ஒவ்வொரு கதையும் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட கதைகள் தான்.....!
திகிலின் நிறம் ஊதா எனக் கொள்வோம்...!!
1.சில தேள்களும் சில செல்பிகளும்
*************************************************
ஒவ்வொரு chapterம் ஒவ்வொரு சிறுகதையாக - ஒரு நெடுங்கதையாக - ஒரு தொடராக - ஏன்.... ஒரு திரைப்படமாக கூட மாற்றலாம். மாறலாம். மாறும். காத்திருப்போம்.
கடைசி chapter க்கு நீங்களே எண் கொடுத்துக்கொள்ளுங்கள்.
புருவம் சுருக்கி கூர்ந்து நோக்கின், chapter 0 எனவும் கொள்ளலாம். அது வாசகரின் choice ஆக விடுவது கவிஜியின் தனிச்சிறப்பு.
2.கரையெல்லாம் கூழாங்கற்கள்
******************************************
காயங்களுக்கு எப்போதும் பேரன்பே மருந்து. எவ்வகை காயமாயினும்!! அன்பு அழகானது... அலாதியானது.... உண்மையானது... உன்னதமானது.... உறுதியானது.... உயர்வானது..... பாலினம் கடந்த ப்ரவாகம்......
3.விடிஞ்சா கல்யாணம்
******************************
நிற்க. ஒரு மிடறு நீர் அருந்திய பின் இதை பற்றி....
கம்பிகளை இறுகப்பற்றி.... சந்தோசமும் பயமும் கலந்து ஓவென அலறும் ஒரு திரிலிங் அனுபவம்.... கொண்டை ஊசி வளைவல்ல இது. Roller coaster.
காலம் எகிறி குதித்து ஓடினால் எப்படி இருக்கும்.....
காலத்தை விரட்டும் வித்தை கற்றவரோ கவிஜி.....
4.தீரா நதி
************
அழுத்தமான ஓட்டம். தனி மனித ஒழுக்கம் அவரவரின் தீர்மானம்
5.நான்
********
மரணத்திற்கு பின் காதல் - அன்பு - ஆன்மாக்களை காதலிக்க வைக்க கவிஜியால் மட்டுமே முடியும்.
6.ஆவணப்படம்
*********************
வித்தியாசமான அணுகுமுறை. சதைகுவியலுக்குள் துடிக்கும் இதய ஓசை எம் கலைஞனுக்கு மட்டும் கேட்டிருப்பது வியப்பல்ல.
ஊர் பசி போக்கும் அட்சய பாத்திரத்தில் விழும் ஒரு துளி அன்பு பெருக்கெடுத்து... பிரவாகமாகி... சிவப்பு வாழ்க்கையை சிறிதேனும் சாந்தமடையச் செய்யும் என நம்புவோம்!!
7.மீண்டும் சில வெண்ணிற இரவுகள்
**************************************************
மனுசிக்கும் அமானுஷ்யத்திற்குமான காதல்.... கண்கள் விரிய வைக்கும் கடைசி வரிகள்.... ரசனைக்குரியது.
8.இரவுச்சூரியன்
***********************
திடீரென roller coaster ன் கயிருகள் பட படவென அறுபட்டு... என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்.... ரத்தமும் சகதியுமாய்.... அய்யோ என் அலறுகையில்...... எல்லா விளக்குகளும் எரியூட்டப்பட்டு.. மீண்டும் அணைக்கப்பட்டு.... மீண்டும் எரியூட்டப்பட்டு.......
கடவுளே.......
கதை என்று நம்ப இன்னமும் மறுக்கிறது மூளை.
9.இரவுக்காட்டில் திராட்சை தோட்டம்
**************************************************
இது இன்னொரு திகில் வளைவு. தலைசுற்றி.... பிழைத்தவர்கள் தைரியசாலிகளே!!
10.யுத்தன்
***********
கற்பனைக்கு எட்டா உலகை அறிமுகப்படுத்தி.... அதில் வாழ்கிறவர்களோடு வாழ்ந்தவர்களையும் வாழ்விப்பது கவிஜியின் அலாதியான திறமை. நிகழ் உலகிற்கும் மாய உலகிற்கும் மாற்றி மாற்றி அலைக்கழித்து.... தலைசுற்றி.... நான் எங்கிருக்கிறேன் என்பதை மறந்தே போனது......
இது எனக்கானது...
மூளையின் அணுக்கள் எல்லாம்.... ஆறாய் - நாலாய் - நூறாய் - எட்டாய் - தாறுமாறாய் வெடித்து சிதற..... மூளைக்குள் ஒரு பிரளய களேபரம்.....
வெடித்து சிதறிய ஒவ்வொரு சில்லிலும் கவிஜி... கவிஜி....
ஓடு.... ஒடு.... தேடு... தேடு.... படி.... படி..... கவிஜியின் அமீபா மூளை தன் கற்பனை கால்களை எங்கெல்லாம் நீட்டி எங்கெல்லாம் சுருக்கி எங்கெல்லாம் உருட்டி எங்கெல்லாம் உயிர்பித்து எங்கெல்லாம் விழுங்கி எங்கெல்லாம் உமிழ்ந்து எங்கெல்லாம் சிதறி எங்கெல்லாம் சேகரித்து..... இன்னும்.... இன்னும் உள் நோக்கு....மூளைக்குள் ஏதோவொன்று விரட்ட.... மெல்ல நிமிர்ந்து... தள்ளாடி எழுந்து நின்று........ மீண்டும் கொண்டை ஊசி கதைகளுக்குள்...........
11.எவனோ ஒருவன் வாசிக்கிறான்
*********************************************
அப்பாடா.... பரவாயில்லை. வழக்கமான திருப்பங்களுடன் தான் கதை நகர்கிறது.....
பெருமூச்சு அடங்குவதற்க்குள்..... "நான் யாரென்று சொல்லப்போவதில்லை........." தலையில் ஓங்கி அடித்தது போல இருந்தது.
12.மந்திரப்புன்னகை
*************************
காலம் பின் நோக்கி மல்லாக்க விழுந்து பல்லிலிக்கிறது. காலத்தை தன் விருப்பத்திற்கு ஆட்டி வைக்க கவிஜிக்கு மட்டுமே கைவந்த கலை. அல்சேசன், பொமேரியன், ஹச் வரிசையில்... காலமும் கைகோர்த்து கொள்கிறது கவிஜியின் வீட்டு முற்றத்தில்.
13.அவள் ஒரு நவரச நாடகம்
*************************************
பாலினங்களை தாண்டிய நவரசம் - அறுசுவை
14.ரோஸி
*********
Physical appearance மீறிய ஒரு அழகிய பால்ய காதல். அக்தர் சொட்டும் காதல்.... காதல் எதையும் செய்யும். எதையும் செய்யத்தூண்டும். தனித்துவம் மிக்கது
15.வைலட் நிற இரவுகள்
******************************
கவிஜி எழுத்தாளரா... அமானுஷ்ய சக்தியா..... முடிவை வாசகர்களிடமே விட்டுவிடும் சாமார்த்தியம்...
கவிஜி கவிஜிதான்.
கொண்டை ஊசி வளைவுகளை விட திரில் - திகில் அனுபவம்.... ஒவ்வொரு கதையிலும். So.... The title of the book may be as " Roller Coaster கதைகள்".
- வாசுகி