நீளும் விரல்களுக்கு
எட்டாத்
தொடுவானம்..
கசப்பையும் உமிழும்
வாழ்வின்
ஒரு துளி நம்பிக்கை..
என் நூற்றாண்டுக்
கனவின்
பெரும் சுமை..
எளிதில்
கடக்க இயலாப்
பெரும் துயரம்..
அமுதமாய் மிளிரும்
கொடும்
விஷம் ...
பிரித்தறியா
விரும்பா
பேரின்பக் கொண்டாட்டம்....
புலரா பொழுதின்
புல் நுனி
பனித்துளி காட்டும் பிரபஞ்சம்..
பரந்த
வான் வெளியில்
விரிந்த வானவில்...
எப்போதும்
விரும்பித் தூக்கித்
திரிகிற துயர் ...
உயிர்பெட்டகத்துள்
ஒளிந்து கிடக்கும்
ஜீவ மூச்சு....
-இசைமலர்