நெடும்பனை நான்
நெல்வயல் நீ
உன்னைத் தழுவி
வரும் பாடலை
பனையோலை பச்சையாய்
இசைக்கும் போது
உன் வாய்க்காலில் கெழுத்தியாகும்
என் மனம்.
செங்கால் நாரையொன்று
என் சொல்லைக் கவ்வி
தன் பெடைக்கு
இரையாக்கும் வேளை
மருதத்தின் கூடுகளில்
நம் காதலின் கவிச்சி வாடை

- சதீஷ் குமரன்

Pin It