நீளும் கொடும் வெப்பம்
நிறை பயணத்தில்
புளியமர நிழலாகி
குளிர்விக்கிறாய்,
உன் வருகை
ஒருநாள் நிகழுமென்றே
நிற்கும் என் வேர்களில்
காலம் தார்ச்சாலை விரித்து
தகிப்பில் எரிக்கிறது.
பழுத்து உதிரும் பழங்களை
வாகனங்கள் ஏற்றி
ஊர் நசுக்கிப் போனாலும்
சாகாமல் உயிர் சுமந்து
கிடக்கிறது காதலின் வெயில்
குடித்த புளியங்கொட்டைகள்

- சதீஷ் குமரன்