lonly lover 600நித்தமும் அதிகாலையில் விடுபட்ட
நம் முந்தைய நாள் இரவின்
மிச்சக் குறுஞ்செய்தியில் விழிப்பது
உன் முகம் பார்க்கத் தேடியபடி
என் தினப் பொழுதை துவங்கத்தான்

குளியலறைக் கதவும் சுவரும் நீரும்
நான் பின்னாளில்
மறந்து போக வேண்டிய பொருட்களை
நியாபகப்படுத்திய பின் தான்
என்னை விடுகிறது

நம் அறையெங்கும் பரவும்
சமையலறை வாசத்திற்குக் காரணம்
நான் உரித்த பூண்டிலென்றும்
நீ அரிந்த காயிலென்றும்
செல்லச் சண்டையிட வேண்டுமெனச்
சொன்ன பின் தான்
முப்பொழுதும் பசி வந்து பார்க்கிறது

படுக்கை விரிப்பினில் தூங்காமல்
என் கனவுகள்
விழித்துக் கொண்டிருக்க
சிறகடித்துக் கொண்டிருக்கும்
வாட்சப் படங்களும்
இதய சுமைலிகளும்.....

எல்லாப் பொழுதை விடவும்
குட்டியாகிப் போன
இரவை வைத்துக் கொண்டு
இந்த தூர தேசத்து நிலவிடம்
நம் பெருங்கதையைப் பேசி முடியவில்லை

உனக்கும் எனக்கும் இடையில்
நிலா மட்டுமா அல்லல்படுகிறது?
நீயும் நானும் தானே!

- முருகன்.சுந்தரபாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.