நாள்: 23.3.2016 புதன்
நேரம்: மாலை 6 மணி
இடம்: வித்யோதயா பள்ளி ஆடிட்டோரியம், 1, திருமலை ரோடு, தியாகராய நகர், (வள்ளுவர் கோட்டம் அருகில்) சென்னை-17.
சிறப்புரை: ராமச்சந்திர குகா (எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர்)
தலைப்பு: சுதந்திர இந்தியாவில் பழங்குடி மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் (Tragedy of the Adivasis in independent India)
இந்திய சமூகத்தில் பழங்குடி மக்கள் விடுதலைக்குp பின்னிட்ட கடந்த அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சுதந்திரத்தின் எந்த வெளிச்சத்தையும் , சனநாயகத்தின் பயனையும், வளர்ச்சியின் பலன்களையும் அடைய முடியவில்லை. நமது சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைக் காட்டிலும் மிக மோசமான ஒரு வாழ்நிலையையும், மேலும் தங்களின் குரலை தேர்தல் அல்லது பிற சனநாயக வடிவங்களில் வெளிப்படுத்த முடியாத வாழ்க்கையினை பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.
அரசின் தொடர் புறக்கணிப்பினாலும் அரசியல் சமூகத்தின் தோல்வியினாலும் சில இடங்களில் மாவோஸ்ட் புரட்சியாளர்கள் இம் மக்களை நெருங்க முடிந்துள்ளது. இதில் முதல் அவலம் அரசு பழங்குடி மக்களை ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகள் அல்லது அதற்கு துணை போகின்றவர்கள் என கருதுகின்றது. இரண்டாவது அவலம் இம் மக்களின் ஆதரவாளர்கள் என அரசு கருதும் மாவோஸ்ட்டுக்கள் எந்த நீண்ட கால தீர்வுக்கான கோரிக்கைகளையும் முன் வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பார்வையில் சொற்பொழிவு பயணிக்கும்
வருக! தோழமை தருக! நண்பர்களிடம் பகிர்க!
இவண்
பிரபாகர் சின்ஹா, தலைவர், தேசிய பி.யு.சி.எல்
வி.சுரேஷ்- தேசிய செயலர், பி.யு.சி.எல்
பேரா.சரஸ்வதி - தலைவர், பி.யு.சி.எல் தமிழ்நாடு, புதுவை
ச.பாலமுருகன் - செயலர், பி.யு.சி.எல் தமிழ்நாடு, புதுவை