dmk sunriseகொதிக்கின்ற வெந்நீரின் கொப்பு ளங்கள்
குளிர்கின்ற போதுமறைந் தோடிப் போகும்
கொதிக்கின்றார் சிலபேர்கள் ; குறுகிக் கூனிக்
கிடக்கின்றார் சிலபேர்கள்; கீழ்மேல் ஆகிக்
கொதியடங்கித் தீர்ப்புகளை வாக்கால் மக்கள்
கொடுப்பார்கள் தேர்தலினால், குளிரும் நாடு!
உதிக்கின்ற சூரியனை உலகம் பார்க்கும்
உதவாத தாமரையும் இலையும் வீழும் !

மதவாதம் பேசுவார்கள்; மாட்டை வைத்து
மக்களிடம் இனவாதம் மூட்டு வார்கள்
சதிகாரச் " சி. ஏ. ஏ " சட்டம் வைத்துச்
சிதறடிக்கப் பார்க்கின்றார் சிலபேர் நாட்டை !
உதவாதக் காவியிடம் இலைகள் கூடி
உழைக்கின்ற மக்களிடம் உருவம் மாற்றி
மிதவாதம் பேசிக்கொண்டு மிரட்டு வார்கள்
மதவாதப் படுகுழியில் மிதிப்பர் நாளை !

இருண்டிருக்கும் தமிழ்நாட்டில் எழுச்சி வேண்டும்,
இதுவரையும் பட்டதுயர் இல்லா தாகி
வறண்டிருக்கும் தமிழகத்தில் வளமை காண
வாருங்கள் தோழர்களே வாக்க ளிப்போம்!
திரண்டுவரும் மேகம்போல் திரண்டு வாரீர்
தேர்தலிலே திராவிடரைத் தேர்ந்தெ டுப்போம்
இரண்டல்ல ஒன்றுதான் உதிக்கும் நாளை
இருளகற்றும் சூரியனில் இடுவோம் வாக்கை !

- எழில்.இளங்கோவன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.