காடுகளை அழித்து விட்டு
சிறகுகள் பூட்டுவது யாருக்கு
நதிகளை ரத்தமாக்கிய பிறகு
வழி இல்லை ஊர்களுக்கு
வயல் வெளியெல்லாம்
கட்டடமானால்
காலை மாலை மதியத்துக்கு
செல்லும் கல்லுமா உணவு
MBகளை ஏற்றிக்கொண்டு
அண்ணன் தம்பிகளை இழந்ததை
தலை குனிந்த தவமென செய்தல்
தகவமைப்பை மாற்றும் கவனம்
எல்லாவற்றுக்கும் பதில்
EMI என்றால்
இல்லாமல் போவதொன்று தான்
இலட்சியமாகும்
டிக் டாக்கில் சிக்காகி
டாஸ்மாக்கில் கிக்காகும்
இளைய தலைமுறைகள்
அதிரி புதிரி ஆப்புக்கு தயாராகின்றனர்
சேனல் வழியே சமூகம் திருத்து
மாறாக அதில் கோணல் மாணல்
மேடை செய்தால்
பேரன் மன்னிக்க மாட்டான்
சாலையில் துப்புவது கேடு
வண்டியில் போக போக துப்புவது
சாப கேடு
இனியாவது உணர்ந்து கொள்
உயிர் காக்கும் சாலையிலும்
கோயில் காண்
விடிதலும் ஒரு நாள் முடிதலும்
முகநூலில் என்றால்
முடக்கம் உனதுடலில்
மயக்கம் உன் மனதில்
தேங்கும் எல்லாமும் சித்திரமாவதில்லை
- கவிஜி