா கீ!! ஜெய்!!

என்ற முழக்கத்தை இந்திய குடிமகனுக்கான குடியுரிமைச் சீட்டாக மாற்றிவிட்டார்கள் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள். இந்த முழக்கத்தை கூவ மறுப்பவர்கள் வேறு நாடுகளுக்குப் போய் விடலாம் என்கிறார் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ். காவி கட்டிய முதலாளி ராம் தேவோ “கழுத்தை வெட்டுவேன்” என்று மிரட்டுகிறார்.

பாரத் மாதா கீ ஜெய் என்றால் என்னவென்றே புரியாத இளங்கோக்களும் கருப்புசாமிகளும் என்ன செய்வார்கள்? இப்படி புரியாமல் தவிக்கும் தமிழர்களுக்காக இந்த முழக்கத்தை மொழி பெயர்த்து விடுவோம். “இந்திய தாய்க்கு வெற்றி” - இது பாரத் மாதா கீ ஜெய் என்பதன் தமிழாக்கம்.

“ஏம்பா... நாம் தமிழ்த்தாய் வாழ்த்து வேறு பாடிகினு கீறோம். நம்பளையும் நாடு கடத்திடு வானுங்களா?” என ஏழுமலை கேட்கிறார். “பதில் சொல்லுங்க ஜீ.” “இல்ல ஜீ... இப்ப இல்ல. இப்ப முசுலீம்களுக்காகத்தான் இந்த விசயத்த எடுத்துண்டிருக்கோம். உங்க முறை வர கொஞ்ச நாளாகலாம்” என மோடிஜீயின் மனசாட்சி பேசக்கூடும்.

“நமக்கு வாயிலயும் நொய்ய மாட்டேங்கிது. புரியவும் மாட்டேங்கிது. இத்த எப்டிபா கூவுறது?” என்று கேட்கிறீர்களா? அப்படிக் கூவாவிட்டால் ஜீக்களின் இலக்கணப்படி நீங்கள் தேசத் துரோகிகள்... நாட்டுப் பற்றில்லாதவர்கள்... பிரிவினைவாதிகள்... “இந்த ஆர்.எஸ்.எஸ். நீங்க எல்லாம் வெள்ளக்காரன எதுத்த போராட்டத்துல கலந்துக்கவே இல்லியாமே!

இவங்கள்ளாம் தேசபக்தி பேசலாமா?” என்று கேட்கிறீர்களா? நீங்கள் தேசத்துரோக (124 - இந்திய தண்டனைச் சட்டம்) வழக்கை எதிர் கொள்வது நிச்சயம். இந்த சட்டத்தை போட்டது வெள்ளைக்காரன். அச்சமயம் தண்டனை அடைந்தது தேசபக்தர்கள் என்பதுதான் முரண்நகை.

“ச¦ங்க ஜீ... பாரத்து மாதான்னு நாட்டைத் தானே சொல்றீங்க. இங்க 2000 வருசமா மனுசன பொறப்பு அடிப்படையில் மேல, கீழன்னு பிரிச்சு வச்சுகிறீங்க. கருவறைக்குள்ள ஒரு சாதிக் காரன்தான் நுழைய முடியும். வேதம் அவந்தான் படிக்க முடியும். சூத்திரன் தாசி மகன்றீங்க. 5 இல் 1 பங்கு மக்கள தீண்டத்தகாதவங்கன்னு இரண்டாந்தர குடிமகனா ஒதுக்கி வச்சிருக்கீங்க. என் ஜாதி பொண்ண கல்யாணங் கட்டிக்கினன்னு வெட்றானுங்க. சாப்பாடும் தண்ணியுங்கூட ஒன்னா பொளங்குறதில்ல. நமக்குள்ளயே சமத்துவமில்ல. ஒற்றுமயில்ல. இதுல எப்டி ஜீ ஜெய்னு கூவுறது? ஏன் ஜீ? ஒரு வேள இந்த ஏற்றத்தாழ்வையும் ஒழுங்குமுறையையும் நாங்க மறக்குறதுக்குத்தான் அப்டி கூவச் சொல்றீங்களா? பதில் சொல்லுங்க ஜீ!”

“ஒரு சந்தேகம் ஜீ. உங்க தேசபக்த ஆட்சியில், பாரத மாதா மேனி முழுக்க டொயோடா, பிஎம் டபிள்யூ, ஹோண்டா, சுசுகி, ஆடின்னு அந்நியக் காராதான் ஜீ ஓடுது. நாம் அன்றாடம் பயன் படுத்தும் சோப்புல இருந்து எண்ணெய் வரைக்கும் 90% பொருட்கள் யுனிலீவர், ப்ராக்டர் அண்டு கேம்பிள், ப்ரூக் பாண்டுனு வெளிநாட்டுக் கம்பெனிங்கதான் ஜீ விக்கிறான். திரேதா யுகமா... இல்ல கிருதா யுகமா... சா¤ இதோ ஒரு யுகத்துலேயே விண் ஓடங்கள்ல ரிஷிகள் பறந் தாங்கன்னு அரசியல் மாநாட்டுலயெல்லாம் பேசுறீங்க ஜீ. சந்தோசம். ஆணாக்க, சண்டை விமானத்துக்கு அமொ¤க்காகிட்டயும் பிரான்சு கிட்டயும் கெஞ்சறீங்க. மருந்து முதல் மசுருக்கு போடுற சாயம் வரைக்கும் அந்நியக் கம்பெனி கள்தான் ஆதிக்கம் பண்றான். கேவலம்... குடிக்கிற தண்ணீர், குளிர்பானமும் கூட கோக், பெப்சி கைக்கு போயிடுச்சு. ஒவ்வொருத்தனும் வருசத் துக்கு பல இலட்சம் கோடிய அவன் நாட்டுக்கு எடுத்துனு போறான். நீங்க வேற பல இலட்சம் கோடிய வரிவிலக்கு தர்றீங்க. வெள்ளக்காரன எதுக்கும்போது அந்த கோசத்தையும் போட்ட தாகக் கேள்வி. இப்பவும் பல நாட்டுக்காரன் நம்மள கொள்ளையடிக்கிறான். இப்ப போயி பாரத் மாதா ஜீ ஜெய்யின்னு கூவுனா மாதாவ கிண்டல் பண்ற மாதிரி இல்லீங்களா ஜீ. பதில் சொல்லுங்க ஜீ!”

“இன்னொரு டவுட் ஜீ. நம்ம மோடி ஜீ ஆ ஊன்னா வெளிநாட்டு மூலதனம் வரணும்னு கூவுறார். “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்ன்னு எல்லா வெளிநாட்டுக் காரனயும் கூப்பிடுறார். நாடு நாடா போயி எங்க நாட்டுல முதலீடு பண்ணுங்கன்னு கெஞ்சுறார். இதுதான் பாரத் மாதா ஜீ ஜெய்யா- பதில் சொல்லுங்க ஜீ!”

“சரிங்க ஜீ... விவசாயிங்க நெலத்த பன்னாட்டு - உள்நாட்டு முதலாளிங்களுக்குப் புடுங்கித்தர ஒரு சட்டத்த கொண்டு வந்தீங்களே. பழங்குடிகளோட காடுகளில் புடுங்கித்தர, மாவோயிஸ்ட் எதிர்ப்புன்னு சொல்லிகிட்டு பயல அனுப்புறீங்களே. மாறாக ஏழைகளோட குடிசைகள இடிச்சுட்டு வெளிநாட்டு மால்கள் கட்டுறீங்களே. இந்த நெலமெல்லாம் பாரத மாதா இல்லியா? பாரத மாதாவை வெளிநாட்டுக் காரனுக்கு பட்டா போட்டு தர்றீங்களே ஜீ. இதெல்லாம் கூட பாரத மாதா கீ ஜெய்தானா? பதில் சொல்லுங்க.”

“சா¦ங்க ஜீ.... லட்சக்கணக்கான தொழிலாளிங்க வேல இழந்துகினு இருக்கும்போது, 90% தொழிலாளி, ஒப்பந்த, தற்காலிக தொழிலாளியா வாய்க்கும் வயத்துக்கும் போராடிகினு இருக்கும் போது, தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க புது சட்டம் போடுறீங்க. லட்சக்கணக்கான விவசாயிங்க தற்கொலை பண்ணிகினு சாகும்போது, வெதைக்கும் வெளிநாட்டு கம்பெனிய சார்ந் திருக்கும் வகையில் ஙிஜி காட்டன், கத்தரிக்காக்கு அனுமதி தர்றீங்க. ஊறுகா வரைக்கும் வெளி நாட்டு மூலதனத்த அனுமதிச்சு பலகோடி சிறு தொழில் செய்யுறவங்கள போண்டியாக்குறீங்க. ஒங்க பாரத மாதா வெள்ளக்காரியா ஜீ. பதில் சொல்லுங்க ஜீ.”

“சா¦ங்க ஜீ... இப்ப எனக்கு ஒரு விசயம் தெளிவா புரிஞ்சிரிச்சு ஜீ. பாரதியார் நடிப்பு சுதேசினு பாடுனாரு. அவங்க வாரிசுதான நீங்க?”

மறுபுறம், இதே விசயத்தை வைத்து தாழ்த்தப் பட்ட மக்களையும் பழங்குடிகளையும் கீழான வர்களாக சித்தரிக்கும் பார்ப்பனீய கருத்தியலை மேலும் பலப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் நீட்சியாக மாட்டிறைச்சி அல்லாத இறைச்சியை உண்ணும் சூத்திர சாதி மக்களையும் மட்டம் தட்டும் பார்ப்பனீய மேலாதிக்க வெறியுடன் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெறும் மாநிலங் களில் ‘புனித நாட்களில்’ அனைத்து இறைச்சி விற்பனைக்கும் தடையை விதிக்கின்றனர். இந்துத்துவ பாசிசமும் பார்ப்பனியமும் பிரிக்க முடியாதவை என்பதுடன் மாட்டுக்கறியில் தொடங்கி இதர இறைச்சிக்கும் நீளும் அவர்களின் நீட்டு அரசியல் பெரும்பான்மை மக்களை கருத்தியல்ரீதியாக கீழ்மைப்படுத்து வதும் ஒரு பாசிச முயற்சியே. இதில் “புனிதம்”, “பாரதப் பண்பாடு”, “கோமாதா” போன்ற முழக்கங்கள் எல்லாம் மக்களை ஏமாற்று வதற்கான மோசடிகளேயன்றி வேறல்ல.

(தோழர் விவேக் மதுரை சிறையில் இருக்கும் போது அனுப்பிய கட்டுரை)