பொன்னிற கண்களில்
ஒரு பூனையின் தவிப்பை காண்கிறேன்
மெல்லிய மௌனத்தில்
ஒரு வெள்ளை இருட்டு இருக்கிறது
ப வடிவ நெற்றியில் பா வடியும் நேர்த்தி
பருவம் மிச்சமிருக்க
புருவம் இச்சை வளர்க்கும்
புன்னகைக்கும் பூவிதழில்
புதிர் வரிகள் பிரமாதம்
சிறப்பு பரிசாக கூந்தல் சோலை
சேலை வடிவாக சித்திரம் நீ நம்பு
நகப் பூச்சற்ற நின் விரல்
யுகம் பூசும் பொன்னிறம் உன் நிறை
தொங்கும் கவிதை காதுகளில்
சங்கத் தமிழோ உன் பாதங்களில்
ஒரு காட்டுச்செடியென
உன் விட்டேத்தி பார்வை
பூட்டுகளற்ற முற்றம்
கன்னத்தில் கை கொண்ட தனிமை
சொல்லில் தவிக்கும் பேருடல்
சொல்லாமல் தவிக்கும் பூ வனம்
சொற்களற்ற முகத்தில் மீண்டும் மீண்டும்
நான் தேடுவதெல்லாம்
வெண்ணிற இரவுகளின்
இன்னொரு நாஸ்தென்கா உன்னை

- கவிஜி

Comments

2 comments

2
குமரன்
ஒரு பெண்ணை வர்ணனை செய்ய முயற்சித்தது புரிகிறது ஆயினும் இதில் சொற்சுவையும் இல்லை பொருட்சுவையும் இல்லை இதனால் யாருக்கு என்ன பிரயோசனம்
நல முத்துகருப்பசாமி
மிகச்சிறந்த வரிகள் கவிஜி அவர்களே !
நல்வாழ்த்துக்கள் !

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.