யானையின் நினைவுகளில்
காடழிந்து
மெல்ல மெல்ல
ஒரு கோயிலும்
நேரந் தவறாமல் கிடைக்கும் சோற்றுருண்டையும்
சீழில் நனைந்த சங்கிலியும் வாழ்வாவதன் துயரத்தை
நானறியத் தொடங்குகிறேன்
பார்த்துக் கடக்க மட்டும்
பயன்படும்
உன் தொடர்பு எண்ணில்.
- ந.சிவநேசன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பிணை
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்