ஆற்றின் நடுவே குறுகி
நீண்டிருக்கும் நீர்ப்பாறையை
தொட்டு வருவது தான் போட்டி
தொடுவதற்கு முன்னமே
தொட்ட நினைப்போடு
திரும்புகிறவர்கள் அதிகம்
தொட்டு விட்டு
தொட்டோமா இல்லையா
குழம்புகிறவர்களும் இருக்கிறார்கள்
தொட்ட பிறகு திகைத்து
மூச்சிரைத்து
அங்கேயே நிற்பவர் சிலர்
தொட்டு விட்டு திரும்பி வந்து
தோற்றோரும் உண்டு
தொட்டும் தொடாமல்
தொட்டது போல
தொடத் தொட
தடதடக்கும் அதே போட்டியில்
நீர்ப்பாறையும் தொட்ட
ஒருவனைத் தான்
போட்டி முடிந்தும்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
- கவிஜி
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஜனநாயகத்தை இராமராஜ்யமாக்குகிறார்கள்
- ‘அம்மா’ பெயரில் அரசியல் சரணாகதி
- 21 மொழிகளில் பெரியார் எழுத்து பேச்சுகள்
- சந்திரபோஸ் முடிவெய்தினார்
- அன்னை பூமியின் மடியில் அற்புத அமைப்புகள்
- ஒரு கூடு விடுதலின் நிம்மதி
- கோயில் நுழைவும் ஒற்றுமை மகாநாடும்
- பெரியார் முழக்கம் ஜனவரி 26, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- இட ஒதுக்கீடு ஒரு பார்வை
- ‘நான் கருஞ்சட்டைக்காரன்’
- விவரங்கள்
- கவிஜி
- பிரிவு: கவிதைகள்