எங்கள் வரிப்பணத்தில் ஐநூறு கோடிகளைப்
பங்காய் அளித்திட்ட சிங்களவன் பங்காளி
இந்தியன் என்றிட்டால் இவன்என் நாட்டானா?
முந்திஅவன் முதுகெலும்பை முறித்திட வேண்டாமா?
தொப்புள்கொடி உறவுகளைத் துடிதுடிக்கச் சாகடித்தான்
அப்பாவிச் சிங்களவன்; அவனுக்குத் துணையாக
எப்போதும் மாரடிப்போன் எனது நாட்டானா?
ஒப்பி,ஆம் என்போனை நாம்உதைக்க வேண்டாமா?
ஈழத் தமிழனை மட்டுமல்ல, இந்நாட்டில்
வாழும் மீனவத் தமிழனையும் வதைக்கின்ற
பாழாய்ப் போனவன்தான் பாரத நாட்டானா?
ஆழக்குழி தோண்டஅதில் அவன்புதைய வேண்டாமா?
முள்வேலிக் கம்பிக்குள் ஓர்இனமே முடங்கக்
கள்ளமாய் உறவு,அக் கயவனுடன் எப்போதும்
உள்ளத்தில் வைத்திருப்போன் உண்மையில்என் நாட்டானா?
கொள்ளிவைத்து அழிக்கநாம் கொதித்தெழ வேண்டாமா?
இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா எல்லாமும்
அங்குள்ள அகதிமுகாம் கொடுமைக்கு அலறுகிறான்
இங்கிருப் பவனுக்கு எருமைமாட்டுத் தோலா?
தொங்கிஅழ நாம்இவனின் அடிமைத் தொழும்பர்களா?
அந்நியன் போயும்இங்கு அடிமை நுகத்தடியா?
இன்னமும் தில்லியிடம் எசமானக் கொழுப்பா?
சின்னா பின்னப்பட்டு ஒற்றையாட்சி சிதையட்டும்
தன்னாட்சி முழக்கம் தரையெங்கும் அதிரட்டும்!