எதிரில் பயணிக்கும் பயணியை
பயணிக்க விடா வண்ணம்
தக்க வைக்கிறது எதிர்காற்று .

எனையெங்கோ இடம்புரியா
இடத்தில் வேரூன்ற
அடித்துச் செல்கிறது
கூடவே பயணிக்கும் காற்று...

இதற்கும் சேர்த்தே
விடைபெற்று விட்டேன்
வாசல் தாண்டும் பொழுது...

               ****

வேலி...

குளத்தில் பூத்திருக்கிறது
பேரழகு அல்லி.

சுற்றியிருக்கும்
நாணலைப் பற்றி யாருக்கு
என்ன தெரியும் ...

- நல முத்துகருப்பசாமி

Pin It