வெட்டப்படும் வரை
மாலையும் மரியாதையும்
கிடைத்துக் கொண்டே இருக்கும்
நேர்ந்துவிட்ட ஆடுகளுக்கு.
***
வண்டுகள்
பூக்களின் முன்னிலையில்
இசையுடன் கூடிய நடனங்களை
அரங்கேற்றம் செய்கின்றன
பசி தீரும் வரை.
****
தேனைத் திருடத்
தெரிந்த கரடியால்
தேனீயின் அனுபவத்தைத்
திருட முடியவில்லை.
***
போர்க்களத்தில்
தாங்கிப் பிடிக்க
யாருமில்லை யென்று
அம்புகள் தாக்கியபோதுதான்
தெரிந்து கொண்டேன்.
- கு.சிதம்பரம், சென்னை